கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 16, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

படுக்கை

 

 இனிப் படுக்கலாம் என நினைத்து, வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடினான். கட்டிலில் தலையணையை நிமிர்த்தி வைத்து சாய்ந்து படுத்தவாறே வாசித்துக்கொண்டிருந்தவன் நேரம் கடந்துவிட்டபடியாற்றான் நித்திரை கொள்ளலாம் என நினைத்தான். பத்தரைமணி ஒரு பெரிய நேரமில்லைத்தான். ஆனால் இப்படியான குளிர்கால இரவுகளில் நித்திரை சரியாக வருமுன்னரே போர்த்து மூடிக்கொண்டு மெத்தைச் சூட்டில் கிடப்பது நல்ல சுகமாக இருக்கும். மேஜையில் எட்டி புத்தகத்தை வைத்தான். பின்னர் தலையணையைச் சரிசெய்துகொண்டு கையை நீட்டி ரேபிள் லாம்பை அணைத்தான். படுத்திருந்து வாசிப்பதற்கு விசேடமாக


எல்லாம் இழந்தபின்னும்…

 

 அந்த வீட்டிலிருந்து வெளியே வரும்பொழுதுதெல்லாம் இப்படித்தான் அந்த முயலும் சிங்கத்தின் குகையிலிருந்து வெளியே வந்திருக்கும் என்ற நினைப்பு எப்பவும் வரும். வரும் வழியெல்லாம் முப்பது ஈரோவைப்பற்றிய கனவும் அது இருக்கா இருக்கா என்று ஜீன்ஸ் பொக்கற்றை தடவி பார்ப்பதும் வெளியே எடுத்துப்பார்த்து தொலைத்த நாட்கள் நினைவில் வர மனம் எதை எதையோ நினைத்து பெருமூச்சை வெளியே தள்ளியது. இப்¦;பாழுதெல்லாம் வாழ்வின் பிடிப்பு மெல்ல நழுவுவதுபோல் உணர்வு எழுந்து கொண்டே இருக்கிறது. எல்லாமே கொஞ்ச நாட்களில் சலிப்பு தட்டிவிடுகிறது.


இரவு மணி 11.59

 

 “எனக்குள்ளும் இந்த கதைக்குள்ளும் நுழைய கடவுச்சொல் ஒரு ஊர்கின்ற உயிரினத்தின் பெயர். அது பாம்பின் வகையறாவோ அல்லது பல்லியின் வகையினமோ அல்ல” என்ற அறிவிப்பு சம்பந்தனை வெகுவாக கவர்ந்தது. அவன் ‘ஆக்டோபஸ்’ என்ற மெய்நிகர் இரவு விடுதியில் ஒரு இணைய அவதாரமாகச் சுற்றிக்கொண்டிருந்தான். ‘ஹாய்! உனக்கு இந்த வாயிலில் பேரதிர்ஷ்டமும் பெருந்துய்ப்பும் காத்திருக்கிறது’ என்று சொல்லி கூடத்தில் தூணுக்குப் பின் மறைந்திருந்த பச்சை வர்ண ஒளித் திரையின் முன் சம்பந்தனை கூட்டிக்கொண்டு வந்து விட்டு விட்டு ஊர்சுளா


கோடு

 

 நாட்பட்ட உந்துதல் தாளமுடியாமலேதான் வரைபலகையையும் தூரிகையையும் எடுத்தான். உந்துதல் என்றால்,ஒருநாள் இருநாள் உந்துதல் அல்ல. கிட்டத்தட்ட ஏழு வருட உந்துதல். இன்றைக்கு உச்சியிலும் மறுநாள் கிடப்பிலும் என்று காண்புகட்கேற்ப, நினைவில் நுரைத்து வடியும் உந்துதல். வீடுகூட்டும் தும்புக்கட்டைகூட, அந்தச் சீனத்து எழுத்தோவியனின் தூரிகையோட்டத்தை எழுப்புவதுண்டு. சொல்லப்போனால், ஒழுக்கிலே இலயித்து நகரும் நதியும்கூட. செஞ்சீனத்துச் சைத்திரீகனின் கைவிரல்களின் துடிப்பையும் தூரிகையின் துரிதத்தையும் மட்டுமாவது, ஒரு தளக் கடதாசியிலே ஏற்றிவிடவேண்டிவிட விரும்பித்தான், இத்தனை நாட்பயிற்சியும் நீர்வண்ணமும் வரைபலகையும். அன்றைக்கு மாலை


கனபேர் வந்து போயிருக்கினம்

 

 கதைக்கிற ஒருத்தருக்கும் உண்மையிலை சனத்திலை அக்கறையில்லை, எல்லாரும் தங்கடை சுயநலத்துக்கும், நாங்களும் இருக்கிறம் எண்டு அடையாளம் காட்டவும் கதைக்கினம். இன்னொருத்தருக்கு ஒரு கஸ்டம் எண்டால் அரைவாசிப்பேருக்கு சந்தோசம். அரைவாசிப்பேருக்கு அக்கறையில்லை. உண்மையான அக்கறையுள்ளவன் கதைக்கமாட்டான், கதைக்கிறதைவிட செய்யவேண்டிய காரியங்கள் நிறைய இருக்குது’ அதிகமான சமூக அக்கறை காரணமாகவோ, இந்த சமூகக்கட்டமைப்பின் மீதான திருப்தியீனமோ, எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணமோ தெரியவில்லை, சரவணன் பேச்சில் எப்போதும் இப்படியான ஒருவித கோபம் தெரியும். இரண்டுமே மணல்தான் என்றாலும் வடமராட்சி