கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 16, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

கடவு உள்ளம்

 

 கருவறையில் அமர்ந்திருந்த கபாலிக்கு‌ அந்த கூச்சல்களையும் வசவுகளையும் எண்ணி சற்று மன சங்கல்பம் உண்டானது. அருகில் இருந்த பட்டரை ஓரக்கண்ணால் ஏற பார்த்தான் ஆனால் அவன் மேனியில் எந்த அசைவுகளும் தென்படவில்லை. கபாலியின் மனக்குமுறலை அந்த பட்டர் எப்படி அறிந்திருப்பார். ஒருவாறு மனத்தாங்கலுடன் அமர்ந்திருந்த தொனியில் ‘சாம்பு மவனே எதனா பாட்ட போட சொல்லுடா’ என்று முனுமுனுக்கையில் உலகாளும் ஈஸ்வரனின் குரல் கேட்டதோ என்னவோ சட்டென பட்டர் ‘நாழி ஆயிடுத்து பூஜய ஸ்டார்ட் பண்ணுங்கோ’ என கூறினார்


சவப்பெட்டி

 

 சந்தனு அந்த கற்பாறையில் அமர்ந்து கடுமையாக யோசித்துக் கொண்டிருந்தான். அவன் வாழ்க்கையில் பல விடயங்களிலும் பல்வேறு முயற்சிகள் செய்து தோல்வியடைந்து நொந்துபோய் இருந்தான். தனக்கு மட்டும் ஏன் இத்தகைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று பலமுறை யோசித்து யோசித்து அதில் இருந்து விடுபட முடியாமல் மிகுந்த விரக்தி நிலை நோக்கி சென்று கொண்டிருந்தான். அவன் குடும்பத்தில் அப்பா, அம்மாவைத்தவிர அவன் ஒரேயொரு பிள்ளைதான். அதனால் வீட்டில் அவனுக்கு எல்லாச்சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தன. அவனுக்குக் கிடைத்த செல்லம் காரணமாகவோ என்னவோ அவனுக்கு


சேற்றில் மலர்ந்த செந்தாமரை

 

 அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 செந்தாமரை உடனே அவர் காலைத் தொட்டு தன் கண்களில் தன் ஒத்திக் கொண்டு ”சார், நீங்க ரெண்டு பேர் மட்டும் என்னை படிக்க வைக்காம இருந்தா நான் எட்டாவதோடு என் படிப்பை நிறுத்தி விட்டு,அந்த சேத்துப் பட்டு குடிசையிலே எவனாவது ஒரு குடிகாரனை கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்ந்து வந்து கொண்டு இருந்து இருப்பேன்.நீங்க ரெண்டு பேர் செய்த இந்த மாபெரும் உடவியை நான் என் வாழ் நாள் பூராவும்


 

 ஆபீசிலிருந்து தீம்பாருக்குள் நுழைந்து செம்மண் சாலையை அடைந்து, அரக்கப் பறக்க தார் சடக்குக்கு ஓடிவந்து சேர்வதற்கு முன்னாலேயே பத்து மணி பஸ் கண் பார்க்கக் கடந்து போய்க்கொண்டிருந்தது. எப்படியாவது நிறுத்திடவேண்டும் என்ற பதற்றத்தோடு கையசைத்து ஓடி வந்தும் பஸ் டிரைவர் சட்டை செய்யாமல் போய்விட்டிருந்தான். தன் கண்முன்னால் கடக்கும் பஸ்ஸை கரித்துக்கொட்டினான் வேலைய்யா. தன்னை ஒரு புழுவென உணர்ந்த தருணங்களில் ஒன்று அது. இனி பன்னிரண்டு மணிக்குத்தான் அடுத்த பஸ். இதே பஸ்தான் கூலிம் போய் அப்படியே


ஸ்வப்னப்பரியா

 

 ஸ்வப்னப்பரியா பார்ப்பதற்கு ஜில்லென்று இருந்தாள். அசலான நாமகரணப் பெயர் விஜய கனகம்மா நாகலா தேவி என்பது தான். சினிமாவுக்கு தான் இந்த மாதிரி ரயில் நீளப்பெயர்கள் ஆகாதவை ஆயிற்றே? அதிலும் இது சரியான காரமான அந்திய பெயர். அதை அடித்து திருத்தி ஸ்வப்னப்ரியா என்று ஆக்கியவன் பலப்பல வருடங்களாக ஹீரோவாகவே ஆட்டமாடி கொண்டிருக்கும் சதா சிவராஜாவாக இருந்து பின் சினிமாவுக்காக ஸ்ரீராஜ் ஆன மக்களின் இதயநாயகன் தான். இத்த வருஷத்தில் எவ்வளவோ ஹீரோயின்களை பார்த்து விட்டான். அவனோடு