கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2013

76 கதைகள் கிடைத்துள்ளன.

ஜனவரி 26

 

 விகாஸ் ராவல், குடியரசு தின விடுமுறையின் படபடப்பு இல்லாத காலை நேரமொன்றில், அஹமதாபாத்தின் நவ்ரங் புராவில் இருந்த மான்சாரியா அபார்ட்மெண்ட்ஸ் என்ற தன் குடியிருப்பின் வாசலில் கைனடிக் ஹோண்டாவைத் துடைத்துக் கொண்டிருந்த போது அந்தப் பயங்கரம் நிகழ்ந்தது.. குஜராத்தின் காலடியில் பூமி நித்திரை கலைந்து ஸீஸ்மிக் உதறலில் லேசாக சோம்பல் முறிக்க அந்தப் பிரதேசம் நில நடுக்கத்தில் உதற ஆரம்பித்தது. மெலிதான அதிர்வு தொடங்கி.. அலை அலையாய் கூடி… முன்னும் பின்னும் உலுக்கும் பேயாட்டம் ஆடியது. சட


சிகரத்தை நோக்கி….

 

 அவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்ற கேள்வியைச் சுற்றியே அவளின் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இது சரியாக வருமா என்ற கவலையும் சேர்ந்துகொண்டது. இரயில் வந்து சேர இன்னும் நேரமிருந்தது. ஸ்விஸ் இரயில்கள் குறித்த நேரத்தில் தவறாமல் வந்துவிடும் என்பது அவளது இரண்டு மாத வாசத்தில் உணர்ந்து ஆச்சர்யப்பட்ட விஷயம். அவளைத் தவிர யாருமே இல்லாமல் அந்தத் தடமே வெறிச்சோடிப் போயி ருந்தது. அவள் உதட்டில் திடீரென ஒரு விரக்திச் சிரிப்பு. அவளுடைய வாழ்க்கையும் வெறிச்சோடிப் போய் விடக்


நாளை….

 

 அந்த இளம் போலீஸ் அதிகாரியின் சிரமமான நீண்ட சொற்பொழிவின் இறுதியில் அந்த போலீஸ் அதிகாரியின் உயிர் பிரிவதுடன் படம் முடிந்தது. சோர்ந்து போன அவன் முகம் க்ளோஸ் அப்பில் வர ‘இவன் போன்றோரின் பயணங்களுக்கு முடிவில்லை’ என்ற வாசகத்துடன் திரை ஒளிர்ந்து இருண்டது. அந்த ‘பிரிவியு தியேட்டரி’ன் விளக்குகள் உயிர் பெற வெளிச்சம் பரவியது. கதிரவன் ஆவலுடன் அந்த படத்தை பார்க்க வந்திருந்த அந்த இளைஞன் மற்றும் அவனுடன் இருந்த இரண்டு நபர்களின் முகத்தை பார்த்தான்.  குறிப்பாக


மா…அம்…..மா!

 

 கல்பனாவிற்கு அவளுடையத் தோட்டத்தின் மீது மிகுந்த ஆசையும் ஆர்வமும் உண்டு. அந்த சிறிய தோட்டத்தில் எல்லாமே அவள் கையால் நட்டு வளர்த்த செடிகள்தான். வீட்டின் முன் புறத்தில் ஒரு பாத்தி நிறைய வெண்டை: ஒரு பாத்தி நிறைய தக்காளி. மறு புறத்திலே ஒன்றில் கத்திரிக் காய் செடிகள்; மற்றொன்றில் மிளகாய். எதிர்புறத்தில் சற்றே இடைவெளி விட்டு நான்கு காலி•ளவர் கொடிகள். ஒரு ஓரமாக கறிவேப்பிலைக் கன்று ஒன்றே ஒன்று மட்டும்! அள்ளித் தெளித்த வகையிலே மசமசவென்று கொத்து


விடிந்து கொண்டிருக்கிறது

 

 விடியப் போகிறது. ”ஆண்டு இரண்டாயிரத்து நூறு … டிசம்பர் மாதம்… பதினெட்டாம் தேதி… காலை ஐந்து மணி… இருபது நிமிடம்… உங்கள் நாள் இனிய நாளாக இருக்கட்டும். கடியாரம் இனிமையான பெண்குரலில் சொல்லி ஓய, விளக்கு மெல்ல ஒளிர்கிறது. அவன் எழுந்து உட்கார்கிறான். ஏ.சி.யின் இதமான குளிரில் அவள் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாள். ராத்திரி எத்தனை மணிக்குத் திரும்பி வந்தாளோ… முன்னறைக்கு வந்து வலைக்கருவியை (Network Device) இயக்குகிறான். அது கம்ப்யூட்டர் திரை மட்டும்தான். சம்பிரதாயமான கம்ப்யூட்டர்கள்