காதல் டெலிவரி

 

ஒரு கெட் டுகெதர் அல்லது விருப்பப் பட்ட சின்ன பார்ட்டி! நிறைய பேர்கள் இல்லாவிட்டாலும் அவரவர் வேண்டுவதை ஆர்டர் செய்து இருந்தார்கள்.நகரத்தின் பெரிய உணவகத்திலிருந்து.

இப்பொழுதுதான் எது கேட்டாலும் வீடுதேடி வருகிறது!

பாட்டும் சத்தமுமாக இருந்தது! பெற்றவர்களும் இருந்தார்கள்.

கதவு தட்டப்பட்டது.

உணவுகளுடன் அந்தப் பையன்!

உணவு நிறைய வெரைட்டி இருந்ததால் கூட ஒரு பையனும் வந்திருந்தான். கதவு மூலையில் வாங்கியனுப்ப முடியாததால், அந்தப் பெண் ஒரு டேபிளை காண்பித்து அங்கெ வைக்க சொன்னாள்.

அதற்குள் ஒரு பெண் மற்றவளிடம் “டீ” அவனைப் பார்! உன் பிரண்டு சுரேஷ் தானே!” என்று அவள் பக்கம் திரும்பியபடி!

புவனா திரும்பினாள்.

பிறகு சாவதானமாக “ஆமாம்! என்ன இப்போ!” என்றாள். அந்தப் பெண்ணும் விடாமல் “அன்னைக்கி இவனைப் பத்தி பிரமாதமா சொன்னே! ஹைலி எஜுகேடட்! கம்பேரே பண்ண முடியாது! எல்லாம் பேசினே! இங்கே அவன் புட் டெலிவரி செய்யறான் யுனிபார்ம்லே! உன்னோட ட்ரெண்டுக்கு எப்படி இவனை செலக்ட் பண்ணினே! எப்படி மேட்ச் ஆவான்! புரியலே!”

இவர்கள் பேச்சு பக்கத்தில் உள்ள புவனா அம்மா அப்பா கத்திலேயும் விழுந்தது!

இவர்கள் பேசி முடிவதற்குள் அந்தப் பையன் சுரேஷ் புவனாவைப் பார்த்து கை அசைத்துவிட்டு “ஹாய்! புவனா! ஸீ யு லேட்டர்!” என்று கை அசைத்துவிட்டு திரும்பினான்!

அங்கிருந்த அத்தனை பேரும் ” என்னடி! புவனா! யார் அவன்! ரொம்ப பிரண்ட்லியா கை அசைச்சுட்டு போறான்!”

புவனா சாவதானமாக “அவன் என் பாய்பிரண்ட்!” என்றாள்.

சட்டென்று அருகில் இருந்த அம்மணி புவனா அம்மாவிடம் “என்னடி! உன் பொண்ணு என்னெல்லாமோ சொல்றா! இவ்வளவு தைரியமா!”

புவனாவின் அம்மாவுக்கு முகமெல்லாம் சிவந்து “புவனா! கொஞ்சம் அந்த ரூமுக்கு வா! என்னங்க! நீங்களும் வாங்க!” என்று அவள் அப்பாவையும் கூட்டிக் கொண்டு போனாள்.

பெரிய வாக்குவாதம் நடந்தது.

“உன்னை படிக்கவச்சு ஆளாக்கினத்துக்கு இது தேவையா!”

புவனாவின் அப்பாவோ “என்ன இப்போ! அவதான் தைரியமா அத்தனை பேர் முன்னாலே சொல்றாளே! அப்போ! அவ தீர்மானமாஇருக்கா!” என்று சொல்லிட்டு,

“புவனா! நான் இந்த ஸ்டேட்டஸ் பாக்கற ஆள் இல்லை! இந்தப் பையனா இருந்தாலும் நேர்மையும் குணமும்தான் முக்கியம்! உன்னை நல்லபடியா பாத்துப்பானா!” என்றார்.

“அப்பா !அம்மா! நான் சட்டென்று மயங்கி டெசிஷன் எடுக்கற ஆள் இல்லை! என் லைப் பற்றி எப்பவும் மிக அக்கறை உள்ள நல்ல குணம் உள்ளவன் என்னைப் பற்றி நன்றாக புரிஞ்ச நல்ல பையன் அப்புறம் உங்க இஷ்டம்” என்றாள்.

வெளியில் வந்தார்கள். புவனாவின் அப்பா ஆரம்பித்தார்!

” டியர் பிரண்ட்ஸ்! ஒரு ஹாப்பி நியூஸ்! இப்போ வந்து போனானே! சுரேஷ்! அவன்தான் என்னுடைய மாப்பிள்ளையா வர போறான்! இதே போல பார்ட்டி விரைவில்!” என்றார்.

பாதிப் பேருக்கு அதிசயம்! பெண் வட்டாரத்தில் பெரிய சலசலப்பு!

என்ன லெட்சுமி மேடம்! பாத்துதான் டெசிஷன் எடுத்தீங்களா! உங்க சரவுண்டிங் சரி பட்டு வருமா!

லெட்சுமி அம்மா உடன் பதில் சொல்லவில்லை! பிறகு “இந்தக் காலம்! பொண்ணோட இஷ்டம்! அவ அப்பாவுக்கும் அவனை பிடிச்சு இருக்கு! நான் சொல்றதற்கு ஒன்றும் இல்லை!” என்றாள் ஒரு மாதிரி!

எல்லாம் கலைந்து சென்றார்கள்.

அப்பா புவனவிடம், “புவனா டியர்! நீ உன் பிரண்டு எங்களுடன் மீட் பண்ண ஏற்பாடு செய்யணும், பேசணும்!” என்றார்.

புவனாவும் சற்றும் சலனமில்லாமல் சரி! என்று சொல்லிவிட்டு மறுநாள் சுரேஷிடம் பேசினாள்.

அவனும் “புவனா! நம் முதல் சந்திப்பான அந்த ரெஸ்டாரண்டில் வச்சு மீட் பண்ணலாம்” என்று சொல்லி மதியம் நாலு மணிக்கு ரெஸ்டாரண்டில் அதே யூனிபார்முடன் காத்திருந்தான்!

நால்வரும் அவன் காட்டிய டேபிளில் அமர்ந்தார்கள்.

டேபிளில் சற்று நிசப்தம்!

புவனாவின் அப்பா, “மிஸ்டர் சுரேஷ்! என் பெண்ணைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். எப்பவும் சரியான முடிவு யோசித்து செய்வாள். உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!” என்றார்.

“உங்க பேரன்ட்ஸ் கிட்டே பேசலாமா! எப்போ தீர்மானம் பண்ணலாம்!” என்றார்.

சுரேஷ் நன்றியுடன் சிரித்துவிட்டு, “ஐயா! உங்களுக்கு மிகுந்த பெருந்தன்மை! நான் எப்படி இருந்தாலும் உங்க பெண்ணின் பேச்சை முழுக்க நம்பிக்கை வைத்து என்னிடம் பேசுவதற்கு நான் மிகுந்த
மரியாதையுடன் நன்றி தெரிவிக்கிறேன்! உங்க நம்பிக்கை எந்த காலத்திலும் வீண் போகாது! நிச்சயதார்த்தம் உடன் முடியாது! ஒரு மூணு மாசம் டயம் வேணும்! என் அப்பா அம்மா ஊர்லே இல்லை! வந்தவுடன் உங்கள் முடிவு சொல்லி பேசுங்கள்” என்றான் வெகு அமைதியாக.

புவனாவின் அப்பாவுக்கு புரியவில்லை! என்ன! இந்த பையன் சலனமே இல்லாமல் மிக சாதாரணமாக பதில் சொல்லுவதை பார்த்து!

நம்ம பொண்ணு இவன் மேல காண்பிடண்ட்டா இருக்கா! அதற்குள் ஒரு போன் கால்!

என்ன அப்பா! நான் வரேன்! ஆனா நீங்க இங்க வந்துட்டு போங்க!

அப்புறம் நான் உங்க கூட வரேன்!

ஆமாம் அப்பா! நீங்க வாங்க! பேசலாம்!

பிறகு இவர்களிடம் “என் அப்பா அம்மா. என் பேரன்ட்ஸ் ஊரிலிருந்து வராங்க! வந்ததும் இது பற்றி பேசலாம்!”

அதற்குள் ஒரு பையன் ஒரு லிஸ்ட் கொண்டு இவனிடம் வந்தான்.

அதை பார்த்துவிட்டு “ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு பேசலாம்!” என்று அவனை அனுப்பி விட்டான்.

புவனாவின் அப்பாவுக்கு ஒண்ணும் புரியலே!

அதற்குள் “சார்! நான்தான் டெலிவரி செக்க்ஷன் பாத்துக்கிறேன்! நெஸ்ட் டு அவ்வர்ஸுக்கு ப்ரோகிராம் போடணும்! எனக்கு நிறைய வேலை இருக்கு சார்!” என்று மெதுவாக எந்திருந்தான்.

அவனுடைய அந்த அசாதாரணமான போக்கு அவருக்கு பிடிச்சு இருந்தது.

“அப்பா அம்மா சீக்கிரம் வராங்க! உடன் தகவல் கொடுக்கிறேன்!” என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

புவனாவின் அப்பாவுக்கு ஒரே பிரமிப்பு!

புவனாவிடம் திரும்பி “புவனா! இவன்தான் என் மாப்பிள்ளை! உன்னோட டெசிஷன் பிரமாதம்! வாழ்க்கையிலே மிக முக்கியமான கட்டத்தில் கூட இந்த பையன் நிதானமா நடந்துக்கிறான்! இவனைப் போல இன்னொருத்தன் கிடைப்பது அரிது! வாட்ட ஏ குவாலிட்டி!”

அந்த நாள் வந்தது.

அப்பா அம்மா அறிமுகத்திற்கு சுரேஷ் அதே இடத்திற்கு அவர்களை வரவழைத்தான்.

அவர்களை பார்த்த பிறகு புவனாவின் அப்பாவுக்கும், புவனாவுக்கும் புரிய ஆரம்பித்தது.

சுரேஷ் அப்பா பேசினார் “ஐயா! சாதாரண வாழ்க்கையிலிருந்து இன்னைக்கி வெளி நாட்டில் பிசினஸ் செய்யும் அளவிற்கு கஷ்டப் பட்டு வந்திருக்கிறேன். ஆனால் இவனை ஒருபோதும் வசதி காட்டி வளர்த்ததில்லை! அவனாக உழைக்கவேண்டும். கஷ்டமான வாழ்க்கை அவனுக்கு இல்லை. ஆனால் இந்த பணக்கார சூழ்நிலையில் அவன் இருக்க மாட்டான். இந்த நகரத்தில் உள்ள இந்த ரெஸ்டாரன்டின் தொடர் உணவகங்களும் என்னுடையதுதான்! ஆனால் அதே சமயம் இங்குள்ள அத்தனை பேரும் சுரேஷ் போலத்தான் எனக்கு! உங்களுக்கு சம்மதம் ஆனால் உங்கள் பெண்ணை கொடுங்கள்.நிர்வாகத்தில் அவளுக்கும் ஒரு பொறுப்பு உண்டு”

திருமணம் எளிய முறையில் நடந்தது.

புவனா சொன்னது.

நீ வசதியானவன் என்பதை ஒருபோதும் என்னிடம் காண்பிக்கவில்லை! உன் அப்பா அதற்கும் மேல்! ஒருவேளை நீ எந்த சந்தர்ப்பத்திலும் காண்பித்திருந்தால் அந்த நிமிடம் நான் உன்னை விட்டு விலகி இருப்பேன்!

சுரேஷ் அப்பொழுதும் நிதானமாக சிரித்தான்! 

தொடர்புடைய சிறுகதைகள்
நாங்கள் நெல்லைச் சீமை தாமிரபரணி கரையில் பிறந்தவர்கள்! என் மனைவி ஊருக்கும் என் ஊருக்கும் பத்து மைல்கள் தான்இருக்கும். ஒரு முறை வண்ணார் பேட்டையிலுள்ள என் தாத்தாபாட்டி, பெரியப்பா சித்தப்பா காண சென்றோம். நெல்லை டவுனில் என் பெரிய மாமனார் வீட்டில் அவளை ...
மேலும் கதையை படிக்க...
சென்ட்ரல் ஸ்டேஷன் ரிசெர்வேஷன் கௌண்டர்!. இப்போல்லாம் ஆன் லயனில் ரிசெர்வேஷன் இருந்தாலும் அன்று வெங்கட் அவன் மாமாவை பெங்களூர் வழி அனுப்ப வந்ததால் அப்படியே அந்த ரிசெர்வேஷன் கௌண்டருக்கு வந்தான் .பாரம் எழுதி ஆகி விட்டது. ஆனால் ரயில் நம்பர் தெரியாது!பேர் தெரியும் ...
மேலும் கதையை படிக்க...
குளிர் காலம் முடிந்து மலர்களும் மரங்களும் பூக்க ஆரம்பித்து விட்டன!இந்த சியாட்டில் நகரத்தின் உண்மை அழகு புடமிட்டு தெரியும் நேரம்!கண்ணனுக்கு பொழுது போகவில்லை!அந்த மலையின் முகப்பில் சென்று உருகும் பனிமலையையும் ,தெளிவான நீரோடை ,நீர்வீழ்ச்சிகளையும் பார்க்க ஆசை! மலை முகப்பு! நிறைய பேர் ...
மேலும் கதையை படிக்க...
அந்த நாட்கள். என் பணி முடிந்து வீடு திரும்பும்போது வழக்கமாக அந்த முதிய பெண்மணியிடம் தான் காய்கறி வாங்குவது வழக்கம். நான் வருவதற்கு முன் வேண்டிய யவை ரெடியாக வைத்து விடுவாள் . அன்று மிகவும் சோகமாகவும் களைப்பாகவும் இருந்தாள். என்ன ஆயா! சுறுசுறுப்பே ...
மேலும் கதையை படிக்க...
இன்டெர் நெட் திறந்ததும் அவன் முதல்லே பார்ப்பது அவனுக்கு வரும் ஆன்லைன் பர்ச்சேஸ் மலிவு என அறிவிக்கும் பொருள்கள் அதிலும் அதில் வரும் செல்போன், ஹெட்போன் தான். "கிரேசி" என்று சொன்னாலும் "பிச்சு " என்று தெலுங்கில் சொன்னாலும், பைத்தியம் என்று ...
மேலும் கதையை படிக்க...
மிகவும் சுறுசுறுப்பாக அந்த ரயில் ஸ்டேஷனில் இரவு நெருங்கும் நேரத்து அந்த பெஞ்சில் அவளும் அவனும் உட்கார்ந்திருந்தார்கள். எதிரே நடமாடும் மக்களின் சுறுசுறுப்பு இவர்களிடம் இல்லை! எதோ ஒரு சலனம்! அவர்களின் இரண்டு "காரியான்கள்" கூட அவர்களின் கை இறுக்கத்தினால் தடுமாறிக் கொண்டிருந்தன ! சலனமும் ...
மேலும் கதையை படிக்க...
மாலை ஆறு மணி.மாலை நேரம் சிலருக்கு உற்சாகம் கொடுக்கும் .மருத்துவ மனைகளில் அதுவும்ஐசீ யு அருகில் இருப்பவர்கள் வாழ்க்கையின் மறுபக்கம் நினைத்து பார்க்கும் நேரம் .கார்த்திக் அதைத் தான் செய்து கொண்டிருந்தான். உள்ளே ஐ சீயு வில் அவள் மூச்சு மெஷின் தான் ...
மேலும் கதையை படிக்க...
கடற்கரையில் காற்று வாங்கி ,மனது குளிர்ந்து செயல்படும் அருமையான மாலை நேரம். இந்த சென்னை பீச்சில் எவ்வளவு பேர் இருந்தாலும் ,அவரவர்களுக்கு உலவுவதற்கும் ஓடுவதற்கும் ,உட்கார்ந்து ரசிப்பதற்கும் தனிமை உண்டு.மாலையின் குளிர்ந்த அந்தப் பொழுதில் சாலை விளக்கொளிகள் சூரியன் மறைவதைப் பொறுத்து மிளிர ...
மேலும் கதையை படிக்க...
மகாலட்சுமி கோயில் மும்பை .மெயின் ரோடு வரைதான் கார் போனது.சற்றே குறுகலான இரு பக்கம் கடைகளும் கூட்டமும் மிகுந்த அந்த வழியில் சென்றோம். அர்ச்சனை தட்டுடன் கடைகளில் ...
மேலும் கதையை படிக்க...
உள்ளம் உணர்ந்து உணர்வுகளும் உறைந்து விட்டன.அந்த நினைவுகளுக்கு எதிர் தோற்றங்கள் அளிக்க அவனால் முடிய வில்லை அவனும் மனிதன்தானே என்று சொல்லிவிட முடியும் . நினைவுகளின் பரிமாணங்கள் அளந்து சொல்ல முடியாத ஒன்று ! எழுதலாம் . கடலுக்குள் ஆழமிருக்கிறது! ஆகாயத்தில் தூரமிருக்கிறது ! ஆனால் அவன் மனத்தின் ...
மேலும் கதையை படிக்க...
என் மனைவி சொன்ன கதை
மெல்லிய மலர் உன் மனது
பனி பொழியும் மலை தந்த ஒரு பதுமை
வைரங்கள் தெரிவதில்லை
வைரஸ் வந்ததும் போவதும்
ரயில் நிலைய பெஞ்சு
கண்ணீரில் நனைந்த நினைவுகள்
இவள் ஒரு காதம்பரி
காற்று, கடல், கண்மணி
ரமேஷ் தேடிய ராகமாலிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)