தமிழ் எழுத்துலகில் தனக்கென தனித்துவமான அடையாளம் கொண்டவர். தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவராகக் கருதப்படுபவர். சமூக, மனித உளவியல் கூறுகளை வெகு இயல்பாக எழுத்தில் கையாண்டவர். இயற்பெயர் பங்கஜம். கர்நாடகாவில் உள்ள தும்கூரில் 1941, ஜூலை 26ல் பிறந்தார். பெங்களூரில் வசித்தபோது, ஜேன் ஆஸ்டன், ஜெயகாந்தன், அலெக்ஸாண்டர் டூமாஸ், சார்லஸ் டிக்கன்ஸ் எழுத்துகளைப் படிக்க ஆரம்பித்து, தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தார். இவருடைய ஆரம்ப கால நாவல்கள் எல்லாமே பெண்களை மையப்படுத்தி எழுதப்பட்டவை. டெல்லிக்கு இடம் பெயர்ந்த பிறகு அரசியல் நாவல்கள் எழுத ஆரம்பித்தார்.
மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்திலும் வரலாற்றிலும் பட்டம் பெற்றார். நார்வே நாட்டிலிருக்கும் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர். இவருடைய நாற்பது நாவல்கள், பதினைந்து குறுநாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ‘இந்தியா டுடே’ தமிப் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். ‘பஞ்சாப் சாகித்ய அகாடமி’ விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவருடைய ‘வாஸந்தி சிறுகதைகள்’ நூலுக்கு தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது. இவருடைய சிறுகதைகளும் நாவல்களும் ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
விருதுகள்
நாற்பது நாவல்கள், பதினைந்து குறுநாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் என்று பல்வேறு நூல்களைப் படைத்துள்ளார். பஞ்சாப் சாகித்திய அகாதமி விருது உள்ளிட்ட எட்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “வாஸந்தி சிறுகதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
பஞ்சாப், இலங்கை, ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சனைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் முறையே மெளனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் ஆகியவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாப் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான ’ஆகாச வீடுகள்’ இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.
வாஸந்தியின் சில நூல்கள்
- கண்ணுக்குத் தெரியாத உலகங்கள்
- சுருதி பேதங்கள்
- வீடுவரை உறவு
- யாதுமாகி
- ஒரு சங்கமத்தைத் தேடி
- நான் புத்தனில்லை
- புரியாத அர்த்தங்கள்
- மீண்டும் நாளை வரும்
- அம்மணி
- கடைப்பொம்மைகள்
- நிஜங்கள் நிழலாகும்போது
- தீக்குள் விரலை வைத்தால்
- மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள்
- பாலும் பாவையும்
- ஜனனம் (நாவல்)
- பொய்முகம் (நாவல்)
- வேர் பிடிக்கும் மண் (சிறுகதைகள்)
- புதிய வானம்