கடற்கரை.
கடலைப் பார்த்துக்கொண்டே எவ்வளவு நேரம் இருப்பது?
பேச ஆரம்பித்தான் கார்த்திக்.
“ஏதோ பேசனும்னு சொன்னியே மலர்….”
“என்னை மன்னிச்சுடு,இனிமே உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை கார்த்திக்” உடைந்தகுரலில் வந்து விழுந்தது மலரின் வார்த்தைகள்.
அவன் எதிர்பார்த்ததுதான்.
மலருக்கு நிச்சயதார்த்தம் நேற்றுதான்
நடந்தது.
“தெரியும் மலர்”
“உனக்கு கவலையா இல்லையா கார்த்திக்,எனக்கு அழுகையா வருதுடா”
“இதுல அழுறதுக்கு என்ன இருக்கு? உனக்கு நிச்சயம் பண்ணியிருக்கற
மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்,படிச்சவர் அப்புறம் என்ன மலர்?”
“தெரியும் கார்த்திக்,ஆனா உன்னைப் பிரிஞ்சு எப்படி வாழப்போறேன்னுதான்
தெரியலடா”
“முதல்ல பிரண்டா இருந்தோம்,அப்புறம் காதலிச்சோம்,இப்போ பிரியறோம்,இதுல கவலைபட்டு என்ன ஆகப்போகுது மலர்?”
“எப்படிடா இவ்ளோ ஈஸியா உன்னால பேச முடியுது?”
அவள் கேட்டதை கவனிக்காமல் நாளை நடக்கவிருக்கும் தன் நிச்சயதார்த்தத்தை நினைத்தபடியே பேச்சைத்தொடர்ந்தான் கார்த்திக்.
– Wednesday, December 12, 2007