Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 18, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

கொசு

 

 துவக்கப் பள்ளியில் ஏழு வருஷங்களும் உயர்நிலைப் பள்ளியில் எட்டு வருஷங்களும் (றாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் தலா ஒரு வருடம் உபரியாகிப்போனதால்) அரசு கலைக்கல்லூரியில் மூன்று வருஷங்கள் ஏறத்தாழ அதே வகுப்புத்தோழர்களுடன் காலம் கழித்ததால் எவ்வித மாற்றமும் அடையாது இத்தனை வருஷங்களும் கிருஷ்ணமூர்த்தி என்னும் அவன் பெயர் அனைவராலும் வயது வித்தியாசமின்றி கொசு என்றே அழைக்கப்பட்டு வந்தது. கல்லூரியில், அவன் காதலிக்கலாம் என்று திட்டமிட்ட பெண்ணுக்கும் நண்பர்களால் கொசு என்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டான். இந்தப் பெயரையும் கொஞ்சமாக அவன்


நாய்களைப் பற்றிய சில சிந்தனைகள்

 

 நானும் என் ராஜமும் மைத்துனியின் கல்யாணத்திற்குச் சென்று விட்டு உத்தமர் கோவிலிலிருந்து ரயிலில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். ஏதோ ஒரு ஸ்டேஷனில் (பெரிய மனுஷர்களைப் போல் இந்த இடத்தில் எனக்கும் ஞாபகம் வர மறுக்கிறது!) பிளாட்பாரத்தின் எதிர்ப் புறமாக இரண்டு சின்னப் பயல்கள் வண்டிக்குள் தாவினார்கள். எட்டு, ஒன்பது வயதுக்குள்தான் இருக்கும்; அரையில் மிக அழுக்கான – ஜலத்தில் நனையாத – வஸ்திரம்தான் உடுத்தியிருந்தார்கள். நாங்கள் இருப்பதையே அவர்கள் லட்சியம் செய்யவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவுடன் அவர்களில்


ஒரு கைபேசி கலவரம்

 

 இரவு மணி 10.00. அறையில் படித்துக்கொண்டிருந்த எனக்கு கை நழுவி புத்தகம் விழுந்தது நான்காவது முறை. இனி படிக்க முடியாது. தெளிவாய்த் தெரிந்தது. விழுந்த புத்தகத்தை எடுத்து மேசை மேல் வைத்து நாற்காலியை விட்டு எழுந்து அறையை விட்டு வெளியே வந்தேன். கூடத்தில் தொலைக்காட்சிப் பெட்டியில் என்னவோ ஓடிக்கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய என் மனைவி வள்ளி உட்கார்ந்தபடியே “கொர்ர்’. தட்டி எழுப்பினால் திடுக்கிட்டு விழிப்பாள். அடுத்து… தூக்கத்திற்கு அது கெடுதல். ஆகையால் மெல்ல அவள் தோள்மீது


சின்னச் சின்ன சந்தோஷம்

 

 “”டேக் இட் ஈஸி” என்று கவிதா முதுகில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தான் ராமலிங்கம். “”இப்ப நான் என்ன கேட்டேன்னு இப்படிக் கலங்கறே? ஓ காட்!” கவிதா மவுனமாக இருந்தாள். இந்தக் கோடை காலத்தில், “ஸôன்டியாகோ”விலிருந்து சென்னைக்கு வருவது அவருக்குப் பிடிக்காது. வெயில் சுட்டெரிக்கும். அவ்வப்போது லேசான தூறல் விழுந்து பூமி குளிர்ந்தால் கூட, கொசுக்கள் மொய்த்து படையெடுக்கும். உறவினர் வீட்டுக்குப் போவதென்றால் ஆட்டோவில் வீசுகிற அனலும் போக்குவரத்து நெரிசலும்… இருந்தாலும் வேறு வழியில்லை. கணவருடைய அத்தை இறந்து


பூப்பூத்து…

 

 பார்க்கப் போன இடமும் பார்க்கச் சென்ற நபரும் முக்கியப்பட்டுப் போகிறார். அள்ளிச் சிதறிச் சிரித்த விண்மீன்களின் கைபிடித்தும்,அதனுடன் பேசியும் சிரித்தும், உறவாடியுமாய் போய்க் கொண்டிருந்தவன் அமர் ந்திருந்த இரு சக்கர வாகனம் காற்று செல்லும் திசையில் பறந்து கொண்டிருக்கிறது. பறக்கட்டும், பறக்கட்டும் அப்படியே கனம் தெரியாமல் உடல் இலகு வாகி பஞ்சு போல் லேசாகி லேசாகி மேல்,மேல் சென்று விண் மீனகள் கண்சிமிட்டி மிதக்கிற வெண்பஞ்சு பொதிகளுக்குள்ளாய் மிதக்கச்செய்யட்டும், அங்கே சாலை இல்லை,போக்குவரத்து இல்லை. போக்குவரத்து விதிகளோ