பாம்பும் காகமும்

 

ஒரு காட்டில் அரசமரம் ஒன்று இருந்தது. அந்த அரசமரத்திற்கு கீழே பாம்பு புற்று இருந்தது. தினமும் காகமானது தன்னுடைய கூட்டிலே முட்டை ஈன்று விட்டு இரை தேட செல்லுமாம். காகம் மரத்தை விட்டுச் சென்றவுடன் கீழே இருக்கும் பாம்பானது மரத்திற்கு மேலே சென்று காகத்தின் முட்டையை உடைத்துக் குடித்து விடும். திரும்பி வந்து பார்க்கும் காகத்திற்கு பெரும் ஏமாற்றமாக இருந்து வந்தது. முட்டை வைத்து குஞ்சு பொறிக்க முடியவில்லையே என்று வேதனையில் துடித்தது.

நாம் சென்றவுடன் தினமும் தன்னுடைய முட்டையை உடைத்துச் சாப்பிடுவது யார்? என்று கண்டறிய நினைத்தது. ஒருநாள் காகமானது இரைக்குத் தேடுவது போல் சென்றுவிட்டு பாதி வழியிலேயே திரும்பி வந்தது.

பாம்பு காகத்தின் முட்டையை உடைத்துக் குடித்துக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த காகத்திற்கு கோபம் தலைக்கேறியது. பாம்பை தன்னுடைய மூக்கிலே கொத்தி சாகடிக்க வேண்டும் என்று பாம்பைத் துரத்தியது. காகம் வந்ததை அறிந்த பாம்பு சீக்கிரமாய் மரத்தின் கீழிறங்கி புற்றுக்குள் சென்று ஒளிந்து கொண்டது. அதன்பிறகு காகத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்தப் பாம்பை கொல்ல வேண்டும். அப்போதுதான் தன்னுடைய முட்டையைக் காப்பாற்ற முடியும் என்று காகம் யோசனை செய்தது. காகத்திற்கு இப்போது யோசனை ஒன்று வந்தது.

நேராக அந்த நாட்டு ராஜாவின் அந்தபுரத்திற்குப் பறந்து சென்றது காகம். அந்த புரத்தில் தன்னுடைய நகையெல்லாம் கழட்டி வெளியே ஒரு ஓரதத்தில் வைத்துவிட்டு ராணி குளித்துக் கொண்டிருந்தாள். இந்தக் காகமானது ராணியின் நகையில் ஒரு ஆபரண நகையை மட்டும் வாயிலே கவ்விக்கொண்டு மேலே பறந்தது. இதைப்பாரத்த ராணி,

“காவலர்களே ஓடிவாங்கள்… காவலர்களே ஓடிவாங்கள்… என்னுடைய நகையை காகம் ஒன்று தூக்கிச் செல்கிறது” என்று கத்தினாள்.

பெண் காவலர்கள் ஓடிச்சென்று ஆண்காவலர்களிடம் சொல்ல, ஆண்காவலர்கள் அந்த காகத்தைப் பின்தொடர்ந்து சென்றனர். காகமோ நேராகச் சென்று பாம்பு இருக்கும் புற்றுக்குள் போட்டுவிட்டு மரத்தின் மேல் போய் அமர்ந்து கொண்டது.

ராணியும் தோழிகளும் அவ்விடம் வந்து சேர்ந்தார்கள். காவலர்கள் பாம்பு புற்று என்று தயங்கி நின்றார்கள். ராணிக்கோ நகை வேண்டும். அதனால் புற்றை உடைத்து நகையை எடுங்கள் என்று கட்டளை இட்டாள்.

புற்று உடைக்கப்பட்டது. புற்றிலிருந்து பாம்பு வெளியே வந்தது. காவலர்களால் பாம்பு கொல்லப்பட்டது. புற்றில் இருக்கும் நகையை காவலர்கள் எடுத்த ராணியிடம் ஒப்படைத்தார்கள்.

இப்போது அரசமரத்தில் காகம் குஞ்சுகள் பொறித்து சந்தோசமாக வாழ்ந்து வந்தது.

ஆசிரியர் குறிப்பு:
கொரோனா வைரஸ் காரணமாகக் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு வந்துள்ளேன். பல மாதங்களுக்குப் பிறகு அம்மா அப்பாவுடன் நீண்டதொரு உறவு. அப்போதுதான் அம்மாவிடம் கதை கேட்க ஆரமித்தேன். சின்ன வயசில் நிறைய கதைகள் சொல்லுவார்கள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதையென கடந்த பத்து நாட்களிலும் பத்துக் கதைகள் கேட்டேன். இந்தக் கதைகள் யாவும் என்னுடைய கற்பனையில் உருவானவை அல்ல என்பதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இக்கதைகள் முழுவதும் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சொல்லக்கூடிய கிராமத்துக் கதைகளே ஆகும். கதைகள் பெரும்பாலும் சின்னச்சின்ன கதைகளைக் கொண்டே அமைந்துள்ளன.
 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்தச் சாலையின் மேட்டுப்பகுதி ரொம்ப உயரமாக இருந்தது. என்னால் சைக்கிளை கொஞ்சம் கூட மிதிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர் தூரம் இருக்கும். உடம்பில் உள்ள பனியன், வியர்வையால் நனைந்து போயிருந்தது. சூரியன் மறைவதற்குள் எப்படியாவது அந்த மலைக்கிராமத்திற்குச் சென்றாக வேண்டும். ...
மேலும் கதையை படிக்க...
காற்றைப் பிளந்து வந்து கொண்டிருந்தது அந்தப் பேருந்து. மேடு பள்ளங்களைத் தாண்டி குதிரையாய் பறந்தது. அந்தப் பேருந்தில் இரண்டு பக்கங்களிலும் குதிரையின் படம் வரையப்பட்டிருந்தது. அதனாலோ என்னவோ இப்படி வேகமாக புழுதிப் பரப்பியது. “என்னங்க பையன் ராத்திரி வரும்போது புரோட்டா கேட்டான்” ...
மேலும் கதையை படிக்க...
வீதியில கழுதை ஒன்னு கால்ல அடிபட்டு வந்திட்டு இருந்தது. அந்த வழியா வந்த எண்ணெய் ஆட்டுக்கின்ற செக்கன் ஒருவன் அடிபட்ட கழுதைய பார்த்தான். ஐயோ! பாவமன்னு அந்தக் கழுதையின் கால்ல, துணியை எண்ணெய்ல்ல நனைச்சி கட்டி விட்டான். கால் கட்டுப்போடப்பட்ட பிறகு கழுதை சந்தோசத்துல ...
மேலும் கதையை படிக்க...
உடுக்கைச் சத்தம் அங்கிருப்பவர்களை ஆட செய்தது. மேளமும் உறுமியும் மாக்கிழவன் கோவில் உற்வசத்தை பறைச்சாற்றியது. கோடிமலையைச் சுற்றி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள் வந்து கொண்டே இருந்தனர். மாட்டு வண்டியில் வந்தனர். சிலர் சைக்கிளில் வந்தனர். இன்னும் சிலர் இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
அந்தக் குடிசையில் உள்ளே நுழைந்தபோது விளக்கின் ஒளி எங்கும் நிறைந்திருந்தது. சுவற்றில் கண்ணாடி போட்ட அட்டையினுள்ளே புகைப்படமாக கோவிந்தனும் அவனது மனைவி வெண்மதியும் திருமணக்கோலத்தில் அழகாய் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அதற்கு பக்கத்தில் உள்ள புகைப்படத்தில் கோவிந்தன் வெண்மதியுடன் அழகான ஒரு ஆண்குழந்தையும் புன்னகை ...
மேலும் கதையை படிக்க...
தெருவில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அச்சிறுவர்கள் போடும் சத்தம் அத்தெருமுழுக்க கேட்டது. தெருவின் வடமேற்குப் பகுதியில் வேப்பம்மரம் ஒன்று இருந்தது. அந்த வேப்பமரத்தைச் சுற்றிலும் பத்துப்பேர் கொண்ட கும்பல் ஏதோ ஒரு மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசுவது யாருக்கும் புரியவும் இல்லை. அவர்களை ...
மேலும் கதையை படிக்க...
மாலைநேரம். சூரியன் மேற்கில் தெரியவில்லை. ஆனாலும் இன்னும் இருட்டு ஆகாமல் வெளிச்சம் இருந்து கொண்டுதான் இருந்தது. திருவேங்கடம் நடையைக் கொஞ்சம் வேகமாக்கிக் கொண்டார். எப்படியாவது இருட்டுருதுக்கு முன்னாடி வீட்டுக்குப் போயிடனும். மாசம் ஒருத்தன்கிட்ட சோறு. இன்னிக்கு மத்தியானத்தோட பெரியவன் வீட்டுமுறை முடிஞ்சிடுச்சி. ...
மேலும் கதையை படிக்க...
“அம்மா பேஸ்ட் பிரஷ், சோப்பு ஷாம்பு துண்டெல்லாம் எடுத்து வச்சிட்டியா…” என்றான் கதிர். “எல்லாம் எடுத்து வச்சாச்சு. ஆமாம்! நீ ஏன் இப்படி குட்டிப் போட்ட பூனையாட்டம் குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டு இருக்க. ஒரு இடத்துல போயி உட்காருடா” என்றாள் கதிரின் ...
மேலும் கதையை படிக்க...
கட்டியக் கணவனோடு திருவிழாவிற்குச் செல்லுகிறாள் ஒருத்தி. தன்னுடைய உடல் முழுக்க அலங்கரித்துக் கொள்ளுகிறாள். தலைநிறைய பூச்சூடிக் கொள்ளுகிறாள். திருவிழாவிற்குப் போகும்போது நடுவில் ஆறு ஒன்று செல்கிறது. ஆற்றிலே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரை தாண்டி அந்தப்பக்கம் எப்படி செல்வது? திருவிழாவைக் கொண்டாடுவது எப்படி ...
மேலும் கதையை படிக்க...
இந்தக்கதையில் ஏன்? எப்படி? என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏனென்றால் அது கதை. அப்படித்தான் இருக்கும். ம்ம்… என்று மட்டும் கொட்டுங்கள். அது போதும்! ஒரு கிராமத்தில் நாய் ஒன்று வாழ்ந்து வந்தது. தினமும் அந்த நாயானது ஒவ்வொரு வீடுவீடாகச் செல்லும். வீடுகளில் சொல்லும் ...
மேலும் கதையை படிக்க...
எச்சில் இலை
ஒரு சிறுவனின் அழுகை
தவறு யார்மேல் உள்ளது? – ஒரு பக்க கதை
மாக்கிழவன் கோவில்
திரௌபதை
பிச்சைக்காரியின் மகன்!
நானும் இந்த அறையும்
கழிவறையின் கதவு
முதலையும் பெண்ணும் – ஒரு பக்க கதை
நாயும் பொன்னும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)