ரிசப்ஷனிஸ்ட் – ஒரு பக்க கதை

 

“முதலாளி நம்ம ஓட்டல் ஒரு சின்ன ஓட்டல், இதுக்கு எதுக்கு முதலாளி ரெண்டு ரிசப்ஷனிஸ்ட். பெண் ரிசப்ஷனிஸ்ட் ஒருத்தரே போதும். தேவை இல்லாம் எதுக்கு இன்னொரு ஆண் ரிசப்ஷனிஸ்ட்?’

ரூம் பாய் சந்திரன் ஓட்டல் முதலாளி கண்ணபிரானைக் கேட்டான்.

கண்ணபிரான் பதில் சொன்னார்; “டேய் நம்ம ஓட்டலுக்கு வர்ற கஸ்டமர்களை வரவேற்று பதில் சொல்ல அழகா ஒரு பெண்ணை அப்பாயின்மெண்ட் பண்ணியிருக்கிறோம். எல்லா ஓட்டல்லயும் எப்பவுமே பெண்களைத்தான் அதிகமா ரிசப்ஷனிஸ்ட்டா வச்சிக்கறாங்க.

எதிர்பால் இன கவர்ச்சியா ஆண்களுக்கு பெண்களை ரிசப்ஷனிஸ்ட்டா போடுற எல்லோரும் வர்ற பெண்களுக்கு சிரிச்சு பதில் சொல்ல அவங்க எதிர்பாலினத்துல ஒரு ஆணைப் போடணுமுன்னு தோணமாட்டேங்குது.

பெண்கள் சிரிச்சு அழகா ஆண்களுக்கு பதில் சொல்லுற மாதிரி… வர்ற பெண் கஸ்டமருக்கு ஒரு அழகான ஆண் சிரிச்சு பதில் சொன்னா அது அவங்களுக்கு சந்தோஷம் தரும். அதுக்காகத்தான் தேவைக்கு அதிகமா ஒரு ஆம்பளை ரிசப்ஷனிஸ்ட் புரிஞ்சுதா?’

புரிந்தது என்று தலையசைத்தான் சந்திரன்.

“நம்ம முதலாளி இவ்வளவு பாசிட்டிவா சிந்திச்சா ஒரு ஓட்டலை சீக்கிரம் ஒன்பது ஓட்டலா ஆக்கிடுவார்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

– வி. சகிதா முருகன் (ஜூன் 6, 2011)

 

தொடர்புடைய சிறுகதைகள்
காலை நேரம்.‘டவுன் பஸ்’லிருந்து இறங்கி வந்த குமாரைப் பார்த்த நண்பன் முத்துசாமி “ என்ன குமாரு உன் டூ வீலர் என்னாச்சு?....டவுன் பஸ்ஸில் வருகிறாய்?..” “ தினசரி பெட்ரோல் விலை ஏறிட்டே போகுது!....டூ வீலரில் வந்தா குறைந்தது ஐம்பது ரூபா ஆகுது!....’டவுன் பஸ்’னா ...
மேலும் கதையை படிக்க...
அந்த விடுதியின் சமையலறையில் புத்தகங்களும், பத்திரிக்கைகளும் மேஜை மீது கிடந்தன. சமையல் செய்தபடியே படிப்பார்களோ என்று நினைக்கவோ அல்லது வேறு எங்கும் வைக்க இடமில்லாமல் சமையலறையில் வைத்துள்ளார்களோ என எண்ணவோ முடியவில்லை. காரணம் சமையல் செய்கிற அந்தநடுத்தர வயது கடந்த இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
டிசம்பர் காலை பத்துமணிக் குளிரில் கஸ்தூர்பா ரோடு குளிர்ந்து கிடந்தது. போன வருஷம் இதே நேரம் இந்த தில்லிக்கு வந்த போது நன்றாக மாட்டிக் கொண்டோம் என்று இருந்தது. ” இந்த நவம்பர்ல, சரியான குளிர் சமயத்ல வந்து சேர்ந்திருக்கே. நல்லதுதான் ...
மேலும் கதையை படிக்க...
இன்னமும் சில விஷயங்கள் ஞாபகத்திலிருந்து மறையவில்லை. முதன் முதலாய் அந்தப் பள்ளிக் கூடத்தில் அடியெடுத்து வைத்தது. பழைய வீட்டிலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரம். நானும் தம்பியும் பஸ்ஸிலேறித் தோப்புத் தெருவிலிருந்து இறங்கி பதினைந்து நிமிடம் நடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஊரின் ...
மேலும் கதையை படிக்க...
திங்கட்கிழமைகளை எனக்குப் பிடிக்காதென்று சிலர் நினைக்கிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால் திங்கட்கிழமைகளில் எனக்கு ஒருவித மனஸ்தாபமும் இல்லை. இவை வரும்போது பின்னால் இன்னும் நாலு நாட்களை இழுத்துக்கொண்டு வருவதுதான் எனக்குப் பிடிக்காது. அடுத்த சனி, ஞாயிறு நாட்கள் வெகு து}ரத்தில் இருந்தன. ...
மேலும் கதையை படிக்க...
மிச்சம்!
ஐந்து பூரிகளும் சில பத்திரிக்கைகளும்
அறமற்ற மறம்
தோப்புத் தெருவும் ஆலமரமும்
ராகு காலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)