Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதையாசிரியர் தொகுப்பு: சி.ஆர்.வெங்கடேஷ்

54 கதைகள் கிடைத்துள்ளன.

உங்களைக் கொல்லாமா ப்ளீஸ்?

 

 Daddy had a massive attack and passed away today at 4.30 am. We are at our Kodaikanal Bungalow. Madhivadhani Kulasekaran. இந்த டெக்ஸ்ட் மெசேஜ் வந்ததும் பாரதி சந்திரனுக்கு முதலில் தோன்றியது அவன் குலசேகரனுக்கு இழைத்த துரோகம்! இந்த சந்தர்பத்தில் போகவில்லை என்றால் வீண் பேச்சுக்கு ஆளாக நேரிடும் என்று நினைத்தவன் அரை மணி நேரத்தில் காரை எடுத்துக்கொண்டு கோடை நோக்கிப் புறப்பட்டான். பஜேரோ கார். நல்ல பிக்கப் ஸ்பீட்.


காஞ்சனா

 

 நான் என் பதினாறாவது வயதில் முதல் சிகரெட் பிடித்தேன் என்று சொன்னால் நீங்கள் நிச்சயம் நம்புவீர்கள். ஆனால் அது தான் எனது கடைசி சிகரெட்டும் கூட என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். அது என் முக ராசி. காஞ்சனாவும் நம்பவில்லை என்பது தான் ரொம்ப வருத்தமான விஷயம். திருவல்லிக்கேணியில் நான் குடியிருந்த காலங்களின் ஹைலைட் என்று காஞ்சனாவைச் சொல்லலாம். அவளை நீக்கிவிட்டு என் திருவல்லிக்கேணி நினைவுகளைப் பார்த்தால் ஒரு யானையை உட்கார வைக்கும் அளவுக்கு வெற்றிடம் இருக்கும்.


நாகமணி

 

 “என் பேரு மஞ்சுஷா”’ என்றாள். பெயர்தான் சற்று விசித்திரமாக இருந்ததே தவிர ஆள் சித்திரம். அழகான 3d ஓவியம். எல்லாமே அளவாக அழகாக. கடவுள் நிச்சயம் இவளைப் படைப்பதற்கு முன் ஒரு மாதிரிச்சித்திரம் வரைந்து வைத்துக்கொண்டு தான் பின்னர் படைத்திருக்க வேண்டும். உந்திச் சுழியின் முளைத்து எழுந்த உரோமப் பசுந்தாள் ஒன்றில் இரண்டு அந்திக் கமலம் கொண்ட அவளைப் பார்த்ததும் நான் காதலில் விழுந்துவிட்டேன் என்பது தான் உண்மை. அவ புராணம் இருக்கட்டும்.. நீ யாருன்னு சொல்லு


ஓவர் ப்ரிஜ்ஜில் இன்னொரு ஆக்ஸிடென்ட்

 

 ஸ்டேஷன் இன்சார்ஜ் சோமசேகருக்கு அந்தக் கார் டிரைவரைப் பார்த்ததுமே பிடிக்காமல் போயிற்று. காரணம் கேட்டால் இன்ட்யூஷன் என்று சொல்வார். இருக்கலாம். அது ஒரு வெள்ளை ஸ்கார்பியோ. முன்னால் கொடி கட்டுவதற்கான ஹோல்டர் இருந்தாலும் கொடி எதுவும் கட்டப்படவில்லை. ஆனால் அதன் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் அந்த வண்டியின் உரிமையாளர் ஒரு முக்கியப்புள்ளி என்று மௌனமாகப் பறைசாற்றியது. சோமசேகர் கண்கள் எதையும் விடவில்லை. சிக்னலில் நிற்காமல் ஜம்ப் செய்ய முயன்றதால் தான் அதை மடக்கி நிறுத்தி வைத்தார். சாதாரண நாட்களில்


ஓவியம்

 

 அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படலாமா? ஆனால் நான் என்ன செய்வேன் ஜி? அவள் ஏன் அழகாக இருக்க வேண்டும்? அழகாக இருந்தால் கூட பரவாயில்லை, கவர்ச்சியாக ஏன் இருக்க வேண்டும்? அட, அதுகூட பரவாயில்லை ஜி, கண்ணாலே ஏன் என்னை விழுங்க வேண்டும்? அப்புறம் நான் ஆசைப் படுவது தப்பு என்று சொன்னால், ஐ யாம் ஸோ சாரி ஜி! ஐ கான்ட் ஹெல்ப் இட். இதுக்கு எல்லாம் யார் காரணம்னு நினைக்கறீங்க? எல்லாம் என் பாஸ்


ஞானம்

 

 அந்தப் பழைய எட்டுக்கட்டு வீட்டின் முன் கட்டில் பகவத் கீதை சொற்பொழிவு ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது. சற்று தலையைக் குனிந்து இடித்துக் கொள்ளாமல் உள்ளே சென்றால் பெரிய கூடம். அதன் நடுவில் தொங்கிக்கொண்டிருந்த ஊஞ்சலில் தாராளமாக இரண்டு பேர் படுத்துக்கொள்ளலாம். இருந்தாலும் அது காலியாகத் தான் காற்றில் லேசாக அசைந்து கொண்டிருந்தது. லீவுக்காக வந்திருந்த சங்கீதாவின் கண்களில் அந்த ஊஞ்சல் படவில்லை. மாறாக கூடத்தின் ஒரு ஓரத்தில் ஒரு பில் பாயில் படுத்திருந்த ஞானாம்பாள் தான் பட்டாள்.


தாகம்

 

 மழை விடுவது போலத் தெரியவில்லை. இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே குளிர்காலம். மழையினால் குளிர் அதிகமாகி விட்டது. திரும்பவும் நான் என் எதிரிலிருந்த மேஜையில் வைக்கப் பட்டிருந்த அந்தப் பழைய செய்தித்தாளைப் பார்த்தேன். முதல் பக்கத்தில் இருந்து என் முகம் என்னைப் பார்த்து சிரித்தது. அப்போது தான் கடைசியாக சிரித்தது. அப்புறம் சோகமோ சோகம். கோரமோ கோரம். எல்லாம் என் விதி. அப்போது தான் காலிங் பெல் ஒலித்தது. “கதவு திறந்துதான் இருக்கிறது. உள்ளே வரலாம்” ஒரு


என்ன மன்னிச்சுக்குங்க சார்

 

 அந்த சின்ன கிராமத்துல அஞ்சு வருஷம் முன்னால செத்துப் போன சேகரனப் பாப்பேன்னு சத்தியமாக் கனவுல கூட நெனக்கலை. அதுவும் அவன் சாவுக்குப் போய் மாலையெல்லாம் வேற போட்டுட்டு வந்திருக்கற எனக்கு ரொம்ப பெரிய அதிர்ச்சி. பாங்கில் இருந்து ரிடையர்மென்ட் ஆனதுக்கு அப்புறம் போர் அடிக்குதேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அப்போதான் என் பால்ய சிநேகிதன் ராஜா அவன் சொந்த ஊர் மயிலாடிக்கு வர்றியானு கேட்டான். அந்த ஊரு முருகனுக்கு ஆராட்டு விழா ரொம்ப சிறப்பா நடக்குமாம். ஒரு


கொல்வதெல்லாம் உண்மை

 

 ராஜன் ரவியைக் கத்தியால் குத்தப் போகும் தருணத்தில் சுஜாவின் கனவு கலைந்தது. ‘அப்பப்பா! என்ன கோரம்! என்னதான் இருந்தாலும் உடன் பிறந்த தம்பியை யாராவது இப்படிக் கருணையில்லாமல் கொல்வார்களா? அப்படி என்னதான் நடந்ததோ?’ என்று வியர்வையில் குளித்திருந்த அவள் சிந்தனை ஓடியது. கனவு சற்று விவரமாகத்தான் கண்டிருந்தாள். என்றாலும் சகோதரர்களுக்குள் என்ன பிரச்சனை என்று அவள் கனவில் வரவில்லை. அப்படியே வந்திருந்தாலும் இப்போது அவளுக்கு நினைவில்லை. ‘என்னையா ஏமாற்றப் பார்த்தாய்?’ என்று வெறித்தனமாகச் சொல்லிக்கொண்டே ராஜன் கையில்


குறளி

 

 கட்டிபோட்டிருந்த சூக்ஷும மாந்த்ரீகக் கயிறு விடுபட்டதும் அலாதியாக இருந்தது அந்த குறளிக்கு. “ஏய்! ஒரு வேலை செய்யணும். அதுக்காகத்தான் வெளில விட்ட்டேன்” என்று கரகரத்தான் மாந்த்ரீகன். “ம்ம்ம்’ என்றது குறளி. ஒரு கிழிந்த புடவைதுண்டைக் கொடுத்தான். “ இது நீ பழிவாங்கப் போகும் பெண்ணுடையது. முகர்ந்து கொள். தவறு நேரக் கூடாது. அதோ அந்த வீடு தான். புழக்கடையில் மரங்கள் இருக்கிறது” என்று சொல்லி “போ” என்றான். குறளி அனிதாவின் வீட்டில் நோக்கி நடந்தது. நீங்கள் யாரேனும்