கதையாசிரியர் தொகுப்பு: ஜெயசீதா

12 கதைகள் கிடைத்துள்ளன.

ஆண்டவனில்லா உலகம் எது?

 

  கணேசனுக்கு இன்று காலையிலிருந்தே எல்லாம் அவசரகதி. aஅலுவலக வேலையாக காலை ஒன்பது மணிக்கு திருச்சி செல்லும் பேருந்து. பயணச்சீட்டும் முதல் நாளே எடுத்தாகிவிட்டது. இருந்தும் எப்படியோ இன்று படுக்கையிலிருந்து எழுந்ததிலிருந்து எல்லாமே தாமதம். குளித்து, தயாராகி மணி பார்த்தால் எட்டு. இனிமேல் ஆட்டோப் பிடித்தால் கூடப் பேருந்தைப் பிடிக்கமுடியாது. காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு மனைவியிடம் சொல்லிக்கொண்டு, பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு கிளம்பினான். பாக்கெட்டைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான். பர்ஸ் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டான். நேற்று இரவே பர்ஸில் பணம், கார்டு,


ஃபிஃப்டி, நாட் அவுட்

 

  “நீயும் வாயேன் யமுனா.” “நீங்க இரண்டு பேரும் போயிட்டுவாங்க. இன்னிக்கு ஒரு நாளாவது உங்க இரண்டு பேர் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக இருக்கேன்” “அம்மா” என்று சிணுங்கிய கௌதமையும், “அப்படியா சொல்றே, இரு, வந்துப் பேசிக்கிறேன்” என்ற முகுந்தையும் அனுப்பி விட்டு வாசல் கதவைத் தாள் போட்டுவிட்டு உள்ளே வந்தாள். இனி அவர்கள் இருவரும் கௌதமின் பள்ளியில் நடக்கும் கிரிக்கெட் போட்டி முடிந்து மாலைதான் திரும்புவார்கள். இன்று எப்படியாவது படுக்கையறை பரணை சுத்தம் செய்ய வேண்டும்


அப்பாவின் கறுப்புக்கோட்டு

 

  “குட்டி, அதைக் கலைக்காதேடா, என்னங்க, இங்க கொஞ்சம் வரீங்களா? உங்க பொண்ணை கொஞ்சம் தூக்கிட்டுப் போங்க, என்னை பீரோவில் துணி அடுக்க விட மாட்டேங்கறா. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமைதானே, இன்னிக்காவது கொஞ்சம் குழந்தையைப் பார்த்துக்கொள்ளக்கூடாதா?” மனைவி கங்காவின் குரல் கேட்டு டிவியை அணைத்துவிட்டு உள்ளே போனான் ராகவன். அங்கு 2 வயது நிம்மி துணிகளுக்கு நடுவில் உட்கார்ந்துகொண்டு கங்கா மடித்து வைத்திருந்த ஆடைகளை எல்லாம் ஒவ்வொன்றாக கலைத்துக்கொண்டிருந்தாள். அறை வாசலிலேயே சிறிது நேரம் நின்றுகொண்டு அவள் விளையாட்டை


செல்ஃபோன்

 

  “என்னங்க, எழுந்திருங்க.” என்று ரகுநாதனின் தோளைத்தொட்டு உளுக்கி எழுப்பினாள் நிர்மலா, அவர் மனைவி. என்னவென்று கேட்டுக்கொண்டு எழுந்தவரிடம் “ஏங்க மணி 12 ஆகுது. வந்தனா அறையில் விளக்கு எரிகிறது. வாங்க போய்ப் பார்க்கலாம்” என்றாள். வந்தனா அவர்களின் ஒரே மகள். கல்லூரியில் பட்டப்படிப்பு கடைசி வருடம் படித்துக்கொண்டிருக்கிறாள். “என்னம்மா இதுக்குப்போய் தூக்கத்துல எழுப்பறே? பரீட்ஷைக்குப் படித்துக்கொண்டிருப்பாள்.” என்றார். “ இல்லைங்க, நீங்க ஒரு நிமிஷம் வந்து பாருங்க அப்பதான் உங்களுக்குப் புரியும்” என்றாள். இருவரும் வந்தனா


நிஜமிழந்த நிழல்கள்

 

  இன்று காலையிலிருந்தே ஷண்முகத்திற்கு ஏதோ மனதே சரியில்லை. மனைவி ரேணுகூட கேட்டுவிட்டாள் “இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு” என்று. அமெரிக்காவிலிருந்தாலும் மனசு என்னவோ இன்னிக்கு இந்தியாவையும் அம்மாவையுமே சுற்றிவருகிறது. அடுத்தமாதம் எப்படியாவது இந்தியாக்கு ஒருமுறை போக முயற்சிப் பண்ணணுமென்று நினைத்துக்கொண்டான். அலுவலகம் வந்தவுடன் கார் பார்க் பண்ணும் இட்த்தில் நிறுத்திவிட்டு, பையை கையில் எடுத்துக்கொண்டு இறங்கி நடந்தவன் வழியில் இருந்த படியில் கால் தவறினான். தவறி, கீழே விழ இருந்தவனை யாரோ தாங்கிப்பிடித்த்துபோல் நின்றான். தூரத்திலிருந்து ஒரு