குரங்கு எழுதிய ஒரு சிறுகதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: November 29, 2023
பார்வையிட்டோர்: 5,329 
 
 

சமீபத்தில் நான் ஒரு தியரியை கேள்விப்பட்டேன். ஒரு குரங்கு தன் மனம் போன போக்கில் நீண்ட காலமாக ஒரு கம்ப்யூட்டர் கீ போர்டில் தட்டிக் கொண்டேயிருந்தால், என்றாவது ஒரு நாள் அது ஷேக்ஸ்பியரின் படைப்புகளை உருவாக்கி விடும் என்பதே அந்த தியரி.

அந்த தியரியை நான் பரிசோதித்துப் பார்க்க விரும்பினேன். என்னிடம் அதிக காலம் இல்லை. அதனால் பரிசோதனையின் இலக்கைக் குறைத்தேன். ஒரு அர்த்தமுள்ள நூற்றம்பது வார்த்தைக்குள் அடங்கும் சிறுகதையை ஒரு குரங்கால் உருவாக்க முடியுமா?

ஐந்து மாதக் குட்டி குரங்கு ஒன்றை வாங்கி அதற்கு கம்ப்யூட்டரில் பயிற்சி அளித்தேன். வெகு சீக்கிரமே அது கீ போர்டில் தட்டப் பழகி கொண்டது. சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் தவிர, அது விடாமல் தன் இஷ்டத்திற்கு கண்டபடி கீ போர்டில் தட்டிக் கொண்டேயிருந்தது.

பல வருடங்கள் கழித்து, அந்தக் குரங்கு முதுமையில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனது. அதன் பின் அது தட்டிக் கொண்டிருந்த கம்ப்யூட்டரில் ஏதாவது ஒரு சிறுகதை இருக்குமா என்று நான் தேடிப் பார்த்தேன்.

அந்தக் சிறுகதையை தான் இப்போது நீங்கள் படித்து முடித்தீர்கள்.


பின் குறிப்பு: இந்தக் கதையை எழுத தூண்டுகோலாக இருந்த தியரியை பற்றி நீங்கள் இங்கே படிக்கலாம்:

https://www.npr.org/sections/13.7/2013/12/10/249726951/the-infinite-monkey-theorem-comes-to-life?source=post_page—–4538f6094d3b——————————–

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *