இலங்கையின் வடக்கேயுள்ள சப்த தீவுகளில் ஒன்றான அழகுமிகு ‘அனலைதீவு’ எனது பூர்வீகம்.
நான்காம் வகுப்புவரை அனலை தெற்கில் அமைந்துள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும், பின்னர், இருவருடங்கள் குருநாகல் ஹிஸ்புல்லா மகா வித்தியாலத்திலும், பின், யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் பாடசாலையிலுமாக பள்ளிப்படிப்பை பூர்த்தி செய்துள்ளேன்.
யாழ் பல்கலையில் வணிகத்துறையில் பட்டபடிப்பைப் பூர்த்தி செய்துவிட்டு , இலங்கை காணி நிர்ணய திணைக்களத்தில் (LSD) நான்கு வருடங்கள் மேலதிக பதிவாளராகக் கடைமையாற்றியுள்ளேன்.
திருமணத்தின் பின், கடந்த பதினைந்து வருடங்களாக நெதர்லாந்தில் வசித்துவருகிறேன்.
சிறுவயதிலிருந்தே வாசிப்புப் பிரியை!
அதிகமாக, சரித்திர நாவல்கள் , குடும்ப நாவல்களை விரும்பி வாசிப்பேன். அப்போதெல்லாம் எழுதவேண்டும் என்றெல்லாம் சிறிதும் எண்ணியிருக்கவில்லை. எழுத்துலகில் என் அறிமுகம் மிகமிகத் தற்செயலானது! சுவாரசியமானது !
எனக்குள் எனக்கே தெரியாதிருந்த ஒரு அடையாளத்தை கண்டுகொண்ட மகிழ்வான தருணமது! இணையத்தில், நான் வாசித்து ரசித்த நாவல்களுக்கான கதை ரிவ்யூகளில் ஆரம்பித்து, இணைய நட்புகள் தந்த ஊக்கத்தால், சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என, கடந்த 2014 இருந்து எழுதி வருகிறேன்.
எழுத்தெனும் ஆழ்கடலில் மிகவும் விருப்பத்தோடு நீந்தப்பழகிக் கொண்டிருக்கிறேன் என்றே சொல்லலாம். என்றாவது திறம்பட நீந்துவேனா என்பதை விடுத்து , அன்றாடப் பயிற்சியை நேர்த்தியாகச் செய்யவேண்டும் என்ற எண்ணமொன்றே என்னுள்!
இதுவரை புத்தகமாக வெளிவந்துள்ள எனது நாவல்கள் இந்தியாவில் பிரபல புத்தகக் கடைகளில் கிடைக்கும். அதோடு, இணையத்தில் மெரீனா புக்ஸ் .காம் இல் பெற்றுக்கொள்ளலாம்.
எனது புத்தகங்களை அமேசான் கிண்டில் எடிஷன் மற்றும் லென்டிங் லைபிறரியிலும் பெற்றுக்கொள்ளலாம் .
எனது நாவல்கள், சிறுகதைகளை எனது தளத்திலும் வாசிக்கலாம்.
எனது சிறுகதைகளையும், என் பற்றிய அறிமுகத்தையும் தங்கள் தளத்தில் வெளியிட்டிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி !
மிக்க நன்றி சிறுகதைகள் .காம்