கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: January 16, 2024
பார்வையிட்டோர்: 11,657 
 

மறுபடி எனது போர்டிங் பாஸை பார்த்தேன். புறப்பட இன்னும் பதினைந்து நிமிடங்கள்.

நான் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மனைவியிடம் திரும்பி கண்ணீர் மல்கக் கேட்டேன், “ரம்யா, நீ என்னுடன் திரும்பி வர போவதில்லையா?”

அவள் என் கையைப் பிடித்து, “டியர், நான் இந்த இடத்தையும் இங்குள்ள மக்களையும் நேசிக்கிறேன். இங்கிருக்கும் சிக்கலற்ற, எளிமையான வாழ்க்கையை விரும்புகிறேன். இனி மேல் இங்குதான் என் வாழ்க்கை.” என்றாள்.

நான் அவள் கையை அழுத்தி பெருமூச்சு விட்டேன். கால யந்திரத்தில் 1955-ம் ஆண்டுக்கு சென்று ஒரு மாதம் சந்தோஷமாக இருந்த எங்கள் காலப்பயண விடுமுறை இப்படி ஒரு சோகத்தில் முடிவடையும் என்று நான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.

கேட்டில் நின்று கொண்டிருந்த ஏஜென்ட் கரகரத்த குரலில் அறிவித்தார்:

“இது 2445 ஆம் ஆண்டுக்கு பயணிக்கும் பயணிகளுக்கான கடைசி அழைப்பு.”

கடைசியாக ஒரு முறை என் மனைவியை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *