கதையாசிரியர் தொகுப்பு: ம.காமுத்துரை

15 கதைகள் கிடைத்துள்ளன.

கருப்புக் காப்பி

 

  கண்களில் தூசு பறக்க கடை வாசலில் வந்து நின்றாள் போதுமணி. டீ பட்டறையில் நின்றிருந்த காவேரி, பாய்லருக்குத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் விறகுக் கரியை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தாள். அடித்தட்டில் விழுந்த கரித்துண்டுகளை கிளைத்து விட, உடம்பில் படிந்துள்ள நீர்த்துளிகளை உதறுகிற நாய்க்குட்டி போல, தட்டிலிருந்த நெருப்புத் துண்டுகள் தன்மீதிருந்த சாம்பலை உதிர்த்து செந்நிறம் காட்டி மிளிர்ந்தன. பாய்லரின் வெளிப்புறத்தில் கை வைத்துப் பார்த்தாள். சூடு, மிதமாய் இருந்தது. பட்டறையில் எவர்சில்வர் பேசினில் இருந்த நீரில்


கொள் எனும் சொல்ல்லும்மா

 

  – ஏ கிறுக்கு. அப்பாதாம்மா பேசறேன் . – வீட்டுக்குள்ளயா இருக்க? வாசலுக்கு வந்து பேசு. – எனக்கு நல்லா கேக்குது. – ம்… நல்லாருக்கே நல்லாருக்கேம்மா… பேரப்புள்ளீக சொகந்தான? – ம். இருக்கா. அவளுக்கென்ன? – நா வெளீல இருக்கேம்மா…. அம்மா வீட்லதே இருப்பா. – ஆமா… சலூன் கடைல பேப்பர் பாக்க வந்துருக்கேன். – ஆமாமா, வேல நாலுமணிக்கு முடிஞ்சிருதுல்ல. வீட்டுக்குப் போய்ட்டு வந்துட்டேன். சரி, நீங்கல்லாம் நல்லாருக்கீங்கள்ல? – மருமகெ? சரி


அந்தராத்மாவின் ஆட்டம்

 

  “டக்கரடக்கரடக்கர” அந்தரத்தில் அந்தக் குழந்தை கயிற்றில் மிதந்தபடி வித்தையாடிக் கொண்டிருக்க கீழே குழந்தையின் தாயார் – அப்படித்தான் இருக்க வேண்டும் – ஒடிசலான உடல் அமைப்போடு சர்க்கஸ் பெண்ணின் உடையுடன். பம்பைக் கொட்டு ஒன்றை கழுத்தில் தொங்கவிட்டு தாளம் தப்பாமல் அடித்துக் கொண்டிருந்தாள். “இப்படி ஒரு காலை நேரத்தில், நட்டநடு வீதியில் அதுவும் பஸ் ஸ்டாண்டில் இந்த கூத்தை நடத்தவிடலாமா? பச்சை மண்ணை அந்தரத்தில் ஆடவிட்டு எப்படி ரசிக்க முடிகிறது?’ தலையை குலுக்கிக் குலுக்கி பதிவான


பெண் பார்த்தல்

 

  “”பொண்ணு கெடைக்கறதே அருந்தலா இருக்கு. இதுல நாம நெனக்கிற மாதிரியெல்லா முடியாது முருகா” என்ற வீரம்மாள், “”நீ கொம்பு ஓவ்வார்த்த சுத்தமில்ல. தண்ணியடிச்சிருக்கியா?” என்று ஒரே மூச்சில் பேசினாள். வீரம்மாளின் வீட்டின் வெளித்திண்ணையில் குத்துக்காலிட்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த முருகன், “”கஞ்சி குடிக்கவே காசக்காணம். காலையிலருந்து சும்மா கெடக்கேன். நீ வேற சும்மாருக்கவன ஆவுகப்படுத்தி விடாத” என்றான். “”அந்த மாதிரிதான புரியாம பேசிட்ருக்க. சொன்னா, ஒரு வார்த்தைல அடங்க மாட்டேங்கிறியே” “”ம் ஒடனே என்னையச் சொல்லு.


கடை

 

  பையன் கடையைத் திறந்து வைத்திருந்தான். வாசலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சேரை எடுத்துப்போட்டு, அன்றைய தினசரியை விரித்துப் படிக்கத் தொடங்கினார் கடைக்காரர். செய்திகள், மனதில் பதியவில்லை; வட்டெழுத்துக்கள் போலவும் பிராமி எழுத்துக்கள் போலவும் கண்களில் பூச்சி காட்டின. பையன் சாமி படத்துக்குப் பத்தி பொருத்துவதற்காக வத்திப்பெட்டியுடன் தயாரானான். கடைக்காரர் எப்போது கடைக்கு வந்தாலும் பத்தி பொருத்தி, சாமி படத்துக்குக் காட்டிவிட்டுத்தான் உட்காருவார். இன்று ஏனோ மனநிலை கெட்டிருந்தது. நான்கு நாட்களில் தீபாவளி. கடைக்கு வரும் சமையல்காரர் களுக்கு