காணாது போகுமோ காதல்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 10, 2022
பார்வையிட்டோர்: 4,369 
 

பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3

வேதவல்லி_பார்த்தசாரதி தம்பதிகளுக்கு தீபக் ஒரே பையன். இரண்டு வருடத்திற்கு முன்பு பார்த்தசாரதி உடல்நலக் குறைவால் காலமானார். அவர் இருக்கும் போதும் தன் மச்சினன் காசிநாதன் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் போன பிறகு வேதவல்லி, எஸ்டேட் விஷயத்திலும் வீட்டு விவகாரங்களிலும் தன் தம்பி காசி சொல்லிவிட்டால் அதற்கு அப்பீலே கிடையாது.

காசிநாதனுக்கு மனைவி இல்லை. மகள் ரேணு மகன் ஷாம் மூவரும் மட்டும்தான். பங்களாவின் பின்புறம் சற்று தள்ளி இருந்த அவுட் ஹவுஸில் குடியிருந்தார்கள்.

காசிநாதன் குடும்பம் தங்கியிருப்பது அவுட் ஹவுஸ் என்றாலும் சாப்பாடு மூன்று வேளையும் பங்களாவில்தான். ஆரம்பத்தில் ஊருக்குள் ஒரு தெருவில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார் காசி. பார்த்தசாரதி இறந்த பிறகு வேதவல்லி தன்னுடன் இருக்க அழைத்த போது அதை மறுத்தார் காசி. தீபக் பாரின் போனபிறகு தன் அக்காவிற்காக வருகிறேன் எனக் கூறி அவுட் ஹவுஸில் தான் குடியிருப்பேன் எனக் கூறி குடியமர்ந்தார். அவரது ஆசை எதுவென்றால் ரேணுவை தீபக்கிற்கு கல்யாணம் முடித்து வைத்து விட்டால் தனக்கும் தன் மகனிற்கும் சுகபோகமான வாழ்க்கை கிட்டும் என்பது அவரது கனவு, நோக்கம், ஆசை எல்லாம்.

அன்று இரவு மாடி சிட்அவுட்டில் தீபக் சேரில் அமர்ந்து எதிரே தெரியும் மலையையும் தேயிலைத் தோட்டத்தையும் வெள்ளைக் கோடாய் தெரியும் அருவியையும் வயலின் இசை ஒலிக்க லயித்திருந்தான். அப்போது வேதவல்லி வந்தாள்.

“இப்படி குளிர் அடிக்குது. இங்கே ஏம்பா உட்கார்ந்து கிட்டிருக்கே.” என பக்கத்து சோஃபாவில் அமர்ந்தாள்.

தீபக் வயலின் இசையைக் குறைத்து விட்டு “எதிரே தெரியற இயற்கையைப் பாரும்மா.எவ்வளவு ரம்யமாக இருக்கு.”

புன்னகைத்து “உண்மை. ஆனா உடம்புக்கு குளிர் ஒத்துக்குமா? நீ இங்கே பிறந்து வளர்ந்தவன்தான் என்றாலும் நாலைந்து வருடம் நீ பாரின் போயிட்டே அதனால உனக்கு ஒத்துக்காம போயிடுமோன்னு பயப்படுறேன்.”

தீபக் “எனக்கு ஒண்ணும் பண்ணாது. உங்களுக்குத் தான் இந்தக் குளிர்காற்று ஆகாது. வாங்க உள்ளே போகலாம்.” என்று எழுந்தவனை கையைப் பிடித்து அமர வைத்து “உட்கார். உன்கிட்டே பேசணும்.”

“என்னம்மா சொல்லுங்க”

“நம்ம தேயிலை எஸ்டேட்டில் ஏதோ தப்பு நடக்குதப்பா. கொஞ்சநாளா நான் கவனிக்கிறேன்.”

“எப்படி சொல்றீங்க?”

வேதவல்லி “புரடக்க்ஷன் நல்லா இருக்கு. ஆனா பாக்கேஜ் குறைவா காட்டுது. நான் மானேஜரை கேட்டேன். அவரு விழிக்கிறாரு.”

“காசி மாமா தானே எல்லாம் பார்த்துக்கிறாரு. அவரு என்ன சொல்றாரு?”

வேதவல்லி “பாவம், அவன் கேட்டதுக்கும் பதில் இல்லை. என்ன பண்றது அக்கா?ன்னு கேட்கிறான். வயசானவங்க தானேன்னு யாரோ ஏமாத்துறாங்க. நீ நாளைக்குத்தானே எஸ்டேட் போகலாம்னு இருக்கே.? நீ என்னன்னு கவனி.”

தீபக் யோசனையோடு தூங்கப் போனான். மறுநாள் பொழுது புலர்ந்த போது மழை நசுநசுன்னு பெய்து கொண்டிருந்தது. தீபக் பேண்ட் சர்ட் அதற்கு மேல் ஜாக்கெட் போட்டிருந்தான். ஜம்மென்று டைனிங் டேபிளுக்கு வந்தான். அவன் வந்ததும் மனதை மயக்கும் பர்ஃப்யூம் வாசனை அந்த இடம் பூரா நிரம்பியிருந்தது.

வேதவல்லி, காசி, ஷாம், ரேணு அனைவரும் சாப்பிடக் காத்திருந்தனர்.

“எல்லாரும் எனக்காகவா வெயிட் பண்றீங்க?”

காசி புன்னகைத்து “ஆமா தீபக்.”

“ஐயாம் வெரி ஸாரி.இனிமே சாப்பிடுவதற்காக காத்திருக்க வேண்டாம்.நான் வரும்போது சாப்பிடுறேன். எனக்காக யாரும் வெயிட் பண்ண வேண்டாம். ஸாரி”

“அட என்ன தீபக் இதுக்குப் போயி ஃபீல் பண்றே? ஜெர்மனியில் தனியா சாப்பிட்டிருப்பே, உன் பிரண்ட்ஸ்களுடன் சாப்பிட்டு இருப்பே. ஆனா சொந்தங்களுடன் உட்கார்ந்து சாப்பிடுறதே தனி சந்தோஷம் இல்லையா?”

தீபக் “சாப்பிடுற விஷயத்துக்கு ஏன் இவ்வளவு லென்த்தா பேசுறே?”

ஷாம் உள்பட காசி, ரேணு முகம் சுருங்கியது. வேதவல்லி புன்னகையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். தீபக் நிமிர்ந்து பார்க்காமல் சாப்பிட்டு முடித்து கை கழுவ எழுந்தான். கை கழுவி திரும்பியவனிடம் பாண்டி சுடச்சுட பில்டர் காபியை நீட்ட அதன் மணமும், அவரின் அக்கறையையும் கண்டு முகம் மலர “சாப்பிட்டதும் காபி குடிப்பேன்னு நினைவு வச்சிருக்கீங்களே. தேங்க்யூ.”

என வாங்கிக் கொண்டான். பாண்டி “இதுக்கெல்லாம் நன்றி எதுக்கு தம்பி ? இது என் கடமையல்லவா? உங்க புண்ணியத்துல நாங்க நிம்மதியாய் இருக்கோம். அதுக்கு நாந்தான் நன்றி சொல்லணும்.” தீபக் சிரித்தபடி ஹாலுக்கு வந்தான். சோஃபாவில் அமர்ந்திருந்த வேதவல்லியிடம் “நான் எஸ்டேடிற்கு கிளம்புறேம்மா.” தீபக்

“சரிப்பா. மதிய சாப்பாட்டை அனுப்பிவிடுறேன். நான் சொன்ன விஷயம் பற்றி கவனி.”

தீபக் புன்னகையுடன் “ஷ்யூர் வர்றேன் ” என்று போர்டிகோவில் ரெடியாக இருந்த காரில் வந்து அமர்ந்து ” போலாம் சீனு அண்ணே” என்றதும் கார் வழுக்கிக் கொண்டு புறப்பட்டது.

காரில் லேப்டாப்பை திறந்து ஷேர் நிலவரம் பார்த்தான். வெளியே மழை லேசாகப் பெய்து கொண்டிருந்தது. வெளியே மழையைப் பார்த்ததும் சட்டென்று நைனிகா நினைவு வந்தது. ஜெர்மனியில் அவளோடு சுற்றிய நாட்கள் தீயாய் வலித்தது. ஒருவருடமாய் காதலித்தாள்.தீபக்கிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டாள். தீபக்கும் உயிருக்கு உயிராய் இருந்தான். ஆனால் அவளிடம் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்ள மாட்டான்.

அவன் விரல் கூட அவள் மேல் பட்டதில்லை. ஆனால் நைனிகா அவனைத் தொட்டு பேசுவாள். அவன் கையைப் பிடித்துக் கொண்டு நடப்பாள்.

ஒருமுறை “தீப் உன் உதடு இத்தனை சிவப்பாய் இருக்கு லிப்ஸ்டிக் போடுவியோ” எனக் கேட்டாள்.

தீபக் சிரித்தபடி “ச்சீ நாட்டி. கைஸ் எல்லாம் செய்யற வேலையா?” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் இதழோடு தன் இதழ் பதித்தாள். ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனவன். அவளிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு “ஏய் என்ன பண்றே?”

நைனிகா சிரித்து “நான் லிப்ஸ்டிக் போட்டிருக்கியா என்று நான் கேட்டதும் நீ என்னை இழுத்து கிஸ் பண்ணிருக்கணும். எனக்கு உன்னைக் கிஸ் பண்ண ஆசை.இவ்வளவு ஏன்? நீ இப்ப சரின்னு சொன்னா… என்னையே உனக்கு கொடுக்கத் தயார்.”

தீபக் ஆச்சரியமாகப் பார்த்தான். நைனிகா “என்னடா பாக்குறே? ஒரு கேர்ள் இப்படி சொல்றாளேன்னு நினைக்கிறியா? எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கு. என்னைக் கைவிட மாட்டே. நானும் தமிழ் பொண்ணுதான். படிக்கத் தான் ஜெர்மனி வந்துருக்கேன். நீயும் எனக்காக உன் அம்மாவை நம்ம மாரேஜிற்கு சம்மதிக்க வச்சுடுவே. ரெண்டு பேருக்கும் ஒரே ஸ்டேட்டஸ். ஸோ நிச்சயம் நாம கல்யாணம் பண்ணிப்போம். அதான் நாம இப்பவே கணவன் மனைவி மாதிரி வாழலாம்.”

தீபக் சிரித்து “எல்லாம் சரிதான். பட் எதுவும் முறையா நடக்கணும். உன் கழுத்தில் தாலி கட்டின பிறகு தான் உன்னைத் தொடுவேன்”

“இங்கே நம்மை கவனிக்கல”.

“அதற்காகப் பண்பாட்டை மீறுவதா? இதெல்லாம் நீ சொல்லணும்.”

நைனிகா இரு கைகளையும் தீபக் முகத்திற்கு அருகே கொண்டு வந்து “ஆ” வென்று கத்தினாள்.

மற்றொரு நாள் இதே போல மழை பெய்த மாலை வேளை நைனிகா தீபக்கினுடைய அப்பார்ட்மெண்டிற்கு வந்தாள். “வீட்டை சூப்பரா வச்சிருக்கே தீபக்.”

“தேங்க்ஸ் நைனி. உட்கார். என்ன வேணும்?”

நைனிகா அவனை நெருங்கி

“நீதான் வேணும்.”

“ஏய் சீ. என்ன ரொமான்ஸ் மூடில் இருக்கியா?” என்றபடி அவளுக்காக நூடுல்ஸ் ரெடி பண்ணினான். நைனிகா அவனை உரசியபடி வந்து “ஆமாடா. ஒரு சீன் பார்த்துட்டேன்.”

“என்ன பார்த்தே?”

“எங்க அப்பார்ட்மெண்டில் ஒரு ஹவுஸ்.அந்த லேடியைப் பார்க்கப் போனேன்.கதவைத் தட்டிட்டுதான் உள்ளே போனேன். ஹால் சோஃபாவில் அந்த லேடியும் அவளோட பாய்பிரண்ட் கூட செக்ஸ் வச்சுட்டு இருந்ததைப் பார்த்துட்டேன். அதிலிருந்து ஒருமாதிரி டிஸ்டர்ப் ஆகியிருக்கேன்.”

தீபக் சிரித்து “உடல் தேவை அதிகமானால் வரம்புகளைத் தாண்டத் தூண்டும். நீ பார்த்த ஜோடி பாரினர்ஸா?”

நைனிகா “ஆமா. அவங்க லிவ்விங் டுகெதரா இருக்காங்க”

“ஆங் பார்த்தியா? அவங்க கல்ச்சர் அப்படி. நாம மெல்லிய மஞ்சள் கயிருக்கு கட்டுப்படுவோம். அதான் நம்ம பண்பாடு.”

நைனிகா “இருக்கட்டும். ஆனா கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க அப்பிடி இப்பிடி இருந்தா ஒரு தப்பும் கிடையாது.” என்று ஹாலுக்குப் போனாள். தீபக் ரெடியான நூடுல்ஸை இரு ப்ளேட் களில் போட்டுக் கொண்டு ஹாலுக்கு வந்தான். அங்கே நைனிகா ஆடைகளை அவிழ்த்து பிறந்த மேனியாகப் படுத்திருந்தாள். தீபக் ஆடிப் போனான். “ஏ என்ன காரியம் பண்றே? டிரஸைப் போடு நைனிகா” முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு ஆவேசமாய் கத்தினான். நைனிகா ” தீப…”

தீபக் கடுமையான குரலில்,

“நீ இப்ப டிரஸை போடப் போறீயா? நான் வெளியே போகட்டுமா?” என்றதும் அமைதியாக நைனிகா டிரஸை உடுத்திக் கொண்டாள். அதன்பிறகு மெளனமாக அவன் தந்த நூடுல்ஸை சாப்பிட்டாள். ஒற்றை வார்த்தையில் “ஸீ யூ” என்று கிளம்பி போனாள்.

இரண்டு நாட்கள் தீபக்கிற்கு போனும் பண்ணவில்லை. தீபக் பண்ணினாலும் கட் பண்ணினாள். தீபக்கிற்கு கொஞ்சம் குற்ற உணர்வு இருந்தது. ‘பாவம் அவளை ரொம்ப காயப்படுத்தி விட்டேனோ?’ என நினைத்து நினைத்து மருகினான். ஒருவாரம் சென்றது. பொறுக்க முடியாமல் நைனிகா அப்பார்ட்மெண்டிற்குச் சென்றான். நைனிகா கதவைத் திறந்தாள். இவனைப் பார்த்ததும் சலிப்பாய் “கம்” என சோஃபாவில் போய் அமர்ந்தாள். தீபக் அவள் கையைப் பிடித்து “ஸாரி நைனி. சரி வா வெளியே போகலாம்.” அவள் தன் கையை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டு “நா வரலை. இனிமே நமக்குள் எதுவும் இல்லை. குட்பை. நீ போகலாம்.”

தீபக் விநோதமாய் அவளைப் பார்த்து “கேவலம் செக்ஸ் வச்சுக்கலைன்னு ட்ரூ லவ்வை வேண்டாங்கிறீயா?”

“கேவலம் செக்ஸா? இந்த செக்ஸாலதான் உலகமே இயங்குது. நீ சொல்றீயே பண்பாடு அதுக்கு அடித்தளமே செக்ஸ்தான். நாலு பேரு முன்னாடி ஒரு மஞ்சக் கயிறை கட்டிட்டு பண்றதை கட்டாம பண்ணினா அது கேவலமா? ஆண் பெண் படைப்பே அதுக்குத் தானே.”

தீபக் “ஓகே. செக்ஸ் கேவலம் இல்லே போதுமா? வா வெளியே போகலாம்.”

“வேண்டாம். எனக்கு நீ வேண்டாம் தீபக்”

தீபக் அதிர்ச்சியாக “ஏன் இப்படி பேசறே?”

“பின்னே எப்படி பேசுவேன்? டிரஸ் இல்லாம லவ்வரைப் பார்த்த எந்த ஆணும் சும்மா இருப்பானா? ஆனா நீ?”

“நான் வளர்ந்த விதம் அப்படி. எதையுமே முறையோடு அனுபவிக்க நினைச்சேன் அது தப்பா?”

“எனக்கு பயமாயிருக்கு. நாளைக்கு நமக்கு மாரேஜ் ஆனபிறகு ஒவ்வொரு நாளும் செக்ஸ் வேணும்னு உன்கிட்ட பிச்சை எடுக்கச் சொல்றீயா?அந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்.”

தீபக் பரிதவிப்போடு “அப்படி பேசாதே நைனிகா.”

“நீ ஒரு இம்போடண்ட் guyனு சந்தேகமா இருக்கு.”

தீபக் ஆத்திரமாக அவள் கழுத்தைப் பிடித்து சுவரோடு அழுத்தி “ச்சீ” என்று வேகமாக வெளியேறினான்.

அதன்பிறகு நைனிகா என்பவளை மறந்தே போனான். பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவனை கார் நின்றதும் நினைவு கலைந்து “என்ன அண்ணே ஆச்சு?”

சீனு “மழைனாலே டிராபிக் தம்பி. நம்ம எஸ்டேட் பக்கம் வந்தாச்சு.” மழை இல்லை.ஆனால் மழை நீர் கார் கதவு கண்ணாடியில் துளிகளை நிரப்பி இருந்தது.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது அதில் ஒரு பெண் முகம் தெரிந்தது. நீண்ட விழி கத்தி போல மூக்கு சிமிழ் போன்ற வாய். எடுப்பான முகம். கூந்தலை முன்னால் போட்டுக் கொண்டு கண்ணாடியில் தன் முகத்தை பார்த்துக் கொண்டு விலகியிருந்த தாவாணியை சரி பண்ணிக் கொண்டாள். உள்ளே இருந்து தீபக் பார்ப்பது அந்த கறுப்பு கண்ணாடியில் தெரியாது. அதோடு தன் சிவந்த விரல்களால் ஏதோ எழுதினாள். தீபக் கோபமாக கண்ணாடியை லேசாக இறக்கினான். திடுக்கிட்டு ஒரு நிமிடம் பார்த்தவள் அலறி அடித்தபடி ஓடினாள். டிராபிக் சரியானதும் கார் புறப்பட்டது. எஸ்டேட் வந்து இறங்கிய தீபக் கார் கதவை மூடும் போது தற்செயலாக அவன் கண்ணில் பட்டது அந்த கண்ணாடியில் ஆதிரா என்றிருந்தது. ‘அந்தப் பெண் எழுதியதா’ என நினைத்து, அந்தப் பெயர் தன் வாழ்வில் செய்யப் போகும் மாயத்தை அறியாமலே தன் வேலையில் மூழ்கிப் போனான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *