கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: September 4, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

பெண்ணரசி அனுலாதேவி

 

 தனக்குத் தனிமை தேவைப்பட்ட போதெல்லாம் மகாராணி அனுலாதேவி ராஜ மாளிகையின் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அந்த மத்ஸ தடாகத்தைத் தேடித்தான் வருவாள். அங்கு மட்டும்தான் தனக்கு அமைதி கிடைக்கும் என்று அவள் நம்பினாள். தனது மனக்குமுறல்களையெல்லாம் அங்கிருந்த மீன்களிடம் தான் கொட்டித் தீர்ப்பாள். அந்த மீன்களும் அவள் கூறுவதை ஆடல் அசைவு இன்றி கேட்டுக் கொள்ளும். அந்த விசாலமான மாட மாளிகையில் நூற்றுக்கணக்கானோர் இருந்தபோதும் அவளது சோகத்தைச் சொல்ல, அதனைக் கேட்டு ஆறுதலளிக்கக்கூடிய தன் மனதுக்கிதமானவர்கள் யாருமே இல்லை.


அவள்

 

 என் பள்ளித்தோழி, பார்ப்பதற்கு சுமாராக இருப்பாள். உருண்டையான தன் கண்களை உருட்டியும் முத்துப்பற்களால் புன்னகையை எப்போதும் உதிர்த்தும் என்னை மயக்கியவள் அவள். என் ஊருக்கு அயல் ஊரில்தான் அவள் குடியிருந்தாள். 1994 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் காலடி எடுத்து வைத்தபோது அயலூரிலிருந்து என் பள்ளியில் புதிதாக வந்து இணைந்து கொண்டவள்தான் அவள். என்னை விட சற்று நிறம் குறைவாகவும் ஒரிரு இஞ்சி உயரம் குறைவாகவும் இருந்தாள். அவளை பார்த்த உடனேயே எனக்குப்


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

 அத்தியாயம்-25 | அத்தியாயம்-26 ‘சிஸ்டர்’ அல்ப்ப்ன்சா ‘சிஸ்டர் நிர்மலாவைப் பார்த்து நான் ஏற்பாடு பண்ணீ இருக்கும் விஷயத்தை சொன்னாள்.’சிஸ்டர் நிர்மலா சந்தோஷப் பட்டுக் கொண்டே”ரொம்ப ‘தாங்க்ஸ்’ ‘சிஸ்டர் அல்போன்சா” என்று சொன்னாள். செந்தாமரை தான் எடுத்த இந்த முடிவைப் பற்றி யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள். சற்று நேரம் கழித்து செந்தாமரை தன் ரூமை விட்டு வெளியே வந்து அந்த முதியோர் இல்ல த்தை சுற்றிப் பார்த்தாள்.அவர்கள் நடத்தி வரும் பள்ளிகூடத்தையும், முதியோர்கள் தங்கி வந்த ரூம்


உண்மை நண்பன்

 

 ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.இருவரும் எப்போதும் இணைபிரியாமல் இருந்தனர்.ஒருவன் பாலு. மற்றொருவன் சோமு.இருவரில் சோமு பாலுமீது உண்மையான அன்பு கொண்டிருந்தான்.எப்போதும் பொறுமையாகவும், பணிவுடனும் இருப்பான்.ஆனால் பாலு தன நட்புதான் உயர்ந்தது. தனக்குதான் நட்பைப் பற்றி அதிகமாகத் தெரியும் என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பான். ஒரு முறை இருவரும் பக்கத்து ஊருக்கு ஒரு விழாவுக்குப் போகவேண்டி இருந்தது.அதிகாலையிலேயே இருவரும் புறப்பட்டனர்.ஊருக்கு வெளியே ஒரு அடர்ந்த காடு இருந்தது இருவரும் அந்தக் காட்டின் நடுவே இருந்த ஒத்தையடிப்


பகைவர்கள் செய்த உதவி

 

 மலையடிவாரத்தில் இருந்த அந்த ஊரின் ஒதுக்குப்புறமாய் அழகான ஒரு குளம் இருந்தது. அந்த குளத்தில் எண்ணற்ற மீன்களும், தவளைகளும், மற்றும் பல வகையான பூச்சி இனங்களும் வாழ்ந்து வந்தன. அந்த ஊர் மலை அடிவாரத்தில் இருந்ததால் குளமானது மலை அடிவாரத்தை ஒட்டியே இருந்தது. அதனால் மழை காலங்களில் மலையிலிருந்து பெரும் நீர் இந்த குளத்திற்குள் பாய்ந்து குளத்தை நிரப்பி விடும். அது மட்டுமல்ல, வெயில் காலங்களில் கூட அந்த மலையில் இருக்கும் “ஊற்றிலிருந்து” கொஞம் கொஞ்சமாய் தண்ணீர்