கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2016

60 கதைகள் கிடைத்துள்ளன.

அனுவும், அவள் விரும்பிய அவனும்

 

 கண்ணாடி முன் நின்று என்னையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்பொழுதும் வெளியில் போகும்பொழுது பார்த்துக் கொள்ளுவேனே !இன்னைக்கி என்ன இது புதுசான்னு தெரியலே! தனிமை உணர்வு என்னையே மறு முறை பார்க்கத் தூண்டியது!. தனிமையின் மிருதுவான உறுத்தல்களும் ,அதனுடைய உணர்வுகளும் ஏற்படுத்தும் இனிய அசைவுகள் இன்னும் என்னைப் பார்க்கத் தூண்டுகிறது! பார்த்துக் கொண்டேன்.! சற்று திரும்பியதனால், சட்டென்று என் நெற்றியில் பட்டும் படாமல் கண்ணிமைகளை குறுகுறுப்பாக முன்னால் வந்து விழுந்த என் கேசம் ! அதைச் சரி


ஓநாய்கள்

 

 நத்தார்ப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. பக்கத்து வீட்டுக்கார கிறிஸ்வத குடும்பத்தினர், நத்தார்ப்பண்டிகையைக் கொண்டாட, பலகார வகை செய்யும் ஆரவாரம் குமாரின்; கவனத்தை இழுக்கிறது. பக்கத்து வீட்டாருக்கு அண்டை அயலாரானவர்களைப் பற்றிய பெரிய சிந்தனையற்றுத் தங்கள் வேலைகளில் கவனமாக இருக்கிறார்கள். குமாருக்கும்; பக்கத்து வீட்டாரைப் பற்றிச் சிந்திக்க அதிக நேரமில்லை. அவனின் அந்தக் கிராமத்துக்குள், சிங்கள இராணுவம் ரோந்து வந்துபோய் ஒரு மணித்தியாலமாயிருக்கலாம்.அதன்பின் ஊர் மக்கள் அவசர அவசரமாகத் தங்களின் அன்றாட வேலைகளைக் கவனிக்கத்தொடங்கி முடிக்கப்


சபலம்

 

 மாலை மணி ஆறு. அலுவலகத்திலிருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். அவன் மட்டும் பியூன் சிங்காரத்தின் வரவிற்காக காத்திருந்தான். சிறிது நேரத்தில் சிங்காரம் ஒரு அசட்டுச் சிரிப்புடன், “சார் போகலாமுங்களா…கருக்கல்ல போனாத்தான் சீக்கிரம் திரும்பியாரலாம்” என்றான். இவன் ஒரு புன்சிரிப்புடன் மேஜையின் இழுப்பறைகளைப் பூட்டிவிட்டு, சாவிக் கொத்துகளை கையில் எடுத்துக் கொண்டு மின் விசிறியையும் விளக்கையும் அணத்துவிட்டு சிங்காரத்தைத் தொடர்ந்தான். வெளியே இருந்த தன்னுடைய ஸ்கூட்டரில் சிங்காரத்தை அமரவைத்து அவன் சொன்ன வழியில் ஸ்கூட்டரை செலுத்தினான். அவன் தன்


காதல் நிற ஓவியங்கள்

 

 ”I feel lousy” என்றான் அவன். மஞ்சுளா, ஆபீஸ் முடிந்து மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு பஸ் ஏறக் காத்திருக்கையில், ஒரு கடை வாசலில் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நபர் யார் எனப் பார்த்தாள்… அட, ஹரி. ”ஹரி, ஏன் இங்க உட்கார்ந்திருக்கீங்க? உடம்பு சரியில்லையா?” அவன் நிமிர்ந்து பார்த்து, ”மஞ்சு மேடம்” என்றான் பலவீனமாக. ஆட்டோக்காரரைக் கூப்பிடுவதற்குள் ஹரி ஏறத்தாழ மயங்கியிருக்க, ”கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பா” என்றாள் ஆட்டோக்காரரைப் பார்த்து மஞ்சுளா. ”என்னம்மா குடிச்சிருக்காரா?” என்றார். ”சேச்சே…”


மகிழ்ச்சி

 

 “”அப்பொழுது நீ மகிழ்ச்சியாயிருக்கிறாய் என்று சொல்லு” என்றான் வித்யாசாகர். “”ஆமாம்” என்றேன் நான். அவன் தன்னுடைய கனத்த வலது கையால் முகத்தை மூடிக்கொண்டான். இடது கண்ணால் என்னை உற்று நோக்கினான். அவன் என்னை அப்படிக் கூர்ந்து பார்க்கும்போதெல்லாம் எனக்கு உடம்பு குறுகுறுத்தது. அவனை நான் கடைசியாகப் பார்த்து பன்னிரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன. எங்கள் கல்லூரியில் அவன் மாணவர் தலைவராக இருந்தான். நான் தமிழ் மன்றத்தின் காரியதரிசி. இப்பொழுது அவன் மாறிப் போயிருந்தான். அவன் தேகத்தில் சதைப்பிடிப்பு கூடியிருந்தது.