பார்ட்டி டவுன் அங்கு கிடைக்காத மதுவே இல்லை, உலக நாடுகளின் அனைத்து வகையினரையும் அங்கு பார்க்க முடியும். அது மட்டுமின்றி விலைமாதுக்களும், கஞ்சாக்களும் எழிமையாக கிடைக்கும். அந்த டவுன் காதலர்களின் நகரமாகவும் அழைக்கபடுகிறது.
நகரத்தில் இருக்கும் பெரும்பாலான மோட்டல்களிலும், பார்களிலும் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
காதலர்களின் நகரம் என்று அழைக்கப்படுவதற்கு இந்த பாடலை பாடிய காதலர்களும் ஒரு முக்கிய காரணம். அவர்கள் பாடல் அந்த நகரத்தில் இருந்த அனைவருக்கும் காதல் தாக்கத்தை எற்படுத்தியது அளவற்றது. அதைகேட்கும்போதல்லாம் கேட்பவர்களின் மனம் ஒரு ஜோடியை தேடி அலைபாயும் என்பது அப்பட்டமான உண்மை.
அந்த பாடலை போலவே அவர்களின் காதலின் புகழ் நகரம் முழுதும் பரவி இருந்தது.
ஸ்டீவன், அவன் காதலியான சமந்தா அந்த நகரத்தில் இருப்பதாக கேட்ட துணுக்கு செய்தியை நம்பி அவளை தேடி வந்திருந்தான். சில நாட்கள் அவளை தேடி தோய்ந்து போனான். அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதை தாங்கிக்கொள்ள முடியாமல், ஒர் இரவு போதை தேடி ஒரு பாருக்கு சென்றான்.
அங்கு பல வகை மதுக்களை அருந்தியதில் போதை தலைக்கு ஏறியது. அந்த போதையோடு தல்லாடியே நடந்து அவன் பெட்ரூமிர்க்கு சென்று படுத்தான்.
காலையில் விழித்து பார்க்கையில் அவன் வெறும் ஜட்டியோடு கிடந்தான். அவன் சட்டையும் பேன்டும் ஹேங்கரில் மாட்டிவிடப்பட்டிருந்தது. அந்த அறை அசுத்தம் மட்டுமின்றி காமம் கலந்த அறையாக இருந்தது. அதில் பல ஆண்களின் வாடையும் ஒரு பெண்ணின் வாடையும் காற்றில் கரைந்திருந்தது. உடனே ஸ்டீவன் தன் உடைகளை மாட்டிகொண்டு கிளம்புகயில் அங்கு இருந்த போன் ஒலித்தது. அதை சிறு பதட்டத்தோடு எடுத்தான்.
அதில் எதிர்முனை குரல்….
சமந்தா, ஒரு கஸ்டமர் இருக்காரு உன்னோட ரூமுக்கு அனுப்பவா என்று சொல்லி முடிப்பதற்குள் போனை படக்கென்று வைத்தான்.
மறுபடி போன் ஒலிக்க அந்த அறையில் இருந்த மற்றொரு கதவை திறந்துக்கொண்டு நிர்வாணமாக ஈரத்துடன் ஓடி வந்தாள் சமந்தா.
பட்டென்று அவள் போனை எடுத்து “சாரி ஐம் பிஸி” என்று வைத்தாள்.
அவன் சமந்தா கண்களை பார்த்து ஒரு அசைவு கூட இல்லாமல் இருந்தான். அவளும் அவனை பார்த்து அமைதியாக நின்றாள்.
ஒரு சின்ன தயக்கத்துடன்…
எதுக்கு சமந்தா என்னை விட்டு வந்த?
நீ எதுக்கு ஸடீவன் என்ன தேடி வந்த?
செக்ஸுக்காவா…
இல்லை சமந்தா நான் உன்ன காதலிக்கிறேன்…
என்னால எப்போதும் உண்ண மறக்க
முடியாது.
ஓ… என்ன நீ நம்ப சொல்லுறியா..?
ஆமா நீ நம்பித்தான் ஆகனும்…
முன்னலாம் நான் உன்னோட கழுத்துக்கு கீழ பாக்க கூடாதுன்னு நினைப்பேன் ஆனா முடியாது. இப்போ உண்ணோட கழுத்துக்கு கீல சின்ன துனி கூட இல்லை. பட் இப்போ எனக்கு பாக்க தோனல.
ஹம்ம்ம்…
ஆனா இப்போ என்னால திரும்பி உன்ன காதலிக்க முடியாது காதலிக்குற நிலமையிலயும் இல்ல.
என்னாலயும் உன்ன பாக்காம இருக்க முடியாது.
அப்போ தினமும் இங்க வா என்கூட சந்தோஷமா இரு.
என்ன உன்னோட கஸ்டமரா வர சொல்லுற அப்படிதானே?
ஆமா நான் உன்ன உண்மையா காதலிச்சப்ப நீ என்ன செக்ஸுக்காகத்தானே காதலிச்ச.
அப்போ இருந்த ஸ்டீவன் வேற இப்போ வந்திருக்க ஸ்டீவன் வேற புறிஞ்சிக்கோ.
ஆனா சமந்தா எப்போதும் ஒருத்திதான்.
நீ ஒரு வேசின்னு தெறிஞ்சும் உன்ன காதலிச்சேன்…
“சாரி காதலிக்குற மாதிரி நடிச்ச”
சரி ஆமா நடிச்சேன் ஆனா இப்போ உன்மையா காதலிக்குறேன் நம்பமாடேங்குறியே…
அப்போவும் நான் வேசி இப்பவும் நான் வேசிதான் ஆனா அன்றும் இன்றும் அதே உணர்வுடன் வாழ்பவள் அதை அவமதித்தால் அது பாலியலை தாண்டிய தவரு.
இப்படியே நீண்ட இவர்களின் வாதம் நாளுக்கு நாள் குறைந்து ஒரு நாள் அது காதலாக மறுபடியும் கருவுற்றது. ஆனால் இருவரும் வெளிபடுத்திகொள்ள தயங்கினார்கள்.
ஒரு நாள் ஸ்டீவன் முடிவெடுத்தான் அவளிடம் சொல்லிவிட. அதன்படி சமந்தாவை தேடி அவள் விடுதிக்கு சென்றான். அவளுக்காக அவன் ரிஷப்சனில் காத்திருந்தபோது. அங்கு ஒருவன் ஸ்டீவனை கடந்து சென்றான். அவனிடம் அங்கு இருந்த ரிஷப்சனிஸ்ட் பெண்மணி கேட்டாள் எப்படி இருந்தது சமந்தாவின் அறவணைப்பு என்று.
நா அவள பண்ணலாம்னு போனா அவ என்ன பண்ணுறா. அவ மேலயும் நா கீழயும் இருந்தேன்.
இதை கேட்ட ஸ்டீவன் அங்கிருந்து எழுந்து ஓடி. அவன் அறைக்கு சென்று அங்கிருந்த மதுவை குடிக்க ஆரம்பித்தான்.
சமந்தா தன் அறையில் ஸ்டீவனுக்காக காத்திருந்தாள். அவன் வருவானென்று வேறு யாரையும் தன் அறைக்கு அனுமதிக்காதிர்கள் என்று தனது ப்ரோகர் பெண்ணிடம் சொல்லி காத்திருந்தாள். அதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் ஸடீவனை வேண்டும் என்றே வெறுப்பேற்றி அங்கிருந்து அனுப்பினாள்.
அடுத்த நாள் இந்த விஷயத்தை சக தோழி மூலம் அறிந்த சமந்தா , அவனை தேடி காலையிலேயே புறப்பட்டாள்.
எங்கடி போற தேவிடியா மவளே, என்று ப்ரோகர் ஆன்டி கத்த.
உணக்கு அத சொல்லனும்னு அவசிம் இல்லடி பத்தினி மவளே, என்று அவள் காது அருகில் நக்கலாக சொல்லிவிட்டு நகற்ந்தாள்.
ஸ்டீவன் அவன் அறையில் இருந்த ஒரு போதை ஊசியை தன் கையில் போட்டுகொண்டு இருக்கும்போது சமந்தா வந்தாள். ஆனால் அந்த ஊசியில் இருந்த போதை மருந்து பாதி அவன் உடலில் இறங்கிவிட்டது. அவன் ஒரு சின்ன சலனத்துக்கு பின்பு போதையில் உலர ஆரம்பித்தான்.
சமந்தா, டார்லிங் நா உன்ன எவ்ளோ காதலிக்கிறேன் தெறியுமா?
உனக்கு எப்படி தெறியும் எனக்கே தெறியாது, அவ்ளோ காதலிக்கிறேன் உன்ன. நான் பெரிய தப்பு பண்ணிடேன் ரொம்ப பெரிய தப்பு. உன்ன காதலிச்சேன் நீ என்ன விட்டு விளகிபோன, ஆனா நான் விடாம உன்ன காதலிச்சேன். ஒரு நாள் நீயும் என்ன காதலிச்ச சில நாட்கள் போனதுக்கு அப்பறம் தான் தெறிஞ்சது நீ ஒரு விலைமாதுன்னு.
அது தெரிஞ்ச நான் வந்து உன்கிட்ட என்கூட செக்ஸ் வச்சிக்கோன்னு வற்புறுத்திருக்க கூடாது. அதுக்கு அப்பரம் நீ ஊர காலி பண்ணிட்டு இங்க வந்துட்ட. அப்ப நா உன்ன தேடாத இடமே கிடையாது. ஆனா இன்னைக்கி ஒருத்தன் என் முன்னாடியே என்னோட காதலிய பத்தி தப்பா பேசுறான் அப்பவும் நான் அவன அடிக்காம உண்மேல கோவப்படுறேன். நா ஏன் இப்புடி இருக்கேன் சமந்தா. என்றபடியே உறங்கி போனான்.
அப்போது அந்த பாடல் ஸ்டீவனின் ரேடியோவில் ஒலித்துக்கொண்டு இருக்க. அவள் கண்கள் சிறிது கலங்கியதை துடைத்த படி. அந்த பாடலை கேட்டு கொண்டே அவள் அங்கிருந்த மதுவை ஒரு கோப்பையில் ஊற்றி பருகினாள். அதை பருகிய சில நிமிடங்களில் அவளும் உறங்கி போணாள்.
அடுந்த நாள் அவர்கள் உடலின் ப்ரேத பரிசோதனையில் தெறிய வந்தது ஸ்டீவன் அதிக போதையாலும், சமந்தா பாய்சனை மதுவில் கலந்து உட்கொண்டதாலும் இறந்துவிட்டார்கள் என்று.
அந்த பாய்சனை சமந்தா தான் உட்கொண்டாளா அல்லது அது வேறு எதும் விரோதிகள் இருக்கிறார்களா என்று சந்தேக கேஸ் தொடங்கப்பட்டுள்ளது. அந்த நிலையில் மற்றொரு துப்பு கிடைத்திருந்தது.
அந்த மது கோப்பையில் மற்றொரு கை ரேகை பதிந்திருந்து. அதன் படி அவர்கள் அறிந்த உண்மை. அந்த மதுவில் ஸ்டீவன்தான் பாய்சனை கலந்திருக்கிறான். அவன் மன உளைச்சலில் இருந்ததால் அவன் அதை அருந்த முடிவு செய்து சாவுக்கு பயந்து அவன் அதை அறுந்தவில்லை. அது அறியாத சமந்தா அதை குடித்து இறந்துவிட்டாள்.