கையறுநிலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 46,171 
 
 

என்ன ஆச்சு ராமுக்கு ?நல்லாத்தானே இருந்தான்.

என்று வருத்தமாக ராமுவின் மனைவி சாராதாவிடம் கேட்ட குமார். ராமுவின் பள்ளிக்காலத்திலிருந்தே தோழன், மற்றும் சாரதாவின் உறவினர்.

தெரியலை! திடீர்னு அன்றைக்கு காலையில் எழுந்தவர், எனக்கு தலை சுற்றுகிறது, தலை வலியும் அதிகமாக இருக்கு என்றார். அதிலிருந்து அடிக்கடி தலைவலி வருவதும், ஞாபக மறதியும் அதிகமாயிடுச்சு, என்ன செய்யறதுன்னு தெரியலை, டாக்டர்கிட்டே போய் வந்தோம். ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் மூளையில் ஒரு கட்டி ஒன்று உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்தாலும் வாய்ப்பு இருபது சதவிகிதம் தான் என்றும் சொல்கிறார் என்றார் வருத்தமாக,மெதுவாக.

அச்சோ எனப் பரிதாபப்பட்டான்.

அவருடைய வாழ் நாட்கள் எண்ணப்படுது, குமார்.

அது அவருக்குத் தெரியாது,

அதனால அவரோட நண்பர்களை வந்து சில நேரம் அவரோடு செலவிடச் சொல்லுங்கள், நீங்கதான் நெருங்கிய நண்பர், ஆகையால் அடிக்கடி வாங்க, வந்து பாருங்க, என்று வேண்டினாள்.

வேற ஏதாவது அவரோட நிறைவேறா ஆசைகள் இருந்தாலும் சொல்லுங்கள் குமார், நான் அதை நிறைவேற்றிட முயல்கிறேன் என்றுக்கூறியதில் அவளது தன்னம்பிக்கை வெளிப்பட்டது.

சூழ்நிலை யதார்த்தத்தை புரிந்துக்கொண்டு செயல்படும் ஆற்றல் பெண்களுக்கே அதிகமாக இருக்கும், என்று நினைத்தபடி , கண்டிப்பாக சொல்கிறேன். என்று விடைப்பெற்றான்.

ராதாவா? நான் ராமின் மனைவி சாரதா , மதுரையிலிருந்த பேசுகிறேன், என்றாள்.

ம், சொல்லுங்கள், என்றதுமே ராமின் நம்பர் அவளுக்கு தெரிந்து இருக்கிறது என நினைத்துக் கொண்டாள்.

எனக்காக நீங்கள் ஒரு உதவி செய்யவேண்டும் என்றுக் கேட்டாள்.

செல்லுங்கள் சாரதா! என்ன செய்யனும்,

நீங்க உடனே எங்க வீட்டிற்கு வர வேண்டும்,

ஏன் என்னாச்சு?

நேரிலே நீங்கள் வந்தால் புரிந்துக்கொள்வீர்கள். அவசியம் வரவேண்டும். என்று கேட்டாள்,

நான் வருகிறேன், என்றுக் கூறி யோசனையுடன் போனை வைத்தாள்.

உங்களை கேட்காமல் இதுதான் நான் எடுத்த முதல் முடிவு, என்னை மன்னித்து விடுங்கள் என்று நினைத்து தூக்கத்தில் இருந்த ராமின் அருகில் நின்று அவனைப்பார்த்தபடி நின்றாள்.

ராதா, முன்னாள் காதலி என்று ராம் சொல்வதும், தான்தான் அவளிடம் அதை சொல்லாமலே நாட்கள் கடத்தி விட்டதாகவும், அதற்குள் அவர்கள் வீட்டில் மணம் முடித்துவிட்டதாகவும் சொல்வார். ராதாவிற்கும் என் மேல் தனி அன்பு உண்டு என்று அடிக்கடி சொல்வார்.

சாரதாவும் அவனிடம் நான்தான் உங்க கிட்டே மாட்டிக்கிட்டேன்!

அவளையே கட்டிக்க வேண்டியதுதானே என்பாள்.

அந்த ராதாவைத்தான் ‘நண்பர்கள் 92’என்ற குழுவின் வாயிலாக கண்டு எடுத்து அழைத்து இருக்கிறாள்.

ராதாவும், பெங்களூரில் இருக்கும் தனது கணவரிடம் 92ஆம் வருட கல்லூரிக்கால நண்பர்களை மதுரையில் சந்திப்பதாக கூறி விட்டு உடன் மதுரைக்கு கிளம்பினாள்.

விஷயம் அனைத்தும் அறிந்த ராதா மிகவும் வருத்தமடைந்து, தூக்கத்தில் இருந்த ராமைப் பார்த்தபடி பேசிக்கொண்டு இருந்தார்கள்.

கண் விழித்த ராம் அவளைப் பார்த்தான். ராதாவும் அவனைப் பார்த்தாள்..

தாடியுடன் முகம்.. ஐம்பதுக்கேற்ற நரைத்த முடி, மரண பயம், வாழ வேண்டுமென ஆசை, இயலாமை என அவன் கண்களில் கண்டாள்.

பேச்சு எழவில்லை.. கண்களே பரிமாறிக் கொண்டன சொல்ல வந்த செய்திகளை.

இருவர் பார்வையிலும் வெற்றிடம் மட்டுமே இருந்தது.

நீங்கள் பேசிக்கொண்டிருங்கள் ராதா!

நான் சாப்பாடு எடுத்து வைக்கின்ன்றேன், என்று நகர்ந்தாள்.சாரதா.

அந்த ராமின் பார்வை, பழைய நட்போ, பழைய காதலர்களோ, வறுமையிலும்,நோயுற்றும் காண்பது என்பது கொடிது என்பதை உணர்த்தியது.

வலியை தீர்க்க ஒரே வழி அந்த வலியின் மீது அதிக கவனம் வைப்பதுதான், தைரியமாக இருங்கள், நாங்கள் இருக்கின்றோம் என சாரதாவிற்கு ஆறுதல் சொல்லி, தான் மதுரையில் நாளையும் தங்கப்போவதாகச் சொல்லிவிட்டு கிளம்பத் தயாரானாள் ராதா.

விடைபெறும் போது..

ராமுக்கு சிறிது ஞாபகம் வந்து இருக்கவேண்டும் கண்களின் ஓரத்தில் நீர் கசிந்து இருந்தது.

ராம், ராதாவை நோக்கி கையை நீட்டினான்,

சாரதாவிற்கும் அழுகை வரவே, புடவைத் தலைப்பால் துடைத்தெடுத்தாள்.

ராதாவும் தனது கைகளைக் கொடுத்து தலையைத் கோதியபடி குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்…

சாரதா என்னை மன்னித்து விடுங்கள்! என்றுச் சொல்லி நிற்காமல் கிளம்பினாள்.ராதா.

காதலர்கள் அன்று தோற்று போயிருந்தாலும் , காதல் ஜெயித்தது இன்று.

ஒரு தோல்வியில்தான் பொதுவாக வரும் கையறுநிலை, காதலின் வெற்றியில் கையறு நிலையில் சாரதா!

பா.அய்யாசாமி தந்தை பெயர்: கி.பாலசுப்ரமணியன். பிறந்த ஊர்: சீர்காழி. நான் 15/10/1969 ஆம் ஆண்டு சீர்காழி எனும் ஊரிலே பிறந்தவன் என்னுடைய இளங்கலை இயற்பியல் படிப்பினை பூம்புகார் பேரவைக் கல்லூரியிலே 1989 ஆம் ஆண்டு முடித்து , தற்போது முதுகலை தமிழ் படித்துக்கொண்டு இருக்கின்றேன். தில்லி, உத்தர் பிரதேஷ் ,சென்னை என பல இடங்களில் பணிபுரிந்து தற்போது மயிலாடுதுறையிலே வசித்துக் கொண்டு இருக்கின்றேன்.2015 ஆம் ஆண்டு முதல் என்னை ரோட்டரியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *