நான் இயற்பியல் முதுகலை பட்டதாரி . பள்ளி கல்லூரி காலங்களிலிருந்தே தீவிர இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு. எழுத்து, மேடைப்பேச்சு , நாடகம் என பன்முக ஆர்வங்களுக்கு மேடை கிடைத்த உற்சாக வருடங்கள் அவை.பின்னர் சில வருடங்கள் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி. பிறகு திருமணம் , குழந்தைகள் ,முழு நேர குடும்பத் தலைவியாக பல வருடங்கள் போனதில் எழுத்து எனக்குள் உறங்கிக் கிடந்தது, ஆனால் இலக்கிய வாசிப்பு மட்டும் எப்போதும் போல் தொடர்ந்தது.
நீண்ட என் வாழ்க்கைப்பயணத்தில் நான் சந்தித்த மனிதர்களும்,அடைந்த அனுபவங்களும்,அவை எனக்குள் உண்டாக்கிய உணர்வுகளும்,எதிர் வினைகளும், இப்போது கூட எழுதா விட்டால் என்னை நானே மன்னிக்க மாட்டேன் என்று தோன்றியது.
இந்த தளம் கொடுத்த ஊக்கமும் ,வாய்ப்பும் எனக்கு மீண்டும் புத்துயிர் கிடைத்தது போல ஆயிற்று. நன்றிகள் பல.
பெயர்: மாலதி சிவராமகிருஷ்ணன்
இருப்பிடம்: பெங்களூர்
ஈமெயில்: mala.srk@gmail.com