இவர்களும்…

 

நாலைந்து வருடங்களாகத் துணை நடிகையாய் வாழ்க்கை நடத்தும் நித்யாவிற்குள் ரொம்ப நாட்களாகவே…

‘தான் சினிமா நடிகையாக வெளிக்காட்டிக் கொள்ள முடியவில்லை!’ என்கிற கஷ்டம்.

‘தோழிகள், உறவினர்களிடம் கூட நான் இந்தப் படத்தில் தலைகாட்டி இருக்கேன்!’ என்று சொல்ல முடியாத துக்கம், வருத்தம், அவமானம்.!

‘சினிமாவில் நடிக்க வரும் அத்தனைப் பேர்களுக்குமே கதாநாயக, கதாநாயகி கனவு. அதற்காகத்தான் நிறைய முயற்சிகள், கஷ்டங்கள். அது முடியாமல் போக…முடிவில்தான் துணை நடிகர், நடிகை வாழ்க்கை. ஆடல் பாடல் காட்சிகளில் துணை நடிகர், நடிகைகளை உபயோகப்படுத்தும் எந்த இயக்குநரும் இவர்கள் கஷ்டம், மனதை மதிப்பதே இல்லை. மாறாக….படம் முழுக்க வரும் கதாநாயகன் கதாநாயகி முகங்களையே இந்த காட்சிகளிலும் அடிக்கடி அழுத்தமாகக்காட்டி இவர்கள் முகம், உருவங்களை ஒப்புக்குக் காட்டி ரசிகர்கள் மனதில் இவர்களைப் பதிய விடாமல் செய்கிறார்கள். காட்டினால் என்ன குறை. கதைக்கு என்ன தடை ? ‘ அந்தக் கரு இப்படி திடீர் உருமாற்றமாக..மாற….

படப்பிடிப்பு இடைவேளையில் இயக்குநரிடம் சென்று தன் மனதிலுள்ளதைச் சொன்னாள்.

சிறிது நேரம் யோசித்து தலை நிமிர்ந்த நீலன்….

”நல்லதும்மா. இதுவரை உங்கள் பாதிப்பு எங்கள் மனதில் படாதுக்கு வருத்தப்படுறேன். இனி அப்படி நடக்காமல் இருக்க முயற்சி செய்யிறேன். இதை மத்த இயக்குநர்களிடமும் சொல்லி பதிவு பண்றேன். இனி உங்கள் முகங்களுக்கும் ஒரு சில விநாடிகள் முக்கியத்துவம் கொடுத்து உங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நடிகர் நடிகைகள் என்ற அங்கீகாரத்தை அளிக்க இதோ இப்போ இந்த நிமிடம் என படம் மூலமாய்த் தொடங்குறேன்.” சொன்னார்.

நித்யாவிற்கு முகம் மலர்ந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
இந்த பத்தாவது நேர்முகத்தேர்வு கலாட்டாதான். கேட்கிற கேள்விக்கெல்லாம் ஏட்டிக்குப் போட்டி பதில்தான். உறவு, சிபாரிசு, பெரிய இடம்ன்னு ஆட்களைப் பொறுக்கி வைச்சுக்கிட்டு தேர்வை அரசாங்கத்தை ஏமாத்தற கண்துடைப்பு நாடகமாய் நடத்துறதுக்கு எதுக்குச் சரியான பதில்,பொறுப்பான பேச்சு ?! இப்போ கல்லூரி வளாகத் தேர்வும் ...
மேலும் கதையை படிக்க...
சுரேஷ் ஒரு முடிவிற்கு வந்தவனாய் துணிக்கடையில் ஏறி..... பையுடன் இறங்கினான். வீட்டிற்கு வந்ததும், ''நாளை உனக்கு என் பிறந்த நாள் பரிசு !'' மனைவியிடம் நீட்டினான். மலர்ச்சியுடன் வாங்கிப் பிரித்த பவிஷா முகம் சுருங்கியது. ''என்னங்க...! புடவையா ?'' பரிதாபமாகப் பார்த்தாள். ''ஆமாம். ஏன் கட்டிக்க மாட்டியா ...
மேலும் கதையை படிக்க...
பஞ்சாயத்து. ..! ஊர் மொத்தமும் கூடி இருந்தது. தலைவர் தணிகாசலம் ஆலமரத்து மேடையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். பக்கத்தில் உபதலைவர், பொருளாளர், இன்னும் சில முக்கியமானவர்கள். கீழே.... வலப்பக்கம் ராமசாமி, அவர் மகன்கள் ராமு, சோமு, சிவா, சிங்காரம். அவர்களுக்கு நேரெதிர் இடப்பக்கம் கணேஷ். துபாய் ...
மேலும் கதையை படிக்க...
எங்கள் தெருவிற்கு எங்கிருந்தோ இளமையான, நல்ல வாலிபமான மெருன் நிறத்தில் ஆண் நாய் ஒன்று அடுத்த வீட்டிற்கு வந்து சேர்ந்தது. அவர்கள், ஒரு வருடம் அந்த வீட்டில் வசித்து காலி செய்து விடடு போன பிறகு அந்த நாய் அவர்களோடு செல்லாமல் எங்கள் ...
மேலும் கதையை படிக்க...
மீனுக்குட்டி எலிகளைக் கடித்துக் குதறிவிட்டு தன் காலால் வாயைத் துடைக்கும் அழகே தனி. புலி, சிங்கம் கெட்டது. ! வீட்டு வளர்ப்பு விலங்குகளில் நாயும் பூனையும் தனித்தனி ரகம். நாய் மனித விசுவாசி. வளர்ப்பவர் எங்கு சென்றாலும் பின்னாலேயே வரும். பூனை அப்படி ...
மேலும் கதையை படிக்க...
வேலை..! – ஒரு பக்க கதை
அழகு!
பங்கு
வெறி
நெருப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)