அனுவும், அவள் விரும்பிய அவனும்

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 23,299 
 
 

கண்ணாடி முன் நின்று என்னையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்பொழுதும் வெளியில் போகும்பொழுது பார்த்துக் கொள்ளுவேனே !இன்னைக்கி என்ன இது புதுசான்னு தெரியலே!

தனிமை உணர்வு என்னையே மறு முறை பார்க்கத் தூண்டியது!.

தனிமையின் மிருதுவான உறுத்தல்களும் ,அதனுடைய உணர்வுகளும் ஏற்படுத்தும் இனிய அசைவுகள் இன்னும் என்னைப் பார்க்கத் தூண்டுகிறது! பார்த்துக் கொண்டேன்.!

சற்று திரும்பியதனால், சட்டென்று என் நெற்றியில் பட்டும் படாமல் கண்ணிமைகளை குறுகுறுப்பாக முன்னால் வந்து விழுந்த என் கேசம் ! அதைச் சரி செய்தாலும் மறுபடியும் என் முகத்தில் படர்ந்து விளையாடியது!

முகத்தில் முடி விழுந்து ஒதுங்குவது ஒருமித்த அழகு என்று வர்ணிப்பார்களே ! புன் முறுவலுடன் என்னையே பார்த்துக் கொண்டேன்.!

எதற்கு இவ்வளவு கேர் எடுத்து அலங்காரம் பண்ணிக்கிறே ! அம்மா கேட்டாள்.

பிரண்டு பார்ட்டி என்றேன்.

நேரம் ஆக்காதே! சீக்கிரம் வந்து சேரு!

அம்மாவின் கவலை! எந்த அம்மாவும் உணர்ந்து சொல்லும் சொற்கள்!

ஸ்கூட்டரில் போனால் கஷ்டப்பட்ட மேக்கப் , முகத்தை முழுவதும் கலைத்து விடும் என்ற நினைப்பில்
‘அம்மா !கார் எடுத்துண்டு போறேன்! சீக்கிரம் வந்து விடுவேன்”

ரோடில் கார் ஓடினாலும் வியு மிரரில் சாலையைப் பார்த்தததை விட என் அழகில் தான் அதிக கவனம் இருந்தது!

எங்கடீ இருக்கே !

கார் ஓட்டிண்டு இருக்கேன் ! இன்னும் பத்து நிமிஷத்தில் வந்து விடுவேன் ! எல்லாரும் வந்தாச்சா!

ஆச்சுடி! சீக்கிரம் வா! ரொம்ப லேட் பண்ணறே!

நினைத்துக் கொண்டேன் .இவ்வளவு கேர் எடுத்து என்னையே நான் ரசித்துப் பார்க்கும் போது, எவனோ ஒருவன் ,அந்த ஒருவன் என்னுடையவன் ஆகும் போது, இப்படி ரசிப்பானா! அல்லது ஜஸ்ட் லைக் தட் என்று போய் விடுவானா !

அப்படிப் பட்டவனை நான் திரும்பிக் கூடப் பாக்க மாட்டேன்.

ஹோட்டல் வந்தது.!

“வாலட் பார்க்கிங் ” என்றார்கள். காரின் எண்ணிக்கைகளும் அதிகமாக இருந்தது. இறங்கினேன்.

என் கார் அருகில் சாவி வாங்க ஒருவன் வந்தான்.

அதற்குள் ‘ கோபால்! அந்த சாவியை என்னிடம் கொடு. நீ அடுத்து காரைப் பார் ‘ என்று ஒரு குரல் வந்தது. திரும்பினேன்.

படு ஸ்டைலா இருந்தான்! முகத்திலே ஒரு மிதமிதப்பு! கூர்மையான வசீகரம் தெரிந்தது!

இவன் எதற்கு என் காரை எடுத்துண்டு போறான்.

அதற்குள் அவன் காரை எடுத்துண்டு பார்கிங் லாட் போய் விட்டான்.

மனசுலே லேசா ஒரு கேள்வி. மனசே அதைக் கேட்க தூண்டியது!

என்ன கோபால்! அவர் யாரு என் காரை எடுத்துண்டு போறாரு!

என்ன மேடம்! அப்படிக் கேட்டுடீங்க! அவர் எங்க முதலாளி அம்மா!

இந்த ஹோட்டல் ஓனரின் இரண்டாவது மகன். விக்னேஷ் சார்! இங்கே எல்லாம் அவர் தான்.இவர் மாதிரி முதலாளி இருந்தா அஞ்சு ஸ்டார் ஹோட்டல் ஏழு ஸ்டார் ஆயிடும் .தராதரம் பாக்க மாட்டாரு.! எல்லாரையும் நல்லாப் பாத்துக்குவாரு! ரொம்ப நல்லவரு!

என்ன கோபால் !அதுதானே உன் பேரு! நான் ஒரு கேள்வி கேட்டா நீ ஒரு ராமாயணமே படிக்கறே!

அம்மா! நீங்க இல்ல ! யார் கேட்டாலும் இப்படிதான் சொல்லுவேன்! இது நான் மட்டுமல்ல! இங்குள்ள எல்லோருமே சொல்லுவாங்க! அடுத்த வண்டி வருது .நான் போறேன் ! என்று அவன் போய் விட்டான்.

என்னடி இது அனு! வரதே லேட்டு! அங்கே நின்னு பேசிண்டு இருக்கே! வாடி போகலாம். என்று லதா என் கையைப் பிடித்து இழுத்தாள்.

என்னடி லதா! பேசிண்டே போறே ! மணி ஏழு கூட ஆகலே!

அனு! பார்டி ,கேக் வெட்டறது எல்லாம் ஒன்பது ,பத்து கூட ஆகும். ஆனா இந்த மாதிரி அட்மாஸ் பியர்லே நாம மீட் பண்ணி அரட்டை அடிச்சு நாளாச்சு! அந்த டயம் வேஸ்ட் ஆகுதே!

லிப்டுக்கு போகுமுன் மறுபடியும் கோபால்!

என்ன கோபால் !விடமாட்டே போலிருக்கே!

மாடம் !கொஞ்சம் நில்லுங்க! சார் நிக்கச் சொன்னாரு!

எந்த சாரு!

விக்னேஷ் வந்து கொண்டிருந்தான்.

பதவி,அந்தஸ்து! இளமை எலாம் ஒருங்கே அமைந்து ,அதோடு நல்ல குணமும் அமைந்து விட்டால் அந்த அழகும் மிடுக்கும் தனி தான்! யாருக்குமே அவனைப் பார்த்து வியக்கத் தோணும்.!

அதுக்குள்ளே அவள் அருகில் வந்து விட்டான்.

அய்யோ! எப்படி இருக்கான்! அவனை நேரில் பார்த்தாள்.

யு ஆர் மிஸ் அனு !ப்ளீஸ்!

எஸ் பிளீஸ் !எனி பிராப்ளம் !

நத்திங் மிஸ் அனு! உங்க காரைப் பார்க் பண்ணும்போது ,உங்க ஹெட் போன் பக்கத்தில் இந்த கிப்ட் பார்சல் இருந்தது! பார்டிக்கு வந்திருக்கீங்க ! இது அதுக்குத்தான் நினைக்கிறேன்! கொண்டு வந்தேன்!

ஓ மை காட் !நான் மறந்துட்டேன்! எல்லாம் இவளாலே தான்! வந்து இறங்குவதற்குள் அஞ்சு கால்! அதிலே இதை மறந்துட்டேன்! ரொம்ப சாரி! அதுக்கு நீங்க எதுக்கு கொண்டு வந்தீங்க ! கொடுத்து விட்டிருக்க லாமே !

இல்ல மிஸ் அனு! கார் பார்க் பண்ணினது நான்! அய் வாண்ட் டு பினிஷ் மை டூட்டி !

அனு அசந்து விட்டாள். என்ன டெடிகேஷன்!

தென்க் யு வெரி மச் மிஸ்டர் விக்னேஷ்!

என் பேர் எப்படி என்று கேட்க நினைத்தான் .

அதே கேள்விதான் அனுவுக்கும்.

உங்கள் பணியாள் கோபால் சொன்னான் என்று அனு சொல்ல ,உங்க பார்சலில் பேர் பார்த்தேன் என்று விக்னேஷ் சொல்ல ,இருவரும் சிரித்தனர். இரண்டு பதில்களும் ஒரே சமயத்தில் எதிரொலித்ததனால் !

அவ்வளவு பெரிய ஹாலில் ,காரிடாரில் அந்த இருவர் உள்ளங்களிலும் அந்த சில வினாடிகள் எதோ ஒரு உணர்வு உற்சாகத்துடன் அவர்களை விட்டு வெளியில் எட்டிப் பார்த்தது!

மிகவும் கலகலப்பான ஒரு பெரிய ஹோட்டலின் விஸ்தாரமான ஹாலில் சாதரணமாக இருவர் பேசிக் கொண்டால் அது தெரிந்திருக்காது !

பார்த்தவுடனே பளிச்சென்று பதுமை போன்ற அழகுப் பெண் அனு ! இதுவல்லவோ பர்சனாலிடி என்று எவரையும் ஈர்க்கும் அந்த விக்னேஷ் !

யாரெல்லாம் பார்த்தார்களோ ! ரசித்தார்களோ !தெரியாது!

தென்க் யு மிஸ்டர் விக்னேஷ் 1என்று அனு அவனைப் பார்த்து சொன்னாலும் , அந்தப் பார்வை !அவளுக்கு முற்றிலும் புதிய ஒன்று!அனுபவம்!
உணர்வுகள் ஒரு மித்து வேறு எதையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாமல் அவனையே பார்க்கச் சொல்லியது!

லேசாக மூடிக் கொள்ளும் லிப்ட் கதவுகள் கூட தானாக மூடிக் கொண்டாலும் ,அவளுடைய அந்த முழுப் பார்வை அவனை அப்படியே விழுங்கி ,தன்னுள் இருத்தி , அவனுடைய அழகான உருவம் அதையும் தாண்டி அவளிடம் போய் விட்டது!.

வித் ப்ளஷர் !டேக் கேர் அனு ! என்று சொல்லி லிப்ட் பக்கம் அவன் தாழ்வாக காண்பித்தாலும்,கையை அசைத்தாலும் , விக்னேஷ் தன்னைச் சுற்றி யுள்ள பணியாட்களிடம் அடுத்து என்ன என்று பேச செயலற்று சற்று தடுமாறினான்.

அந்த லிப்ட் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவ்வளவு பெரிய நஷத்திர விடுதியில் இவளை விட எத்தனையோ பேர் வந்து போய் இருக்கிறார்கள்.

ஆனால் இப்படி ஒரு அருமையான ,மனதை ,அழகோடு சிலிர்க்கும் சலனத்தை யாரும் ஏற்படுத்தியது இல்லை! இந்தப் புது உணர்வு இவனுள் இவ்வளவு வேகத்தையும் விறு விருப்பையும் கொடுத்து அவனை இப்படியெல்லாம் இழுக்குமா ,ஈர்க்குமா என்று அவனுக்கே வியப்பாக இருந்தது!

ரொம்பவும் தடுமாறினான்.

லிப்ட் நான்காம் மாடி சென்று கொண்டிருந்தது.மின்னொளி நான்காவது ப்ளோர் காண்பித்தது. அந்தக் கதவு திறக்கு முன் ,அனு மறுபடியும் பட்டனை அழுத்தினாள்.லிப்ட் கீழே போக ஆரம்பித்தது..

அனு!ஏய் அனு! என்னடி இது! ஏதாவது டிரீம் வேர்ல்ட்லே இருக்கியா! லிப்ட் எதுக்கு கீழே போகுது!

சாரி லதா !தெரியாம என்னையும் அறியாமல் பண்ணிட்டேன். ரொம்ப சாரி !

லதா முகத்தை பிடித்துக் கெஞ்சி ,தப்ப எடுத்துக்காதே லதா !எனக்கே என்ன செய்வது என்று தெரியவில்லை.!

ஏய்! எனக்குத் தெரியும்! எல்லாம் அந்த விக்னேஷின் அட்ராக்க்ஷன்! நெஜத்தை சொல்லு !அதுதானே!

அனு முகத்தில் படர்ந்த அந்த வெட்கம்!

அழகான அந்த முகம் சிவந்து மெல்லிய புன்னகையுடன் மிளிர்ந்தது!

ஒரு பெண்ணின் அழகு இம்மாதிரி புதிய பரிமாணத்தில் ஒளி வீசும் ! அதுவும் அந்தரங்கத் தோழி அருகில் இருந்தால் !

அனு உன்னைப் பார்த்தா எனக்கு ரொம்பப் பொறாமையா இருக்கு! ஆன மனசார உன்னை வாழ்த்துகிறேன் ! உண்மைத் தோழியின் மனம் அப்படிதான் இருக்கும் லதா போல!

ஒரு வழியா பங்க்ஷன் ஹாலுக்கு வந்தார்கள் .

லதா!பிளீஸ் !எதுவும் பேசிடாதே!

சீ !வாடி! எனக்குத் தெரியாதா!

அய்யோ!மை டியர் அனு ! மீண்டும் வாழ்த்துக்கள் ! அவளை மறுபடியும் தழுவிக் கொண்டாள்.

அங்கு பெரிய நட்புப் படையே இருந்தது!

அனு! பார்க்கிங் லாட்டிலிருந்து இங்கே வர இவ்வளவு நேரமா!

வெய்ட் !வெய்ட்! கார் பார்க் பண்ண லேட் ஆகி விட்டது. சாரி!

எல்லாரும் தொழில் படிப்பு முடித்து அடுத்து வெற்றிப் பயணத்தைத் தொடங்கும் நண்பர் குழு!

எல்லாம் பெண்கள் ஓரிரு பையன்களைத் தவிற!

அதிலும் பர்த் டே கொண்டாடும் சித்ரா அடுத்த வாரம் அமெரிக்கப் பயணம்! இது வெறும் பர்த் டே பார்டி மட்டும் அல்ல! இங்கு பிரிந்தவர்கள் கூடுவது உலகில் எங்கு வேண்டுமானாலும் அமையலாம்.

விருந்து களை கட்ட ஆரம்பித்தது.

அறிக்கைகள்,பாடல்கள் அதன் பின் ஆட்டங்கள் ,நடுவில் அரட்டைகள் அமைந்து ஆர்பரித்தன.

நல்ல கல்வியுடன் வெற்றிப் பயணம் தொடங்கும் அழகிய இந்த நண்பர் குழு உண்மையான நேசப் பொலிவுடன் களை கட்டியது.

அனு சாய்வாக சோபாவில் அமர்ந்து ஏய்! லதா !இங்கே வாயேன் ! என்றாள்.

லதா! நான் எங்கு போனாலும் நீயும் கூட வரணும்..வருவே இல்லே!

என்னடி இது! உனக்காக நான் எங்கு வேணாலும் இருப்பேன். ஆனா இப்போ கொஞ்ச நேரம் முன்னாலே உனக்கு துணை வந்து விட்டதே!

போடி!அதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் ! நான் சீரியசா எடுத்துக்க மாட்டேன்.! பார்க்கலாம்.!

ஆனால் அவள் மனம் முழுக்க அவன்தான் இருந்தான்.

மனதில் மட்டுமல்ல! அவள் எதிரேயும் நின்று கொண்டிருந்தான்.

அனுவுக்கும் லதாவுக்கும் பிரமிப்பு தாங்க முடியலே!

மிஸ் அனு! ஒரு விஷயம் !

எஸ் விக்னேஷ்! சொல்லுங்க!

விக்னேஷ் சற்று கூர்ந்து அவளைப் பார்த்தான்.என்ன இவள் பேச்சில் சற்று நெருக்கம் தெரிகிறதே!

விக்னேஷ்! அப்படிதான் உன்னை இனிமே கூப்பிடுவேன்.!நீ என்ன நினைச்சாலும் சரி! என்று சிரித்தாள்.

அனு! நான் நினைச்சதை ,சொல்ல நினைச்சதை நீ சொல்லிட்டே ! தேங்க்ஸ் !

அவன் சிரிக்கவில்லை! அவன் கண்களும் ,சந்தோஷமான முகமும் நன்றி சொல்லிற்று!

விக்னேஷ்! சொல்லு !நான் என்ன செய்யணும் இப்போ!

அனு!எங்கள் சார்பாக ஒரு கேக்கும் ,கிப்டும் உன் கிட்ட கொடுத்து கொடுக்கலாம் என்று வந்தேன். அப்புறம் எல்லாம் சரியா இருக்கா பார்க்க வந்தேன் .

அதற்குள் லதா விக்னேஷிடம் ,விக்னேஷ்! நீங்களும் இதில் ஜாயின் பண்ணிக்குங்க!

நான் இதுவரை எங்க ஹோட்டலில் நேரடியா எந்த பன்க்ஷன்லெயும் கலந்து கொள்ள மாட்டேன். ஆனால் இன்னைக்கு கலந்துக்க ஆசை!
அதுக்குக் காரணம் உனக்குத் தெரியும் லதா! என்று அவளிடம் சிரித்தான்.

அனுவுக்கு வெட்கம் முகம் முழுக்கப் படர்ந்தது!

அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வை கதை சொல்ல வில்லை! அவள் காதலைக் காவியமாகச் சொல்லியது!

தேன்க் யு ! என்று ஆரம்பித்தாள்.

டியர் அனு! நான் உனக்கு இனிமேல் “விக்கி” இந்தா உன்னுடைய கார் டோக்கன். கோபால் மறந்துட்டான்.

அதைக் கை நீட்டி வாங்க வெட்கப் பட்டாள். விக்னேஷ் உரிமையுடன் அவள் கையை மெதுவாக தன பக்கம் இழுத்து அந்த கார் டோக்கனை
அழகான ,மிருதுவான அவள் கையில் வைத்து மூடினான்! அவள் முகமோ அவனை அன்போடு பார்த்துக் கொண்டிருந்தது!

தேன்க் யு விக்கி! மூடின கையை திறக்க மனமில்லை அவளுக்கு!

அது வெறும் டோக்கன் இல்லை! அவன் இதயத்தை அவள் கையில் வைத்து மூடி விட்டான்.! திறக்க மனமில்லை அனுவுக்கு! கண்கள் படபடத்து கொண்டு இருந்தன !

இந்த அருமையான காதல் காட்சியை லதா மட்டுமல்ல! அனைவருக்கும் இனிய விருந்தாக இருந்தது!

மௌனம் கலைந்தது! சித்ரா வந்தாள்.

ஹலோ!மிஸ்டர் விக்னேஷ்! கன்கிராட்ஸ்! பிளீஸ் ஜா இன் அஸ் வித் யுவர் டியர் அனு !

நீங்க கொடுக்கிற கிப்டை எடுத்துக்கிறேன் வித் ப்ளஷர் ! ஆனா அந்த கேக்கை நீங்கள் இருவரும்தான் கட் பண்ண வேண்டும்.

இரு காதலர்களின் இணையும் இனிய நேரம்!

கேக்கை எடுத்துப் போய் இரண்டு நிமிஷத்தில் ஏதோ எழுதினார்கள். பர்த் டே பேபி சித்ரா கேக் வெட்டவில்லை! முதலில் அனுவையும் விக்கியையும்
கட் பண்ண அழைத்தார்கள்.

இருவரும் இணைந்து கேக் வெட்டும் டேபிளுக்குப் போனாலும் கேக்கைப் பார்த்து பிரமித்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்!

கேக் வெட்ட மனமில்லை! ஏன்! கேக்கில் பொறிக்கப் பட்டுள்ள அருமையான எழுத்துக்கள் !

ஹாப்பி டே – லவ் வித் அனு – விக்கி ” என்று.

அதைக் கலைக்க மனமில்லை.!

எல்லாக் கண்களும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தன.

கமான் பேபி! டு இட் அனு ! என சித்ரா,லதா மற்றும் அனைவரும் ஒரே கோரஸ் ஆக சொன்னார்கள்.

கேக் வெட்டும் கத்தியை விக்கி எடுத்துக் கொடுக்க ,அனு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த கணம் கத்தியை கீழே வைத்து விட்டு , விக்கி மை டியர் ! முழு மூச்சில் தாவி அவனை இருக்கக் கட்டித் தழுவி , முகத்தை அவன் நெஞ்சில்
புதைத்துக் கொண்டாள்.!

விக்னேஷ் சற்றும் எதிர் பாராத செயல் இது! அவன் நிதானத்திற்கு வர கொஞ்ச நேரம் ஆயிற்று!

மெதுவாக அவளை தன்னோடு அணைத்து இறுக்கிக் கொண்டான்.!

சட்டென்று நேர்ந்த இந்த காதல் காட்சியில் உறைந்து விட்ட நண்பர் குழு , நிதானித்து மெதுவாக கை தட்ட ஆரம்பித்தனர்!

நெஞ்சிலே நின்றவனை நேரில் மிக அருகில் அன்புடன் பார்த்த அனு ,அவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டதில் ,மன நிறைவு கொண்டாள்.
பார்டி முடிந்தது. இப்படி மறக்க முடியாத நேரமாக இந்த நாள் அமையும் என்று அனு விக்கிக்கு மட்டுமல்ல ,அனைவருக்கும் ஆனது
அனு! இன்று சாயங்காலம் வரை என் லைபில் இப்படி ஒரு மிராகிள் நடக்கும் என்று கொஞ்சம் கூட எதிர் பாராதது! ஆனா எனாலே இனிமேத் தனியாக இருக்கவோ செயல்படவோ நிச்சயம் முடியாது!

என் வேலைகள் சரிப்பட்டு நடக்குமா என்பது இனி ஒரு பெரிய கேள்வி!

ரொம்ப சிரமப் படப் போறேன்!

லைப்லே இப்படி ஒரு அனுபவம் வந்தா அதனுடைய விளைவுகள் இவ்வளவு பவர்புல்லாக இருக்கும் என்பது இப்பதான் புரியறது!

அய்யோ!அனு! பீ வித் மி ஆல்வேஸ் ! டார்லிங் ! சீக்கிரம் வந்துடு!

விக்கி! நீ சொல்லிட்டே! என்னாலே சொல்லக் கூட முடியலே! லவ் கனெக்க்ஷன் இவ்வளவு படுத்துமா! இன்னும் ஒரு நாளே ஆகலே! இப்படி இருக்கேனே!

நான் என்ன செய்யப் போறேன்!

அன் பிலீவபிலி கில்லிங் !

கொஞ்சம் பொறுத்துக்கோ விக்கி!

அனு! லைப் என்பது நம்ம ரெண்டு பேர் மட்டுமல்ல! நமக்கு பேமிலி ,சுற்றம் எல்லாம் உண்டு! சீக்கிரம் ஒரு முடிவு வரும் வரை நான் பொறுத்துக் கிறேன். ஆனா இந்த விக்கி கூட “அனு” என்ற அந்த ரெண்டு எழுத்து எப்போதும் அழகாப் பத்திரமாக இருக்கும்!

நான் கொஞ்ச நேரத்தில் வரேன்! என்று சொல்லிப் போய் விட்டான்.

சித்ரா,லதா மற்றும் நண்பர் குழு எல்லோரும் அனுவைச் சூழ்ந்து கொண்டனர்.

அனு! என்று ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். நேற்று வரைப் பார்த்த அனு இல்லை இவள் !

எப்படி டீ அனு! என்ன ஆச்சு உனக்கு!

என்னை ஒண்ணும் கேட்காதீங்க ! பார்கிங் லாட் வரும் வரை நான் அனு வாகத்தான் இருந்தேன்!

அப்புறம் நடந்தது ! அய்யோ ! டோன்ட் ஆஸ்க் மீ எகைன் ! ஐ வாஸ் தரோ லி சம் வேர் ! நான் எங்கேயோ வேற லோகத்துக்குப் போயிட்டேன்! என்னால் திரும்பி அந்த அனுவாக வர முடியாது!

ஆக முடியாது!

இப்போதான் அப்பா ,அம்மா நினைவு வருது! உங்க ஞாபகம் வருது! ப்ளீஸ் ஹெல்ப் டு பீ நார்மல் !

ஆனா அது முடியாது!

லதா! என்று சின்னக் குழந்தை ஓடி வருவது போல ஓடி வந்து கட்டிக் கொண்டாள்!

ஆனால் அவள் குழந்தை அல்ல! இந்த ஒரு சிறு நேரம் எ ப்படிப் பட்டவரையும் ஏன் இப்படி அசைத்துப் பார்க்கிறது!

அலைகள் அடியில் முழுகித் தெளியும் ,தெரியும் கூழான் கற்கள் தான்!

மறுபடியும் மறுபடியும் காதல் அலைகளினால் முழுகித் திணற வேண்டும் !

ஒவ்வொருத்தராக விடை பெற்றுக் கொண்டனர். அனுவும் லதாவும் தான் பாக்கி!

விக்கி எங்கே காணோம்!

லிப்டில் இறங்கிப் பழைய இடத்திற்கு வந்து விட்டார்கள்!

மறுபடியும் கோபால்!

மேடம் ! டோக்கன் வேண்டாம். கார் இங்கே வரும் .நில்லுங்க!

பார்த்தால் விக்கி கார் ஒட்டிண்டு வந்தான்.!

அனுவுக்கும் லதாவுக்கும் ஆச்சர்யம்! இவனைத் தேடினா இவன் இங்கே இருக்கானே நமக்காக!

அனு! ரொம்ப லேட்டாகி விட்டது! நானே உங்க ரெண்டு பேரையும் கொண்டு விடறேன்!

கோபால் என் காரை எடுத்துண்டு பின்னால் வருவான்!

லதா உன்னை எங்கே டிராப் பண்ணனும் சொல்லு .அப்புறம் அனுவை டிராப் பண்றேன்!

விக்கி!லதா என்னோடு வந்துட்டு நாளைக்கு அவள் வீட்டுக்குப் போவா.

கார் போய்க் கொண்டிருந்தது!

விக்கி!

என்ன!

இந்த டோக்கனை நானே வெச்சுக்கட்டுமா ! நீ என் கையில் கொடுத்தது !

விக்கி காரை நிறுத்திட்டான்.!

அனு! எவ்வளவு அன்பு வெச்சிருக்கே என் மேலே! ரொம்பப் ப்யூர்! நான் ரொம்பக் குடுத்து வைத்தவன்.! என் செல்லக் குழந்தை அனு நீ! ஓ மை காட் ! அய் ஆம் மச் கிப்டெட்!

இந்த ஒருங்கிணைந்த உள்மனது உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த லதா , அனு ! நீ ரொம்ப
கொடுத்து வைத்தவள். என்று அவள் காதருகில் சொன்னாள்.

இரவு பதினோரு மணிக்கு மேல் வீட்டு வாசலில் ரெண்டு கார்கள்! அனுவின் அம்மா தூங்க வில்லை!

ஏதோ ரெண்டு நிமிஷம் பேச்சுச் சத்தம் கேட்டது! பிறகு அந்தக் கார் போய் விட்டது!

லதாவும் அனுவும் உள்ளே வந்ததும்

என்னடி அனு! இதுதான் நேரத்தோடு வருவதா! நல்ல வேளை இவளும் உன் கூட வந்ததினால்

கொஞ்சம் நிம்மதியா இருக்கு.அதென்ன இன்னொரு கார்!

அம்மா!லேட்ட்டானதினாலே ஹோட்டலில் இருந்து இன்னொரு கார் துணைக்கு அனுப்பித்தார்கள்.

எங்களைக் கொண்டு விட்டுப் போகிறார்கள்.

அம்மா !சமாதானம் அடையவில்லை! அனு! அப்பா வேற ஊர்லே இல்லை! நீ கொஞ்சம் பொறுப்பா இருக்கணம்.!

என்னடி லதா! நீ சொல்லமாட்டாயா !

ஆன்டி! இந்தப் பார்ட்டி தான் நாங்கள் எல்லாரும் கடைசியாப் பார்த்து மீட் பண்ற அக்கேஷன் !இதக்கப்புறம் யார் யார் எங்கே இருப்போம் .தெரியாது!

சரி நேரமாச்சு! தூங்கப் போங்க!

என்னடி லதா! ஏற்கெனவே ஏகப்பட்ட கேள்வி கேட்கறாங்க ! என் விஷயம் வேற ! எனக்கு எதுவும் சரியாப் படலே! பயமா இருக்கு! அப்பா வேற இல்ல! நான் பாட்டுக்கு லவ் பேர்ட் போல ஆட்டம் போட்டுட்டேன்!

சும்மா இருடி! எல்லாம் நல்ல படியா நடக்கும் ! தூங்கு!

காலை ஐந்து மணி இருக்கும். எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

போன் சத்தம் கேட்டது!

மிசஸ் சுவாமிநாதன் ! என்று கேட்டார்கள்.

எஸ்.நான் மிசஸ் .சுவாமிநாதன் பேசறேன்.!

மேடம்! நான் டாக்டர் வந்தனா சுரேஷ் பேசறேன்.நியூ ஜெர்சிலே இருந்து! மிஸ்டர், சுவாமிநாதனுக்கு மைல்ட் அட்டாக்! இங்கே ஹாஸ் பிடல்லெ அட்மிட் பண்ணி இருக்கோம்.பதட்டப் படாதீங்க! நாங்க பார்த்துக்கிறோம். ஆனா நீங்களும் உங்க டாடரும் புறப்பட்டு வாங்க ! உங்களையும் மகளையும்
பார்க்கப் பிரியப் படுகிறார்.

அம்மாமிசஸ் லக்ஷ்மி சுவாமிநாதன் தைரியமானவர்தான் ! ஆனாலும் முகத்தில் நீண்ட கவலைக் குறி! என்னவெல்லாமோ மனதில் தோன்ற ஆரம்பித்து விட்டது!

மாடிக்குச் சென்று அனுவை எழுப்பினாள்.

அனு !அனு! எழுந்திரு! லதா!நீயும் எழுந்திரு!

அப்பாவுக்கு உடம்பு சரி இல்லையாம் !மைல்ட் அட்டாக் ! நியூ ஜெர்சி இல் அட்மிட் பண்ணி இருக்காங்க !

அனு கண் விழித்துப் பிரமை பிடித்தவள் போல இருந்தாள். நேற்று தேவதையாக இருந்தேன்! இன்று இப்படி ஒரு செய்தியா! கடவுளே!

லதாவைக் காணவில்லை! லதா!லதா! எங்கே போயிட்டே !

அனு அழ ஆரம்பித்தாள். இப்போ தான் குடும்பம் நல்ல நிலையில் இருக்கிறது! அதற்குள்ளே இப்படியா ஒரு சோதனை!

லதா ஓடி வந்தாள் அனு! கவலைப் படாதே! கடவுள் நம்ம பக்கம் இருக்கார்! நான் இப்பதான் விக்கி கிட்டப் பேசினேன்! கொஞ்சம் வெய்ட் பண்ணு .இப்போ கால் வரும்.

ஆன்டி!கவலைப் படாதீங்க ! கொஞ்சம் பொறுத்துக்குங்க! இப்போ ஒரு கால் வரும்.அப்புறம் பிரயாண ஏற்பாடுகள் செய்யலாம்.

அப்பா!நல்ல வேளை! எல்லோருக்கும் விசா இருக்கு! கொஞ்சம் பொருத்துங்க!

இவள் பேசிக் கொண்டிருக்கும்போதே டெலி போன் மணி அடித்தது. லதா தான் எடுத்தாள்.

கொஞ்சம் இருங்க! ஆன்டி !உங்களுக்குத்தான் கால்.

வணக்கம் ஆன்டி!நான் டாக்டர் வந்தனா பிரதர் விக்னேஷ் பேசறேன்.சென்னையிலுருந்து! என் அக்காவுடன் பேசியாச்சு! உங்களுக்கும் உங்க டாடருக்கும்
இன்னைக்கே பிளைட் புக் பண்ணியாச்சு! ராத்திரி பதினோரு மணி ! நிதானமா இருங்க! அங்கிளை என் அக்கா பத்திரமாப் பார்த்துப்பா!

அனுவோடு அம்மாவுக்குக் கவலைக்கு நடுவே ஒரு ஆச்சர்யம்! இதென்ன கடவுள் செயலா !

ஏய் !லதா !எங்கே இருக்கே ! யார் கிட்டப் பேசினே!

அதுக்குள்ளே லதா அனுவுக்கு எல்லா விஷயமும் சொல்லியாச்சு!

ஆன்டி! இதோ வந்துட்டேன்! பாவம் மாடிக்கும் கீழேயும் இந்தப் பெண் லதா ஓடிக் கொண்டிருந்தாள்.

ஆன்டி! நேத்து நாங்க பார்டி நடத்துனுமே அது இந்த டாக்டர் வந்தனா அப்பாவுடையது .இப்போ

உங்க கிட்டே பேசினது டாக்டருடைய தம்பி விக்னேஷ் .நேத்து ராத்திரி எங்களைக் கொண்டு விட்டவரும் அவர்தான்.

அனுவோட அம்மாவுக்கு ஒரே பிரமிப்பு!

அதற்குள் வாசலில் மணி சத்தம்!

திறந்தாள் விக்னேஷ் நின்று கொண்டிருந்தான்.

ஆன்டி!நான் டாக்டர் வந்தனா வின் தம்பி .என் பேர் விக்னேஷ் !

உள்ளே வாப்பா! உட்காரு! ரொம்ப உபகாரம் பண்ணறே! திக்குப் பிடிச்சுக் கவலையிலும் ,பயத்திலும் இருந்தேன்! உங்க அக்கா போனுக்கு அப்புறம் உன் போன் வந்ததும் கொஞ்சம் தெம்பு வந்தது!

ஆன்டி! நான் வந்தது உங்க பாஸ்போர்ட் ,உங்க டாடர் பாஸ்போர்ட்டும் வேணும் .டிக்கட் வாங்கணும்.

தேங்க்ஸ் விக்னேஷ்! அதோடு செக்கும் தரேன் !

ஆன்டி! அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.முதல்லே நீங்க அங்கிளைப் பார்க்கணும். அது போதும்.

லதாவும் அனுவும் ஓடி வந்தார்கள்.விக்னேஷ் அவர்களிடம் வெறும் ஹலோ சொல்லிட்டு ,அவ அம்மாவிடம் பேசினான்.

அனுவுக்குப் புரிந்து விட்டது! இது காதல் பேசும் சமயமல்ல.! அனுவின் அம்மா பாஸ்போர்ட்டுடன் செக்கும் கொண்டு வந்தாள்.

ஆன்டி! உங்க கிட்டே வாங்கிக்காம இருக்க மாட்டேன். லதா நீ என்னோடு வந்தா டிக்கட் கொடுத்து விடறேன்.

அப்போ நானும் வரேனே !என்று அனு ஆரம்பித்தாள்.

இல்லை! நீங்க அம்மாவோடு துணைக்கு இருங்க! அவங்க தனியா இருக்க வேண்டாம்.லதா வந்தா மட்டும் போதும். டிராவல்ஸ் எங்களது தான் சீக்கிரம் முடிஞ்சுடும்.

அனுவும் அம்மாவும் அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தனர்

நல்ல பிள்ளை ! என்று அம்மா சொல்லுவதை ஆசையோடு கேட்டுக் கொண்டிருந்தாள்.

அதற்குள் வேலை ஆட்களும் ,சமையல் மாமியும் வந்து விட்டனர். அனு அம்மா அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

அனு குளித்து ரெடி ஆனாள். எங்க இந்த லதாவைக் காணோம்! எங்கடீ! என்னைக் கழட்டி விட்டு போயிட்டே! எனக்கு தனியா இருந்தா அப்பா நினைவு வரது! சீக்கிரம் வா!

அனு !நான் என் வீட்டிலே இருக்கேன்! கொஞ்ச நேரத்தில் வரேன்!

இல்லை .லதா !நீ அங்கேயே இரு !நான் வரேன்!

அம்மா! லதா வீட்டுக்குப் போய் பாஸ்போர்ட் வாங்கிண்டு வரேன் .

சரி போ! டாக்சிலே போ!

சரி அம்மா! கார் உனக்குத் தேவையா இருக்கும். அனு கிளம்பினாள்.

அனு! நேரா ஹோட்டல் சைடில் டிராவல்ஸ் இருக்கு .வா. நானும் அங்கே வரேன் என்றாள் லதா.

டிராவல்ஸ் உள்ளே விக்னேஷ் உட்கார்ந்திருந்தான்.

ஏன் அனு! நீ வந்தே !

உன்னைப் பார்க்கத் தான்.!

அனு! அம்மா பாவம்! என்னை நீ எப்போ வேணும்னாலும் பார்க்கலாம்.முதல்லே அப்பாவைக் கவனி!

விக்கி! அனு அழ ஆரம்பித்தாள்.

சரி!சரி! இதுக்குப் போய் அழறே!நம்ம போலதான் அப்பாவும் அம்மாவும் ! நான் சொன்னதுக்கு அழறையா!

விக்கி!எனக்குப் பயமா இருக்கு!நீயும் கூட வா!

என்ன அனு! நாம என்ன பெங்களூருக்கா போறோம்.! அமெரிக்கா ! நீ குழந்தைதான் !

சமத்தா அம்மா கூடப் போய்டு! அங்கே அக்கா, மாமா உன்னை நல்லாப் பார்த்துப் பாங்க! போயிட்டு வா! எல்லாம் நீ நினைச்ச மாதிரி நடக்கும்!

என் செல்ல சமத்து! என் அனு ! தலையைக் கோதி கண்ணீரைத் துடைத்தான்.

அதற்குள் லதா வந்து விட்டாள்.

லதா! இவளைக் கூட்டிண்டு போ! ரொம்ப அடம் பிடிக்கறா! எப்படி சமாளிக்கப் போறேன் இந்தக்

குழந்தை கிட்டே!

இந்தா டிக்கெட் ,பாஸ்போர்ட் .ஆன்டி கிட்டே குடுத்துடு. நான் ஏர் போர்ட் முடிஞ்சா வரேன்!

அவர்கள் போய் விட்டார்கள். விக்கிக்கும் பாவமா இருந்தது.

ஷி இஸ் மை வெரி வெரி ச்வீட் பேபி ! என்று சொல்லிக் கொண்டான்.

இரவு பத்து மணி இருக்கும்.பிளைட் நிரம்ப ஆரம் பித்தது.அனுவும்,அம்மாவும் சௌகரியமாக உட்கார்ந்தனர். கேட் க்ளோஸ் பண்ண முதல் கால் கொடுத்தார்கள் . அனுவோட அம்மா லேசாக் கண்ணை மூடிக் கொண்டிருந்தாள்.

ஆச்சர்யம் ! திடீரென்று அந்த காலியான சீட்டுக்கு மேல் சூட்கேசை எர்ஹோச்டஸ் வைத்துக் கொண்டிருந்தாள் விக்கி அந்த சீட்டில் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்தான்.

அனுவுக்கு ஆச்சர்யம் ஆனாலும் குழந்தை போல ஆத்திரம் அவன் மேல்! இரண்டு கையாலும் அவன் நெஞ்சில் குத்தப் போனாள்.அவன் சிரித்துக் கொண்டு அதைத் தடுத்துக் கொண்டிருந்தான். பணிப்பெண்

அவர்களைத் தாண்டிப் போக முடியாமல் இந்தக் காதல் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தாள்.பிசினெஸ் கிளாஸ் ஆனதால் இடைஞ்சல் இல்லை!

அம்மா!அம்மா!இங்கே பாரு! என்று அம்மாவை எழுப்பி விக்னேஷைக் காண்பித்தாள்.

அம்மாவுக்கும் ஆச்சர்யம் ! என்ன விக்னேஷ்! ஆச்சர்யமா இருக்கு!

இல்லை ஆன்டி! இந்த வாரம் நியுயார்க்கில் கொஞ்சம் பிசினஸ் இருக்கு! அக்காவிடம் பேசினேன் .

அக்காதான் உங்களை ஹாஸ்பிடலில் விட்டுட்டுப் போகச் சொன்னாள்.

என்னமோ அப்பா!எனக்குப் பிள்ளை இல்லாக் குறையை தீர்க்க நீ வந்திருக்கே! நீ நல்ல இருக்கணும்.

இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு !

அம்மா!அவன் உனக்கு பிள்ளை இல்லை !உன் மாப்பிளை! என்று சொல்லபோனாள் .அப்புறம் நிறுத்திக் கொண்டாள்.

கொஞ்சம் நடந்து டாய்லேட் பக்கம் போனாள் .பின்னாலே விக்கியும் வந்தான்.

சீ !நீ ரொம்ப மோசம் ! ரொம்ப டென்ஷன் கொடுக்கறே விக்கி!

அனு! உனக்காக நான் வந்திருக்கேன். தவிர என் மாமனார் மேலேயும் எனக்கு அக்கறை உண்டு.உங்க அப்பா நல்லா வரவரைக்கும் நாம கொஞ்சம் நிதானமா இருக்கணும். அப்புறம் எல்லாம் தானா நல்லபடியா நடக்கும்.

உன்னை மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளை எங்க அப்பா அம்மாவுக்கு ஒரு பெரிய கிப்ட்.! தாங்க்யு விக்கி !

அவள் கண்களில் நீர் பெருகியது!

அனுவின் அப்பா தெய்வச் செயலால் ,விக்கியின் அக்காவும் மாமாவும் எடுத்த தக்க சமய ட்ரீட் மேன்டினால் மெதுவாகத் தேறினார்.பிட்ச்பர்க்கிலிருந்து எங்கோ மெடிக்கல் கான்பிரன்ஸ் போகும் அவர்கள் இருவரும் பிளைட் கிளம்புமுன் இவர் பட்ட வேதனையால் ,அதைக் கான்சல் பண்ணிட்டு
இவரைக் காப்பாற்றினார்கள்

விக்கியின் அக்காவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அனு-விக்கி காதல் தெரிய ஆரம்பித்தது.

இவன் இவளுக்கென்றே வந்தான் என்பதைப் புரிந்து கொண்டாள். சுவாமிநாதன் குடும்பத்தையும் குழந்தை சுபாவமுள்ள அனுவையும் ரொம்பப் பிடித்து விட்டது!

பத்து நாள் ட்ரீட்மென்ட் பிறகு சுவாமிநாதன் சென்னை வந்தார். விக்கிதான் முழுக்கப் பார்த்துக்கொண்டான்.

இதற்க்கு நடுவில் விக்கியின் அக்காவும் மாமாவும் சென்னை வந்தனர்.கடமை நிமித்தமாக சுவாமிநாதன் வீட்டுக்குப் போனாள்.

விக்கி வரவில்லை .

நலம் விசாரித்துவிட்டு அங்கிள்! ஒரு விஷயம் பேசலாமா! ஆன்டியையும் கூப்பிடுங்க.

என்னம்மா ! எனை தக்க சமயத்தில் உயிரைக் காப்பாத்தி இருக்கே! நீ என்னிடம் என்ன கேட்கப் போறே!

அங்கிள்!அனுவை எங்கள் வீட்டுக்கு அனுப்புவீங்களா !

சுவாமிநாதனுக்கும் லக்ஷ்மி அம்மாவுக்கும் ஷாக்! சந்தோஷத்தில் வார்த்தைகளே வரவில்லை!

டாக்டர்!உங்க குடும்பம் ரொம்பப் பெரிசு!

அதெல்லாம் இல்லை அங்கிள்! மனசுதான் வேணும்!

எப்போ வச்சுக்கலாம்!

அந்த சந்தோஷ வைபவம் விரைவில் நடந்தது!

வரவேற்பு அதே நாலாவது ப்ளோரில் !

டாக்டர் வந்தனா மெதுவாக இவர்களிடம் வந்தாள். அன்னைக்கி காலேஜ் பார்ட்டிலே அவ்வளவு கூத்தடிச்சுட்டு இன்னைக்கி சாதுவா சிரிச்சிண்டு நிக்கறீங்க!

அக்கா! என்று ரெண்டு பேரும் கத்திக்கொண்டே அவள் காலில் விழுந்து கும்பிட்டனர்.

அடுத்த சில நாட்களில் லக்ஷ்மி சுவாமிநாதன் வீட்டில் விருந்து.

விருந்து முடிந்ததும் விக்கி, எல்லார் முன்னிலையில் ,லக்ஷ்மி மேடத்திடம் ‘ஆன்டி! அன்னைக்கு ஒரு செக் தரேன் சொன்னீர்களே அது இப்போ வேணும்!
என்ன மாப்பிள்ளை! இந்தாங்க பிளான்க் செக்!

ஆன்டி!ஏற்கெனவே விலை மதிக்க முடியாத ஒரு பிளான்க் செக் கொடுத்ட்டீங்க ! அதுவே எனக்கு பெரிய கிப்ட்! என்றான் சிரித்துக் கொண்டே!
எல்லோரும் சிரித்தார்கள்.

Print Friendly, PDF & Email

4 thoughts on “அனுவும், அவள் விரும்பிய அவனும்

 1. சங்கர் அண்ணா கதை ரொம்ப நல்ல இருக்கு .. வாழ்த்துக்கள் அண்ணா.. ஆனா நிஜத்தில் இப்படி ஒரே நாள்ல ஒருத்தர பார்த்த உடனே புரிஞ்சிக்க முடியாது இல்லையா அண்ணா .. இருந்தாலும் கதை சொன்ன விதம் அருமை அண்ணா..

  1. நித்யா வெங்கடேஷ் அவர்களுக்கு,
   துல்லியமான விமர்சனத்திற்கு மிக்க நன்றி .நிஜ வாழ்க்கையில் எத்தனையோ பேர்களை தினம் சந்தித்தாலும் ,யாரோ ஒருவர் இன்னொருவர் மனதில் நிலை கொள்ளுவார்கள்.அதுவே ஏன் இன்னும் என்ற ஆவல் இயற்கையாக நினைவில் வர தோன்றும். ௦ரு மனப் பட்ட அன்பும் ,ஏற்று புரியும் மனப் பாங்கும் இருப்பவர்கள் ஒன்று பட்டால் ,இது போன்ற நிகழ்வுகள் இனிதாக வரும்.ஆனால் அவை அவ்வப்போது நிகழ்வது இல்லை .
   நன்றி.

 2. சூப்பர் சூப்பர் ஹார்ட் டொச் பண்ற சூப்பர் லவ் ஸ்டோரி ரியலி சூப்பர்

  1. திரு .பாலாஜி அவர்களுக்கு,
   தங்கள் மனப்பூர்வமான பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி
   இது என் கதைக்குக் கிடைத்த பரிசு ! மிக்க நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *