தங்கக் கடத்தல் ஆசாமிகள் இருப்பதாக வந்த தகவலை அடுத்து பரம் தலைமையில் சென்ட்ரல் இரயில்வே ஸ்டேஷனில் பத்து பேர் கொண்ட போலீஸ் படை மஃப்டியில் ரகசியமாக ஆய்வில் இருந்தது.
இரண்டாம் வகுப்பு பெட்டியிலிருந்து வந்த ஒருவனைப் பிடித்தார் பரம். ஒரு கிலோ அசல் தங்கம். தங்கக் குருவி ஒன்றும் வாய் திறக்க வில்லை. ‘குருவி சிக்கியது. ஆப்பரேசன் ஓவர்’ என்று சகாக்களுக்கு உத்திரவிட்டு டீ குடிக்க ஸ்டாலுக்கு விரைந்தார்.
அதே சமயம், 2-ம் AC பெட்டியிலிருந்து ரவீஷ் மெதுவாக வெளியே வந்தான். மிகப்பெரிய ஆபத்திலிருந்து தப்பித்த பெருமிதம் முகத்தில் தென்பட்டது.’ நல்ல காரியம் செய்தோம். நம்மிடம் 9 கிலோ இருக்கு. சின்ன மீனை உட்டு பெரிய மீனைக் காப்பாத்திட்டேன். பாஸ் நமக்கு எக்ஸ்ட்ரா வெகுமதி கொடுப்பார்’. நினைத்தாவாரே சிங்கிள் டீ க்கு ஆர்டர் கொடுத்தான். கப்பென்று தோளில் ஒரு கை விழுந்தது. ‘அவ்வளவு லேசாத் தப்ப முடியாது’ பரமனின் கை அவனை இறுக்கி தள்ளிக் கொண்டு போனது.
மாலையில் ஒரு ரெஸ்டாரண்டில் பரமனின் நண்பர் சியாம் கேட்டான். ‘எப்படி, நீ இன்னொரு குருவி இருப்பதை மோப்பம் பிடிச்ச?’
‘சின்ன குருவி வேர்வை புழுதி இல்லாம இருந்தான். ஷர்ட்-ம் கூலா இருந்தது. இவன் AC பெட்டி வாசம் தான். சரி, இவனின் இன்னொரு பெரிய கூட்டாளி குருவி இருக்கணும். AC பெட்டியிலுருந்து கண்டிப்பா வர வேண்டும் என்று அனுமானித்தேன். கரெக்ட்டா இவன் மாட்டினான். பட் , இவங்க பாஸ் மாட்டறது எல்லாம் ரொம்ப அபூர்வம். வாய திறக்க மாட்டானுங்க’.