கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 11, 2024
பார்வையிட்டோர்: 6,641 
 
 

‘காம்பினேஷங்’கற ஒரு வார்த்தை இருக்கே… அது மிக உன்னதமானது. அதுதான் உலகை இயக்குகிறது., இந்தப் பாடு படுத்துகிறது.எதுக்கு எது?! என்னென்ன காம்பினேஷன்னு கண்டு பிடிச்சா பாருங்க, அவங்களுக்கு மோதிரம்தான் பண்ணிப்போடணும்.

புளிய மரத்தடியில படுக்காதே..! வேப்பங்காத்து ரொம்ப நல்லது. புளிக் கொழம்புக்கு இந்தப் பொரியல்.. மோர்க்குழம்புக்கு இந்தக் காய், நல்லாத் தூக்கம் வர, ‘ஒடம்பக் கடம்புல போடுன்னு’ படுக்கற கட்டில்கூட கடம்ப மரத்துல ஆனதா இருக்கணும்னு, சாப்பாட்டிலிருந்து சாய்ந்து படுக்கிற இடம் வரைக்கும் எல்லாத்துக்கும் ஒரு காம்பினேஷனைக் கண்டுபிடிச்சிருக்காங்க.

என்ன கண்டுபிடிச்சு என்ன?! நம்பள்ல சிலபேருக்கு காம்பினேஷனைக் கவிழ்க்கறதுல பெரிய சகுனி சாமர்த்தியம்.

காலைல ‘ரெஸ்ட் ரூம்’ போனாக்கூட ஒரு காலத்துல பேப்பரோட, சிலர்!., ‘பெட் காப்பி’க்கு அப்புறம் சிலர்!, அந்தக் காம்பினேஷனைக் கவிழ்த்து, இப்பல்லாம் சிலர் வாட்ஸாப் மெசேஞ்ச் அனுப்பீட்டேதான் ‘வாஷ்ரூம்’ வேலையையும் வெற்றிகரமா முடிக்கறா?ரெண்டும் ஒண்ணாத்தான் டிஸ்போஸ் ஆகணும்போல!! அது இப்போ சகுனி சாமர்த்தியம்.

அப்படிப் பண்ணக் கூடாதுன்னா.. அது நடக்க மாட்டேங்குது. அது நடந்தாத்தான் அடுத்தடுத்து நடக்கறது! பழகீட்டோம்ல..!? அன்றைக்கு பொதுவாக கல்யாணப்பந்தில வெண்பொங்கல் ஒண்ணு தவிர்க்கமுடியாத ஐயிட்டமா இருக்கும்!. அது, உணவு வடிவில் ஒரு உறக்க மாத்திரை. அப்பல்லாம் அதை சாப்பிட்ட மாப்பிள்ளை பொண்ணு ரெண்டு பேருமே சாந்திமுகூர்த்தத்துக்கு சயனிக்கும்முன்பே,,… சாய்ஞ்சிடுவா? சோம்பேறி வாரீசாப் பொறந்தது. இப்பத்து ஜெனரேஷன் இண்டலிஜெண்டா இருக்கே என்ன காரணம்? பொங்கல் காம்பினேஷனை போஜனத்துல தவிர்த்துதான் காரணமா இருக்குமோ? இது சகுனி ஞானமில்லே… ! இந்த சமயத்துல தோன்றின ஞானம்!

Print Friendly, PDF & Email

2 thoughts on “காம்பினேஷன்!

  1. வணக்கம்.
    கடற்கரையில் கால் நனைத்த ஒற்றைச் சுகத்தோடிருந்த என்னைக் கரம்பிடித்து கரை தாண்டி நடக்க வைத்து கடலலையின் அழகையும் ஆழ்கடல் அற்புதங்களையும் தோழமையோடு தோள் கொடுத்து காட்டி சிறுகதைகள் சமுத்திரத்தில் அங்கமாக்கிய சிறுகதை டாட்காமின் ஊக்குவித்தலை உளம் மகிழந்து நேசிக்கிறேன். இந்த நேயம் என்போன்றோரை இன்னும் நிறைய எழுதத்தூண்டும் என்பது உண்மை.
    வளர்கவி கோவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *