ஒரு கோலமயில் என் துணையிருப்பு

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 29, 2018
பார்வையிட்டோர்: 20,274 
 
 

(இதைப்புரிந்து கொள்ள பாகம்: 1 – ஒரு கோலமயிலின் குடியிருப்பு , பாகம்: 2 – சேற்றில் மலர்ந்த தாமரை, பாகம்:3 – பெண் வீணை, பாகம்: 4 – இலட்சியப் பயணம் , பாகம்: 5 – வீணான பெண் , பாகம்: 6 – சீரான அலங்கோலங்கள் என்ற கதைகளை வாசிக்கவும்)

பாகம் – 7 (கடைசி)

மழை அடம்பிடிக்க டின்னர் முடிந்து, விட்ட இடத்திலிருந்து பேச்சுக்களைத் தொடர்ந்தோம். 11.00 மணியளவில் அம்மா தூங்கச் சென்றுவிட்டார். மல்லிகாவும் விட்ட இடத்திலிருந்து விருந்துண்ண ஆயத்தம் ஆகிவிட்டார். இவ்வளவு நிம்மதியுடன் இவ்வளவு குளோசாக நான் ஒரு நாளும், யாருடனும் இருந்ததில்லை. என் மடியிலேயே கிடந்த மல்லிகா நிறைய பேசிக்கொண்டேயிருந்தார். அந்த பேச்சுக்கள் கேட்பதற்கே எனக்கு இனிமையாக ஒலித்தன. கைகள் பலவற்றைத் தேடி தடையின்றி எல்லைகளைக் கடக்க ஆரம்பித்தன. சிறிது நேரத்தில், அமர்ந்து காப்பி போட்டுக் கொண்டு வந்தார் மல்லிகா. நெல்லையில் நாம் சந்தித்த சேலேன்ஜஸ், பல நிகழ்வுகள், நமது இனிமையான அனுபவங்கள், சினிமா தியேட்டர், ஹோட்டல், இரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் நாம் அடித்த கும்மாளம், நாம் சந்தித்த நண்பர்கள், எங்களுக்கு பல விதத்தில் உதவி புரிந்தோர், ஏளனமாக நடத்தினவர் ஆகியோரை நினைத்துக்கொண்டோம். போர்வையைப் போர்த்திக்கொண்டு மணி 2 ஆகியும் நமக்கு தூக்கம் வரவில்லை, லைட் அணைக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டேன். பேசிக்கொண்டேயிருக்கும் பொழுது மல்லிகா,

“…என்ன சர் நீங்கள், எதையும் கேட்பதே இல்லையே.”

“… நான் கேட்டுக்கொண்டு தானே இருக்கிறேன்.” நீங்கள் சொன்னதையெல்லாம் ரிபீட் பண்ணி சொல்லட்டுமா, நான் எதையும் கேட்காமல் இல்லை, உங்களுடன் நான் செய்துக் கொண்டிருப்பது அது தானே. நீங்கள் பேச பேச நான் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன் உங்களைப் பார்த்தபடி. “

“.. நான் பேச்சை சொல்லவில்லை, தேர் ஈஸ் நொ டிமாண்ட் ஃப்ரம் யூ. அது வேண்டும் இது வேண்டும் என்று…”

‘…அது தான் நீங்கள் கொடுத்து விட்டீர்களே – சூடான காப்பி, இரண்டு முறை…!”

“… ஐயோ… நான் எப்படி புரிய வைப்பது….”

“…ஒஹ். சரி டியர், நான் ஒன்று கேட்கட்டுமா, இன்று மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும், பாலில் ஊறிய மல்லிகை மொட்டே, ரைட் டா?”

“..ரைட்.. கேளுங்கள்..”

நெல்லையில் அம்மா ஒரு ஜோடிக்கு அட்வைஸ் செய்து அனுப்பியதை நீங்கள் சொல்லும் பொழுது, நான் “அப்படி என்னதான் அவர் செய்யச்சொன்னார் என்று உங்களிடம் கேட்டேன் இல்லே? நீங்கள் என்ன சொன்னீர்கள்? “ மூஞ்சியைப்பாருங்கள், இப்போ வேண்டாம், நேரம் வரும் பொழுது நீங்களும் அதைக் கேட்பீர்கள்..” என்று சொல்லவில்லை..?”

“..ஆமாம் சொன்னேன்…”

“.. அன்றிலிருந்து நான் என் மூஞ்சியைப்பார்த்துக் கொள்ளும் பொழுதெல்லாம் அப்படி அவர் என்னதான் செய்யச் சொல்லியிருப்பார் என்று நினைத்துக் குழம்பிக் கொண்டேயிருக்கிறேன்…”

“சோ மை டியர் மல்லிகா நேரம் வந்து விட்டது, அப்படி என்னதான் அவர் கேட்டார். .”

அதைக்கேட்டதும், மாட்டிக்கொண்ட மாதிரி, மல்லிகா கைகளை உயரே தூக்கி, இடுப்பை முறித்து சோம்பலை நீக்கினார். “.. ஹ்ம்ம்ம். ஓ அதுவா?’ புன்னகையுடன் சரி சொல்கிறேன் என்று கூறிய மல்லிகா, “சர் அதை காதோடுதான் நான் சொல்லுவேன்.” என்றார். நான் ஒப்புக்கொண்டதும் சிறிது நேரம் புன்னகைத்தவாறு என்னையே பார்த்த மல்லிகா என் காதருகில் சிறிது நேரம் கிசு கிசுத்து, வெட்கத்தால் தலை குனிந்தார். “இதில் என்ன வெட்கம்..?” “..சர், வேண்டுமா உங்களுக்கு? சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போய் சொல்ல வந்த நேரத்தில் ஏன் இந்த நாணம்…” என்றார் மல்லிகா. மல்லிகாவின் கன்னங்களைப் பிடித்து கண்களால் நேராக சந்தித்து “விழியோடு தான் நான் பேசுவேன்” என்று கூறி கண் ஜாடையால் யெஸ் என்றதும், “உங்களுக்கு பாதகமில்லை என்றால் ஓகே. அதர்வைஸ் நோ… இருப்பினும் கேளாமல் தருகிற வள்ளல்தானே நீங்கள்…”என்றேன். கூச்சத்தால் தன் முகத்தை இரு கைகளால் மூடிக்கொண்ட மல்லிகா, சட் என எழுந்து பெட் லைட்டை ஆன் செய்து டியூப் லைட்டை அணைத்து விட்டார். இது வரை சந்திரோதயமாக ஒளிர்ந்துகொண்டிருந்த விடிவெள்ளியின் மகளானவர், இளஞ்சூரிய நிறத்தில் தென்பட்ட செவ்வானம் போல் ஜொலித்த அவரை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது. வாசத்தை சுமந்து செல்லும் தென்றலுக்கே பெருமையாய் இருந்த மொட்டு மல்லியைத்தான் பூந்தோட்டத்திலிருந்து நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.

என்னைப் பார்த்து “எனக்கென்ன பாதகம். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இட் ஈஸ் மாய் ப்ளழர்…” என்று அருகில் அமர்ந்தார்.

அடுத்த 40 நிமிடங்கள் மதிமயங்கிய நிலையில் இருந்த என்னிடம், இன்னொரு முறை காப்பியுடன் வந்த மல்லிகா, இன்னும் வேண்டுமா என்று கேட்க, எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. – காப்பியா, மதிமயக்கமா?!” “…இரண்டையும் சொல்லுங்கள்.” கண் ஜாடை கவி பாட, சொல்கிறேன் என்று சொல்லி, பேசிக் கொண்டேயிருக்கும் பொழுது, நான் அள்ளிகொள்ள, அவர் பள்ளிகொள்ள சிறிது சிறிதாக நம்மையறியாமலேயே இருவரும் தூங்கி விட்டோம். என் கால்கள் மீதே தலையை வைத்து தூங்கிக்கொண்டிருந்த மல்லிகாவை பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது. அவருடைய அன்பு, என் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையால் என் கைகளில் அள்ளி தந்த பாச நெஞ்சம், அவர் அளித்த மரியாதை, எனக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருக்கும் நிகழ்காலம் இதையெல்லாம் கருத்தில் கொண்டு நோக்கினால், மற்றவர் செய்ய முடியாத அளவிற்கு அவருக்கு நான் அப்படி என்ன பிரமாதமாக செய்துவிடப்போகிறேன் என்று கேட்டது என் மனசாட்சி. அவருடன் என் கடமையைச் செய்யத் தவறினாலோ அல்லது அவருக்கு உள்ளத்தின் அளவில் பாதிப்போ அல்லது உடலளவில் ஏதாவது களங்கமோ ஏற்படுத்தினால், அது அவருக்கு எதிராக இழைக்கப்படும் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகமும் அநியாயமும் ஆகும் என்றது என் உள் மனம். அவர் என்னை சோதிப்பதாக தெரியவில்லை என்றாலும் நான் தொடர் சோதனையில் இருப்பதை அறிந்துகொண்டேன். 8 மணியாகியும் யாரும் எழுந்திருக்க வில்லை. ஞாயிற்றுக்கிழமை வேறு, மழையும் சிறிது நேரம் நின்றாலும் மறுபடியும் மணிக்கணக்கில் பொழிந்து கொண்டேயிருந்தது. நான் முகம் கழுவி நீட்டாக தலை சீவி, ஃபேஸ் பவுடர் பூசி ரெடியாக இருந்தேன். மல்லிகா ஒரே குரலில் எழுந்து என்னையே பார்த்தபடி அமர்ந்திருந்தார். வாரியணைத்து அட்வான்ஸ் கொடுத்த பின்னர் புன்னகைத்துக்கொண்டு அவரும் தயாரானார். 9 மணிக்கு அம்மா காப்பி கொண்டு வந்தார். தாயும் மகளும் சுடச்சுட கிச்டி தயார் செய்தனர். சாப்பிட்ட பின்னர் மீண்டும் பேச்சுக்கள். இவை நாம் எவ்வாறு வேலைத் தேடுவது, எங்கெங்கே அப்ளை செய்து வைப்பது என்று மல்லிகாவிடமிருந்த கம்பெனி லிஸ்டிலிருந்து செலக்ட் செய்து வைத்துக்கொண்டோம். நாள் முழுக்க ப்ளான்னிங்லேயே கழிந்தது. எங்கள் சீவீக்களை அட்ராக்டிவ்வாக அமைத்துக்கொண்டோம். மழையின் காரணமாக எங்கும் போகவில்லை.

திங்கள் கிழமை பிடிபிஎஸ் ஆஃபீஸில் ஃபைனல் இன்டர்வியூ. 4 பேர் ஒன்றாக பாஸ் ஆகிவிட்டால், நான் உங்களுக்கு அப்பாய்ன்ட்மெண்ட் கிடைக்க பரிந்துரைக்கிறேன். பாஸ் ஆகவேண்டியது உங்கள் பொறுப்பு என்றார் சந்திரசேகர். திங்கள் கிழமை சொல்லவா வேண்டும்? நான் மட்டுமே செலெக்ட் ஆனேன். எதிர்பார்த்த அளவிற்கு சம்பளம் கிடைக்கவில்லை என்றாலும், வேலையின்மையிலிருந்து தப்பித்து விட்டேன். எனக்குத் தேவையான அனுபவத்திற்கும் சிறந்ததாக இவ்வேலை அமைந்தது. சனிக்கிழமை அரை நாள், மதியம் 1.00 மணிவரையில்தான் டியூடி. மற்ற இன்டர்வியுக்களுக்குப் போக வசதியாக இருந்தது. ஞாயிறு விடுமுறை. அங்கே என்னுடன் வேலை பார்த்து வந்த கோமலிடம் சொல்லி லஞ்ச் டைமில் டெலிஃபோன் உபயோகிக்க ஃபுல் மெர்மிஷன் வாங்கிவிட்டேன். திங்கள் கிழமையும் மல்லிகாவுடன் தங்கி, மனம் கவரும் புதிய அனுபவங்களுடன் இருந்து விட்டு செவ்வாய் முதல் சேண்ட்ஹர்ஸ்ட் ரோடு ஸ்டேஷனுக்குப் பின்னால் இருக்கும் இரயில்வே குவாட்டர்ஸில் எனக்கு நெல்லையில் அறிமுகமானவருடைய வீட்டை தேடினேன். கிடைத்துவிட்டது. ஒரு அம்மா வந்து யார் ஏது, எங்கிருந்து, எதற்காக, எப்படித் தெரியும், எத்தனை வருடமாக அது எப்படி, இது எப்படி என பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது, ஷேக் சாஹெப் வந்துவிட்டார். அவரை ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஒரே ஒரு நாள் பார்த்து பேசியது, என்னைக்கண்டவுடன் அவருக்கு அடையாளம் தெரிந்து விட்டது. புன்னகைத்தவாறு வீட்டிற்குள் அழைத்துச் சென்று தனது மனைவி மற்றும் 6 பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பிள்ளை கள் அனைவரும் படித்து வந்தனர். மிகவும் ஸ்ட்ரிக்ட்டாகவும், ஒழுக்கம் வாய்ந்த குடும்பமாகவும் இருந்தது. அவருடைய வீட்டில் 2 இரவுகள் தங்கி, மிகவும் புழுக்கமாக இருக்கவே, இரயில்வே கார்டனில் படுத்து உறங்க ஆரம்பித்தேன். சிமென்ட் பென்சின் மீது போர்த்தி படுத்திக்கொண்டிருக்கும் பொழுது, ஓரிரவு நள்ளிரவில் சட் என்று யாரோ ஒரு பெண்மணி என் தலையிலிருந்து போர்வை இழுத்து, என் அருகில் முகத்தைக் கொண்டு வந்து என்னைப் பார்த்து பயங்கரமாக சிரித்தார். பயந்து போன நான் காலையில் அதை ஷேக் சாஹெப்பிடம் தெரிவித்ததில், அது ஒரு பைத்தியம் என்று சொல்லி, அன்றிலிருந்து அங்கே தூங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். என் நண்பனுக்கு ஃபோன் செய்து நான் சனிக்கிழமை இரவு சந்திப்பதாக அறிவித்தேன். அவனுடன் சென்று ஜனதா காலனி என்ற இடத்தில் 6 பேருடன் ஒரே அறையில் தூங்க வேண்டியதாயிற்று. எனது படுக்கை டைம்ஸ் ஆஃப் இந்தியா நியூஸ் பேப்பரும், தலைக்கு என் புத்தகப் பையுமாகவே இருந்தது. அங்கே பல ரூம்கள் மாறி மாறி இருந்து வந்தேன். ஒரு நாள் அந்த காலனியையே அங்கிருந்து அகற்றி விட்டனர். 1975ம் வருடம் பாம்பேயில் இருந்தவர்களுக்கு அதைப்பற்றி தெரியும். கேரேஜில் தங்க வேண்டியதாயிற்று. குளிக்க வசதியில்லாமல் 9 நாட்கள் குளிக்க வில்லை. காலையில் ஒரு கிலாஸ் நீரைப் பெற்று ஹோட்டலில் முகத்தைத் துடைத்துக்கொண்டு, டீ குடித்து, எனது ஆஃபீஸ் இருக்கும் ஹிந்த் ராஜஸ்தான் பில்டிங்கின் பப்ளிக் பாத்ரூமில் பல் துலக்க வேண்டியிருந்தது. யாரோ சொல்லி, ஒரு பார்பர் கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு வாளி தண்ணீர் என்று குளிக்க வசதியிருந்ததை தெரிந்து கொண்டு அந்த இடத்திற்கு இரயிலில் சென்று குளித்து வந்தேன். முனிசிபல் கார்பொரேஷன் தொழிலாளிகளுக்கு அளிக்கப்பட்ட காலனியில் சிலர் அவர் வீட்டின் டாய்லெட் பயன்படுத்த அனுமதித்தனர். ஒரு ரூபாய் சார்ஜ் செய்தனர். இன்னும் பல இன்னல்களுக்கு ஆளாகி, வீட்டில் அதிகாரத்துடன் வாழ்ந்த சொகுசான வாழ்க்கை, அம்மா அப்பா, வீட்டு ஞாபகம், ஊர் ஞாபகம், எல்லாம் அப்பொழுதுதான் வந்தது. 8 மாத காலத்தில் நன்றாக அரைக்கப்பட்டு, பிழியப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டேன். அதன் பின்னர் ‘தெவ்னார்’ சிவாஜி நகர் என்ற இடத்தில் குடியேறி, தனியாக ஒரு 10 x 15 அடி அளவில் ஒரு அறை வாடகைக்கு எடுத்து தங்கிவந்தேன். இத்தனை கஷ்டங்களுக்கிடையில் ஒரு பக்கம் ஆஃபீஸ் வேலை, இன்னொரு பக்கம் வேறு கம்பெனியில் நல்ல சம்பளத்திற்கு அமர தொடர்ந்த 100க்கும் மேற்பட்ட இன்டர்வியூக்கள், மாலையில் மல்லிகாவுடன் சந்திப்பு, சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிறு முழு நாள் மல்லிகாவுடன் ஊர்சுற்றுவது, VT ஸ்டேஷனுக்கு எதிர்த்த ரோடில் இருக்கும் ஸ்டெர்லிங் தியேட்டரில் மேட்னி ஷோ காண்பது, நண்பர்களை சந்திப்பது, கார்மென்ட்ஸ் ஃபேக்டரியில், டெய்லர்களின் கணக்கு எழுதி, சனிக்கிழமை தோறும் அவர்களுக்கு சம்பளம் அளிப்பது, ஓவர் டைம் வேலை செய்து எக்ஸ்ட்ரா அலவான்ஸ் பெறுவது, எதையும் விடவில்லை. இன்டர்வியூக்களில் ஃபெய்ல் என்ற பேச்சுக்கு இடமே கிடையாது, ஆனால், கொடுக்கப்படும் சம்பளம் எனக்கு ஒத்துவராமல் இருந்ததால், வேலை மாற முடியவில்லை. ஒரு நல்ல கம்பெனி கிடைக்காமல் இருந்தது. பல மாதங்கள் அவ்வாறே ஓடின. இத்தனை பிரச்சினகளும் மல்லிகாவுக்குத்தெரியாது. ஆனால் அவர் நிம்மதியில்லை எனக்கு, என்னால் உணர முடிகிறது சர், உண்மையைச் சொல்லுங்கள், உங்களைப் பார்க்கும் பொழுது ஒரு மாதிரியாக இருக்கிறது, நீங்கள் ஏதோ மறைக்கிறீர்கள், என்னிடம் சொல்லவோ, கேட்கவோ தயங்குகிறீர்கள் என்று ஏதாவது என்னிடமிருந்து கேட்க அடம் பிடித்தவாறே இருந்தார்.

ஓரு நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் மல்லிகாவின் வீட்டிற்குச் சென்றேன். என் அழுக்கு டிரஸ்களை வாஷ் செய்து அயர்ன் செய்து கொடுத்தார். அவருக்கும் வேலையைப்பொருத்த மட்டில் அதே நிலைதான். சரியான கம்பெனி அமையவில்லை. கன்னங்களை தித்திக்க வைத்த பின்னர், அமர்ந்து சிந்தித்தோம். நமது எந்த டேக்டிக்ஸும் எடுபடவில்லை. இருக்கிற வேலையில் இரண்டு அல்லது 3 வருடம் தங்கி அனுபவத்தைக் கூட்டிக்கொண்டால் தான், வேலை தாவ முடியும் என்ற நிலை இருந்ததை இருவரும் ஒத்துக்கொண்டோம். இறைவனைத் தவிர எங்களுக்கு யாரும் சப்போர்டே கிடையாது.

“மல்லிகா, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, சொல்லட்டுமா டியர்…?

“…சொல்லுங்கள் சர் சீக்கிரம்…”

“… நான் வேலை பார்க்கும் ஆஃபீஸ் ஹிந்த் ராஜஸ்தான் பில்டிங்கில் இருப்பது உங்களுக்குத் தெரியும். அங்கே நான்ஸி காலேஜ் என்ற ஒரு இன்ஸ்டிடியூட் இருக்கிறது. அங்கே காலேஜ் பசங்களுக்கு ஈவினிங் கோசிங் கொடுக்கிறார்கள். அதே சமயம் சற்று தூரத்தில் IAS அகாடெமி ஒன்று இருக்கிறது டெல்லியிலுள்ள இன்ஸ்டிடியூட்டுடன் ஒருங்கிணைந்தது. அங்கே நாம் IAS அகாடெமியில் சேர்ந்து கொள்ளலாம். என்ன சொல்கிறீர்கள்?” இதைக்கேட்டு பலமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டார் மல்லிகா, “என்ன சர் ஜோக்… அதற்கு குறைந்த பட்சம் கிராஜுவேஷன் வேண்டும். அதுவும் IAS?! மாய் காட்.!! “ “மல்லிகா, இது ஜோக் இல்லை, உண்மையாகவே நான் சொல்கிறேன். ஐ ஆம் சீரியஸ். கிராஜுவேஷனுக்கு நாம் நான்ஸியிலும், IAS க்கு அந்த அகாடெமியிலும் பணம் கட்டி, சேர்ந்து விடலாம். தினமும் கிலாஸ் அட்டென்ட் செய்து படித்து வருவோம். நாம் கிராஜுவேஷன் பாஸ் செய்த பின்னர் IAS பரிட்சை பற்றி யோசிப்போம், டியூஷன் தானே, யார் படித்தால் அவர்களுக்கென்ன, யார் கிராஜுவேட்டோ அவர்களை பரிட்சைக்கு அனுப்பட்டும். அதற்குள் நமது ஜாப் அப்லிகேஷனில் IAS ஆஸ்பிரன்ட் என்று கோட் செய்யலாமே. யாராவது கிராஸ் செக் செய்தாலும் நாம் அங்கே ஸ்டுடென்ட் என்று அவர்கள் சர்டிஃபை செய்யத்தானே வேண்டும். நமது மெட்ரிகுலேஷனைப் பற்றி எழுத வேண்டாம், யாராவது கேட்டால், அண்டர் கிராஜுவேட் என்று கூறிவிடுவோம். கிராஜுவேஷனுக்கு சேர்ந்திருக்கிறோம் என்று கூறிவிடுவோம், இதில் பொய்யோ பித்தலாட்டமோ கிடையாது. முழுக்க முழுக்க உண்மைதான். ஒரு 6 மாதம் தாக்கு பிடித்துக்கொண்டு பார்ப்போமே. நாம் இரண்டு வருடமாக ஆங்கில நியூஸ் பேப்பர் படித்து வருகிறோம், தினமும் எடிடோரியல் மற்றும் இம்போர்டேன்ட் நியூஸ் எழுதி படித்து அதெல்லாம் நமக்கு அத்துபடி, ஒரு பிரிச்சினையைப் பற்றி விவரித்து எழுத நம்மால் முடியும். ஆங்கில அறிவு நமக்கு சாதகமாக உள்ளது. அனலைடிகல் அறிவு நமக்கு உண்டு. நாம் ஏன் சற்று முயற்சிக்கக்கூடாது. அப்படி நமக்கு வேலை கிடைக்கவில்லை என்றாலும் நமக்கு நஷ்டமில்லையே. நாம் கிராஜுவேட் ஆவதுடன், IAS பரிட்சைக்கும் அமரலாமே!! அதனால் நமக்குத் தானே இலாபம், டியர் மல்லிகா…” கட கட என்று பேசி முடித்தவுடன், மல்லிகா கிட்சனுக்குள் போய் ஒரு பெரிய கிலாஸில் தண்ணீர் கொண்டு வந்து குடிக்கச் சொன்னார்.

“….சர், யோசித்தால் சூப்பர் ஐடியா போல் தோன்றுகிறது, ஆனால், IAS அகாடெமியில் இடம் கிடைக்குமா?”

“…கிடைக்கும், நாளைக்கே நாம் அங்கே விசாரிப்போம், முடிந்தால் நாளையே சேர்ந்து விடுவோம்..”

அடுத்த நாள் மல்லிகா 5 மணிக்கெல்லாம், என்னுடைய ஆஃபீஸ் பக்கம் வந்து விட்டார். நேராக IAS அகாடெமிக்கு போய் அங்கேயிருந்த அமிஷன் கிளர்க்கிடம், விவரங்களை கேட்டோம். பரிட்சைக்கு கிராஜுவேஷன் முடித்திருக்க வேண்டும் என்றார். தவறாமல் கிலாஸ் அட்டென்ட் செய்து, அவர்கள் அழைக்கும் ப்ரொஃபெசர்களுடைய லெக்சர் கேட்டு, அவர்கள் கொடுக்கும் பாடங்களை சரியாக வாசித்து வந்தால், வெற்றி நிச்சயம் என்றார். மூன்று பாகங்களாக நடக்கும் இந்த பரிட்சையில், முதல் இரண்டில் தேறி விட்டாலும் மூன்றாவதான பர்சனல் இன்டர்வியூவில் தேறுவது கடினம் என்றார். நமது குவாலிஃபிகேஷன் கேட்டவர், IAS பரிட்சைக்குத் தான் போக முடியாதே தவிர, டியூஷன் படிப்பதில் என்ன இருக்கிறது, நான் நாளை விசாரித்து அறிவிப்பதாக கூறியவர், டெல்லியிலிருந்து அவருக்கு அப்பொழுது ஒரு ஃபோன் கால் வந்தவுடன் அதைப்பற்றி கேட்டு அன்றைக்கே எங்களை சேர்த்துக்கொள்ள ஒப்புதல் பெற்றுக்கொண்டார். உடனே ஃபார்ம் பூர்த்தி செய்து கொடுத்தோம். பின்னர் டெஸ்ட் எழுத தேவைப்பட்டால், எழுத வேண்டியதிருக்கும் என்றார். இப்பொழுதே வேண்டுமானாலும் டெஸ்ட் எழுதத் தயார் என்று ஒரே குரலில் சொல்லவே அவர் அசந்து போய் டெஸ்ட் என்றால் சாக்லெட் என்று நினைத்துக்கொண்டு “ஊம், சரி” என்கிறவர் நீங்கள் இருவர்தான் என்று சொல்லிக்கொண்டே அனைத்து ஃபார்மாலிடீஸ் செய்து முடித்தார். மல்லிகா உங்கள் பணத்தை நானே கட்டிவிடுகிறேன், கவலைப்படாதீர்கள் என்று சொல்லி இருவருக்கும் சேர்த்து ருபாய் 1000/- கட்டியாகிவிட்டது. கிலாஸும் ஒரு வாரத்தில் தொடங்கும் என்று அறிவித்து, நாம் வாங்க வேண்டிய சில புத்தகங்களை எழுதிக்கொடுத்தார் அட்மிஷன் கிளர்க்.

தொடர்ந்து ஐஏஎஸ் கிலாஸ் அட்டென்ட் செய்து, அடுத்த மாதம் நான்ஸி இன்ஸ்டிடியூட்டிலும் பி காம் படிக்க சேர்ந்துகொண்டோம். அது மட்டுமல்ல, காலையில் நான் தாதர் வரும் பொழுது 9.30 டு 10.15 வரை ‘மாட்டுங்கா’ என்ற இடத்தில் இறங்கி, அங்கேயிருந்த பிரபல “மாட்டுங்கா கமர்ஷியல் இன்ஸ்டிடியூட்” என்ற ஷார்ட்ஹேண்ட் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் பரிட்சைக்கு என்னை தயார் செய்து கொண்டேன். தவறாமல் பாஸ் செய்தாகிவிட்டது. டைப்ரைடிங் ஹையர் கூட பாஸ் ஆகிவிட்டேன். நாம் 1976 ஜனவரி மாதம் அப்ளை செய்ததில் மல்லிகாவுக்கும், எனக்கும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. எனக்கு ஃப்ரீ ப்ரஸ் ஜர்னல் என்ற ஆங்கில நாளிதழ் கம்பெனியிருந்தும், மல்லிகாவுக்கு லியூபின்ஸ் என்ற ஃபார்மா கம்பெனியிலிருந்தும் அழைப்புக்கள் வந்தன.

இன்டர்வியூ அட்டெண்ட் செய்தபோது நமது IAS கோசிங் பற்றிய கேள்வி வராமலில்லை. நாம் படித்த பிரச்சினையை விடாமல் ஆங்கிலத்தில் பேசி அசத்த, அவர்களிடம் ஒரு நல்ல இம்ப்ரெஷன் ஏற்பட்டுவிட்டது. இன்டர்வியூக்கு வந்த அனைத்து கேண்டிடேட்களிலும் எக்ஸ்பீரியன்ஸைத் தவிர நாம் தான் டாப்பில் இருந்தோம், மல்லிகாவும் நான் சொன்ன மாதிரியே செய்தார். பல லேடி கேண்டிடேட்ஸ் மத்தியில் பாஸ் ஆகி விட்டார். நாம் அடைந்த மகிழ்சிக்கு அளவேயில்லை.

“…சர் ஆஃபீசில் செம்ம மரியாதை..! IAS கேண்டிடேட் என்று தெரிந்ததும் மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டு, என்னுடன் அனாவசியமாக பேசவே பயப்படுகின்றனர்…” என்றார் மல்லிகா. “…ஒரு சிலர் மட்டும் சில்லபஸ் கேட்டு, பெருமூச்சு விடுகின்றனர். நாட்டு நடப்பைப்பற்றியும் IQ காம்ப்லெக்ஸில் நான் கேட்ட சில கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல இயலவில்லை. இது நம்மால் முடியாது யப்பா என்று திணறுகின்றனர். அதுபோக நான் கேட்டதை விட அதிக சம்பளம் பெற்றேன். ஆறே மாதத்தில் நாம் கட்டிய ஃபீஸ் வசூல் ஆகிவிடும்….”

1977ல் ஒரு நாள் ஃப்ரீ பிரஸ் ஜர்னலில் பாலிவுட் சினிமாவுக்கு புதுமுகங்கள் தேவை என்ற விளம்பரத்தைக் கண்ட மல்லிகா, எனக்கு ஃபோன் செய்து அந்த விளம்பரத்தைப் பார்கச் சொன்னார். நானும் அதுவரையில் அதை கவனிக்காமலிருந்தேன். மாலையில் சந்தித்த மல்லிகா, அதற்கு என்னை அப்ளை செய்யச் சொன்னார். ஏன் நீங்கள் செய்யவில்லையா என்று கேட்டேன். நெல்லையிலும் சங்கருடன் வேற நண்பர்கள் மற்றும் மல்லிகா ஆகியோரின் வற்புறுத்தலால், தமிழ் டைரக்டர்களால் நிறுவப்பட்ட “மூவி மேகர்ஸ் கௌன்சில்” என்ற நிறுவனத்தின் புதுமுகங்கள் தேவை என்ற இதே போன்ற ஒரு விளம்பரத்தைப் பார்த்து நான் என்னுடைய மூன்று புகைப்படங்களை அனுப்பி வைத்து இன்டர்வியுக்காக காத்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதான், கமலஹாசன், ரஜினி புதுமுகமாக அறிமுகமாயினர். அது என்னடா என்றால் சில மாதங்களில் அந்த நிறுவனமே கலைக்கப்பட்டு விட்ட செய்தி அடிபட்டது. அப்பொழுது எனக்கு பரிந்துரைக்க யாரும் இருந்ததில்லை. இன்றைக்கும் பரிந்துரைக்க எனக்கு யாரும் இல்லை. இருப்பினும், இதற்கும் முயற்சித்து பாருங்களேன், என்ன நஷ்டம் ஏற்பட்டுவிடப்போகிறது? என்றார் மல்லிகா. “…ஏன் மல்லிகா, எவ்வளவு சொல்லியும் மெட்ராஸில்தான் நீங்கள் அப்ளை செய்யவில்லை, இங்கு என்ன? நீங்களும் அப்ளை செய்யுங்களேன் என்று கேட்டேன். “…சர், நமக்குள் தூரம் ஏற்பட்டுவிடும். பணமும் புகழும் எனது இலட்சியம் இருந்ததுமில்லை, இப்பொழுதும் இல்லவேயில்லை. ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தை பார்த்தோமில்லே. நான் அப்ளை செய்தால் அந்த கதையாகி விடும் ஆகவே அதற்கு என் மனசாட்சி இடம் தரவில்லை…” என்றார். ஃப்ரீ பிரஸ் ஜர்னலில் என்னுடன் வேலை பார்த்து வந்த ஸ்டாஃப்பும் என்னை உக்குவித்தனர். புகைப்படங்களுடன் அப்ளை செய்து விட்டேன். 15 நாட்கள் கழித்து இன்டர்வியூ கால் வந்தது. என்னிடம் ஒரு பழைய லைட் கிரீன் கலர் ஜீன்ஸ் பேண்ட்டும், கருப்பு நிறத்தில் வெண்ணிற சிறிய மல்லிப்பூக்களால் புள்ளியிடப்பட்ட ஒரு சட்டையும் இருந்தது. அடுத்து வந்த ஞாயிற்றுக் கிழமையன்று அதை உடுத்திக்கொண்டேன். மல்லிகா பல முறை மேலும் கீழும் என்னைப் பார்த்து… “…என் சமத்து ராஜா…” என்று கிழவிகள் கொஞ்சுவதைப்போல் என் கன்னத்தை கிள்ளி, “என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கு….” என்று சொல்லிக்கொண்டே தீட்டியிருந்த மையை தனது கண்களிலிருந்து சிறிது எடுத்து எனது இரு புருவங்களிலும் தீட்டி விட்டார். எதற்கு என்று கேட்டால், திருஷ்டியாம்…! விலாசத்தைக் குறித்துக்கொண்டு நானும் மல்லிகாவும் அந்த ஆஃபீஸை தேடிச் சென்றோம். RK ஸ்டுடியோ, அல்லது மெஹ்பூப் ஸ்டுடியோ, அல்லது AVM ஸ்டுடியோ மாதிரி பெரிய ஸ்டுடியோ அல்லது கண்ணாடிச் சுவர்கள் கொண்ட ஆஃபீஸாக இருப்பதைப்போன்று நாம் கற்பனை செய்து கொண்டு, விலாசத்தில் இருந்த பில்டிங்கையை தேடி வந்தால், அங்கே இருப்பதோ குப்பை மேடாக இருந்த ஒரு பாழடைந்த கட்டிடம், கீழே நாய்களும் பூனைகளும் குட்டியீன்று படுத்துக்கொண்டிருக்கின்றன. முதல் மாடி முழுவதும் காலியாக இருந்தது, படிக்கட்டுகளிலெல்லாம் குப்பை! அதை பார்த்து விட்டு இது இருக்காது என்று மீண்டும் விசாரித்தில் அது தான் அந்த பில்டிங், மேலே 2வது மாடிக்கு போய் பாருங்கள் என்றனர். இருவரும் தட்டுத் தடுமாறி 2வது மாடிக்குச் சென்றோம். அருமையான கார்விங் வேலைப்பாடு செய்த மரக் கதவு ஒன்று மூடியிருந்தது, உள்ளிலிருந்து லதா மங்கேஷ்கர் பாடிய “மௌசம் ஹய் ஆஷிகானா” என்ற பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. காலிங் பெல் அடித்தவுடன், ஒரு பெரியவர் 70 வயது இருக்கும் நீட்டாக டிரஸ் செய்து புகையிலை பைப் புகைத்தவாறு கதவைத்திறந்தார். பாட்டு ஒலி கூடியதும், “… வாட் அ ரொமான்டிக் அட்மோஸ்ஃபியர்…” என்று ஓரத்தில் என்னுடன் நின்றுகொண்டிருந்த மல்லிகா கமெண்ட் செய்தார். அதைக்கேட்டு புன்னகைத்த பெரியவர், வாருங்கள் என்று இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார். கதவை திறந்ததும் ஒரு மிகச் சிறிய அறை, அங்கே ஒரு சோபாவும் இரண்டு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன, கார்பெட் விரிக்கப்பட்டிருந்தது. எங்களை அமரச் செய்து உள்ளே சென்றவர், சிறிது நேரம் கழித்து வந்து, என் பெயரைச் சொல்லி, யார் அது என்று கேட்டார். நான் தான் என்றேன். உள்ளே வாருங்கள் என்று என்னை மட்டும் உள்ளே அழைத்துச் சென்றார். மிகப் பிரமாதமான அறை!! மூலைகளில் செதுக்கப்பட்ட கவர்ச்சிகரமான சிற்பங்கள், கண்ணாடித் தோரணைகள், ஜூமர் என்று சொல்லக்கூடிய கொத்து விளக்குகளும் சர விளக்குகளும் தொங்க சுவற்றுக்களில் அங்காங்கே மாடர்ன் டிசைன்கள் வரையப்பட்டு இருந்தன. எனது அப்ளிகேஷனும் புகைப்படங்களும் அவருடய மேஜை மீது இருந்தன. தொடர்ந்து பாடிக்கொண்டிருந்த பாட்டொலியை சற்று குறைத்து விட்டார். நமது கான்வெர்ஸேஷனை ரிகார்டு செய்ய ஆடியோ ரெகார்டரை ஆன் செய்துக் கொண்டே “ஆக்டிங் ஃபீல்டில் உங்களுக்கு என்ன எக்ஸ்பீரியன்ஸ்…” என்று கேட்டார். பள்ளி நாடங்களில் நடித்துள்ளேன் என்றேன். அது போக வாழ்க்கை நாடங்களிலும் சில நேரம் நடிக்கத்தானே வேண்டியிருக்கிறது என்றேன். மத்லப் ? அதாவது என்ன அர்த்தம்? என்று கேட்டார். “…இப்பொழுது நான் இங்கே வந்திருப்பதும் ஒரு ஆக்டிங் தானே…” என்றேன். புன்னகைத்து “..யூ ஆர் ஃப்ரம் டமில் நாடு, நோ? உங்களுக்கு உருது தெரியுமா?, ஏனெனில், உருது தெரிந்திருந்தால் தான் டயலாக் பேச முடியும் ..” என்றார்.

“….சர் உருது எனது தாய்மொழி, ஹை ஸ்கூல் வரை உருது படித்து, நன்கு பேச, எழுத படிக்க தெரியும் என்றேன். அது மட்டுமல்ல எனக்கு ஃபார்சீக மொழி மற்றும் குர்’ஆனிக் அரபிக் மொழி உச்சரிப்பும் தெரியும்.” என்றேன். ஃபார்சி உச்சரிக்க தெரியுமா என்று ஆச்சரியத்துடன் கேட்டு, நீங்கள் தமிழ் நாட்டை சேர்ந்தவர் தானே, அது எல்லாம் எப்படி தெரியும் என்றார். ஆமாம், எனக்கு தாய் மொழி உருது அதனால், அவைகளெல்லாம் தெரிந்து கொள்ள எக்ஸ்ட்ரா முயற்சிகள் தேவையில்லை என்றேன். எனக்கு பின்புறத்தில் எட்டிப்பார்த்து, கதவருகில் நின்று கொண்டு பார்த்துக்கொண்டிருந்த மல்லிகாவைப்பார்த்து, “ப்லீஸ் கம் ஹேவ் யுவர் சீட்” என்று சொல்லவே, மல்லிகா மெதுவாக நடந்து வந்து எனக்கு இடது பக்கம் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டார். நாம் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவே, என்ன நடக்கிறது என்று பார்க்க மல்லிகா எட்டிப்பார்த்தார் போலும். “…எனக்கு அனைத்து மொழிகளிலும் பிடிப்பு உண்டு, நான்கு தென் இந்திய மொழிகளுடன், குஜராத்தி, மராத்தி, சிந்தி, பெங்காலி, எல்லாம் நன்றாக உச்சரிப்பேன். அவைகளை என் பயோ டேட்டா வில் எழுதியிருக்கிறேன் பாருங்கள் என்றேன். அதை கவனித்துக்கொண்டு, இது வரை ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தவர், ஹிந்தியில் “சரி, உங்கள் உச்சரிப்பு எப்படியிருக்கிறது பார்ப்போம், ‘ஷோலே’ படத்தின் எதாவது ஒரு டயலாக் சற்று சொல்லிக்காட்டுங்கள்” என்றார். நானோ, சர், ஷோலே படம் பார்க்கவில்லை” என்றேன். அவருடைய முகம் சற்று மாறியது, “…ஜாஸ்” பார்த்தீர்களா?” “..பார்த்தேன்..” “த பார்டி” பார்த்தீர்களா, “ஆமாம் பார்த்தேன்”, ஒன் கேன் ஃபிளை ஓவர் குகூஸ் நெஸ்ட்” பார்த்தீர்களா? “… யெஸ் பார்த்தேன்” ‘…. பார்ப்பது எல்லாம் ஆங்கிலப்படம், ஹிந்தி படத்தில் நடிக்க ஆசையா…” “…சர், எப்பொழுது போனாலும் ஹவுஸ் ஃபுல் தான் இருக்கிறது, ஆகவே முடியவில்லை…” என்று மல்லிகா சொன்னதும், “இவர் உங்களுக்கு என்ன வேண்டும்” என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் “..இவர் என்னுடைய ஃபியான்சி..” என்றேன். “ஒஹ் அதான், உங்களுக்கு சப்போர்டாக சொல்கிறார்” என்றார் அவர். “..சர் ஷோலே படத்தின் ரொம்ப பேமஸ் டயலாக் “ அரே ஓ சாம்பா கித்னே ஆத்மி த்ஹே…” என்பது தான், அது பிள்ளைகளுக்கும் தெரியும் ஆகவே, நீங்கள் என்னுடைய உருது உச்சரிப்பதைத்தானே கேட்கவேண்டும்? கவிதைகள், பாட்டுக்கள் டையலாக்கைவிட சிறந்ததா இல்லயா?” “ஆமாம், சோ?” “…இதோ இந்த லதா மனகேஷ்கருடைய “மௌசம் ஹய் ஆஷிகானா” பாட்டு பாடட்டுமா?” “…ராகம் சரியில்லை என்றாலும் உச்சரிப்புதானே சரியாக இருக்கவேண்டும்…” என்றேன். இரண்டு வரிகள் பாடி காட்டியதும் அவருக்கு திருப்தி ஏற்பட்டது. “நல்லது, நான் ரெகார்டு செய்து கொண்டிருக்கிறேன், அதனால்தான்…” என்று கூறி மெதுவாக புன்னகைத்தார். மல்லிகாவோ தன் கையால் வாயை அடைத்துக் கொண்டு இடது பக்கம் திரும்பிக்கொண்டார்.

“…இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் ப்ராஜெக்டில் நமக்கு சைடு ஹீரோ தேவைப்படுகிறார். கதையின் பிரகாரம் அவர் உயரமாகவும், நல்ல உடற் கட்டும் உள்ளவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு பர்சனாலிடியை தேடி வருகிறோம். இந்த கேரேக்டர் உங்களுக்கு பொருந்தாது. இன்டெல்லிஜென்ட், ஸ்மார்ட்னெஸ், ரோமான்ஸ், ஸ்ட்ரக்கல், ஸ்போர்ட்ஸ், ஸ்டுடென்ட்ஷிப், அட்வொகேட். எக்ஸெகியுடியு போன்ற கேரேக்டர்கள் உங்களுக்குப் பொருந்தும். நான் உங்கள் பயோ டேட்டா மற்றும் புகைப்படங்களை எனது இலாகாவில் சர்குலேட் செய்கிறேன், யாருக்காவது அல்லது எனக்காவது தேவைப்பட்டால் நிச்சயம் உங்களுக்கு கால்வரும் ஆடிஷன், மேகரா டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட், டயலாக் டெஸ்ட் ஆகியவை நடக்கும். அது வரை, கொஞ்சம் நன்றாக சாப்பிட்டு உடற்கட்டாக இருங்கள்..” என்றார். “… கடைசியாக ஒரு கேள்வி… சினி ஃபீல்டில் உங்களுக்கு யாராவது தெரியுமா, ஏதாவது தூரத்து ரெஃபெரென்ஸ் இருந்தால் சொல்ல முடியுமா?, மெட்ராஸில் யாரவது இருந்தாலும் பரவாயில்லை, சொல்லுங்கள்.” இதைக்கேட்டு மல்லிகா பரிதாபமாக என்னைப்பார்த்தார். “..சர் எனக்கு தெரிந்தது ஒரே ஒரு ஆள் தான்.” என்றேன். “யார் அவர் சொல்ல முடியுமா…?” என்று பெரியவர் கேட்டார் “…மன்னிக்க வேண்டும், அது நீங்கள் தான் சர், நீங்கள் இன்டர்வியு கால் அனுப்பியதிலிருந்து எனக்குத் தெரியும்.” என்றேன். இதைக் கேட்ட பெரியவர் என்னை ஏறிட்டுப்பார்த்து “…வெரி ஸ்மார்ட் ஆன்ஸர், இண்டீட்..” என்றார். மல்லிகாவின் முகம் இப்பொழுது பிரகாசித்தது. நமது இன்டர்வியூ மொத்தத்தையும் அவர் ரிகார்டு செய்து கொண்டார். பெரியவருக்கு குட் நைட் சொல்லி விட்டு பம்பாய் சுற்றிப்பார்க்க சிரித்துக்கொண்டே இருவரும் கீழே இறங்கினோம். திரும்பி வரும் பொழுது, “முஜெ கோயி… மில் கயா த்ஹா…, சரே ராஹ்.. சல்தெ சல்தே…. என்ற பாட்டு கேட்டு மல்லிகாவிற்கு அடக்க முடியாத சிரிப்பு வெடித்துக்கொண்டு வந்தது… அதாவது, “…எனக்குக் கிடைத்து விட்டார் யாரோ ஒருவர்… வாழ்கையின் பாதையில் சுற்றி போகிற போக்கில்…” என்று அர்த்தம். ஏனெனில் நமது கதையும் அதே போலத்தானே, வாழ்க்கையின் பாதையில் நடந்து கொண்டிருக்க, நாம் இருவரும் ஒருத்தருக்கு மற்றொருவர் நெல்லையில் கிடைத்து விட்டோம்.

மாலையில் சௌபாட்டிக்கு சென்றுவிட்டோம். வழக்கமாக நமது நடவடிக்கைகள் தொடர, வாரங்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருடமாகவும் கைகோர்த்துக்கொண்டு 1977ம் வருடம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. பதில் கால் வராத இன்டர்வியூவைப்பற்றி நமக்கு கவலை இருந்ததேயில்லை, ஏனெனில் அவை விசாலமான கடலின் ஒரு சொட்டுதான். இன்னும் கடல் பரந்து கிடக்கிறது. தன்னம்பிக்கை நமக்கு கூடிக்கொண்டே போனது.

மல்லிகாவின் சிறந்த சேவையைப் பாராட்டி அவருடைய ஆஃபீஸில் அவருக்கு வருடா வருடம் டபுள் இன்க்ரிமென்ட், கிரேட் புரொமோஷன், ஆகியவைகள் கிடைக்க ஆரம்பித்தன. சிறந்த எம்ப்லாயி என்ற பதக்கமும் கிடைத்து கம்பெனியில் மிகப் பாபுலர் ஆனார். ஐஏஎஸ் கோசிங் உடைய பிரதிபலிப்பு அவருக்கு என்னை விட பன்மடங்கு அதிகமாக இருந்தது.

பக்கத்து பிலாட்டையும் சித்தியே அவருடை மகன் பெயரில் வாங்கி அங்கே மல்லிகா மற்றும் அம்மாவை வாடகைக்கு தனியாக தங்க வைத்திருந்தார். பல மாதங்களாக இருவரும் இப்பொழுது தனியாக இருக்க ஆரம்பித்திருந்தனர்.

மீண்டும் வேலைத் தாவ எனக்கு ஆவல் ஏற்பட்டு, அப்ளை செய்து வந்தேன். இம்முறை 3 வருடங்களுக்கு மேல் அனுபவம் இருந்ததினாலும், நமது IAS ஆஸ்பிரன்ட் டேக்டிக்ஸும் நல்லபடி வேலை செய்தது. இம்முறை டாடாவின் ஒரு புகழ் பெற்ற எஞ்சீனியரிங் கம்பெனியிலிருந்து வந்த விளம்பரத்திற்கு அப்ளை செய்தேன். கால் வந்த பின்னர், பல கோணங்களில் இன்டெர்வியூக்கு அழைக்கப்பட்டு பாஸ் ஆகி விட்டேன். நல்ல ஃபோர் ஃபிகர் சம்பளம், பெர்க்ஸ், வசதிகள் அனைத்தும் இருந்தன. மல்லிகாவின் ரூட்டாக இருந்த வெஸ்டர்ன் தாதரில் அலுவலகம் இருந்தது. தொடர்ந்து சம்பாதித்து தமிழ் நாட்டிலிருந்த எனது குடும்பத்தையும் சமாளித்து, என் வாழ்க்கை தரமும் கூடிவிட்டது.

1980 வது வருட ஆரம்பத்திலேயே வேலை அதிகமாக இருந்து விட்டதனால் அங்குள்ள டெண்டர் ஸ்பெசிஃபிகேஷன் வேலையை துரிதமாக முடிக்க வேறு ஆபீசுக்கு என்னை டெம்பொரேரி போஸ்டிங் செய்து விட்டனர். முதல் முதலில் கம்பியூட்டர் அறிமுகமான கம்பெனிகளில் நான் வேலை பார்த்த டாடாவின் கம்பெனியும் ஒன்று. ‘வேங் வேர்டு ப்ராசஸ்ஸர்’ என்று விடியோ கேம்ஸின் பெரிய மெஷின்போலிருந்தது. அதை இயக்கி டைப் செய்ய நமக்கு டிரெய்னிங் அளித்து அதில் டெண்டர்கள் தயாரித்து வந்தோம். ஆகவே கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் மல்லிகாவை சந்திக்க முடியவில்லை. வேலை முடிந்த பின்னர் 15ம் தேதி மார்ச், சனிக்கிழமை மல்லிகாவுக்கும் விடுமுறை, எனக்கும் விடுமுறை என்பதால், அவரை சந்திக்க வீட்டிற்குச் சென்றேன். என்னை ஒரு மாதமாக காணாமல் மல்லிகா அழுது கொண்டே இருந்ததாவும், எதிலும் பிடிப்பில்லாமல், சைலென்டாக இருப்பதாகவும் அவர் சற்று முன்னர் தான் ஆஃபீஸில் சிறிது வேலையிருப்பதாக சென்றிருக்கிறார் என்று அம்மா கூறினார். நான் மல்லிகாவை அழைத்து வருவதாக சொல்லி உடனே இரயில்வே ஸ்டேஷனுக்கு ஆட்டோ மூலம் சென்று, கிடுகிடு என்று படிக்கட்டு ஏறி அடுத்த ப்ளாட்பாரத்தில் இறங்கிவிட்டவுடன், லேடீஸ் கம்பார்ட்மென்டில், மல்லிகா உள்ளே போவதைக் கண்டு ஜன்னல் வழியாக மல்லிகா என்று குரல் கொடுத்தேன், இரண்டு தடவை அழைத்தும், அவர் திரும்பாததால், அருகிலுள்ள பெண்ணிடம் அவரை என் பக்கம் திரும்பச் சொல்லும்படி கேட்கவே, என்னைக் கண்டுகொண்ட மல்லிகா “…சர்….” என்று அலறிக்கொண்டு பெட்டிக்குள் திரும்பி, வாசலுக்கு ஓடிவதற்குள் வண்டி கிளம்பிவிட்டது. நானும் வண்டியுடன் ஓடிக்கொண்டிருக்க, சற்றும் பொருட்படுத்தாமல் ஓடும் வண்டியிலிருந்து குதித்தார் மல்லிகா! அதுவும் பிளாட்பாரத்தில் இன்னொரு பெண்மீது விழுந்து அவர்கள் இருவரையும் நான் தாங்கி பிடிக்க, பளு தாங்காமல், மூவரும் பிளாட்பாரத்தில் விழுந்தோம். மக்கள் சூழ்ந்து கொண்டனர். என்ன அவ்வளவு அவசரம் அடுத்த ஸ்டேஷனில் இறங்க வேண்டியது தானே என்று பலர் கூற, ‘கியா கேட்ச் பக்டா யார்.’ என்று ஒருவர் கம்மென்ட் அடித்தார். இன்னொருவர் “கட் கட், அப் உட்ஜாஒ… தூஸ்ரா ஷாட் உட்டானா ஹய்..” என்று ஷூடிங் எடுக்கும் பொழுது டைரக்டர் கூறுவது போல கூறியதும், மூவரும் இளித்துக்கொண்டு எழுந்து நின்றோம். அந்த பெண்மணிக்கு ஒன்றும் புரியவில்லை, ஷாக் அடித்த மாதிரி நின்று கொண்டிருந்தார். நானும் மல்லிகாவும் அவருக்கு சாரி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது யாரோ ஒருத்தர், அவர் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் திறந்து அந்த பெண்மணிக்குக் குடிக்க கொடுத்தார். மக்கள் கலைந்து சென்றனர். மல்லிகாவினால் கால் எடுத்துவைக்க முடியவில்லை. சுளுக்காகி விட்டது. இடுப்பில் கைகொடுத்து அவர் என் தோளில் கையை ஊனிக்கொண்டு நடந்து அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தோம். என் கையிலிருந்த ஃபைல் பேப்பர்கள் பிளாட்பாரத்தில் அங்கும் இங்கும் பறந்த வண்ணம் இருந்ததைக் கண்ட ஒருவர், அவைகளை ஒவ்வொன்றாக பெருக்கி எடுத்து என்னிடம் கொடுத்தார். நன்றி சொல்லி வாங்கி அதை மல்லிகாவிடும் கொடுத்து, பிளாட்பாரத்தின் கேன்டீனிலிருந்து இரண்டு டீ வாங்கி வந்தேன்.

பேச்சுமூச்சின்றி அதிர்ந்து போய் இருந்த மல்லிகாவின் கண்கள் கலங்கிக்கொண்டிருந்தன. அதைக்காண எனக்கு பரிதாபமாக இருந்தது. அவருடய கண்களில் கண்ணீர் என்றால் என் இதயத்தில் உதிரம் கொட்டும். மனதிற்கு ரொம்ப சங்கடமாக இருந்தது. ஏன் இந்த மங்கைக்கு என் மீது இவ்வளவு பிரியம்!! தனது உயிரையும் பொருட்படுத்தாமல்… இவ்வாறு குதித்து விட்டாரே!!… தனது காலை கையினால் தேய்த்துக்கொண்டிருந்த மல்லிகாவை பார்த்தபடி யோசித்தேன். இன்று 15 மார்ச் 1980 எட்டு வருடங்களுக்கு முன்னர் 1972ல் நாம் முதல் முதலில் சந்தித்த நாள், இருவரும் நெல்லையில் பரிட்சை எழுத போய் இருந்தோம். இன்று மல்லிகாவிற்கு ஒரு இனிமையான ஷாக் கொடுக்கவேண்டும். பொறுத்தது போதும், அவரை இன்றே மணந்து கொள்ளவேண்டியது தான். டீக்கப்பை மல்லிகாவிடம் நீட்டிக்கொண்டு நான் பேச ஆரம்பிக்கும் முன்னர், “… சர், நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது எனக்கு நன்கு புரிந்து விட்டது… உங்கள் மென்மையான இதயத்தின் துடிப்பை நான் உணர்ந்து கொண்டேன்…. இன்றைய தேதியின் மகிமை உங்களுக்குத்தெரியுமா? என் உயிரை விட பிரியமான உங்களை நான் வாழ்க்கையில் சந்தித்த முதல் நாள். பரிட்சை எழுதினோம், பரிட்சை முடிந்து பிரிந்து விட்டோம். பாஸ் ஆகிவிட்டோம். இறைவன் மீண்டும் எங்களை ஷார்ட்ஹேண்ட் இன்ஸ்டிடியூட்டில் சந்திக்க வைத்தான். சந்தித்த வேளையில் சிந்திக்காமல் ஒன்றும் நான் என்னை உங்களிடம் தரவில்லை. என் மீது உங்களுக்கு வெறுப்பூட்ட நான் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளில் நான் முற்றிலும் தோற்றுப்போனேன். மாறாக உங்கள் உண்மையான அன்பும், அளவு கடந்த பாசமும் என்னை நாலபுறத்திலிருந்தும் பின்னிக் கொண்டு என்னை வென்று விட்டது. 8 வருடங்கள் கழிந்துவிட்டன …நினைவு வருகிறதா?, 8 வருடங்களில் நமக்குள் எத்தனை மாற்றங்கள், எத்தனை வெற்றிக்கள்!! கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு முன்னேற்றங்கள், அனைத்தும் நீங்கள் என்னுடன் இருந்ததினால் தான் நடந்திருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை சர்…, ஆனால் நடந்து கொண்டிருக்கும் பரிட்சை நமக்கு இன்னும் நடந்து கொண்டேயிருக்கிறது, ஒரு முடிவில்லாமல்…. நாம் இன்னும் இரு துருவங்களாகவும், பாதி பாதியாகத்தான் இருக்கின்றோம். சினிமா இன்டர்வியுவில் என்னை உங்கள் ஃபியான்சி” என்று நீங்கள் ஒபனாக அறிவித்து என்னை அன்றைய நாள் என்ன, அதைத் தொடர்ந்த பல இரவுகள் முழுக்க என்னை மகிழச் செய்தீர்கள். என் உயிரில் உங்களை நான் எழுதிக்கொண்டேன். நிச்சயதார்த்தம் ஆனதும் பெண்ணை பாதி மனைவி என்று அழைக்கும் இக்காலத்தில் முழுமைப்பெறலாம் என்ற எண்ணம் எங்கள் இருவரின் மனங்களிலும் இப்பொழுது தோன்றுகிறது…” அந்த இன்டர்வியுவில் “மௌசம் ஹய் ஆஷிகானா” என்று ஆரம்பிக்கும் பாட்டின் சில வரிகள் பாடினீர்கள், அதைத்தொடர்ந்த சில வரிகளின் விளக்கம் இப்பொழுது எனக்கு நினைவில் வருகிறது…. “கொடூரமான நாட்களும், கொல்லும் இரவுகளும், நான் தனியாக அலையும் நிலையில் என்னை யாரேனும் தனது அரவணைப்பில் எடுத்துக்கொள்ளட்டும்… இறுதியில், யாரும் எத்தனைக் காலம்தான் தனிமையுடன் போராட முடியும்….” என்று நமது தனிமையின் கொடுமையை சித்தரிக்கும் இந்த வரிகள் அவை எந்த அளவிற்கு நமக்கு ஒத்துப்போகின்றன என்றும் அந்த பாட்டு ஏன் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றும் நான் இப்பொழுது அறிந்து கொண்டேன்….”

“…டியர் மல்லிகா, உங்கள் விசித்திரமான டெலிபதியை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை!! நான் சொல்ல நினைப்பவைகளை வார்த்தையாக்கும் முன்னரே அவை உங்களுக்கு சென்றடைகின்றன….!! அதைத்தான் நான் சொல்ல வந்தேன். என் எண்ணங்கள் உங்கள் நினைவுகளில் வழக்கம் போலவே சங்கமித்து விட்டன…. மல்லிகா, நமது இலட்சியங்கள் நிறைவேறிக் கொண்டேயிருக்கின்றன. சொல்லப்போனால் பல இலட்சியங்கள் நிறைவேறி விட்டன!! மல்லிகா, இன்னொரு ப்ரோகரஸ், நீங்கள் சரி என்றால், இன்றே, இப்பொழுதே நான் உங்களை மணந்து கொள்கிறேன், உங்களை என் முழு மனைவியாக்கிக் கொள்கிறேன், இருவரும் முழுமை பெற்றுவிடுவோம். இந்த தனிமை போதும் நமக்கு. இன்றே இத்துடன் இதை ஒரு முடிவுக்கு கொண்டுவருவோம் இன்றைக்கே நீங்கள் தயாரா, மல்லிகா? மற்றபடி, வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வது என்பதை கூடி பேசி, முடிவெடுத்துக்கொள்வோம். உங்களை அம்மாவிடமிருந்து ஒரு நாளும் பிரிக்கமாட்டேன். பாக்கியுள்ள அந்த ஒரு இலட்சியமும் நிறைவேற என் முழு ஒத்துழைப்பும் உங்களுடன் இருக்கும். இது உறுதி. என்ன சொல்கிறீர்கள் மல்லிகா… உங்களுக்கு இஷ்டம் தானா..?’

பரவசமடைந்த மல்லிகா புன்னகைத்து, “அப்படியே ஆகட்டும் என் மனாளா.” இதைவிட வேறு பாக்கியம் எனக்கு இருக்குமா என்ன? வாழ்க்கையில் என்னால் உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது. உங்களை நான் அடைந்து மன நிறைவு பெறுவதைப்போல், நீங்களும் என்னை அடைந்து மன நிறைவு பெறுவீர்கள் என்று நானும் உறுதி கூறுகிறேன்…”

“…மல்லிகா, என்னை இனி “சர்” என்று அழைக்கவேண்டாம். உரிமையுடன் என் பெயருடன் “ஜி” சேர்த்து என்னை அழையுங்கள். நான் உங்களை ”மல்லிகா” என்று சொல்லாமல் “மலிகா” என் ராணி என்று அழைக்கிறேன்.” இன்றிலிருந்து நீங்கள் என் ‘மலிகா’ தான் நிச்சயமாக…”

“…உத்தரவு ஜி, ஆனால் நான் பெயர் சொல்லமாட்டேன் ஜி. அடுத்து இப்பொழுது என்ன செய்யலாம் ஜி?”

“..ஆமாம், நீங்கள் எங்கே கிளம்பிவிட்டீர்கள் மலிகா…?”

“…. ஜி, இரண்டு நாளாக தூக்கம் சரியில்லை, ஏதோ நடக்கப்போவுது என்று மட்டும் என் உள் மனம் கூறிக்கொண்டேயிருந்தது. உங்கள் டெலிஃபோன் கால் வருமோ என்ற எதிர்ப்பார்ப்புடன், ‘லோ ஆகயி உன்கி யாத் ஓ நஹி ஆயே…’ என்று ஆபீஸுக்கு போய்க்கொண்டிருந்தேன். “…மலிகா, நான் உங்கள் அபார்ட்மெண்டுக்கு போய்த்தான் வந்தேன். வாருங்கள், திரும்பிச் சென்று மணமுடித்துக்கொள்ள ஏற்பாடு செய்வோம். அக்கம் பக்கத்தாருக்கு தெரிவித்து, உங்கள் சித்தி மகன் சென்று மண முடித்துக்கொண்ட அந்த ஆஃபீஸுக்கு அவருடன் போய் இன்று 5 மணிக்கு நாமும் மணமுடித்துக்கொள்வோம்.

“….கேட்கவே இனிமையாக இருக்கிறது ஜி. என்னை சிறிது நேரம் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க அனுமதியுங்கள். நீங்கள் வாங்கிக் கொடுத்த சேலைகளில் சில புதிதாக இருக்கின்றன அதில் ஒன்றை உடுத்திக்கொள்கிறேன். உங்கள் டிடிஆர் டிரஸ் வாஷ் செய்து என்னுடைய பீரோவில் தான் இருக்கிறது ஜி, ஒரு இன்ச் கூட்டி அதே அளவில் அதே கலரில் வேறு ரேமண்ட் ஷூடிங்ஸ் பேன்ட் ஷர்ட் தைத்து வைத்திருக்கிறேன். நீங்கள் அதை உடுத்திக்கொள்ளுங்கள். இப்பொழுது ஒன்றும் ஷாப்பிங் செய்ய வேண்டாம், ஜி”.

“…மலிகா, ஆரம்ப ஃபைனான்சியல் மேனேஜ்மென்டே உங்களிடமிருந்து தொடங்கிவிட்டீர்களா? ஆனால், என்னுடைய சொந்த சம்பாத்தியத்தில்தான் எனக்கு கோடித்துணிகள் இருக்குமே தவிர, பெண் வீட்டாரிடம் பெற்று அதை உடுத்தக் கூடாது என்றும், லுங்கியாக இருந்தாலும் உன் சொந்த பணத்தில்தான் வாங்க வேண்டும் என்று என் தந்தை எனக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். அதன் மொத்த செலவையும் நான் உங்களுக்கு கொடுத்து விடுகிறேன். பின்னர் எப்பொழுதாவது எனக்கு வேறு டிரஸ் பிரசண்ட் செய்து விடுங்கள்…”

“…உங்கள் உயர்ந்த எண்ணங்களுக்கு என் சல்யூட் ஜி!! இப்படிப்பட்ட உங்கள் குடும்பத்தில் காலடி வைக்கப் போகும் நான் ஒரு பாக்கியசாலிதான், நிச்சயமாக..!”

“…மலிகாவினால் நடக்க சிரமமாக இருந்தது. கஷ்டப்பட்டு கால் ஊன்றி நொண்டிக்கொண்டே படிகட்டு ஏறி, இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டையடைந்தோம். மீண்டும் படிக்கட்டு ஏற சிரமப்பட்டார். விஷயத்தை கேள்விப்பட்ட அம்மா, மஞ்சள் அரைத்து சூடாக்கி, மலிகாவுடைய காலுக்குப் போட்டு விட்டார். அக்கம்பக்கத்தவர் சிலரிடம் கூறியபின் அவர்களும், திருமணத்திற்கு வர சம்மதித்து 10 பேர் சேர்ந்தவுடன் மூன்று டேக்சிகளில் அமர்ந்து திருமண ஆஃபீஸுக்கு போய், ஃபார்மாலிடீஸ் எல்லாம் முடிந்ததும், மலிகாவிடமும் என்னிடமும் சாட்சிகளுடன் நம் சம்மதத்துடன் கையெழுத்து வாங்கி, சரியாக 5.15 மணிக்கு நமது சம்பிரதாயத்துடன் நிகாஹ் என்ற திருமணம் பூர்த்தி செய்யப்பட்டது.

கண்களை தோரணமாக்கி, கைகளை மாலைகளாக்கி நாம் இருவரும் ஒருத்தருக்கு மற்றொருவர் ஆடையாக இருக்க மன உறுதியுடனும் மன நிம்மதியுடனும் அனைவரும் வீடு திரும்பினோம்.

“…ஜி, இன்று நான் என் உயிர், உடல், உடமை அனைத்தையும் உங்களிடம் சமர்ப்பணம் செய்து விட்டேன். இனி நான் வேறு நீங்கள் வேறு அல்ல. என்னை ஆசீர்வதித்து, நான் இருப்பதைப்போல என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்…” என்றார் மலிகா.”

“… இட் ஈஸ் மாய் ப்ளழர், மலிகா..” ஐ ஆம், ப்ரௌட் டு ஹேவ் யூ வித் மி இன் மாய் லைஃப். பூந்தோட்டத்து வாசத்தை சுமந்து செல்ல தென்றலே பெருமைப்படும் மொட்டு மல்லியான உங்களை அடைக்கலம் கொண்டேன் என் கண்மணியாக, கடமை தொடங்கியது, கல்யாணம் ஆக..

“இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.”

சுபமான வாழ்க்கையின் தொடக்கம்….

முற்றும்.

Print Friendly, PDF & Email

3 thoughts on “ஒரு கோலமயில் என் துணையிருப்பு

  1. இல்லை, 38 வருடங்களாக பரம இரகசியம் பேணப்பட்டு வருகிறது !!

  2. இல்லை ! 38 வருடங்களாக பரம இரகசியம் பேணப்பட்டு வருகிறது !!

  3. அருமை … அருமையான கதை …வாழ்வில் இலட்சியத்தை அடைந்து ஒருவருக்கொருவர் அன்பாக தங்களது வாழ்க்கையை தொடங்கி விட்டனர் ,,

    ஆனால் இதனை கதா நாயகனின் வீட்டாருக்கு தெரிவித்து விட்டனரா ? அவர்கள் இத்திருமணத்தை ஏற்று கொண்டனரா? இதை பற்றி கூறவே இல்லையே …

    இருப்பினும் கதை அருமையாகவே இருந்தது..
    வாழ்த்துக்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *