கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 22, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

பிச்சை

 

 “அம்மா கல்லூரிக்கு நேரமாயிற்று டிபன் தயார் ஆகிவிட்டதா, டிராபிக்ல போய் சேருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும், சீக்கிரம்மா” என்றான் பாஸ்கர். “இருடா தோசைதானே கல்லு அடுப்பில் வைத்துவிட்டேன், மூன்று தோசைதான் சாப்பிடுவே அதுக்கு ஏன் இப்படி பறக்கறே” “சரிம்மா வழவழன்னு பேசாதீங்கம்மா, தோசையை கொடுங்க, மதியம் என்னம்மா” “மதியத்திற்கு சாம்பாரும் உருளை கிழங்கும் வைத்திருக்கிறேன்” “சரிம்மா” என்று வேகமாக சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு கிளம்பினான். “பாஸ்கர் வாடா கேண்டீன் போய் சாப்பிட்டு வரலாம்” என்றான் தினேஷ் “தினேஷ்


பனைமரத்து முனியாண்டி சாமியும் வன்னியம்பட்டி பச்சையப்பனும்

 

 நஞ்சைக் காட்டின் கிழக்குக் குண்டில், வரத்து வாய்க்காலை ஒட்டி, வாமடை பிரிந்து செல்லும் இடத்தில் கரையான் பூச்சிகள் புற்று வைத்த மேட்டில், நிலத்தின் ஈரம் சொத, சொதவென மாறாது நின்றிருக்கும் இடத்தில், சம்பந்தா சம்பந்தமில்லாமல் தனித்து நின்றது அந்த ஒற்றைப் பனைமரம். சாமி வயக்காடு என்றால் யாருக்கும் அடையாளம் சொல்லத் தெரியாது. இனாம் நாச்சியார் கோவில் கிராமத்தின் வடக்கு விளிம்பில் உள்ள காடு தான் சாமி காடு என்று ஊருக்குப் புதிதாய் வருபவருக்கு அடையாளம் காட்டப்பட்டது. யார்


கானல் நீர் காட்சிகள்

 

 வாட்ஸ்அப் பதிவு : 1 எங்கே இரண்டு நாளா ஆளையே காணோம்” 7.35 PM “டூர் போயிருந்தேன்” 7.36 PM “டூரா ! எந்த ஊருக்கு ?” 7.37 PM “மூணாறு, கேரளா” 7.39 PM “சொல்லவே இல்லை” 7.40 PM “சாரி.. திடீர்னு முடிவாயிடுச்சு” 7.42 PM “பரவாயில்லை, குடும்பம் எல்லாரும் போனீங்களா” 7.44 PM “இல்ல… ப்ரெண்úஸாட போனேன்” 7.46 PM “பயங்கர ஜாலிதான், ட்ரிங்க்ஸ்” 7.38 PM “கொஞ்சம், ரொம்ப கொஞ்சம்” 7.48


தவறு யார்மேல் உள்ளது? – ஒரு பக்க கதை

 

 வீதியில கழுதை ஒன்னு கால்ல அடிபட்டு வந்திட்டு இருந்தது. அந்த வழியா வந்த எண்ணெய் ஆட்டுக்கின்ற செக்கன் ஒருவன் அடிபட்ட கழுதைய பார்த்தான். ஐயோ! பாவமன்னு அந்தக் கழுதையின் கால்ல, துணியை எண்ணெய்ல்ல நனைச்சி கட்டி விட்டான். கால் கட்டுப்போடப்பட்ட பிறகு கழுதை சந்தோசத்துல துள்ளிக் குதிச்சது. அப்படியே கொசவர்கள் மட்பாண்டம் செய்யும் இடத்திற்கு ஓடியது.செய்த பானையை வேகவைப்பதற்காக நெருப்பு கங்குகள் போடப்பட்டிருந்தன. கழுதை அந்த நெருப்பு கங்குகள் மீது ஏறிக் குதித்தது. கழுதையின் எண்ணெய் உள்ள


சத்தமில்லாமல் ஒரு சமூதாய செயல்

 

 காவல் துறையில் சேர்ந்து இருபத்தெட்டு வயதில் தொப்பை வந்து விட்டதே என்ற கவலையில் தன் நடை பயிற்சிக்காக வீட்டிலிருந்து விடியற்காலையில் கிளம்பி, தன் தெருவை தாண்டி இருக்கமாட்டான் சரவணன். வலது பக்க சுவரோரமாய், ரோட்டை பார்த்த வண்ணம் ஒரு இளைஞன் சைக்கிளில் உட்கார்ந்து ஒரு காலை கீழே வைத்தும் மற்றொரு காலை பெடலில் வைத்துக்கொண்டும் நின்று கொண்டிருந்தான். வயது இருபது அல்லது இருபத்தி ஒன்று இருக்கலாம். சட்டென்று அவன் இவன் கவனத்துக்கு வர, அந்த பையன் இவனின்


காட்டிக் கொடுத்தவன்

 

 அன்று பொழுது என்னவோ வழக்கம்போல்தான் விடிந்தது. தாமோதரனும் வழக்கம் போலவே அதிகாலையில் எழுந்துவிட்டார். காகங்கள் கரைவதும், இதர புள்ளினங்கள் ஆர்த்ததும், அற்புத ஒளி வீசிக் கதிரோன் வந்ததும், உலகம் இனிய காட்சிப் பொருளாகத் திகழ்ந்ததும் – எல்லாம் வழக்கம்போல்தான் இருந்தன. என்றாலும் தாமோதரன் உள்ளத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாத ஒரு குழப்பம் குடிகொண்டு விட்டது. ஏதோ இன்னல் விளையப்போகிறது என உணர்த்தும் முன்னறிவிப்பு போன்று ஒரு குறுகுறுப்பு அவர் உள்ளத்தில் கறையான் மாதிரி அரித்துக் கொண்


உலகம் பொல்லாதது

 

 அறந்தாங்கி ஸ்டேஷனில் ரயில் நின்றது தான் தாமதம்; ரயிலினின்றும் ஜனங்கள் கும்பல் கும்பலாக இறங்க ஆரம்பித்தனர்; அவர்களில் குமாரசாமியும் ஒருவன். தலையில் சுமந்திருந்த பெரிய மூட்டையுடன் ரயில் நிலையத்தை விட்டு ஊருக்குள் நடந்தான். வெய்யிலின் வெக்கை சற்று தணித்திருந்தது; அந்தி மயங்கும் வேளை. ஊரின் முன்னடியிலிருந்த கடையில் ‘சாயா’ குடித்துவிட்டுப் பணத்தை முதலாளியிடம் நீட்டிய வண்ணம் ஏனுங்க, ஆவணத்தாங்கோட்டை வரை துணைக்கு ஒரு ஆள் வேணும். சில்லரை எதாச்சும் கொடுத்துடலாம்; கிடைக்குங்களா?’ என்று கேட்டான் குமாரசாமி. “அவசியமானா


வேண்டாதவர்…!

 

 வெகு நாட்களுக்குப் பிறகு….. எனக்கு முள்ளின் மீது அமர்ந்திருக்கும் அவஸ்தை, உறுத்தல், தவிப்பு. அப்போதும் போல் இப்போதும் அதே புகைவண்டிப் பயணம். அன்று என் எதிரில் அமர்ந்திருந்தவன் என் எதிரி.! சம வயது. இன்று அப்படி அமர்ந்திருப்பவர் அப்பாவின் எதிரி. எனக்குப் பிடிக்காதவர். வயதானவர். அப்போது இவர் எங்கள் ஊர் கிராமவாசி. பெயர் ‘ எமட்டன் ‘ என்று சொல்வார்கள். உண்மை பெயர் சுப்ரமணி. வாலிப வயதில் இவர் நல்ல திடகாத்திரமான உடம்பு. நெடிது வளர்ந்த ஆஜானுபாகுவான


அம்பை ஏய்தவன் எங்கோ…

 

 பீ. ஈ படிப்பு முடித்து விட்டு ‘இன்போஸிஸ்’ கம்பனியில் வேலை செய்து வந்தாள் வனஜா. அன்று தன் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது ரொம்ப ‘டயர்ட்டா’ இருந்த தால் ‘காபி டேயில்’ ஒரு காபி குடிக்க வந்து உட்கார்ந்தாள் வனஜா.எதிரே காபி குடித்துக் கொண் டு இருந்த மோஹன் அவளிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தான். “ஹாய் மிஸ்.என் பேர் மோஹன்.நான் ‘ஸ்டேட் பாங்கில்’ வேலை செஞ்சு வரேன்.உங்க பேரை நான் தெரிஞ்சுகலாமா” என்று கேட்டு


பெயர்கள்

 

 நம் அனைவருடைய பெயர்களும் நம்மைக் கேட்காமலே நம் பெற்றோர்களால் நமக்கு வைக்கப்பட்டு விடுகின்றன. நம்மில் சிலருக்கு நம்முடைய பெயரையே பிடிப்பதில்லை. பின் என்ன? குஞ்சிதபாதம்; பாவாடைசாமி என்று பெயர்கள் வைத்தால் நமக்கு எப்படிப் பிடிக்கும் ? நம்மைக் கூப்பிடுபவர்கள் வேண்டுமென்றே அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ‘எலே குஞ்சு’ ‘எலே பாவாடை’ என்று கூப்பிட்டால் நாம் என்ன செய்ய முடியும்? நான் படித்து வளர்ந்து வயசுக்கு வந்தபோது இருந்த ஊர் திம்மராஜபுரம். திம்மராஜபுரத்தில் பிறக்கும் குழைந்தைகளுக்கு இந்திய தேசத்தின்