கடலூர் மாவட்டம், கழுதூரில் பிறந்த (1966) இமையம் அவர்களின் இயற்பெயர் வெ.அண்ணாமலை. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவரும் இவர், இப்போது விருத்தாசலத்தில் வசித்து வருகிறார். தமிழின் மிக முக்கியமான நாவலாசிரியராக, சிறுகதையாசிரியராக அறியப்படும் இமையத்தின் முதல் நாவலான `கோவேறு கழுதைகள்’ (1994) உடனடியான கவனம் பெற்று, இன்றுவரை பேசப்படும் ஒன்றாக உள்ளது. `கோவேறு கழுதைகள்’ ஆங்கிலத்தில் ‘Beasts of Burden என்ற தலைப்பில் 2001ஆம் ஆண்டில் வெளியாகி இருக்கிறது. `ஆறுமுகம்’ 1999லும், `செடல்’ 2006லும் வெளிவந்துள்ள நாவல்கள். 2006 ஆம் ஆண்டு `ஆறுமுகம்’ நாவல் கதா பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இவரது சிறுகதைகள் `மண்பாரம்’ (2004), `வீடியோ மாரியம்மன்’ (2008) என இரண்டு நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசின் பண்பாட்டுத்துறை இளநிலை ஆய்வு நல்கை ஒன்றை 2002 ஆம் ஆண்டு இமையத்திற்கு வழங்கியது. அதோடு பல முக்கியமான பரிசுகளையும் பெற்றுள்ளார். மனைவி சபா.புஷ்பவல்லி, மகன்கள் கதிரவன், தமிழ்ச்செல்வன்.
தற்போது தமிழக அரசின் தமிழ்தென்றல் திரு.வி.க. விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தன் குறிப்பு
பெயர்: இமையம்
இயற்பெயர்: வெ. அண்ணாமலை
பிறந்த தேதி: 10.03.1966
கல்வித் தகுதி: எம்.ஏ., எம்.ஏ., எம்.எட்.
தொழில்: ஆசிரியர்
முகவரி: 179-A, பாவேந்தர் தெரு, பெரியார் நகர் (தெற்கு), விருத்தாசலம், கடலூர் மாவட்டம் – 606001.
தொலைபேசி எண்: 04143-239471, +91-9865417399
மின்னஞ்சல்: imayam.annamalai@gmail.com
எழுதிய நூல்கள்
புத்தகத்தின் பெயர் வெளியீடு
1.கோவேறு கழுதைகள் (நாவல்)
க்ரியா 1994
2. ஆறுமுகம் (நாவல்) க்ரியா 1999
3. செடல் (நாவல்) க்ரியா 2006
4. மண்பாரம் (சிறுகதை தொகுப்பு) க்ரியா 2002
5. வீடியோ மாரியம்மன் (சிறுகதை தொகுப்பு) க்ரியா 2008
6, கொலைச் சேவல் க்ரியா 2013
புத்தகம் கிடைக்கும் இடம்
க்ரியா
புது எண் 2
17ஆவது கிழக்கு தெரு,
காமராஜர் நகர்,
திருவான்மியூர்,
சென்னை – 600 041,
தொலைபேசி எண் – 9445040529
மின்னஞ்சல்: creapublishers@gmail.com
இணையதளம்: www.crea.in
இதுவரை மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள்
1. கோவேறு கழுதைகள் (நாவல்) Beasts of Burden என்ற பெயரில்
East West Books பதிப்பகத்தால் 2001ல் வெளியிடப்பட்டது.
2. ஆறுமுகம் (நாவல்) Arumugam என்ற பெயரில் கதா பதிப்பகத்தால் 2006ல் வெளியிடப்பட்டது.
3. கோவேறு கழுதைகள் (நாவல்) 2009ல் Basha Bharathi பதிப்பகத்தால் கன்னடத்தில் வெளியிடப்பட்டது.