காதல் – சாதல்

 

மூன்று வருடங்கள் கழித்து கலைவாணி கல்லூரி படிப்பை முடித்து விட்டு, தன் ஊரான மேட்டுப்பாளையம் வருகிறாள். அதனால் அவள் அப்பா ரயில்வே ஸ்டேசன்லில் காத்திருக்கிறார்.

கோயம்புத்தூர் ரயில் சற்று நேரத்தில் மேட்டுப்பாளைத்திற்கு வரும் என்று அறிவித்தனர்.

அங்கு இருந்த டிவியில், “சாமூத்திரிக்காப் பட்டு சர்வ லட்ஷணம் படைத்தது. உங்கள் சென்னை சில்க்ஸ்யில்” என்ற விளம்பரம் ஓடிக்கொண்டு இருந்தது. அதைப் பார்த்ததும், தன் மனதில் மகளின் கல்யாணம் எண்ணம் ஓடியது.

ரயில் வந்தது. தன் மகள் இரண்டு பேக்களை எடுத்துக்கொண்டு வந்தாள். அவள் தன் அப்பாவை தூரத்தில் இருந்து, பார்த்தாள்.

அப்பா அருகே வர வர மகிழ்ச்சியோடு நெருங்கி வந்தாள்.

அப்பா, “வா ம்மா மதுரையில் இருந்த வர, அங்க ரயில் கெடச்சுசா? என்றார்.

“ம்ம் பா, மதுரையில 7 மணிக்கு டிரையின் ஏயிட்ட, கோவை வந்து, மேட்டுப்பாளையம் டிரைண்யில் வந்துட்ட, அம்மா எங்கப்பா வரல? என்று கேட்டாள் கலைவாணி.

அப்பா, “ம்ம் அம்மா, வீட்டுல உனக்காக சமைக்கிறார், சரி வா போலாம்”.

காரில் இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள்.

கலைவாணி இப்படியே மூன்று மாதம் வீட்டில் இருக்கிறாள்.

அவள் மனதில் குழப்பமும், பயமும் இருந்தது. சில நேரம் சந்தோஷமாக இருக்கிறாள், சில நேரம் ரூம்யை விட்டு வெளியே வரமால் போனைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.

ஒருநாள் அப்பாவைப் பார்க்க வீட்டிற்க்கு இரண்டு பெரியவர்கள் வந்தார்கள்.

அவர்கள் வந்த விஷயம் கலைவாணி கல்யாணத்த பத்தி பேசத் தான், கலைவாணி இந்த செய்தியை உள்ளே இருந்து கேட்டாள். கண்களில் சிறிது கண்ணீர் வருகிறது.

அப்பா “சரிங்க, நா வீட்டுல கலந்து பேசிட்டு உங்களுக்கு நல்ல முடிவா சொல்லறன்னு” சொல்லி அனுப்பி விட்டார்.

இரண்டு நாள் கழித்து கலைவாணியின் அம்மா,அப்பா இருவரும் வெளியே சென்று விட்டனர்.

அப்போது கலைவாணி வீட்டிற்குள் ரூம்யைப் பூட்டி வைத்து விட்டு உள்ளே இருந்தாள்.

அவள் தோழி ஜெயந்தி கதவை தட்டும் போது, அவள் அங்கு உள்ளே தூக்கு மாட்டிக்கொண்டு இருந்தாள்.

கண்ணாடி வழியாக பார்த்து, அதிர்ச்சியில் வீட்டின் பின்புறம் சென்று வீட்டிற்குள் சென்றாள்.

பிறகு கலைவாணியைக் காப்பாற்றிவிட்டாள்.

அப்போது ஜெயந்தி கேள்விக் கேட்கிறாள்.

ஜெயந்தி, “ஏண்டி உனக்கு என்ன ஆச்சு, தற்கொலை பன்னிக்கற அளவுக்கு நீ பெரிய ஆளு ஆயிட்டல, அப்படி என்ன உனக்கு கஷ்டம்? என்று கேட்கிறாள்.

கலைவாணி, “எனக்கு எந்த கஷ்டமும் இல்ல டி, என்னல தா எல்லாருக்கும் கஷ்டம் அத நா சாகற? என்று அழுது சொல்கிறாள்.

ஜெயந்தி, “உன்னால யாருக்கும் இங்க கஷ்டம் இல்ல, நீ என்ன சொன்னாலும் கேட்கற அப்பா அம்மா இருக்கறாங்க, நீ ஆசைப்பட்டத பன்றாங்க யாருக்கும் இந்த காலத்துல இப்படி ஒரு அப்பா அம்மா கிடைக்க மாட்டங்க? இப்ப நீ உண்மைய சொல்ல ல நீ தூக்கு மாட்டுனத உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிருவ? என்று மிரட்டுகிறாள்.

கலைவாணி, “நா காலேஜ் படிக்கும் போது, என் கிளாஸ்ல அசோக்ன்னு ஒரு பையன லவ் பன்னுன, அவனும் என்ன லவ் பன்னுனான். நா காலேஜ் முடிக்கும் போது அவன் எங்கிட்ட, நீ ஊருக்கு போ, நா மூன்று மாசத்துல அங்க வந்து பொண்ணு கேக்கற, அதுக்குல்ல நா நல்ல வேலைக்கு சேர்ந்துட்டு வரன்னு சொன்ன, ஆனா? என்று கூறி அழுகிறாள்.

ஜெயந்தி, “என்ன ஆனா”? சொல்லு டீ என்கிறாள்.

கலைவாணி, “ அவனுக்கு போன் பன்னாலும் எடுக்கல, மெஜேஜ் பன்னாலும் ரிப்பேல இல்ல, அவனால, நா சாப்படக் கூட முடியல, அவன் சொன்ன டைம்மும் முடிஞ்ச்சு, அவன் மெஜேஜ்க்காக போன் பாத்து பாத்து கண்ணும் போச்சு, என்னோட அறிவு எல்லா போய் குழம்பி இருக்க, நைட் வந்த தூக்கம் இல்ல ஒரே பயமா இருக்கு, எனக்கு சாக பயம் இல்லை ஆன நா செத்தா, அடுத்த பிறவிலயாது அவன் கூட சேருவானான்னு தா பயம் டீ” ன்னு சொல்லி அழுகிறாள்.

ஜெயந்தி, “சரி நீ அவங்க மொபல் நம்பர் தா நா பேசர” ன்னு சொல்லி போன எடுக்கற,

போன் செய்கிறாள்.

ரிங் போகிறது.

அட்டண் ஆகிவிட்டது.

ஜெயந்தி ,பதற்றத்துடன், “ஹாலோ நா கலைவாணி தோழி ஜெயந்தி பேசற, என்று கூறி எல்லா உண்மையையும் சொல்கிறாள்.

அதற்கு அவர் “நா நாளைக்கு அவ ஊருக்கு வரன்னு சொல்லுங்க, பொண்ணு கேட்க, அப்படியே லவ் யூ ன்னு சொல்லிருங்க,” என்று அவர் போன்யில் சொன்னபடியே சொல்கிறாள்.

நற்றிணை 397, அம்மூவனார்

தோளும் அழியும் நாளும்

சென்றென,

நீள் இடை அத்தம் நோக்கி வாள்

அற்றுக்

கண்ணும் காட்சி தெளவினை

என் நீத்து

அறிவும் மயங்கி பிறிது

ஆகின்றே,

நோயும் பெருகும்

மாலையும் வந்தன்று,

யாங்கு ஆகுவென் கொல்

யானே? ஈங்கோ

சாதல் அஞ்சேன் அஞ்சுவல்

ஆயின்

மறக்குவேன் கொல் என்

காதலன் எனவே.

கரு: அன்று மட்டுமல்ல, இன்றும் தலைவி தன் தலைவனுக்காக, காத்துக் கொண்டு தான் இருக்கிறாள். இன்றும் எல்லா தலைவியும், தோழியிடம் தான், தலைவனின் பிரிவு வருத்ததைக் கூறுகிறாள். 

தொடர்புடைய சிறுகதைகள்
மூன்று வருடங்களாக அதுல்யாவும், ஹரிஸ்யும் சிறந்த காதலர்கள். வீட்டிற்க்கு தெரியாமல் தான் காதலிக்கிறார்கள். இருப்பினும் இரு குடும்பமும் நன்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் போல் பழகுபவர்கள். இதனால் வீட்டில் இவர்களின் காதல் தெரிந்தாலும் கல்யாணத்திற்கு அவ்வளவுவாக பிரச்சனைகள் ஏதும் வராது. அதனால் பயமில்லை. ஒருநாள் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு நகரத்தில் ”மிஸ்டர் விக்னேஷ்” என்ற ஒருவர் இருந்தார். அவர் மின்சாரத் துறையில் அலுவலராக பணிபுரிகிறார். குடும்பத்தலைவர். இரு பெண் பிள்ளைகளைப் பெற்றவர். வயது 45 ஆக இருக்கும். இவரை அவர் தெருக்கார்கள் எல்லாம், மிஸ்டர், சார், என்றே அழைப்பார். அவர் பார்ப்பதற்க்கு ...
மேலும் கதையை படிக்க...
“மை டியர் மச்சா, நீ மனசு வைச்சா”..... என்று பாடல் வீட்டு டிவியில் ஓடிக்கொண்டு இருந்தது. அதை ரசித்தப்படியே கண்ணாடியில் தலைசீவிக் கொண்டிருந்தான் அசோக். டிபன்பாக்ஸில் தக்காளிசாதம் போட்டு மூடிக் கொடுத்தாள் அவன் அம்மா பார்வதி. அவன் பேக்யை மாட்டிக்கொண்டு சீப்பு ...
மேலும் கதையை படிக்க...
வயதான கிழவன் ஒருவர் இந்த கல்லூரிக்கு வருகை தந்தார். அந்த கல்லூரி வாயில் இருந்த பாதுகாவலர் அவரை வெளியே துரத்தினார். அந்த வாயில் வழியாகச் சென்ற முதல்வர் அவரைக் கண்டுக்கொள்ளாமல், காரில் கதவை மூடிக்கொண்டு சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு தொடர்ந்து ...
மேலும் கதையை படிக்க...
ஜூன் 6 தேதியைக் கிழிக்கிறான் வளவன். அழகான பெயர் ,பெயர்க்கு ஏற்றவாறே அழகும், அறிவும் கொண்டவன். அவனுக்கு இன்று முதல் நாள் கல்லூரி. ‘’அம்மா போய்ட்டு வரேன்’’ ,என்று சொல்லி எழுதாத புதுநோட் மட்டும் எடுத்துச் சென்றான்.. “டேய் நில்லுடா”……………. அம்மா வாசலில் வந்து ...
மேலும் கதையை படிக்க...
எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறாள் செல்வி. நன்றாக படிப்பவள். அவளுக்கு வீட்டில் சில பிரச்சனைகள், அவள் தந்தை மது அறுந்துபவர். அதைத் தவிற அவளிடம் தவறாகவும் நடந்து கொள்ளக் கூடியவர். அவள் அம்மா வீட்டு வேலைக்கு செல்பவள். அவள் அம்மா தான் ...
மேலும் கதையை படிக்க...
“அண்ணா, அண்ணா” ஸ்கூலுக்கு டைம் ஆச்சு போலய்யா? என்று கனிமொழி அண்ணாவை எழுப்பினாள். அன்பான தங்கை நன்றாகப் படிப்பவள், பத்தாவது படிக்கிறாள். அமைதியான பெண். அண்ணன் மீது பயமும் அன்பும் வைத்திருப்பாள். ஒழுக்கமான பெண். ஆனால், அண்ணன் கதிர் அப்படி இல்லை, அவளுக்கு நேர்மாறாக ...
மேலும் கதையை படிக்க...
“அப்பா, அப்பா இன்னைக்கு நம்ம தாத்தா, பாட்டியைப் பார்க்க போறாமா? அவங்க ஊர் எப்படி இருக்கும் அப்பா? சொல்லுங்க பா? சொல்லுங்க? என்று வினாவினாள், ஐந்து வயது சிறுமி ஊர்மிளா. “அதுவா, நம்ம அங்க தான, போறோம் நீயே பாப்ப! என்று அவளை ...
மேலும் கதையை படிக்க...
(சங்க இலக்கிய பாடலில் சிறுகதை) “வள்ளி, என் மகள் தாமரையைப் பாத்தியா” என்ற கேள்வி கேட்டப்படியே தாமரையைத் தேடி செல்கிறாள் சித்தி துளசியம்மாள். இவள் யாரு எதற்கு தாமரையைத் தேடிகிறாள். தாமரை யாரு? அவளுக்கு என்ன ஆச்சு? என்பதைக் இக்கதையில் காண்போம். துளசியம்மாள், கூலி வேலைக்காரி, ...
மேலும் கதையை படிக்க...
(சங்க இலக்கிய பாடலில் சிறுகதை) கொராணா வைரஸ் சமீக காலத்தில் அதிகம் பரவி வருகிறது. அதனால் அதிக மக்கள் உயிரிழந்தனர். ஆகையால் அரசு உள்ளிருப்பு சட்டம் கொண்டு வந்தது. இதனால் மக்கள் அனைவரும் வெளியே வராமல் வீட்டிற்குள் அடைந்து கிடந்தனர். கல்லூரி விடுமுறை ஏப்ரல் ...
மேலும் கதையை படிக்க...
அந்த இரவு
வேலியே பயிரை மேய்ந்தாற் போல – ஒரு பக்க கதை
மூன்று மாசம்
காய்ந்த மரம்
முதல் நாள்
இப்படியும் ஒரு தந்தை
கண்ணோட்டம்
எண்ணம்
சித்தியின் தேடல்
நிலைமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)