கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 15, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

கிழவியின் தந்திரம்

 

 (1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிவகங்கைச் சம்ஸ்தானத்தில் மருது சேர்வைக் காரர் என்ற ஜமீன்தார் ஆட்சி புரிந்து வந்தார். வீரத்திலும் கொடையிலும் புலவர்களைப் போற்றும் திறத்திலும் அவர் சிறந்து விளங்கி னார். அதனால் அவரை ஒரு சிற்றரசராக எண்ணாமல் முடியுடை மன்னராகவே எண்ணி அவரைப் பாராட்டினார்கள் மக்கள். அவரை மருது பாண்டியர் என்றே அழைத்தார்கள். வேறு சிலரும் மருது என்ற பெயருடன் அந்தக் சம்ஸ்தானத்தை ஆண்டதுண்டு. அவர்களுக்குள் வேற்றுமை


ராசாத்தி கிணறு

 

 மலையிலிருந்து இறங்கி வீட்டு வாசற்படி ஏறும்போதே இன்னிக்கு விபரீதம் நிச்சயம்னு தெரிஞ்சு போச்சு. ஆனா மத்தநாள் ஒரு மாதிரியா வவுறு கதிகலங்கும். இன்னிக்கு அப்படியில்லே. ஒரு மாதிரியா சுறுசுறுப்பா உற்சாகமாகவே யிருந்தது. புரியல்லே. அவள் புருஷன் சின்னத் திண்ணையில் குந்தியிருந் தான். நெடுநெடுன்னு சாட்டை உருவம். வயது எழுபது. அதுக்கு மேலே எத்தனியாச்சோ யார் கண்டது அவனுக்கே வெளிச்சம் இல்லே. அவனுக்கே வெளிச்சமிருக்காது. கிராமத் திலே அதெல்லாம் அப்பிடி எடைக்கணக்கிலே கண்டுக்க மாட்டாங்க. தெரியாது. ஏதோ குத்துமதிப்பிலிருக்கும்.


என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே!

 

 பாகிஸ்தானில் தற்சமயம் பரிதாபத்துக்குரிய இந்திய அணிக்கும் புஜபலபராக்கிரம். இம்ரான்கான் அணிக்கும் நடக்கும் கிரிக்கெட் யுத்தத்தை பேரறிஞர் பெர்னார்ட்ஷா பார்த்திருந்தால் இப்படித்தான் குரூரமாக விமர்சனம் செய்திருப்பார். “பதினோரு முட்டாள்கள் (பாகிஸ்தான் அணி) விளையாடுகிறார்கள். அதைப் பதினோரு முட்டாள்கள் (இந்திய அணி ) விளையாடாமல் வெட்டியாக நின்று கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.” “இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் மீது படையெடுத்த முகலாய மன்னர்கள் யார் யார்?” என்ற கேள்வியை ஒரு சரித்திர மாணவனைக் கேட்டால் அவனும் தயங்காமல்


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-27 | அத்தியாயம்-28 | அத்தியாயம்-29 சதாசிவத்திற்கு வயது பன்னிரண்டு முடிந்ததும்,ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையிலே அவனை அழைத்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார் ரமேஷ். “சதா,உனக்கு இப்போ பன்னன்டு வயசு முடிஞ்சு இருக்கு.உனக்கு இப்பவே உன் வயசு பையன்கள்,பெண்கள் எல்லாம் இங்கே எப்படி வாழ்ந்து வறான்னு நன்னாத் தெரிஞ்சு இருக்கும்.என் படிப்பு முடிஞ்சதும்,’அந்த மாதிரி’ ஒரு வாழக்கைக்கு நான் ஆசைப் பட்டு தான் நான் ‘முட்டாத்தனமா ’ ஜூலி என்கிற ஒரு அமொ¢க்க பொண்ணே


யாழ் இனிது! யார் சொன்னது?

 

 உறக்கம் தடைபட்டுக் கண்விழித்துப் பார்த்தான் ரமணன். புன்னகையுடன் பக்கத்திலே வேணி. “என்ன வேணி, சுகமான நித்திரையிலிருந்தனான், கலைச்சிப் போட்டீர்” என்று செல்லமாய்க் கோபித்துக் கொண்டான். “துப்பாக்கிச் சத்தத்திலையும், பொம்மர்களின் இரைச்சலிலையும், ஷெல் பயத்திலையும் வடிவா உறங்கிக் கன காலமாச்சுதுதானே! இண்டைக்கித்தான் ஹெலிக்கொப்ரர் சத்தங்கூட இல்லை, வரப்பிலை கொஞ்சம் படுக்கலாமெண்டா….” வேணி சட்டென்று எழுந்து கொண்டாள்.”அப்ப நீங்க படுங்கோ, நான் போறன்.” “எங்கை போறீராம்?” “அம்மாவும் அப்பாவும் இந்தியாவுக்குப் போகினம். உங்களுக்குப் பிடிக்கலையெண்டா நான் மட்டும் எதுக்கு இங்கை


நெஞ்சுக்குள் இருள்

 

 நல்ல காலை பொழுது. மணி எட்டு. தட்டில் சோறு சாப்பிட்டுக் கொண்டே சிந்தனையில் ஆழந்தான் சேகர். “என்னடா சாப்புட்டுக்கிட்டே ரோசனை. சும்மா சாப்புட்டுட்டு படுத்துத்தூங்கு. இல்லேனா பக்கத்து வீட்ல டீவியப் பாரு” வாசலில் குவித்து வைத்திருந்த குப்பையை அள்ளியவாறு சொன்னாள் சிகப்பி. “அதுவந்தும்மா மாமா ஊருக்குப் போயி ரொம்ப நாளாச்சு. நீ தான் அடிக்கடி சொல்லுவியல்ல. ஊருக்குப் போயி எல்லாரையும் பாத்துட்டு வாடானு அதான். ” பேச்சை இழுத்தான். “நீ முடிவெடுத்ததுக்கு அப்புறம் நா என்ன சொல்லப்


வைரஸ் வந்ததும் போவதும்

 

 இன்டெர் நெட் திறந்ததும் அவன் முதல்லே பார்ப்பது அவனுக்கு வரும் ஆன்லைன் பர்ச்சேஸ் மலிவு என அறிவிக்கும் பொருள்கள் அதிலும் அதில் வரும் செல்போன், ஹெட்போன் தான். “கிரேசி” என்று சொன்னாலும் “பிச்சு ” என்று தெலுங்கில் சொன்னாலும், பைத்தியம் என்று தமிழில் சொன்னாலும் அவனுக்கு பிடிச்ச வார்த்தை. இவனுக்குன்னு அந்த பெரிய கடைகள். ரெண்டு மாசம் முன்னாலே அம்பதாயிரத்துக்கு வாங்கின போன், அதனுடைய அட்வான்ஸ் மாடல் வந்ததும், எக்சேஞ்சு என்ற பேரில் பத்தோ, பன்னிரண்டுகோ கொடுத்திட்டு


கதிரேசன் கணக்கு

 

 அதி காலை மணி 5.30. கூப்பிடு தூரத்தில் எதிரே வேகு வேகுவென்று வியர்வை வழிய நடந்து வரும் கதிரேசனைப் பார்க்க எனக்கு அதிர்ச்சி, ஆச்சரியம். ! வயது ஐம்பது. நோஞ்சான் உடம்பு. சதைப் பிடிப்பென்பது எங்கும் கிடையாது. அந்த உடலில் சர்க்கரை, கொழுப்பு, உப்பு, எந்த நோய் நொடிகளும் மருந்துக்கும் இல்லை. அப்படி இருக்கும்போது எதற்கு நடைப்பயிற்சி, பழக்கம்!? பொழுது போகவில்லை என்றால் காலை எழுந்து பல் துலக்கி, காபி குடித்து, வாசலில் வந்து அமர்ந்து தினசரியை


வன்மம்

 

 லில்லி எனும் தாயும் சைரஸ் எனும் மகனும் அந்த சமூகத்தில் பல இன்னல்களைத் தாண்டி வாழ்ந்து வந்த ஒரு அழகான சிறிய குடும்பம். முதலில் அவர்கள் குடும்பம் பெரிய குடும்பம் தான். சைரஸின் அப்பாவின் பெயர் மணி. இரை தேடச் சென்ற போது போதையில் ஒருவன் அதிவேகமாக ஓட்டி வந்த காரில் மாட்டி இறந்து போனார். அவனது சகோதரர்கள் சகோதரிகள் ஆறு பேர். பெயர் சூட்டப்படும் முன்னரே அந்த சமூகத்தால் அரைகுறை பாசத்துடனும் சிலர் முழுமையான பாசத்துடனும்


வலிகள்

 

 இதுக்கு முன்னாடிகூட என் கணவர்கிட்ட பொய் சொல்லியிருக்கேன். அதுக்கு அப்புறம் அதுல இருக்கிற நல்லது கெட்டது பத்தி தெரிஞசிக்கிட்டேன். ஆனா இந்தமுறை ஏதோ தெரியாத ஒண்ணுல விழுந்துட்டா மாதிரி ஓர் உணர்வு வந்துச்சு. இந்தப் பிரச்சினை வேறு மாதிரியானதா இருந்துச்சு. என் கணவர் மது குடிச்சு அதுல பணத்தை விரயமாக்குறத நிறுத்தி, பணத்தை சேமிக்க நான் விரும்பினேன். அதனால, நான் வாங்குற சம்பளத்தைவிட குறைவான சம்பளத்தை வாங்குற மாதிரி அவரிடம் சொன்னேன். நான் பொய் சொல்றத அவர்