விநோதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: August 4, 2016
பார்வையிட்டோர்: 10,512 
 

லஷ்மி அமெரிக்காவில் கலிபோனியாவில் உள்ள பல்கலைக் கழகம் ஒன்றின் பௌதிக வியல் துறையின் விண்வெளி ஆராய்ச்சிப் பகுதியில், கணனித்துறையில் , கொம்பியூட்டர் புரொகிராமராக வேலை செய்து கொண்டிருந்தாள். லஷ்மியின் பெற்றோர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழமையில் ஊறிய ஐயர் சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குடும்பத்தில் அவள் தனிக் குழந்தை.. எவனோ ஒரு சாஸ்திரி லஷ்மி; பிறந்தவுடன் அவளின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இவள் திருமணத்துக்குப் பி;ன் பெரும் பணக்காரி ஆவாள் எனக் கணித்துச் சொன்னாhன் என்பதற்காக லஷ்மி என்ற பெயரை அவளுக்கு வைத்தார்கள். அவள் பிறந்த காலமோ என்னவோ, லஷ்மியின் தகப்பனார் வக்கீல் சதாசிவம் ஐயர் என்றுமில்லாத வாறு பல கேஸ்களில் ஜெயிககத் தொடங்கினார். பிரபல கிரிமினல் லோயர் என்ற பெயரைப் பெற்றார். பணமும் புகழும் அவரைத்தேடி வந்தது.

தமிழ் நாட்டில் பெரிய வசதியுள்ள குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள் அமெரிக்கா போய் படிப்பது போல் தனது மகளும் அங்குசென்று படித்து கணனித் துறையில் டாக்டர் பட்டம் பெறவேண்டும்; என ஐயர் ஆசைப்படார். அதற்கு வசதியும் அவரிடம் இருந்தது. அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்கு போகமுன் இந்தியாவில் பல வருடங்கள் படிக்கும் போது அக்கிரகாரச் சூழ்நிலையில் வாழ்ந்தாலும் அவளுக்கு சாஸ்திரம், சம்பிரதாயம், இந்து மதக் கிரிகைகள் எதிலும் நம்பிக்கையில்லை. அவள் வேலை செய்த அதே பொளதிகத் துறையில் வான்இயற்பியலரான ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள்.

ஜெயனின் பெற்றோர்கள் லஷ்மியின் பெற்றோர்களைப் போல் பழமையில் ஊறியவர்கள். தீவிரப் போக்குள்ள கத்தோலிக்கர்கள். தவறாது சர்ச்சுக்குப் போய் வருபவர்கள். ஆனால் ஜெயன் ஒரு முற்போக்கு வாதி. அவனுக்கு எம்மதமும் சம்மதமே. ஞாயிற்றுக் கிழமையில் அவன் தேவாலயத்துக்குப் போவது கிடையாது. பாதிரியார் தன்னை வந்து சந்திக்கும் படி பல தடவை செய்தி அனுப்பியும் அவன் அதை கணக்கில் எடுத்ததில்லை. அவனுக்கு விண்வெளி ஆராய்ச்சி தான் முக்கியம். ஜெயனின் சிந்தனைகள் முழுவுதும் வெளி உலகம்பற்றித் தான். “அஸ்டிரோ பிசிக்ஸ்” எனப்படும் வானஇயற்பியலில் கலாநிதி பட்டம் பெற்று, வானில் வேறு உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதைக் கண்டு பிடித்து, அவர்கள் மொழியைக் கற்று, அவர்களுடன் தொடர்பு கொள்வது தான் அவனது முழு கவனமும். அவர்கள் பூமியில் வாழ்பவர்களை விட எவ்விதத்தில் முன்னேறியவர்கள், அவர்களின் மொழி, கலாச்சாரம், வாழ்க்கை எப்படியானது என்பதை அறியும் வினோதமான ஆராய்ச்சியில் தான் அவன் ஈடுபட்டிருந்தான். பலருக்கு அவன் செய்வது பைத்தியக்காரத் தனமாகப்பட்டது. அவனின் புதுமையான ஆராய்ச்சிக்கு கணனித்துறையில் பட்டம் பெற்ற லஷ்மி பேருதவியாக இருந்தாள். பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி சாலையிலிருந்து விலை உயர்ந்த உபகரணஙகளைப் பாவித்து, விண் வெளியிலிருந்து சேகரித்த ஏராளமான மின் சமிக்ஜைகளைப் பகுத்தாய்ந்து அதனை மொழி பெயர்க்கும் ஒரு அல்லொகரிதம் எனப்படும் கணிவியல் செய்முறைப்பாட்டைக் கண்டுபிடிப்பதில் அவள் தன் முழு திறமையையும் சக்தியையும் பாவித்தாள். அந்த சமிக்ஜைகளின் இரகிசியத்தை உடைத்துவிட்டால் அதுவே உலகில் யாராலும் சாதிக்க முடியாத ஒரு வெற்றி!

ஜெயனும் லஷ்மியும் பல்கலைக்கழக படிப்பின் போது சந்தித்து, வெகு விரைவில் “ஜெயலஷ்மி” எனப் பலரால் கிண்டலாக அழைக்கும் அளவுக்கு ஒன்றிணைந்தனர். இருவரும் விஞ்ஞானத்திற்கு அடிமையாகி ஆராச்சியே கதியெனக் கிடந்தனர். கியூரி தம்பதிகள் போல் ஜெயலஷ்மி தம்பதிகளும் தங்களின் விஞ்ஞான கண்டுபிடிப்;பால் சரித்திரம் படைத்து விடுவார்களோ என மாணவர்கள் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு இரு விஞ்ஞானிகளினதும் வாழ்க்கை அமைந்திருந்தது.

பெற்றோர்களின் சம்மதமின்றி இருவரும் ரெஜிஸ்டர் திருமணம் தீடிரென செய்து கொண்டனர். அவர்களுக்குத் தெரியும் தம் பெற்றோரின் தீவிர மதப் போக்கு தங்களை ஒன்று சேர விடாதென்று. அதனால் அவர்கள் பெற்றோர்களின் வெறுப்புக்கு ஆளாகி தனிக் குடித்தனம் போக காரணமாயிருந்தது. அதை அவர்கள் இருவரும் விரும்பினார்கள். இரண்டு அறைகள் உள்ள அப்பார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து அவர்கள் ஒரு அறையை படுக்கை அறையாகவும் மற்றதை தங்களது ஆராய்ச்சிக் கூடமும் நூலகமாகவும் பாவித்தனர். அவர்கள் இருவரினதும் உழைப்பின் பெரும் பகுதி விஞ்ஞான நூல்களுக்கும் உபகரணங்களுக்குமே செலவு செய்யப்பட்டது. உணவின்மீதும் நல்ல ஆடைகள் மேலும் அவர்கள் அவ்வளவுக்கு அக்கறை காட்டவில்லை. ஜெயன் தலைமயிரையும் ஹிப்பியைப் போல் வளர்த்து. தாடியும் வைத்திருந்தான். சவரம் செய்வதற்கோ அல்லது முடி வெட்டுவதில் செலவு செய்யும் நேரத்தை தனது ஆராச்சியில் செலவு செய்யலாம் என்பது தான் அவன் கொள்கை. அவனைப் போன்று லஷ்மிக்கு மற்றைய பெண்களைப் போல் அலங்காரம் செய்வதிலும், உடைகளிலும், நகைகளிலும் அதிக ஆசையிருக்கவில்லை.

விண்வெளியில் இருந்து கிடைக்கும் தகவல்களை ஆராயும் புரொகிராம் ஒன்றை எழுதுவதற்கு கொம்பியூட்டர் முன் இருந்துவிட்டால் அவளுக்கு நேரம் போவது தெரியாது. கொம்பியூட்டருடன் தன்னையறியாமலே அடிக்கடி பேசிக் கொள்வாள். ஜெயனும் அவளும் கோப்பியைக் குடித்தவாறே சாப்பிடாமல் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தியவாறு எவ்வளவு நேரமும் இருக்கக் கூடியவர்கள். ஆராச்சி நடக்கும் அறைக்குள் போனால் சுவரில் உள்ள வெள்ளை நிறப்பலகையில் எவருக்கும் விளங்காத கணிதச் சமன்பாடுகளையும் அல்பா, பீட்டா, காமா, தீட்டா போன்ற கிரேக்க எழுத்துக்களையும் தான் காணலாம். அதன் அர்த்தங்களும் அதற்கு பி;ன்னால் புதைந்துள்ள இரகசியங்களும் அவர்களுக்கு மட்டுமே புரியும். அவர்களின் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பேப்பர்கள் கிறுக்கல்களுடன் நிலத்தில் பரவிக் கிடக்கும்.

திருமணமாகி ஆறு மாதத்துக்குள் லஷ்மி கருவுற்றது அவர்கள் எதிர்பாராத ஒன்றென்றே சொல்லலாம். “ஆராய்ச்சியில் இருந்து உங்கள் இருவருக்கும் அவசியம் ஓய்வு தேவை” எனப் பௌதிக பேராசிரியர் டேவிட்டின் அன்புக்கட்டளையின் பேரில் ஒரு கிழமை தேனிலவுக்கு போய் வந்ததின் விளைவே அது. பேராசிரியர் டேவிட் இருவருக்கும் தந்தையைப் போன்றவர். அவர்கள் மேல அளவற்ற அன்பு வைத்திருந்தார். திருமணமாகி மனைவியை இழந்த அவருக்கு பிள்ளைகள் இல்லாத குறையை ஜெயனும், லக்ஷ்மியும் தீர்த்து வைத்தார்கள். ஜெயலக்ஷ்மி தம்பதிகளுக்கு தங்களுக்கு குழந்தை கிடைக்கப் போவது என்பதைப்பற்றி சந்தோஷப்பட நேரம் இருக்கவில்லை. அவர்களின் பெற்றோர்களுக்கு கூட தங்களுக்கு பேரனோ பேத்தியோ கிடைக்கப் போகிறது என்ற செய்தி தெரியாது.

ஸ்கான் செய்து பார்த்தபோது தங்களுக்கு பிறக்கப்;போவது ஆண் குழந்தை என டாக்டர் சொல்லித்தான் அவர்களுக்கு தெரியவந்தது. தங்களுக்குப் பிறக்கப்; போகும் குழந்தைக்கு “விநோதன்”; என்ற பெயர் வைக்க ஜெயலஷ்மி தம்பதிகள் தீர்மானித்தார்கள். தாங்கள் செய்யும் வினோதமான ஆராய்ச்சிக்கு அந்தப் பெயர் பொருத்தமாயிருக்கும் என்று அவர்கள் நினைத்ததே அப்பெயர் அவர்கள் எண்ணத்தில் உருவாகக் காரணமாகும்.

கருவில் ஜந்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே வினோதன் தாய்க்கு அடிக்கடி தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தான். கருப்பையில் அவனது அசைவுகள் சாதாரணக் குழந்தையை விட அதிகமாக இருந்தது. லஷ்மி புரொக்கிராம் எழுதும் போது ஏதாவது தவறுகள் விட்டால் அவள் வயிற்றில் வினோதன் சிறு உதை கொடுப்பதை அவளால் பல தடவை உணர முடிந்தது. “ஏய் அம்மா. நீ பிழை விட்டுவிட்டாய். அதைத் திருத்து” என்பது போல் அவன் செயல் இருந்தது. சில சமயம் புரொக்கிராம் சரியான முறையில் பிழைகள் இன்றி அவள் எழுதும் போது அவனின் அசைவில் அமைதி இருக்கும். அவளுக்கு குழந்தையின் போக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஜெயனுக்கு அதைப் பற்றி சொன்னால் நீ மொனிட்டருக்கு முன் அதிக நேரம் இருக்கிறாய், அதில் இருந்து வரும் கதிர் வீச்சு குழந்தையை பாதிக்கிறதாக்கும் என விஞ்ஞான ரீதியாக பதில் அளிப்பான். ஓரு நாள் அவள் வழமை போல் கம்பீயூட்டரில்; புரொகிராம் ஒன்றை எழுதும் போது கொம்பியூட்டருடன் பேசிக் கொண்டிருக்கும் போது. தனக்குள் யாரோ கதைப்பது போன்ற ஒரு பிரமை அவளுக்கு ஏற்பட்டது. தான் பேசுவதை விட்டு அதை உற்றுக் கேட்டாள். அது அவளுக்கு உண்மையெனப் பட்டது. ஜெயனைக் கூப்பிட்டு தனது வயிற்றில் குழந்தை இருக்கும் பகுதியில் காதை வைத்து கேட்கும் படி சொன்னாள் அவளின் வேண்டுகோளுக்கு இணங்கி அவன் தன் காதை அவள் வயிற்றில் வைத்து கேட்ட போது அவனால் நம்பமுடியவில்லை. யாரோ முணு முணப்பது போலிருந்தது. ஆனால் அதைப் பற்றி லக்ஷ்மிக்கு சொல்லி அவளைப் பயப்படுத்த அவன் விரும்பவில்லை. “ என்ன சத்தம் கேட்கிறதா?” என்று அவள் கேட்டாள். “அதொன்றுமில்லை. எல்லாம் உன் பிரமை” என்று மழுப்பிவிட்டுப் போய்விட்டான் ஜயன்.

ழூழூழூழூழூழூ

வினோதன் பிறந்தபோது அவனின் தோற்றம் வினோதமாயிருந்தது. டாக்டர்கள் கூட ஆச்சரியப்பட்டனர். குழந்தையின் விழிகள் பெரிதாகவும், நெற்றி அகலமாகவும்., காதுகள் கூர்மையாகவும், தலையில் மயிர் குறைவாகவும் இருந்தது. கைகளும் கால்களும் குட்டையாக இருந்தன. குழந்தையின் முகத்தில் பிறந்த குழந்தைக்கேற்ற தோற்றமிருக்கவில்லை. பிறந்து சில மணி நேரம் குழந்தை அழவே இல்லை. முதிர்ச்சியான தோற்றம் தெரிந்தது. வைத்தியர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு தேக நலத்தில் ஒரு வித குறைவுமில்லை ஆனால் மூளை மாத்திரம் வெகுவாக வளாச்சியடைந்து இருப்பது ஆச்சரியத்தை தருகிறது என்றார்கள். பிறந்து இரண்டாம் நாள் குழந்தையை டாக்டர் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போது அவரின் ஸ்டெதஸ் கோப்பை தன் ஒரு கையால் பற்றியபடி அவரைப்பார்த்து குழந்தை சிரித்தது.. அவருக்கு குழந்தையின் செயலை நம்பமுடியவில்லை. அது அதிசயமாக இருந்தது. பல டாக்டர்கள் சேர்ந்து கலந்தாலோசித்து குழந்தையின் மூளையை ஸ்கான் செய்து பார்த்தனர். மூளையில் வயதிலும் பார்க்க கூடிய வளர்ச்சி இருப்பதைக்கண்டு காரணம் தெரியாது திகைத்தனர். மற்றும்படி குழந்தைக்கு ஒரு வித குறையுமில்லை. கண்பார்வையிலும் , காது கேட்பதிலும் அங்க அசைவிலும் ஒரு விதமான குறையுமிருக்கவில்லை. குழந்தை அழுவது மிகக் குறைவாகவே இருந்தது. குழந்தையில் ஏதாவது குறையிருக்கிறதோ என்று ஜெயனும் லஷ்மியும் கவலைப்பட்டனர். எல்லா டெஸ்டுகளும் செய்து ர்pப்போர்ட் வந்துவிட்டது. குழந்தையில் ஒரு வித குறையுமில்லை. இருதயத் துடிப்பும் நன்றாகவே உள்ளது ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை என வைத்தியர்கள் ஜெயனுக்கும் லக்ஷ்மிக்கும் ஆறுதல் சொன்னார்கள்.

விநோதன் ஆறு மாதத்திலேயே நடக்கத் தொடங்கியது பெயருக்கு ஏற்ப அவர்களுக்கு குழந்தையின் நடவடிக்கை வினோதமாக இருந்தது. அவன் பேசுவது அவர்களுக்கு விளங்குவது கஷ்டமாயிருந்தது. தங்களுக்கு குழந்தை எதையோ சொல்ல விரும்புகிறான் என்பதும் மட்டும் அவர்களுக்குப் புரிந்தது. வெற்றுப் பேப்பரில் ஆறுமாதக் குழந்தையாக இருக்கும் போதே அவர்களுக்குப புரியாத விதத்தில் கிறுக்கி சில உருவங்களை வரைந் திருந்தான்.. அவன் எழுதும் போது விசித்திரமாக இருந்தது. விஞ்ஞான புத்தகஙகளை அவன் iகியல கொடுத்தால் அது போதும் அவனுக்கு. அமைதியாகிவிடுலான். புக்கஙகளை ஏதோ வாசிப்பது போல புரட்டிப்பார்ப்பான். இரு கைகளையும் ஒரே நேரம் பாவித்தான். அழுவதை நிறுத்திவிட்டான்.

தங்களுக்கு ஏதோ ஒரு அபூர்வக் குழந்தைதான் பிறந்திருக்கிறது என அவர்கள் யோசித்தார்கள். லஷ்மி கொம்பியூட்டருக்கு முன் இருந்து வேலை செய்யம் போது தானும். அவள் மடியில் ஏறி இருக்க வேண்டும் என அடம் பிடிப்பான். மொனிட்டரை கண்வெட்டாமல் பார்த்தபடி இருப்பான். அடிக்கடி அதைப் பார்த்து சிரித்து, ஒரு விரலால் மொனிட்டரைக் காட்டி எதையோ தாக்குச் சொல்லுவான். ஆனால் லக்மிக்கு அவன் என்ன சொல்லுகிறான் என்பது புரிவதில்லை. ஜெயனுக்கும் குழந்தை புரியாத புதிராயிருந்தது. பேராசிரியர் டேவிட்டைக் கண்டதும்; அவன் தாவிப் போவான். அவர் விநோதன் கையில் சாக்கிலேட்டைக் கொடுத்தால் அதை அவருக்கு ஊட்டி கைதட்டிச் சிரிப்பான்.

“உங்களுக்கு கடவுள் தந்த குழந்தை வினோதன். இந்த சிறுவயதிலேயே இவன் மூளை அபாரமாக வேலை செய்கிறது. வருங்காலத்தில் ஐயின்ஸ்டைனைப் போல் பிரபல்யமான விஞ்ஞானியாக வந்தாலும் வருவான்” என்பார்.

ஆராய்சியில் கிடைத்த சமிக்ஜைகளை பகுப்பாய்ந்து, மறைந்து கிடக்கும் இரகசியத்தை அறிய லக்ஷ்மி எழுதிய புரொகிராமில் எதோ ஒரு பிழையிருந்தது. அந்தத் தவறை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. யோசித்து யோசித்து களைத்துப் போய்விட்டாள். ஜயந்தனை குழந்தையைக் கவனிக்கும் படி கூறிவிட்டு சற்று நேரம் தூங்கப் போனாள். அன்றைய இரவு உணவை ஜயந்தன் சமையல் அறையில் தயார் செய்து கொண்டிருந்தான். குழந்தை ஹாலில் விளையாடிக்கொண்டிருந்தது. சிறது நேரத்துக்குப் பின் விளையாட்டை நிறுத்திவிட்டு கொம்பியூட்டரைக்காட்டி தகப்பனுக்கு புரியாத பாஷையில் எதையோ சொல்லிற்று. சமையலில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த ஜயந்தனுக்கு குழந்தை சொன்னது கேட்கவில்லை. அவன் தொடர்ந்து சமையல் செய்து கொண்டிருந்தான். விநோதன் நடந்து சென்று கொம்பியூட்டருக்கு முன் இருந்த கதிரையில ஏறி அமர்ந்து எதுவித பதட்டமுமின்றி கொம்பியூட்டரை இயங்கவைத்தான். லஷ்மி அரை குறையாக விட்ட புரொகிராமை எடுத்து அதில் மாற்றஙகளைச் செய்யத் தொடங்கினான். அவன் “கீ போhர்டை” பாவித்தவிதம் ஏதோ முன்பு அதில் பல வருடங்கள் தேர்ச்சி பெற்றவன் மாதிரி இருந்தது.

ஜயந்தன் சமையல் முடிந்து ஹாலுக்கு வந்த போது அவன் கண்ட காட்சியைப் பாhத்து அவனுக்கு கோபம் மூக்கைப் பொத்துக் கொண்டு வந்தது.

“டேய் விநோதா. கொம்பியூட்டரிலை என்ன செய்கிறாய் ? அம்மா கஷ்டப் பட்டு எழுதிய புராகிராமோடை விளையாடுகிறாயா? என்று உரத்த குரலில் சத்தம் போட்டு குழந்தையை அடிக்க நெருங்கினாhன்.

குழந்தை மொனிட்டிரில உள்ள செய்தியைக் தன் விரலால் சுட்டிக்காட்டி கைகதைட்டி சிரித்தது. அதை பார்த்து ஜயந்தன் அசந்து போனாhன்.

“ லஷ்மி லஷ்மி. இங்கை கெதியிலை ஓடி வா. இங்கை வந்து உன் கொம்பியூட்டரைப் பார். உன் புரொகிராம் சரியாக வேலை செய்கிறது. நாங்கள் வின்வெளி இரகசியத்தை கண்டுபிடித்துவிட்டோம் “ என்று சந்தோஷத்தில் சத்தம் போட்டான்.

ஜயந்தனின் குரல் கேட்டு லஷ்மி படுக்கையறையிலிருந்து பதறிக் அடித்துக் கொண்டு ஹாலுக்குள் வந்தாள். விநோதன் தன் பாஷையில் தாயுக்கு தான் செய்ததை காட்டி கைதட்டி சிரித்தான். எதோ அவன் தனது பாஷையில் சொன்னது அவர்களுக்கு புரியவில்லை.

லஷ்மியின் கண்கலால் மொனிட்டரில் உள்ள செய்தியை நம்ப முடியவில்லை. பல மாத காலமாக சரியான விடையைத் தர முடியாது தவித்த தனது புரோகிராம் இப்போது சமிக்கைளை பகுப்பாய்ந்து வின்வெளியில் இருந்து வந்த செய்தியை எம்மொழியில் மொழிபெயர்த்து தந்துவிட்டது. என்னால் செய்யமுடியாததை இந்த குழநதை செய்து விட்டதே என்று ஆச்சரியப்பட்டாள்.”

“ உங்கள் ஆராச்சிக்கு உதவ ஒருவனை உலகுக்கு அனுப்பியுள்ளோம்;. கொஞ்சம் பொறுங்கள். இன்னும் சில மாதங்களில் அவன் உதவியுடன் எம்முடன் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்” என்றது செய்தி.

அப்போ விநோதன் அவர்கள் அனுப்பிய உதவியாளனா?. அதனால் தானா இவன் ஒரு விசித்திரமான குழந்தையாக இயங்குகிறான?. ஜெயந்தனும் லஷ்மியும் ஒரே விதமாக சிந்தித்தனர்.

இருவரும் வினோதனை அப்படியே தூக்கி வாரி அணைத்து முத்தமிட்டார்கள். விநோதனின் வினோதமான புன்சிரிப்பில் அவாகள் கட்டுண்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *