கதையாசிரியர் தொகுப்பு: பவள சங்கரி

19 கதைகள் கிடைத்துள்ளன.

மாறியது நெஞ்சம்

 

  கண்ணபிரான் குரூப் ஆஃப் கம்பெனிகள். ஊரைச்சுற்றி பல கிளைகள் இவர்களுக்கு. பலவிதமான தயாரிப்புகள்.. ஊசி முதல் கார் ஸ்பேர் பார்ட்ஸ் வரை அத்துனை சிறிய இரும்புப் பொருட்களும் தயார் செய்கிறார்கள். அம்பத்தூர் கிளையில் கட்டடங்கள் விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட நவீன தொழில் முறையில் இராட்சச இயந்திரங்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இறங்கியிருந்தன. இன்று புதிதாக கட்டப்படும் ஷெட்டிற்கு மேலே சிமெண்ட்டு அட்டை போடுவதற்காக இரும்பு கம்பி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. 30 அடியில் நெடிதுயர்ந்த கட்டிடம். நெருப்பில்


சீறுவோர்ச் சீறு

 

  நகரத்தின் மையப்பகுதியில் பரபரப்பான ஒரு சாலை. போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. இடப்புறம் பெரிய காம்பவுண்ட் போட்ட கட்டிடம். அதற்குள்ளே நுழைந்தவுடன் இரு புறமும் அடர்ந்த மரங்கள், செடி கொடிகள்.. மேற்கொண்டு உள்ளே செல்லச் செல்ல பாதை நீண்டு, கட்டிடங்கள் ஒவ்வொன்றாக வரும்.. அக்கட்டிடத்தின் பின் கோடியில் ஒரு பழைய கட்டிடம். வர்ணமெல்லாம் வெளுத்துப் போய், சுவர்கள் பெயர்ந்து தனியாக ஒதுங்கியிருந்தது.. அந்த மொத்தக் கட்டிடமே ஒரு தனித்தீவு போல இருந்தாலும், இந்த பாழடைந்த அறை


ஆசை அறுமின்!

 

  சாம்பிராணிப் புகையின் மணம், மேக மூட்டமாய் வீடு முழுவதும் நிறைத்திருக்க, வெங்கடேசுவர சுப்ரபாதம் இதமாய் ஒலிக்க, விடியலில் எழுந்து குளித்து, மஞ்சள் பூசி, குங்குமமிட்ட மங்கலகரமான முகத்துடன், நுனியில் முடிந்த கூந்தலில் கொஞ்சமாக முல்லைப் பூவும் சூடி, விளக்கேற்றி, பூஜை முடித்து, மணக்க, மணக்க பில்டர் காபியுடன் மகனை எழுப்ப வந்தாள் மங்களம். கணவர் பூஜை அறையில் இருக்கிறார். பூஜை முடிய எப்படியும் இன்னும் 20 நிமிடமாவது ஆகும். மகன் குளிக்காமல் காபி சாப்பிடுவதற்கு திட்டி


காசி

 

  மூன்றாவது நாளாக இன்றும் அதே மரத்தடியில் சுருண்டு படுத்துக் கொண்டிருக்கும் மனிதரைப் பார்த்து விட்டு கண்டும் காணாமல் செல்ல முடியவில்லை குயிலிக்கு. யாராக இருக்கும் இந்த மனிதர்… பார்க்க பெரிய இடத்துப் பிள்ளை போல இருக்குதே என்று யோசித்துக் கொண்டே அருகில் சென்று, மூக்கினருகில் கையை வைத்துப் பார்த்தாள். நல்ல வேளையாக மூச்சு இருக்கிறது என்று மகிழ்ச்சியடைந்தாலும், நெற்றியின் இடது புறம் இரத்தம் வந்து காய்ந்து கிடந்தது. சுய நினைவின்றி கிடப்பது தெரிந்தது. யாரையாவது துணைக்குக்


ஏகாலி

 

  மிகப் பிரம்மாண்டமான அரங்கம். கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. சபையின் நாயகன் 27 வயது இளைஞன். கருத்த நெடிய உருவம். ஒல்லியான தேகம். எந்த ஆடம்பரமும் இல்லாத ஒரு சாதாரணமான பேண்ட், சட்டை, கண்களில் ஒளி மின்ன, பரபரப்பான பார்வை, சபையில் அலைந்து யாரையோ தேடிக் கொண்டிருக்கிறது அவ்வப்போது. அரசு உயர் அதிகாரிகளும், சில விஞ்ஞானிகளும், வெளிநாட்டிலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே வந்திருந்த தொழிலதிபர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என்று சபை களைகட்டத் தொடங்கியிருந்தது. மகனுக்கு