Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 8, 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

குடியிருந்த கோவில்

 

 நேரே இருந்த முருகப்பெருமானை கைகூப்பி வேண்டிக் கொண்டாள் தாரா. “”யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நான் போய்ச் சேர வேண்டும் முருகா” கட்டிலில் படுத்திருந்தபடி முருகப்பெருமானின் காலண்டரைப் பார்த்தபடி தன் வேண்டுதலை முணுமுணுத்தாள். கணவன் இருந்தவரை சந்தோஷமாய் வாழ்க்கையைக் கழித்தாள். மூன்று பெண்கள். கணவனுக்கு மத்திய அரசில் நல்ல உயர்பதவி. மூன்று பெண்களையும் கரை சேர்த்து நிம்மதியாய் ஐந்து வருடம் கணவனுடன் இருந்தாள். இறைவனுக்கு அது பொறுக்கவில்லை போலும் கணவனைப் பறித்துவிட்டார். இரண்டாவது மகள் வீட்டில் தான்


எழுத்தாளனின் மதம்

 

 முதல் நாள் மாலை வீழ்ந்த சூரியன் இன்று காலை எழுந்து வருவான் என்று எதிர்நோக்கியவாறே நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்துக்கொண்டிருக்கும் சர்க்கரை வியாதிக்காரர்கள் சங்கமிக்கும் ஆசியாவின் மிகப்பெரிய கடற்கரையான சென்னை மெரீனாக் கடற்கரை. கடலலைகள் தாவிக் குதித்து முத்தமிட்டு சத்தமிட்டு மிச்சமான எச்சிலை நுரையாக மணற்பரப்பில் ஒவியம் வரைந்துக்கொண்டிருக்கும் அழகை ரசித்துக்கொண்டிருந்த தீபாவின் முதுகுக்கு பின் வந்து அவளின் மீன்விழி கண்களை பொத்தி தன் மார்பில் இழுத்து அணைக்கிறது ஓர் உருவம். “ஹே மணி என்ன ……” என்று


மாற்றம்

 

 தனது சகோதரியின் திருமண விடயங்கள் பற்றிய செய்தியை தன் நண்பர்களுக்கு பேஸ்புக்கில் அறிவித்துவிட்டு சந்தோஷமாக வந்த முரளிக்கு தூரத்தில் மூச்சிரைக்க ஓடிவரும் சிறுவனின் தோற்றம் மனதை என்னவோ செய்வது போல் இருந்தது. அவன் தன்னை நோக்கித்தான் வருகிறான் என்று கணிப்பிட்டுக் கொள்வதற்கு முதல் அந்தச் சிறுவன் முரளியை அண்மித்துவிட்டான். ‘மஹத்தியா வாசனா சம்பத் ஒன்டு வாங்குங்கோ’ ‘வேண்டாம் போ’ ‘அனே மாத்தியா. காலைலருந்து ஒன்னும் சாப்பிடலை. அம்மாவும் குட்டித்தங்கச்சியும் வீட்டில பசியில இருக்காங்க. புண்ணியம் கிடைக்கும்’ ‘உன்


தொடு வான நட்சத்திரங்கள்

 

 நந்தினியின் மனதில் தங்க மறுத்து நழுவி ஓடும் வெற்றுச் சங்கதிகளைக் கொண்ட உயிரோட்டமற்ற நினைவுகள் சூழ்ந்த அந்தகார இருப்பினிடையே அந்த வயதிலேயே அவள் கண்டது நிழலாகத் திரிந்து போகின்ற வாழ்க்கையையல்ல, அதிலும் மேலான ஓர் பெரும் ஒளி நிலா,, ஆன்மாவின் உயிர்ப்பு நிலைமாறாமல் அவள் அடி மனசெங்கும் வியாபித்துக் கிடப்பதாய் அவளுக்கு உணர்வு தட்டும். அந்த நிலாக் குளித்த சங்கதிகள் அவளுள் ஏகமாய்க் குவிந்திருக்கும் அதன் பொறிதட்டும் போதெல்லாம் ஆன்மீக ஞானம் கைவரப் பெற்ற ஒரு ஞானி


இரண்டு இட்லி

 

 வரிசையில் நின்று கொண்டிருந்தான். அம்மாவுக்கு என்ன வாங்கலாம்? என்று யோசித்துக் கொண்டிருக்கையில், பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர், “தம்பி…! அவரு வந்துட்டாரு, நீ போப்பா…!” -என்றார். எழிலும் உள்ளே சென்று பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான். மீண்டும் ஆழ்ந்த சிந்தனையில், அம்மாவுக்கு புடவை வாங்கலாமா? இல்லை இருக்கும் இந்த காசுக்கு ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்கலாமா? என்று பலவாறாய் யோசித்து நடந்து போய்க்கொண்டிருக்கையில், ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள். தன் அம்மாவும் தனக்கு