தவணை காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 13,817 
 
 

அன்று எனக்கு வண்டி வாங்க வேண்டும் என்று டூ வீள் நிறுவனத்திற்கு சென்றேன். கையில் ஒரளவுக்கு பணம் வைத்து இருந்தேன். அந்த நிறுவனத்தில் சென்று வாகனத்தை பார்த்துக்கொண்டு எது நல்ல வண்டியை அதை வாங்கனும் என்பதில் அனைத்து வண்டியும் பார்த்தேன். எனக்கு பிடித்த வண்டியை பார்த்துவிட்டேன். அதையும் வாங்க வேண்டும் என்ற ஆசையில் பணத்தை எடுத்து எண்ண ஆரம்பித்தேன். ஆனால் பணம் சிறிது குறைவாக இருந்தது.அப்போது அங்கு இருந்தவர் தவணை பற்றி கூறினார். மாதம் மாதமாக கட்டலாம் என்று கூறினார். எனக்கு சரியாக புரியவில்லை. அதை விலக்க ஒரு பெயரை கூரி அழைத்தனர். அந்த பெயரே அப்படி இருக்கே அவள் எப்படி இருப்பாள்.

அவள் பெயர் காவ்யா. அவள் கதவை திறந்து வரும்போது பார்க்கனுமே. முதல் முதலில் பார்க்கிறென் அல்லவா. எல்லாம் பொறுமையாக நடக்கிறது. அவளை பார்ப்பதும் தான். அவள் வரவும் காற்று வீசவும் அதில் அவள் முடி பறக்கவும் அதை நான் பார்த்து மயங்கவும் அவள் நோக்கி வந்தாள். நான் அவளே பார்த்தேன். எவ்வளவு நாட்களாக இவள் எங்கே இருந்தாள். இப்போது தான் என் கண்களுக்கு காண்பிப்பாயாம்கடவுளே. அது என்ன பெண்களை பார்க்கும்போது தானா காற்று வீசும்?. இன்னும் வேற என்ன சொல்லபோற கூறு, கேட்டு தொலைக்கிறேன் என்று கூற வேண்டாம். அது ஒரு ஹ்டோர் ரூம், அதனால் தான் அங்கு பேன் வைத்து இருந்தாங்க. அதில் வந்த காற்றில் தான் முடி பறந்தது.

அவள் அழகு பற்றி கூறவேண்டும் என்று தான் ஆசை. ஆனால் வேணாம். நான் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை விட்டு அந்த இடத்தில் குறைந்த சம்பளத்தில் சேர்ந்தேன். எல்லாமேஅவளுக்காக! அவளுக்கு என ஒரு ரூம் இருக்கும். அதில் கண்ணாடி டேபுள் இருக்கும். எனது தவணையாக கட்ட வேண்டியது குறைவு தான் அதை பற்றி கூறிவிட்டாள். அதை நானும் காது கொடுத்து கேட்கவில்லை. அவளை தான் பார்த்துக்கொண்டு இருந்தேன். அவளுக்கு தெரியும் அது. வேளைக்கு சேர்ந்தேன். அவளை தினமும் ரசிப்பேன். அப்படியாவது காதலை கூறவோம் என்று யோசித்து வைத்தேன். ஐடியா வந்தது.அதன்படியே செய்தேன்.

””ஐ ல்வ் யு”” என்ற ஆங்கில வார்த்தைகள் மொத்தமாக 8 உள்ளது. 8 நாட்களாக வேலைக்கு செல்வோம். கடையில் நாளில் காதலை கூறுவோம் என்று இருந்தேன். முதல் நாளில் ஐ என்ற எழுத்தை அழியாத பென் ஒன்றில் அவளின் டேபுளில் எழுதிவிட்டு வந்துவிட்டேன். அது கண்ணாடி டேபுள் அவளுக்கு மட்டும் தான் அது. யாரு எழுதி இருப்பங்க என்று யோசித்து கொண்டு இருந்தாள். ஏழு நாட்களில் நான் ஒவ்வொரு எழுத்துக்களா எழுதிவிட்டேன்.அவளுக்கு தெரியாமலே! அந்த ஏழு நாட்களுக்கு நான் வேலை செய்வது இல்லை என் வேலையே, அவளை பார்ப்பது தானே! நானும் பார்ப்பேன் அவளும் பார்ப்பாள். எட்டாவது நாளன்று யு என்ற எழுத்து எழுதும்போது நான் மாட்டிக்கொண்டேன். அவள் என்னிடம் நீ தானா என்று கேட்டாள். ஆமாம் என்று கூறினேன். அவளுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. இது யார் எழுதி இருப்பங்க என்று. நான் தான் தெரியும், ஆனால் தெரிந்தது போல நடிப்பது.

அவளிடம் காதலை கூறினேன். அவள் பதிலுக்கு என்ன கூறினாள் தெரியுமா!

கேட்டவுடனே அந்த வேலையை விட்டு வந்துவிட்டேன். அவள் கூறியது இதுதான். எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றாள். அப்புறம் எதுக்கு நான் பார்க்கும்போது என்னை பார்த்தாய் என்று கேட்டால், அதற்கு என் பார்வையை அப்படிதான் என்றாள்…

என்ன கொடுமை இது,……

பல்பு நன்றாக எரிந்தது. அதை காட்டிக்கொள்ளாமல் திரும்பி பார்க்காமல் வந்துவிட்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *