பலன் – ஒரு பக்க கதை

 

‘’ஊரு பாதிக்கப்படுதேன்னு கவலைப்படாம எம்.எல்ஏ தன்னோட கெமிக்கல் ஃபாக்டரி கழிவை எல்லாம் ஆத்துல திருப்பி விடுறாரு. இதுக்கெல்லாம் நிச்சயம் தண்டனை கிடைக்கத்தான் போகுது!’’ கோபமாய்ச் சொன்னான் முருகன்.

‘’நம்ம ஊருக்கு நல்ல ரோடு வசதி இல்லை. குடிதண்ணீர் வசதி இல்லை. ஓட்டு கேட்க வந்தவர் அப்புறம் ஊர்ப்பக்கம் வரவேயில்லையே. எல்லாத்தையும் தெய்வம் பாத்துட்டுத்தான் இருக்குது!’ ஆவேசமாய் சொன்னான் கணேசன்

‘’நாம இன்னைக்கும் அன்றாடம் காய்ச்சியாத்தான இருக்கோம். அவரு நாலு தலைமுறைக்கு சொத்து சேர்த்துட்டாரு…அவர் செய்யற பாவத்துக்கான பலனை நிச்சயம் அனுபவிப்பார்!’’ தன் பங்குக்கு சொன்னான் ராமசாமி.

எல்லோரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் சுப்பையா, ‘எம்.எல்.ஏ செய்யற பாவத்துக்கான பலனை அனுபவிப்பார்னு சொல்றீங்களே… இரண்டாயிரம் ரூபாய் வாங்கிட்டு தப்பான ஒரு ஆளுக்கு ஓட்டு போட்டீங்களே…அதுக்கான பலனைத்தான் இப்போ நீங்க அனுபவிக்கிறிங்கன்னு உங்களுக்குப் புரியலையா?’’ என்றதும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டனர் எல்லோரும்..

-கீர்த்தி (29-12-10) 

தொடர்புடைய சிறுகதைகள்
குருதட்சணை!
அது பசுபதிக்குப் பிடித்தமான ‘பேன்ட்’. தமிழில் என்ன சொல்வார்கள் ‘பேன்ட்’டுக்கு? ‘இகந்த வட்டுடை’ என்று மணிமேகலையில் வருகிறது. ‘இகந்த’ என்றால், ‘தொளதொள’ என்றிருப்பது. பைஜாமாவாக இருக்கலாம். அப்படியென்றால், வட்டுடை என்பது பேன்ட்டைக் குறிக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழர்கள் பேன்ட் போட்டுக்கொண்டு ...
மேலும் கதையை படிக்க...
முத்துப்பெருமாள் அருவாளைக் கண்டாலே சீமைக் கருவேல மரங்கள் பயத்தில் தருக்… தருக்… என்று கழியும். நீளவாக்கில் ஓடிக் கிடக்கிற முள் விளார்கள் தலை தாழ்த்தித் தலை தாழ்த்திக் கூழைக் கும்பிடு போடும். சீமைக் கருவேல முள், விஷமுள். அதைக் கண்டால் எல்லாரும் ...
மேலும் கதையை படிக்க...
அன்றைய தினம் பணி முடிந்து பேருந்து ...
மேலும் கதையை படிக்க...
கடும் இருட்டு. எங்கு நோக்கினாலும் எதையுமே பார்க்கமுடியாத அப்படியொரு இருட்டு என் முன்னால் நீண்டு விரிந்துகொண்டிருந்தது. உற்றுப் பார்த்து எதையாவது உணர முற்படும்போது, அந்த இருட்டுக்குள் பற்பல அமிழ்ந்திருப்பதுபோலவும், இல்லாததுபோலவும் ஒரு நிச்சயமற்ற சூன்யமான தன்மை என்னைச் சுற்றிலும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. எங்கோ இழுத்துச் ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு ஒன்றும் புரியவில்லை....... இந்த ஊர்.... என்னைப் பயப்படுத்துகிறது.......எல்லாரும் என்னை மிதிப்பது போல தோன்றுகிறது...... என்னை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை....எனக்கு ஒன்றும் புரியவில்லை...நான் நகர்ந்து கொண்டே இருக்கிறேன்...நான் ஓய்ந்து போனது போல ஒரு வித மயக்கம் என்னை சூழ்கிறது....இதே திண்ணையில்... இதே ...
மேலும் கதையை படிக்க...
கி.பி.1964ஆம் ஆண்டு தை மாதம் 14ந்திகதி, தமிழ் மக்களின் முக்கிய திருநாளான தைப்பொங்கள் திருநாளன்று, அவன் இந்து சமுத்திரத்தின் முத்து , சொர்க்கம் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகின்ற, ஒரு காலத்தில் போர்த்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்களின் காலனியாக விளங்கிய, 'சிலோன் (Ceylon) என்றழைக்கப்பட்ட, ...
மேலும் கதையை படிக்க...
தலையில் - அடித்துக் கொண்டே பத்திரிகையின் முக்கிய செய்தியினை இரண டாவது முறையாகவும் படித் தான் மூர்த்தி. மனதினுள்ளே எல்லையற்ற எரிச்சலும் வெறுப் பும் பெருகிற்று. அவனையறி யாத அருவருப்பும் உண்டா யிற்று. மூன்றாவது முறையும் பத்திரிகைச் செய்தியினைப் படித்தான். “எழுத்தாளர் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்–1 | அத்தியாயம்–2 | அத்தியாயம்–3 நான் மலைச் சிகரங்களுக்கு மேலே பறக்கும்போது கண்ட கேஸ்பக்கின் என் முதல் அனுபவத்தை என்றும் மறக்க மாட்டேன். பனி மூட்டத்துக்குக் கீழே மங்கலாகத் தெரிந்த நிலப்பரப்பை நோக்கினேன். குளிர்ந்த அண்டார்க்டிக்கின் காற்று கேஸ்பக்கின் வெப்பமான ஈரப்பதமுள்ள ...
மேலும் கதையை படிக்க...
கவுசிகா: கவுசிகா நதி என்ற போர்டைப்பார்த்தான். அம்புக்குறிப்பிட்ட இடம் வெறும் தரையாய் கிடந்தது.. அம்புக்குறி நீண்டு கொண்டே போவது போலிருந்தது. சமீப ஆண்டுகளில் கவுசிகா நதி இருந்த தடத்தைக் காட்டுவதற்காக பல போர்டுகள் முளைத்து விட்டன. நதி இருந்த அடையாளம் தெரியவில்லை.பெரும்பாலும் எல்லா ...
மேலும் கதையை படிக்க...
கோவிலுக்குள் நுழையும்போதே கவனித்து விட்டேன். அந்தச் சிறுமி இன்றைக்கும் வந்திருந்தாள். அவள் உயரத்திற்கு ஒரு துடைப்பம். யாரையும் எதுவும் கேட்கவில்லை. கோயிலை பெருக்கத் தொடங்கினாள். பக்தர்கள் வந்தார்கள். பகவானை வழிப்பட்டார்கள். கோயிலை வலம் வந்தார்கள். அவள் அவர்களுக்கு இடையில் தான் பெருக்கிக் கொண்டிருந்தாள். ”ஏம்மா, இன்னும் கொஞ்சம் சீக்கிரமாவே ...
மேலும் கதையை படிக்க...
குருதட்சணை!
விபரீத ஆசை
தொடு திரை
விசவித்துக்கள்…!
அவன் தேடும் செவந்திப் பூ…
நீ எங்கிருந்து வருகிறாய்?
மூன்றாவது பக்கம்
காலம் மறைத்த மக்கள்
மூன்று நதிகள்
பணம் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)