க்ளப்

 

ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 12 மணியிருக்கும்.

பணக்காரர்கள், அரசியல் வாதிகள், பெரிய அதிகாரிகள் ஒதுங்கும் ஒரு கடற்கரை க்ளப். சீட்டாட்டம் , உயர் தர சாராயம், டின்னெர், அரட்டை எல்லாம் அங்கு அரங்கேறிக்கொண்டிருக்கும் நேரம் . எங்கும் கோலாகலம், சந்தோஷம், சிரிப்பு, பணத்திமிர், குடிபோதை.

ஒரு ஓரத்தில், கிட்டத்தட்ட பத்து பேர் அமர்ந்து உயர் தர விஸ்கியை உள்ளே தள்ளியவாறு கதை அடித்துக் கொண்டிருந்தனர். முதலாளிகள், பண முதலைகள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபதிகள்.

பேச்சு பண பலம் பற்றி திரும்பியது.

பிரபு சொன்னான் “ஒரு நாடு சுபிக்ஷமாக இருக்கணும்னா, அந்த நாட்டிலே, பணக்காரர்கள் நிறைய இருக்க வேண்டும். அவர்கள் செலவு பண்ணினால்தனே ஏழைகளுக்கு சாப்பாடு கிடைக்கும் . என்ன நான் சொல்றது”. பிரபு ஒரு பெரிய தொழிலதிபர்.

அதற்கு தாளம் போட்டான் , ராகவன் , ரியல் எஸ்டேட் அதிபதி. “ ஆமாமா ! பணம் இருந்தால் தான் நம்மை மதிக்கிறாங்க ! இல்லாட்டி போட்டு மிதிக்கறாங்க” சிரித்தான்

“இதை நான் ஒப்புக்க மாட்டேன்” குரல் எழுந்தது பக்கத்திலிருந்து. குரல் கொடுத்தது ஹரிச்சந்திரன், எனும் ஹரி. அவனுக்கு கிட்டத்தட்ட பிரபுவின் வயது தான் இருக்கும். ஹரி ஒரு காலத்தில், கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த பிசினெஸ் புள்ளி. அப்போது ஹரியும் பிரபுவும் நண்பர்கள் . இப்போது ஹரி நொடித்துப் போனவன். ஆனாலும், கிளப்பின் பழைய உறுப்பினன் என்பதால், எப்போதாவது வருவான்.

ஹரியின் குரலை யாரும் சட்டை செய்யவில்லை. ஏழையின் குரல் அம்பலம் ஏறுமா? ஆனால், கிளப்பின் சிலரது பார்வை, ஹரியின் பக்கம் திரும்பியது .

ஹரி, தன் கையில் சாராயக் குப்பியை எடுத்துக் கொண்டே மீண்டும் சொன்னான் . “ பணம் படைத்தவர்கள் ஒன்றும் பெரிய படித்த அறிவாளிகளோ, , உழைப்பாளர்களோ, புத்திசாலிகளோ அல்ல . உண்மையில், அவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள், திருடர்கள். ஏழைகள் ஏழைகளாக இருக்க காரணம், அவர்களை பணக்காரர்கள் கண்கட்டி மோசடி செய்கிறார்கள். அதற்கு அரசு வேறு உடந்தை “

பிரபு கோபமாக சொன்னான் “உளறாதீங்க ஹரி! நீங்க வியாபாரத்தில் திறமை இல்லாமல் தோற்றால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு! என் பணக்காரங்களை திருடன்னு சொல்றீங்க?”

ஹரி “நீங்க அடாவடி பண்ணி ஏழைகள் வயித்திலே அடிக்கிறீங்க?”

பிரபு “அப்படி என்ன நாங்க பண்ணிட்டோம்? நாங்க மட்டும் இல்லைன்னா, தொழிர்சாலைகள் இல்லன்னா, ஏழைகள் சாப்பட்டுக்கு திண்டாடனும் தெரியுமா?”

ஹரி காட்டமாக “இந்த பணக்காரங்க பண்ற அயோக்ய தனத்துக்கு மேலுலகத்திலே, சொர்கத்திலே இடமே கிடையாது”

பிரபு பதிலுக்கு “உங்க முட்டாள்தனத்துக்கும், சோம்பேறி தனத்துக்கும், கோழைத்தனத்துக்கும், கடவுள் உங்களுக்கு இந்த உலகத்திலேயே நரகம் கொடுத்திட்டானே ! அதுக்கு என்ன பண்றது ?

கூடியிருந்தவர் சிரித்தனர். ‘சபாஷ், சரியான போட்டி !’

ஹரிக்கு குடி போதையில் கோபம் பொத்துக் கொண்டு வந்தது . “யாரை பார்த்து முட்டாள் என்கிறாய்? என் நேர்மைக்கு முன் நீ ஒரு தூசு”.

பிரபு “போதும் நிறுத்து! உன் வியாபர லக்ஷணம் பத்தி எனக்கு தெரியும் . நல்லா பண்ணியிருந்தா ஏன் இப்படி நடுத்தெருவிலே நிக்க போறே?”.

ஹரியின் கோபம் எல்லை மீறியது ! “என்னையா சொன்னே ?” என்று தள்ளாடி போய் பிரபுவை நெருங்கினான். பிரபு லாகவமாக ஒரு அடி பின்னே போய் , ஹரியை கீழே தள்ளினான். பின்னர் அருகில் சென்று , ஹரியின் கன்னத்தில் இரண்டு அறை கொடுத்தான்.

க்ளப்பே நிசப்தமானது . ஹரி, தள்ளாடி கொண்டே எழுந்து “விட்டேனா பார் உன்னை! உன்னை ஒழித்துக் கட்டுகிறேன் . இல்லை, என் பேர் ஹரி இல்லை” என்று சபதமிட்டான்.

பிரபு “உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்”.

ஹரி தன் கையிலிருந்த சாராய குப்பியை பிரபுவை பார்த்து விட்டெறிந்தான். பிரபு தலையை குனிந்து கொள்ள, குப்பி ராகவன் மண்டையை நோக்கி வின் கல்லாக இறங்கியது லேசான காயம்.

அப்போது க்ளப்பின் மேனஜேர் அங்கே ஓடி வந்தார் “என்ன நடக்குது இங்கே?”

பிரபு உடனே சொன்னான் “எங்கள் பேரில் கண்ணாடி குப்பியை எறிந்தான். ஹரி. ராகவனுக்கு மண்டையில் அடி. இப்போதே ஹரியின் பேரில் மான நஷ்ட வழக்கு, கிரிமினல் வழக்கு போட போகிறேன். இன்சூரன்ஸ் கேட்க போகிறேன் “

கேட்டுகொண்டிருந்த மேனஜேர் இடையில் புகுந்தார். ஹரியையும், பிரபுவையும் தனியே அழைத்து சென்றார். “பிரபு சார், கோர்ட், வழக்கு இது எதுவும் வேண்டாம். க்ளப் பேர் கெட்டுப் போயிடும். எங்க பேர்லே தான் கவனக் குறைவு அப்படின்னு கோர்ட் சொல்லிடும். அதனாலே, இதை இப்படியே முடிச்சிக்கலாம் . நான், க்ளப் சார்பிலே ஐம்பது லட்சம் கொடுக்க ஏற்பாடு பண்றேன். இதை இப்படியே விட்டுடுங்க ப்ளீஸ். ஹரி சார், இனிமே கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க “

பிரபு அரை மனதாக ஒப்புக் கொண்டான். “சரி, மேனஜேர் சார், நீங்க சொல்றதாலே இப்படியே விட்டுடறேன். நீங்க பணத்துக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க”.

“அப்பாடா! தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே நகர்ந்தார் மேனஜேர்.

***

அடுத்த நாள். பிரபு ஹரியை ஒரு ஓட்டலில் சந்தித்தான். “இந்தாடா ! நீ கேட்ட ஐம்பது லட்சம். அன்பளிப்பா வெச்சுக்க “

ஹரி ரூபாயை வாங்கி கொண்டான் . “ரொம்ப தாங்க்ஸ் பிரபு! அருமையான ஐடியா!”

பிரபு சொன்னான் “சமயத்திலே, இந்த மாதிரி ஐடியா, பணக்காரர்களுக்கு மட்டும் தான் வரும் ”

ஹரி “அதுவும் சரிதான்”. சிரித்தான் .

courtesy : ஜெப்ரி ஆர்செர் 

தொடர்புடைய சிறுகதைகள்
ஷண்முகத்திற்கு தூக்கம் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. புரண்டு புரண்டு படுத்தார். தனது மனைவியும் மகனும் இவ்வளவு கேவலமானவர்களா? என்னுடைய சொத்துக்காக என்னையே கொலை செய்யும் அளவிற்கு துணிந்தவர்களா? வருத்தம் அவரை போட்டு வாட்டியது. காரணம் இது தான். நேற்று அவரது மகனும், மனைவியும் ...
மேலும் கதையை படிக்க...
கல்பனா ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். இன்று தான் அவளது கடைசி நாள், இந்த பாழாய்ப் போன பூமியில். இந்த முடிவில் மாற்றத்திற்கே இடமில்லை. நோயிலும், வேதனையிலும் ஒரு நாளைப் போல சாவதை விட, ஒரேயடியாக போய் சேர்ந்து விடலாம். இது என்ன வாழ்க்கை, ஒரு ...
மேலும் கதையை படிக்க...
மணியின் வீடு: மணிக்கு சென்னையில் ஒரு பன்னாட்டு அலுவலகத்தில் வேலை. நிறைய சம்பாதிக்கிறான். ஒரே பையன். பார்க்க லட்சணமாக இருப்பான். கல்யாணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருகிறார்கள். காலை. 8.00 மணி. அப்பா பேப்பர் படித்துக்கொண்டு. அம்மா சமையல் கட்டில். மணி அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான். “டேய் ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு தாங்க முடியாத வலி எடுத்து விட்டது. பிரசவ வேதனை. கூடவே என்ன ஆகுமோ எனும் பயம். ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் தவித்துக் கொண்டிருக்கிறேன். என் கணவர் பக்கத்தில். " ஒண்ணும் கவலைப் படாதே கலா. தைரியமா இரு. எல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
சுப்பு மரித்துக் கொண்டிருந்தார். குளியறையில் தற்செயலாக வழுக்கி விழுந்து, மண்டையில் அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் தான். எந்த சிகிச்சையும் பலன் தரவில்லை. அவர் அடிக்கடி நினைவு இழந்து கொண்டிருந்தார். டாக்டர்கள் கை விரித்து விட்டார்கள் . காலன் அவரை நெருங்கிக் கொண்டிருந்தான் ...
மேலும் கதையை படிக்க...
“வாங்க சார், வாங்க” வரவேற்பு தடபுடலாக இருந்தது, அந்த வங்கிக் கிளையில். ஆர்பாட்டமாக வரவேற்றவர் அந்த கிளையின் மேனேஜர். சிரித்துக் கொண்டே உள்ளே வந்தவர் அந்த ஊர் வி.ஐ.பீ.. கோயில் டிரஸ்ட்டீ. மதுராங்கத்துக்கு பக்கத்தில் உள்ள, அந்த ஊரின் பெருமாள் கோயில், ரொம்ப ...
மேலும் கதையை படிக்க...
ஜனக ராஜா, சீதையின் தந்தை, ராமனின் மாமனார், மிதிலையின் அரசர், ஒரு சிறந்த கர்ம யோகி. ஜனக ராஜா , அஷ்டவக்கிரர் எனும் மகாமுனியின் சீடர். ஜனகரின் குணம் அறிந்து, ஜனக ராஜாவை தன்னுடன் என்றும் ஆசிரமத்திலேயே வைத்துக் கொள்ளாமல், நாட்டை ஆள ...
மேலும் கதையை படிக்க...
குதூகலமாக கொக்கரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் துரியோதனன் “ சகுனி மாமா! நமக்குத்தான் வெற்றி ! பாண்டவர்கள் போரில் தோற்பது நிச்சயம்!” . எதிர் கொண்டு அழைத்தான் சகுனி !. “ என்ன ஆச்சு துரியோதனா, போன காரியம்? காயா? பழமா? நம்மோடு ...
மேலும் கதையை படிக்க...
இன்று நேற்றல்ல, பிறந்ததிலிருந்து கண்ணன் தள்ளிப் போடுவதில் கில்லாடி. குழந்தையாக இருந்தபோது எந்த விளையாட்டு பொருளையும் தன் பக்கத்திலிருந்து தள்ளிப் போடுவான்.பிற்காலத்தில் , அதே பழக்கமாகவோ என்னவோ, எந்த வேலையையும் ‘நாளை நாளை’ என தள்ளிப் போட ஆரம்பித்துவிட்டான்.படிப்பது, எழுதுவது, வீட்டு ...
மேலும் கதையை படிக்க...
யமலோக பட்டினம். யமனின் தர்பார்.யமன் - சித்திர குப்தன் உரையாடல்.“சித்திர குப்தா! சொல்லு, அடுத்து நான் யார் உயிரை எடுக்க வேண்டும்?” –யமன்.“ஐயா. எல்லாவற்றிற்கும் நீங்கள் போக வேண்டிய அவசியமில்லை. கிங்கரர்களை அனுப்பிக் கொள்ளலாம்”“இல்லை சித்திரகுப்தா, நானும் கொஞ்சம் வேலை செய்ய ...
மேலும் கதையை படிக்க...
திருட்டு
தற்கொலை தான் முடிவு
மணிமாலா
பாரந்தாங்கி
ஓம் எனும் நான்கெழுத்து மந்திரம்!
அவன் வழி தனி வழி
நிஷ் காம்ய கர்மா
காது!
நன்றே செய், அதுவும் இன்றே செய்
யமனின் கணக்கு – ஒரு புரியாத புதிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)