வாழ்க்கைச் சக்கரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 16,816 
 
 

காலையில் எழுந்ததிலிருந்து சுமதிக்கு மனதே சரியில்லை. ஏனோ மனம் நிம்மதியில்லாமல் தவித்துக்கொண்டிந்தது. சுமதிக்கு மதிய சாப்பாட்டை டிபன் பாக்ஸில் வைத்துவிட்டு இப்போது சாப்பிடுவதற்கு தட்டில் இட்லி வைத்து சாம்பாரை ஊற்றிக் கொண்டே மகளின் அறையை அம்மா ராஜேஸ்வரி திரும்பி பார்த்தால். அறை கதவு இன்னும் திறவாமலே இருந்தது. திருப்பி சுவரில் இருந்த கடிகாரத்தை பார்த்தால் மணி எட்டரையை காட்டிக்கொண்டிருந்தது. இன்னியாரம் சுமதி ரெடியாகி சாப்பிட வந்திருக்கணுமே! ஏ இன்னும் வரல என்ற எண்ணத்தோடு மகளின் அறை நோக்கி சென்றவளுக்கு வீட்டின் பின்பக்க தோட்டத்திலிருந்து நிழல்லாட திரும்பி பார்த்தவளுக்கு சுமதியின் உருவம் தெரிந்தது. என்னமா சுமதி நீ இன்னும் ரெடியாகமலேயே இருக்க? இன்னைக்கு ஏதும் ஆபீஸ் லீவா! ராத்திரியே சொல்லி இருக்கலாம்ல நான் இப்டி அரக்க பறக்க எந்திருச்சு…. ம்ச்ச்சுசு… அம்மா எனக்கு இன்னைக்கு ஆபீஸ் இருக்குமா. அப்றம் எதுக்காக இன்னும் ரெடியாகமா பித்து பிடிச்சவ மாதிரி இப்டி பச்சை மரத்தையே வெறிச்சுப் பார்த்துக்;கிட்டு இருக்க. அதான் இன்னும் டைம் இருக்குலம்மா. என்னது இன்னும் டைம் இருக்கா! கொஞ்சம் திரும்பி வாட்;ச்சை பாரு. அழுத்துக் கொண்டே திரும்பி பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிய அம்மா ராஜேஸ்வரியோ மகளின் கன்னம் வழித்து திரு~;டி எடுத்தாள். என் பொண்ணுக்கு அழகே அவளோட இந்த ரெண்டு பெரிய கண்ணுதான். என்னமா நீங்க வேற நேரம் காலம் தெரியாம அழக ரசிச்சுக்கிட்டு இருக்கீங்க. மேற்கொண்டு பேச வாய் எடுத்தவள் அத்தோட பேச்சை முடித்துக்கொண்டு தன் அறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டாள். சரியாக பத்து நிமிடத்திற்குள் ரெடியாக வெளியே வந்தவள் கைப்பைக்குள் டிபன் பாக்ஸை திணித்துக் கொண்டே வாசலை நோக்கி ஓடினாள். சுமதி சாப்பிடுவதற்காக வைத்திருந்த இட்லி தட்டை கையில் எடுத்துக்கொண்டு மகள் பின்னாடி ஓடியவள் அவள் காலில் செருப்பை மாட்டுவதற்குள் சுமதியின் வாயில் ஒரு இட்லியையாவது வேக வேகமாக பிட்டு மகளின் வாய்க்குள் திணித்துவிட்டாள். டம்ளரில் தண்ணீரைக் கொண்டு வருவதற்குள் சுமதி பஸ் ஸ்டாப்புகே வந்துவிட்டாள். வியர்வை சொட்ட சொட்ட ஓட்டமும் நடையுமாக பஸ் ஸ்டாப்பிற்கு வந்து கை கடிகாரத்தை பார்த்தாள், பஸ் வருவதற்கு இன்னும் ஐந்து நிமிடம் இருந்தது. பஸ்ஸில் ஏறி உட்காருந்து நிம்மதியாக மூச்சு விடுவதற்குள் அவள் கைப்பைக்குள் இருந்த செல் போன் சிணுங்கியது. பைக்குள் இருந்து போனை எடுத்து தன்னை தொடர்புக்கொண்ட எண்களை பார்த்ததுமே சந்தோ~ப்படுவதற்கு பதிலாக ஏனோ மனதில் ஒரு வித தயக்கம், நெஞ்சம் படபடவென அடிக்க தொடங்கியது. போனை ஆன் செய்து ஹலோ என்பதற்குள் குறைந்தது நூறு முறையாவது மூச்சை உள்ளிருந்து வெளியேற்றி இருப்பாள். ஒரு வழியாக போனை ஆன் செய்தாள் ஹ..ஹஹ..ஹலோ …. மறு முனை அமைதியாக இருந்தது. செல் போனை காதிலிருந்து எடுத்துப் சரிப்பார்த்துக் கொண்டாள். இணைப்பு துண்டிக்கப் படாமல்தான் இருந்தது. மீண்டும் ஹலோ என்றால், குரலை செருமிக் கொண்டு அவன் பேச ஆரம்பித்தான். ஹலோ நான் சுதாகர் பேசுறே. ம்ம்… தெரியும் சொல்லுங்க. அது வந்து நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும் அவள் பேச வாய்யெடுப்பதற்குள் அவனே பேச்சை தொடர்ந்தான், இன்னைக்கே இப்பவே. தப்பா நெனச்சுகாதேங்க நான் இன்னைக்கே இந்த விசயத்தை பேசி முடிச்சுடலான்னு நெனைக்கிறேன்.

இன்னைக்கே முடிச்சுடலாமா! ஹலோ.. ஹலோ நான் பேசுறது உங்களுக்கு கேக்குதா? அஅஆ… கேக்குது சொ.. சொல்லுங்க. அதாங்க நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணுன்னு சொன்னேனே…. சாயங்காலம் ஆபீஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் பேசலாமா? சாயங்காலமா!.. அவன் இழுத்த விததிலேயே சுமதி புரிந்துக்கொண்டால். சரிங்க இப்பவே பேசலாம். எங்க ஆபீசுக்கு பக்கத்துல இருக்குற பஸ் ஸ்டாப்புக்கு நான் இன்னும் பத்து நிமி~த்துல வந்துடுவேன் அங்க ஓகேவா? பஸ் ஸ்டாப் வேணாங்க அதுக்கு எதிர்த்தாப்ல இருக்குற காபி ~hப்புக்கு வந்துடுங்க நான் அங்க வெய்ட் பண்றேன் சுமதியின் பதிலை கூட கேக்காமல் அவன் தன் தொடர்பை துண்டித்துக்கொண்டான்.

சுமதி இத்தோடு பத்தாவது முறையாக தன் கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்தாள். திவாகரோ எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தான். எனக்கு இப்பவே ஆபீசுக்கு ரொம்ப லேட்டாகிடுச்சு… எ..எ…என்ன விசயமா… அவன் மறுபடியும் மூச்சை இழுத்து வெளியிட்டான் இப்டியே எவ்வளவு நேரம் பெரு மூச்சு விட்டுக்கிட்டே இருக்க போறீங்க! என்ன விசயன்னு சொன்னாதானே எனக்கு தெரியும். வீட்ல எதும் பிரச்சனையா? அது வந்து நம்ம ரெண்டு பேருக்கும் அடுத்த வாரம் என்கெஜ்மெண்ட் நடக்குறதா இருந்துச்சுல அது நடக்காது. அவன் வாயில் இருந்து வந்த வார்த்தையை அவளால் நம்பமுடியவில்லை. ஒரு வேலை நம்ம காதுலதா தப்பா விழுந்துருச்சோ, நான்தா திவாகர் சொன்ன வார்த்தையை தப்பா புருஞ்சுக்கிட்டேனோ என்று தன்னையறியாமலேயே அவள் சத்தமாக சொல்லிவிட்டாள். இல்லங்க சுமதி நீங்க சரியாதா புருஞ்சுகிட்டீங்க. ஏ..எதுக்கு… அப்டிடிடி…. அவளால் மேற்கொண்டு பேச முடியாமல் வார்த்தை தடுமாறியது.

என்னை மன்னிச்சுடுங்க சுமதி நான் நேரடியா வி~யத்துக்கே வந்துறேன். எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பமே இல்ல. செய்வதறியாது அந்த நிமிடம் அவன் முன் தடுமாறினாலும் அடுத்த நொடியே அவள் தன்னை சுதாரித்துக் கொண்டு மேற்கொண்டு அவளே பேச்சை ஆரம்பித்தாள். காரணம்? காரணம்ம்ம்…. நான் ஒரு பொண்ண லவ் பண்றேன். நெஞ்சை நிமிர்த்தி அவள் கண்களை பார்த்து நேருக்கு நேராக சொன்னான். இப்டி நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்னு சொல்ற நீங்க எதுக்காக என்னை பொண்ணு பார்க்க வந்தீங்க? வழக்கம் போல எல்லா ஆண்களும் சொல்ற மாதிரி அப்பா அம்மாவோட வற்புறுத்தலுக்குன்னு சொல்ல போறீங்களா! அவள் பேச்சில் நக்கல் இருந்தது. என்ன இந்த பொண்ணு இப்டி பேசுறா! ஆனா இவள பார்த்தா வீம்புகாரி மாதிரி தெரியலயே! சாந்தமான முகம் எப்போதுமே மொகத்துல இருக்குற மென்மையான சிரிப்பு அப்றம்…. நான் உங்ககிட்டதான் பேசிக்கிட்டு இருக்கே மிஸ்டர் திவாகர். அ…அது வந்து, அப்போ நான் சொன்னதுதான் சரி. சுமதி ப்ளீஸ் “….” என்னால புருஞ்சுக்க முடியுது, ஆனா நீங்க என் பக்கம் இருக்குற நியாயத்தையும் புருஞ்சுகணும். இனிமே உங்களபத்தி புருஞ்சுக்கிட்டு நான் என்னங்க பண்ணப்போறீன்? அது வந்து சுமதி…. மேற்கொண்டு பேச வாய்யெடுத்தவனை கையமர்த்தி தடுத்தாள். போதும் மிஸ்டர் திவாகர் விட்டுங்க கடைசில எல்லா ஆம்பளைங்களும் ஒன்னுதாங்கிறத நீங்க எனக்கு புரியவச்சுட்டீங்க. நான் என்ன சொல்ல வறேன்னு கொஞ்சம் கேளு… இந்தோட விட்டுடலாம் போதும்…

அவள் மீண்டும் அவனை பேசவிடமல் தடுக்கவே திவாகர் இப்போது தன் பொறுமை முழுவதும் இழந்து, கொஞ்சம் என்னை பேச விடுறீங்களாயென்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டான். இருவரையும் சுற்றி இருந்தவர்கள் அவர்களை திரும்பி பார்க்க சுமதி அவமானத்தில் தலையை கவிழ்த்துக் கொண்டாள். சே நாம கொஞ்சம் பொறுமையா இருந்துருக்கலாம். அவள் நிலையை புரிந்துக் கொண்டவன் தன்னைதானே கடித்துக் கொண்டான்.

ஸ..ஸாரி மிஸ்.சுமதி. நான் உங்கள பொண்ணு பார்க்க வந்து இன்னையோட முழுசா இருபது நாள் ஆகுது. இந்த இருபது நாள்ல என்னைக்காவது ஒரு நாள் நான் போன்லயோ அல்லது நேர்லயோ உங்ககிட்ட பேச முயற்சி பண்ணியிருக்கேனா? இல்ல அன்னைக்கு உங்கள பொண்ணுப் பார்க்க வந்தப்பா கூட சபையில வச்சு உங்கள எனக்கு புடிச்சு இருக்குன்னு சொன்னேனா? ம்கூம் ரெண்டுமே இல்ல. இவன் சொல்வதும் வாஸ்தவம் தானே. இவன் என்னை பொண்ணு பார்க்க வந்ததோட சரி. அப்புறம்… இவனோட செல் போன் நம்பரக் கூட இவன் அம்மா தானே… சே எவ்வளவு பெரிய முட்டாளா நான் இருந்துருக்குறேன். எனக்கு அப்போதைக்கு வேற வழி தெரியல. அவனது பேச்சு சத்தம் அவளை தன்னிலை உணர்த்தவே நிகழ்காலத்திற்கு வந்தால். பழியாடு மாதிரிதான் நான் அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தேன். பழி ஆடா! நான் என்னை கையில கத்தியும் அருவாளும் வச்சுருக்குற காளியா? அப்பறமா சமிதான் எனக்கு தைரியம் சொன்னா சமியா! யார் இந்த சமி ஓ…. இவனோட லவ்வரா! சமியா அப்ப முழுபேர் என்னவா இருக்கும். சே என்னவா இருந்தா எனக்கு என்ன. உண்மையிலேயே நான் ஒரு முட்டாளேதான். ……. அவன் பேச்சை நிறுத்திவிட்டு கொஞ்சம் நேரம் அமைதியாகவே இருக்க அவள் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.

நானும் சமியும் நாளைக்கே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலான்னு இருக்கோம். அவனுடைய இந்த பதிலுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினாலும் மறு நொடியை தன்னை சமாளித்துக் கொண்டு வாழ்த்துக்கள் என்றாள் ஒற்றை வரியில். புரியல என்ற கேள்வியை கண்ணில் வைத்துக் கொண்டு அவளை நிமிர்ந்துப் பார்த்தான். அவள் எழுந்து தன்னுடைய கைப்பையை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டே உங்களோட கல்யாணத்திற்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்று சொல்லிக்கொண்டே இருவரும் குடித்த காபிக்கு திவாகர் தன் பர்ஸை திறந்து பணத்தை எடுப்பதற்குள் அந்த டேபிள் மீது பணத்தை வைத்துவிட்டு அவன் நிமிர்ந்து பார்ப்பதற்குள் அந்த காபி ஸாப்பைவிட்டு வெளியே வந்தவள் சாலைக்கு வந்து வேக வேகமாக நடக்க ஆரம்பித்தாள். சுமதி நடந்த வேகத்திற்கு கால்மணி நேரம் கழித்து வரவேண்டிய ஆபீஸிக்கு ஐந்து நிமிடத்திலேயே வந்து சேர்ந்துவிட்டாள்.

ஏனோ மனம் பாறையாக கணப்பதாக உணர்ந்தாள். அதுவும் கொஞ்ச நேரம் மட்டுமே. ஆபீஸ{க்குள் சுமதி நுழைவதை கண்டதும் அவள் தோழி யுக்தாக வேகமாக ஓடி வந்து சுமதியை இருக்க கட்டிக்கொண்டாள். அவள் அப்படி திடீரென்று இருக்க அணைத்துக்கொண்டதில் சுமதியால் மூச்சுக்கூட விடமுடியவில்லை. அய்யோ யுக்தா போதும் விடு என்னால மூச்சுக்கூட விடமுடியல கொஞ்சம் என்னை விடுறியா? சந்தோ~த்தில் தன்னிலை மறந்து சுமதிக்கு வலியை கொடுத்துவிட்டோமோ என்று யுக்தாவின் மனம் தவித்தது. என்ன மூஞ்சி இத்தினூண்டா போச்சு? ஸாரி சுமதி நான் உன்னை க~;டப்படுத்திடேல? யுக்தாவின் மனம் சுமதி அறிந்ததே அவளால் தெரியாமல் கூட யார் மனதையும் புண்படுத்த முடியாது, ஐய்யோ யுக்தா…

யுக்தாவின் முகத்தில் பூ போன்று விரிந்திருந்த சிரிப்பைக் கண்டதும் கொஞ்ச நேரத்திற்கு முன்னால் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவள் மனதில் தடம்மே இல்லாமல் மறைந்திருப்பதை சுமதியால் உணராமல் இருக்க முடியவில்லை. அதற்காக மனதிற்குள்ளயே யுக்தாவிற்கு நன்றி சொன்னால் சுமதி. சரி சொல்லு என்ன இன்னைக்கு ரொம்ப கு~pயா இருக்க! என்ன வி~யம்ம்ம்… கண்களில் குறும்போடு கேட்டாள். அப்போது யுக்தாவின் முகம் குங்குமமாய் சிவப்பதை சுமதி பார்த்துவிட்டாள். ஐயோ உனக்கு வெட்கம்கூட பட தெரியுமா! ப்ச்.. சுமதி என்ன நீயும் எல்லார மாதிரியும் கிண்டல் பண்ற. என்னது எல்லாரும் உன்னை கிண்டல் பண்ணாங்கலா! இரண்டு புருவத்தையும் உயர்த்தி ஆச்சரியமாக கேட்டாள். அப்பனா உன்னோட இந்த சந்தோ~த்துக்கான காரணம் என்னை தவிர எல்லாத்துக்கும் தெரியுமா! அப்ப நான்தா லேட்டா?

ஹலோ சுந்தர் ஸார் கொஞ்சம் இங்க வாங்கலே, தோழிகள் இருவருக்கும் எதிரில் தன்டைய யானை உடம்பை தூக்கி கொண்டு நடக்க முடியாமல் அசைந்து வந்துகொண்டிருந்த சுந்தரை பார்த்த யுக்தாவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த ஆபீஸ்ல இருக்குற எல்லாருக்கும் நாற்பதைந்து வயதான சுந்தர்தான் டைம் பாஸ். அதுவும் யுக்தாவுக்கு என்றால் கேட்கவே வேண்டாம், வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோருடனும் நட்பாக பழக கூடிய ஒரு நபர். இருவருக்கும் அருகில் சுந்தர் வந்துவிட்டதை உணர்ந்த யுக்தா, ஏய் இப்ப எதுக்காகடி அவர இங்க கூப்பிடுற? அஸ்கி வாய்ஸில் கேட்டாள். என்ன யுக்தா சிவ பூஜைல கரடி மாதிரி நொழச்சுட்டேனா? சே சே அப்டிலா ஒன்னும் இல்ல ஸார். அப்போ அடியேனே அழைத்தது எதற்கோ? இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு குனிய சிரமப்பட்டு நாடக பாணியில் கேட்ட சுந்தரை பார்த்ததும் இப்போது தோழிகள் இருவரும் சத்தமாகவே சிரித்துவிட்டனர். என் மேல கொஞ்சம் கருணை காட்டி என்ன வி~யமுன்னு சொன்னீங்கனா நல்லாயிருக்கும் இன்னும் நிமிராமல் அதே நாடக பாணியில் கேட்டார். என்னடி இப்பவாச்சும் நீ சொல்றீயா இல்ல நான் சுந்தர் ஸார்கிட்டயே கேட்டுக்கவா? அடிப்பாவி இதுக்காகதான இவர கூப்பிடியா!

ஸாரி ஸார் தேவையில்லாம உங்கள டிஸ்டர்ப் பண்ணிட்டோம். இதுல என்னமா இருக்கு ஜெஸ்ட் ஒரு டைம் பாஸ்தானே. ஆனா உங்க ரெண்டு பேருக்கும் கண்டிப்பா தண்டனை இருக்கு. என்னை டிஸ்டர்ப் பண்ணினதுக்கு பனி~;மென்ட்டா இன்னைக்கு என்னோட டீ ப்ரேக் செலவு உங்களோடதுதா. என்ன யுக்தா ஓகேவா என்று சுந்தர் கட்டை விரலை காட்டவும் யுக்தாவும் பதிலுக்கு அதுக்கு என்ன ஸார் ஜமாய்சிரலாம் என்று கட்டை விரலை உயர்த்தி காட்டினாள். சுந்தர் அந்த இடத்தை விட்டு தகரவும், சுமதியும் தன்னிடத்திற்கு வந்து கம்யூட்டரை உயிர்ப்பித்து வேலையில் மூழ்க ஆயத்தமானால். நீயெல்லாம் ஒரு பெஸ்ட் ப்ரெண்டாடி? பொய் கோபத்தோடு யுக்தா கேட்கவும் புரியாமல் அவளை பார்த்தாள். ஏண்டி என்னாச்சு? செய்றதையும் செஞ்சுட்டு கேள்வி வேற கேட்குறயா? ம்… கோபம் வருதா? அப்ப எனக்கும் கோபம் வரும்ல, என்னோட பெஸ்ட் ப்ரண்டோட வாழ்க்கையில ஏதோ ஒரு முக்கியமான வி~யம் நடந்திருக்கு, ஆனா அது என்னன்னு எனக்கு இன்னமும் தெரியல, ஒரு வேலை அதை எங்கிட்ட சொல்றது…. போதும் சுமதி நீ என்னை புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா! ஏய் யுக்தா நான் சும்மா விளையாட்டுக்குதா அப்டி பேசினே, உன்னைபத்தி எனக்கு தெரியாதா.

தயவுசெஞ்சு இப்பவாச்சும் அது என்ன வி~யமுன்னு சொல்றியா. அதுக்கு முன்னாடி மொதல நீ இந்த ஸ்வீட்ட சாப்பிடு. சாப்பிடு என்று வார்த்தைக்கு மட்டும் சொல்லாமல் யுக்தாவே சுமதிக்கு ஸ்வீட்டை ஊட்டிவிட்டாள். போதும் போதும்….. இவ்வளவு ஸ்வீட் சாப்டேனா அப்பறம் நானும் சீக்கிரமே சுகர் பே~ண்டா ஆகிருவே. இந்த ஒரு வாய் ஸ்வீட்டுக்கே நீ இப்டி அலறீயே! அப்பனா நாளைக்கு இன்னியாரம் நீ என்னோட கல்யாண சாப்பாடு சாப்புட்டுகிட்டு இருக்கும்போது உன்னோட இலையில ஒரு ஸ்வீட் கடையே இருக்குமே அதுக்கு என்ன பண்ணுவ! என்னது… என்ன சொன்ன இப்பப… இது அதிர்ச்சியா! இல்ல இன்பதிர்ச்சியா?

எல்லாம் இன்பதிர்ச்சிதா என்றால் மீண்டும் குங்குமமாய் முகம் சிவக்க. ஓ… இப்பதா வி~யமே புரியுது. ஆனா எப்டி ஒரு நாள் ராத்திரிக்குள் இப்டி ஒரு அதிசயம், உன்னோட லவ்வர் வீட்ல இருந்து உங்க காதலுக்கு இன்னும் க்ரீன் சிக்னல் கெடைக்கலேன்னு நேத்து வரைக்கும் பொலம்பிக்கிட்டே இருந்தியேடி, இப்ப மட்டும் எப்டி? அப்டினா அவரோட ஃபேரேன்ட்ஸ் உங்க காதலுக்கு ஓகே… இல்ல சுமதி அவுங்க இன்னும் பிடிவாதமாதா இருங்காங்க. அப்றம் எப்டி! நானும் திவாகரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலான்னு முடிவு பண்ணிருக்கோம்.
தி…தி..திவாகரா? எ..என்ன பேர் சொன்ன? “திவாகர்… ஓ…. ஒருவேளை… இல்ல இல்ல இந்த உலகத்துல திவாகர் என்ற பேர்ல அவன் ஒருத்தன் மட்டும்தா இருக்கானா என்ன! அப்டியே அவனா இருந்தாலும் எனக்கு என்ன வந்துச்சு… சுமதி தனக்குள்ளயே போராடி கொண்டிருந்தாள். சே.. என் மனசு ஏன் இப்டி அலைபாயுது!

யார் இந்த திவாகர்? பேசாம யுக்தாகிட்டயே கேட்டுறலாமா? என்னன்னு கேக்குறது. அப்புறம் யுக்தா என்ன நெனப்பா. ஒரு முடிவுக்கு வந்தவளாக யுக்தாவிடம் திருப்பினாள். யு..யு..யுக்தா… எதுக்குடி இப்ப இப்டி ராகம் பாடுற யு..யு…யுக்தா இல்ல யுக்தா யுக்தாமுகி. யுக்தாமுகி! ஆமல அவன்…

யுக்தா கேக்குறேனு தப்பா நெனைக்காத உன்னோட லவ்வர் உனக்கு ஏதாவது பெட் நேம் வச்சிருக்காரா? ம்…. பெட் நே… ஆஹ யுக்தாமுகின்ற என் பேரை சுருக்கி முகின்னு செல்லமா கூப்பிடுவாறு. ஓ… முகி இந்த பேரதானே காலை என்கிட்ட பேசும் போது அவன் சொன்னா! ஆனா உன் லவ்வரோட போட்டோவ நீ எனக்கு ஒரு தடவை கூட காமிக்கவே இல்ல. சுமதி உனக்கு என்ன அம்னிசியாவா? …. பின்ன என்னடி? எத்தனை தடவை நானும் திவாகரும் சேர்ந்து எடுத்துகிட்ட போட்டோவ நான் உன்கிட்ட காமிச்சுருக்கே. இ..இல்ல அப்பலாம் நான் சரியா மொகத்த பார்க்க அதான்.

ஒவ்வொரு ஸண்டேயும் யுக்தாவும் திவாகரும் சென்னை முழுக்க ஆசை தீர சுத்தி திருஞ்சு விதவிதமா எடுத்துக்கிட்ட போட்டவெல்லாம் மறுநாள் திங்கட்கிழமை ஆபீசுக்கு வந்தவுடனயே சுமதிகிட்ட காமிச்சு இது அந்த இடம் இது இடம்ன்னு சொல்லி ஒவ்வொரு போட்டோவயும் யுக்தா சுமதிகிட்ட காமிச்சுயிருக்கா. ஆனா அந்த போட்டோவுல யுக்தாவும் அவளோட லவ்வரும் கண்ணத்தோட கண்ணம் வச்சமாதிரி ரொம்ப நெருக்கமா கட்டிப் புடுஞ்சுக்கிட்ட இருக்குறனால, சுமதி அந்த போட்டோசெல்லாம் பாக்குறதுக்கு சங்கட படுவா, ஆனாலும் யுக்தாவுக்காக அந்த போட்டோசெல்லாம் இன்ட்ரஸ்ட்டா பாக்குற மாதிரி காட்டிப்பா.

அப்டினா நீ உன்னோட லவ்வர் போட்டோவ எனக்கு இப்ப காட்ட மாட்டீயா? ஏய் “சுமதி நான் சும்மா விளையாட்டுக்குதா அப்டி சொன்னே. இதோ இப்பவே காட்டுறே என்று சொல்லிக்கொண்டே தன்னுடைய கைப்பேசியை உயிர்ப்பித்தாள். போட்டோஸ் இருக்குற ஃபைலை ஓப்பன் செய்து, அதில் ஒரு போட்டோவை செலக்ட் செய்து சுமதி முன் நீட்டினாள். இதோ இவர்தா திவாகர். யுக்தாவிடமிருந்து செல் போனை தன் கையில் வாங்கியவள், அந்த போட்டோவில் முகம் நிறைய சிரிப்போடு யுக்தாவை இருக்க அணைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்த அந்த திவாகரை கண்கொட்டாமல் பார்த்தால். ஆம் அதே திவாகர்தான். காலையில் அவளை வேண்டாம் என்று நிராகரித்த அதே திவாகர்தான்.

அப்போது அவள் கையிலிருந்த யுக்தாவின் செல் போனுக்கு அழைப்பு வர தன்னிலை உணர்ந்தவளாக சுமதி சுயநினைவுக்கு வந்தாள். அழைப்பது யார் என்று செல் போனுக்குள் கண்களை பதித்தாள் யுக்தா, ஐயோ சுமதி நான் உன்கிட்ட பேசிகிட்டு இருந்ததுல மறந்தே போயிட்டேன். நாளைக்கு கல்யாணத்துக்கு தேவையாதெல்லாம் பர்ச்சேஸ் பண்ணனுன்ணு, நாம எப்பவும் மீட் பண்ற மாலுக்கு வந்திடுன்னு திவாகர் சொன்னாரு நான் பேச்சு ஸ்வாரஸ்சியத்துல மறந்தே போய்டேபா. ஆல்ரெடி நான் நேத்து நைட்டே எம். டி. க்கு போன் பண்ணி லீவ் கேட்டுடேன். உன்னை நேரடியா பார்த்து இந்த விசயத்த சொல்லனுன்னுதா நான் உனக்காக இவ்வளவு நேரம் வெய்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஓ கே சுமதி பாய். ஆஹ அப்பறம் சொல்ல மறந்துட்டேன் நாளைக்கு கண்டிப்பா நீ எங்க கல்யாணத்துக்கு வரணும். சைதாப்பேட்டை ரெஜிஸ்டர் ஆபீஸ்லதா கல்யானம் கண்டிப்பா வந்திடனும் என்று சொல்லிக்கொண்டே சுமதியின் கையிலிருந்த அவளது செல் போனை பறித்துக்கொண்டாள் யுக்தா. தான் ஆசைப்பட்ட வாழ்க்கைக்குள் நாளை அடியெடுத்து வைக்கப் போகின்ற சந்தோ~த்தில் புள்ளி மானாக துள்ளி குதித்தோடிய யுக்தாவை கண் இமைக்காமல் பார்த்தப்படி நின்றுக்கெண்டிருந்தாள் சுமதி…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *