Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 14, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

வெயில் வா மழை போ..!

 

 என்றும் இல்லாதவாறு இன்று வாசலில் அதிக கூட்டமாக இருந்தது. டாக்டர் அஞ்சலி பம்பரம் போல சுழன்று கொண்டிருந்தாள். கடமையில் இருந்த தாதிகளால் கூட அவளுக்கு ஈடாக நின்று பிடிக்க முடியவில்லை. இடியும் மின்னலுமாய் இருந்த வானம் சற்று ஓய்ந்திருப்பது போலத் தோன்றினாலும், இன்னும் மழை கொட்டலாம் என்ற எதிர்பார்ப்போடு வானம் காத்திருப்பது தெரிந்தது. ‘டாக்டர் எங்க அம்மாவைக் காப்பாற்றுங்க..!’ ‘டாக்டர் என்னோட ஒரே பிள்ளை, பிளீஸ் காப்பாற்றுங்க..!’ பரிதவிப்போடு ஓடி வந்த எல்லோருக்கும் அவள் கைகொடுத்தாள். ஒவ்வொரு


குளத்தில் முதலைகள்

 

 பகல் பொழுது போனால் இரவு. இருட்டு நிறைந்த கால பொழுதுகள். அதில் நல்ல இரவு கெட்ட இரவு என்பது எல்லாம் கிடையாது. அதை அனுபவிக்கும் மனிதரிடம் தான் இருக்கு. இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு நடக்க போகும் சம்பவங்கள்; அது நல்ல இரவா அல்லது கெட்ட இரவா என முடிவு செய்ய போகிறது. நடு இரவை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. சாலை ஓரத்தில் தெரு விளக்கின் கீழ் இரு மோட்டார் சைக்கிள்கள் நின்றுக் கொண்டிருக்கிறது. அந்த மோட்டார்


லைகா

 

 அந்த தெரு மக்கள் அன்று வழக்கமான மகிழ்ச்சியில் இருந்து நழுவியிருந்தனர். அவர்களின் பேச்சில் இருக்கும் துள்ளல் விடுப்பில் சென்றுவிட்டது. அவர்களின் அன்பும்,உணவும் அவனுக்காக காத்திருந்தன. அவனுக்கு பிடிக்கும் என்று அங்காடி அரிசியில் வடித்த “வெள்ளை சாதமும்,மீன் குழம்பும்” சில மீன் துண்டுகளோடு அவனுடைய தட்டில் நிரம்பியிருக்கிறது. ஒருநாள் ஆகியும் அவனது பாத சுவடுகளோ,அவன் தூரத்தில் வரும்போதே ஒரு காத தூரம்வரை தூக்களாக வீசும் அவனது தண்ணீர்படாத மேனியின் தாராள துர்நாற்றமோ இப்போது அங்கே இல்லை. யார் வீட்டிலாவது


புதுவரவு

 

 காலை வெயிலின் கடுமையை குறைத்துக் கொள்ள வீட்டு முற்றத்திலிருந்த மாமரத்து நிழலில் அடைக்கலமாகி, அன்றைய தினசரியை படித்துக் கொண்டிருந்தார் சங்கரன். பெட்ரோல் விலை ஏற்றம், தங்கம் விலையில் இறக்கம் இப்படி பல பல சூடான செய்திகளுக்கு நடுவில் ”இந்தாங்க காபி” ஆவி பறக்க கோப்பையை நீட்டிய விசாலம், ”என்னங்க இது என்ன மாசம்” ”அக்டோபர்” ”ஞாபகம் இருக்கா” ”காலையிலயே உம் புராணத்த ஆரம்பிச்சிட்டயா சொல்லித் தொலை” ”இந்த கோபம் உங்கள விட்டுப் போகாதா” ’வயசான காலத்துல கோபத்தக்


ஸ்டாம்பு ஆல்பம்

 

 ராஜப்பாவின் புகழ் மங்கிப்போய்விட்டது. மூன்று நாட்களாக நாகராஜனைச் சுற்றிக் கூட்டம், நாகராஜனுக்குக் கர்வம் வந்து விட்டது என்று ராஜப்பா எல்லாப் பையன்களிடமும் சொன்னான். பையன்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. நாகராஜன் சிங்கப்பூரிலிருந்து அவன் மாமா அனுப்பி வைத்த ஆல்பத்தை எல்லோரிடமும் காட்டினான். பள்ளிக் கூடத்தில் காலை முதல்மணி அடிப்பதுவரை பையன்கள் நாகராஜனைச் கற்றிச் சூழ நின்று கொண்டு ஆல்பத்தைப் பார்த்தார்கள். மதியம் இடை வேளையிலும் அவனை மொய்த்தார்கள். கோஷ்டி கோஷ்டியாக வீட்டிற்கு வந்தும் பார்த்து விட்டுப் போனார்கள். பொறுமையோடு