ஆரூர் பாஸ்கர்

 

AarurBhaskarமுழுப் பெயர் பாஸ்கரன்.  தமிழ் மீது தீராதஆர்வம் கொண்ட இவர் தனது சொந்த ஊரான ஆரூரைத் (திருவாரூர்) தனது பெயருடன் சேர்த்து ஆரூர் பாஸ்கர் எனும் புனைப் பெயரில் எழுதிவருகிறார்.

திருவாரூரில் பள்ளிப்படிப்பைத் தொடங்கிய இவர் படித்தது இயற்பியலும், கணினித் தொழில்நுட்பமும்.  கடந்த பல ஆண்டுகளாக மலேசியா, ஜெர்மனி, சுவிடன் போன்ற கிழக்கு ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் பணி புரிந்த ஆரூர் பாஸ்கர் தற்போது அமெரிக்காவின் ஃப்ளாரிடா மாகாணத்தில் வசிக்கிறார். தற்போது மென்பொருள் துறையில் Sr.Software Architect பணிபுரிகிறார்.

“சிறகுகள் கல்வி அறக்கட்டளை” எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் இவர் கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர்.

 

இவருடைய நூல்கள்:

  • என் ஜன்னல் வழிப்பார்வையில் (கவிதை)
  • பங்களா கொட்டா
  • வனநாயகன்-மலேசியநாட்கள்
  • இர்மா- அந்த ஆறு நாட்கள் (புதினங்கள்)

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் இவர் அயல்நாட்டில் வசிக்கும் அடுத்தத் தலைமுறைக்கு தமிழைக் கடத்துவதிலும் மிகுந்த நாட்டம் உடையவர். அதை உறுதிசெய்யும் விதத்தில் வார இறுதியில் தனது மனைவியுடன் இணைந்து வீட்டில்  தமிழ் வகுப்பு நடத்திவருகிறார்.

உலகத்தமிழர்களின் வலைப்பதிவுகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் தமிழ்ச்சரம் (tamilcharam.com) எனும் வலைதிரட்டியையும் நிறுவி நண்பர்களுடன் இணைந்து நடத்துகிறார்.

தொடர்புகளுக்கு:

இணையதளம்:https://aarurbass.blogspot.com/

முகநூல் :https://www.facebook.com/aarurbass

மின்னஞ்சல் : aarurbass  எனும் gmail முகவரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *