கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 3, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

அந்த மனிதர்

 

 பொறியியல் கல்லூரியில் உயிர்வேதியியல் பிரிவில் இரண்டாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்த காலமது. என்னை விட ஏழு எட்டு வயது குறைவானவர்களுடனான கல்விப்பயணம். அதிகளவிலான நோர்வேஜியர்களையும் ஒரு சில வெளி நாட்டவர்களையும் கொண்டிருந்த அந்தப் பிரிவில் இலங்கையர்கள் என்று சொல்வதற்கு என்னோடு இன்னுமொரு இளம் மாணவி மட்டுமே. இரசாயனவியல் தொழில்நுட்பம் என்னும் பாடம் தொடர்பாக ஒர் ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்காக ஒரு மதுபானங்கள், குளிர்பானங்கள் தயாரிக்கப்படும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்றிற்கு சென்றிருந்தோம். எங்களுக்கு விரிவுரையாளராக இருந்தவர் பின்லாந்து நாட்டைச்சேர்ந்த ஒரு பெண்மணி.


அரூபவலை

 

 அது 80களின் ஆரம்பம். கி-ஜெர்மனி நோக்கிப்பறந்த AEROFLOT / LOT போலந்தின் விமானங்கள் அனைத்தையும் நிறைத்துக்கொண்டு தமிழர்கள் அம்முலோதியாக வந்து இறங்கிக்கொண்டிருந்த சமயம். அவர்களைவிடவும் ஒருவருடம் முன்னதாக பெர்லினில் கால்களைப்பதித்துவிட்ட நானும் ராஜாவும் அரசு தந்த பென்ஷியோன்களின் (விடுதிகள்) கட்டில்களைத் தேய்த்துக்கொண்டிருக்கையில் எங்கள் பென்ஷியோனுக்கு இணுவிலிலிருந்து பாரிவேந்தன் என்றொருவரும் வந்து சேர்ந்தார். அவரிடம் வம்புதும்பு பிக்கல்பிடுங்கல்கள் எதுவுமில்லை,. பியர்கூட மாந்தமாட்டார். கொஞ்சம் சனாதனி, ஆசாரசீலர். அவருக்கு ஜெர்மனிக்குப் புறப்படமுதலே ஊரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர் இங்கு வந்திறங்கிய


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

 அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 | அத்தியாயம்-22 செந்தாமரை சொன்னதைக் கேட்ட ஷர்மாவின் கண்களில் கண்ணீர் முட்டியது.அவர் தன் மூக்குக் கண்ணாடியை எடுத்து விட்டு தன் கைக் குட்டையால் தன் கண்களைத் துடைத்துக் கொண் டார்.சிறிது நேரம் கழித்து ஷர்மா ”செந்தாமரை. நீ ரொம்ப ‘க்ரேட்’.நீ படிப்பிலே தான் ஒரு ‘மேதை’ என்று நான் நினைச்சேன்.நீ வாழக்கையிலும் ரொம்ப தீர்க்கமா,சரியா யோஜனைப் பண்ணீ முடிவு எடுப்பதிலும் ஒரு ‘மேதை’ என்று என்பதை நீ வாழ்ந்து வரும் விதத்தில்’ ப்ரூவ்’


அப்பா

 

 அப்பா, அவருக்குக் கிடைத்த சிறிய சம்பளத்தில் அம்மாவுடன் இணைந்து எங்களது எல்லா தேவைகளையும் கவனித்துக் கொண்டதுடன் தான தர்மங்களும் செய்வார். அவர் தனக்கென்று எதனையும் செய்வதில்லை. போட்டி போட்டுக் கொண்டு போலிம்களில் முன்செல்ல முனைந்ததில்லை. பஸ்ஸிலோ, கோச்சியிலோ பயணம் செய்த போது தான் அமர்ந்திருக்கும் இருக்கையைக் கூட யாருக்காவது விட்டுக் கொடுத்து விடுவார். அவர் தனக்கென வைத்திருந்த ஒரே ஒரு பொருள் பழைய ஹம்பர் சைக்கிள். அதனையும் யாராவது இரவல் கேட்டால் கொடுத்து விட்டு தான் நடந்து


ருக்மிணியின் பதை பதைப்பு

 

 அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை, ருக்மினிக்கு,மகளுக்கு இன்னைக்கு விடுமுறை. வீட்டில் இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பாள் செளம்யா வரும்போதுதான் தூங்கி எழுந்திருந்தாள். எனக்குத்தான் அவசரம். அலுவலகத்துக்கு கிளம்பி வந்து விட்டேன். இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று போன் செய்யலாமா? மனதுக்குள் நினைத்தவள் வேண்டாம், திட்டுவாள் ஏம்மா போய் அரை மணி நேரம் தான் ஆச்சு, அதுக்குள்ள எனக்கு போன் பண்ணலையின்னா என்ன? நான் என்ன சின்ன குழந்தையா? இந்த பதிலை இப்பொழுது வாங்குவதற்கு பதில் இன்னும் அரை