இறைவன் எங்கே?

 

“அம்மா !”

“என்னடா வேணும்!”

“அம்மா… வந்து…! கோயிலுக்குப் போகக் கண்ணன் கூப்பிட்டானம்மா! கோயிலுக்கு ஏனம்மா நாமெல்லாம் போறல்ல? அவங்க எல்லாம் ஒவ்வொரு வெள்ளியும் போ றாங்களே?” கேள்விக்குறியோடு தாயை நோக்கினான் முருகன்.

“நாமெல்லாம் அங்க போகக் கூடாதுடா, முருகா!” என்று கூறிவிட்டுக் கைவேலையிற் கவனஞ் செலுத்தினாள் முருகனின் தாய்.

“ஏம்மா! போகக்கூடாது?” தாயின் கவனத்தை மீண்டும் தன்பால் இழுக்க முயன்றான், முருகன்.

“நாம கூடாதவங்க. அதனால் தான் கோயிலுக்கு ளெல்லாம் போகக்கூடாது?”

“மத்தவங்கெல்லாம் நல்லவங்களா? நான் குளிச்சு, வெளுத்த சட்டதானே போட்டிருக்கன்!”

“போகக் கூடாதெண்டா, போகக்கூடாதுதான்! ஏண்டா! தொண தொணக்கிறா?” என்று அதட்டி விட்டு எழுந்து சென்றாள் பொன்னி –முருகனின் தாய். தாயின் பேச்செல்லாம் ஐந்து வயதுச் சிறுவனான அவனுக்கு எங் கே புரியப்போகிறது! எழுந்து வாசலுக்கு வந்தான். தெரு வின் பரபரப்பு அவனைக் கவர்ந்தது. வாசலிற் கிடந்த தென்னங்கட்டையில் உட்கார்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

அது மாமாங்கப் பிள்ளையார் கோயிலுக்குப் போகும் தெரு. அடுத்த நாள் ஆடித்தீர்த்தமா கையால், ஒரே சனக் கூட்டமாக இருந்தது. வருவோரும் போவோருமாகத்தெரு முழுவதும் அல்லோல கல்லோலப்பட்டது. வியாபாரிக ளின் கூச்சல் ஒருபுறமும், வாகனங்களின் உறுமல் மறுபுற மும், காவடி எடுப்போரின்’ அரோகராச்’சத்தம் இன்னொரு புறமும் காதைப் பிளந்தன. ஆண்டுக்கொரு தடவை இவ வாறு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் திரண்டு வந்து குவியும் மக்கட் கூட்டம், அமிர்த நதியையே ஒரு கலக்குக் கலக்கி விட்டுத்தான் செல்லும்.

பக்கத்திலே கேட்ட அரோகராச்சத்தம் முருகனை அப் பக்கம் திரும்பச்செய்தது. ஒரு கூட்டம் வந்துகொண்டிருந் தது. அதிலே கண்ணனும் வந்துகொண்டிருந்ததைக் கண் டது , அவன் மனத்திலே ஒரு நப்பாசை தோன்றியது ‘கண்ணன் என்னைக் கூட்டிக்கொண்டு போவான் தானே? அம்மாவுக்குத்தெரியாமல் போய்வந்தா ஒண்டுமில்லையே? மெல்ல மெல்லக் கூட்டத்தையணுகிக் ”கண்ணா! ” என்று கூப்பிட்டான்.

“டேய், நீயும் வாறயாடா, கோயிலுக்கு? எங்க அண் ணன் தாண்டா காவடியெடுத்துப் போறான் !” மகிழ்ச்சி யால் முருகனைக் கட்டிக்கொண்டு துள்ளினான், கண்ணன். “சத்தம் போடதடா! என்னைக் கூட்டிப் போவியா?” என்று மெதுவாகக் கேட்டான், முருகன். பதில் பேசாமல் முருகனை இழுத்துக்கொண்டு ஓடினான், கண்ணன். கூட்டம் கோயிலை அடைந்துவிட்டது. திடீரென்று கண்ணன், “ஏண்டா முருகா, நீங்க கோயிலுக்கு வரக்கூடாதுண்டு அண்ணன் சொன்னானே! நீ எப்படிடா வரலாம்?” என்று திகைப்புடன் கேட்டான்.

“கூடாதவங்க எண்டபடியால் தான், கோயிலுக்குப் போகக்சு டதெண்டு அம்மா சொன்னா! ஆனா நான் இப்ப நல்ல சட்டதானே போட்டிருக்கேன்! கொஞ்சம் முன்னால தான் அம்மா சவுக்காரம் போட்டு முழுக வாத்தாவே!” சொல்லும்போதே முருகனுக்குக் கண்கள் கலங்கிவிட் டன. கண்ணன் கூட்டிப்போக மறுத்துவிட்டால்?

“அப்பிடியெண்டாச் சரிடா! வா கெதியாப்போவம்!” இருவரும் கூட்டத்துக்குள் புகுந்து ஓடினார்கள். கோயில் வாசலையடைந்தபோது பூசை முடிந்துவிட்டது. குருக்கள் விபூதி சந்தனம் கொடுத்துக்கொண்டேயிருந்தார். கண் ணனும் ஓடிப்போய்க் கையை நீட்டினான். முருகன் அவ னைத் தொடர்ந்தான்.

“இப்பிடி நில்லுடா! அம்மாவங்களைக் கூட்டித்து வாறன்!” என்று கூறிய கண்ணன் தாயைத் தேடிக் கூட் டத்திற் புகுந்தான். முருகன் விபூதிக்காக நீட்டிய கையிலே குருக்கள் விபூதியைப் போட்டார். மற்றவர்கள் நெற்றி யிலே விபூதியைப் பூசுவதைக் கண்டு நெற்றியருகிற் தானும் கையைக் கொண்டுபோனான்.

“சீ… நாயே… போடா வெளியே!” என்று உறுமிய வாறு முருகனை காலால் உதைத்தான், ஒருவன்.” அம்மா! அம்மா!” என்று அலறியவண்ணம் தடுமாறி விழுந்தான், முருகன். கீழே கிடந்த தேங்காயுடைக்கும் கல்லிலே தலை மோதியது. பீறிட்டுப் பாய்ந்தது இரத்தம்.

“மணியா!” என்று அடித்தவனைவிழித்தார் குருக்கள். ஆம், அவன் கோயிலில் சில்லறைவேலைகளைச் செய்யும் ஒரு பணியாள். அழுக்கு வேஷ்டியும், பரட்டைத் தலையுமாக நின்றுகொண்டிருந்த அவன் குருக்களைப்பார்த்து, “ஐயா! ஏன் இவனுக்குத் திருநீறு கொடுத்தீங்க? அந்தச் செல் லண்ட மகனெலுவா இவன்!” இதைக் கேட்ட குருக்கள் பதறினார். கையிலிருந்தவற்றை அவனிடம் கொடுத்துவிட் டுக் கிணற்றை நோக்கி ஓடினார், குற்றங் கழிப்பதற்காக.

விழுந்து கிடந்த முருகன் தட்டுத்தடுமாறி எழுந்தான். இரை மீது பாயும் புலிபோல் நின்ற மனிதனைப்பார்க்கவே அஞ்சினான், அவன். காயத்திலிருந்து வழிந்த இரத்தம் பார்வையை மறைத்துக்கொண்டே சட்டையை நனைத் தது. வேதனை தாளாது விக்கி விக்கி அழுதான். சுற்றிலும் நோக்கினான். எல்லாம் புது முகங்கள்; அவனை வேடிக்கை பார்த்தனவே தவிர வேதனை தீர்க்க அவை முன்வர வில்லை. சுற்றிவந்த அவனது பார்வை கருவறையிலிருந்து வந்த ஒளியில் ஒருகணம் நிலைத்தது. ”சாமீ!” என்று எழுந்த அவனது குரல் அங்கிருந்த பலரையும் கண் கலங்க வைத்தது,

“சாமியாடா சாமி!” என்று கருவிக்கொண்டு மீண் டும் முருகனை நெருங்கினான், அம்மனிதன். அருகில் நின்ற வர்கள் தடுத்து நிறுத்திய அவனை, ஒருகணம் உற்று நோக்கி விட்டு மெதுவாக அவ்விடத்தை விட்டு , நகர்ந் தான்.

“நமக்கு ஆரும் அடிச்சா, சாமி அவங்களுக்கு அடிப் பாரெண்டு அம்மா சொன்னாவே? அப்படியெண்டா அந்தச் சாமி எங்க?” நெற்றி விண்ணென்று வலித்தது. தலை சுற்றியது. நினைவு சுழன்றது; எதிரே இருந்த கடைகள் சுழன்றன; உலகமே சுழன்றது. ”சாமி எங்கே?” என்ற முருகனின் வார்த்தைகளும் காற்றிலே சுற்றிச் சுழன்றன.

- வாணி – கோகிலா சிதம்பரப்பிள்ளை – கதைப் பூங்கா – பல்கலை வெளியீடு, பேராதனை, இலங்கை – முதற்பதிப்பு ஜனவரி 1962

வாணி : மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட ‘வாணி’, ஆனைப்பந்தி இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையிற் கல்வி பயின்றவர்; சுதந்தி ரன் முதலிய பத்திரிகைகளிற் சிறுகதை, கவிதை என்பன ஏற்கனவே எழுதியுள்ள இவரின் முழுப்பெயர்-யோகம்மா கணபதிப்பிள்ளை. 

தொடர்புடைய சிறுகதைகள்
சென்ற வருடத்தை விட இந்த வருடம் குளிர் சற்று அதிகமாக அருக்கின்றதென தோன்றியது. அந்த மலலைப்பாங்கான பிரதேசத்தில் அதனை நன்றாகவே உணரக்கூடியதாக இருந்தது. சுஜாதா அந்த பள்ளிக்கு கூட அறையில் மேசைக்கு முன்னமர்ந்து ஜன்னலுக்கு அப்பால் அடர்த்தியதக பூத்துக் குழங்கிய சூரியகாந்தி ...
மேலும் கதையை படிக்க...
“ஐயோ..அம்மா” என்ற சுபாஷ் மாஸ்டரின் அலறலைக் கேட்டு நான் பக்கத்து வகுப்பறைக்கு ஓடினேன். அங்கு நான் கண்டக் காட்சி என்னைக் குலைநடுங்கச் செய்தது. காது கிழிந்து, வாய்ப் பிளந்து எக்குத்தப்பாக மேஜை நாற்காலிக்கு இடையில் சிக்கியிருக்கும்சுபாஷ் மாஸ்டரைச் சில மாணவர்களும் ராஜன் மாஸ்டரும் ...
மேலும் கதையை படிக்க...
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதிகாலை நேரம் - அந்த வேன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வேகமாகச் சென்றது. உள்ளே - சீதாலட்சுமி - அரைத்தூக்கத்திலிருந்தாள். அவளுக்குத் துணையாக மாலினி ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணி பதினொன்று. சாலையின் ஓரத்தில் ஒரு பெண் தனியாக நிற்கிறாள். அவ்வழியாக பைக்கில் வந்த நபர், இந்த பெண்ணை பார்த்ததும் தனது பைக்கை நிறுத்திவிட்டு அருகில் வந்தார். இந்த நேரத்தில் இங்கே ஏன் தனியாக நிற்கிறாய் என்றான். அப்பெண் அதற்கு எந்த ...
மேலும் கதையை படிக்க...
(1999 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அலை ஓய்ந்திருந்தபோது... காலையில் பிட்டும் கறியும், மதியம் சோறும் கறியும், இரவு பிட்டும் கறியும், பரவாயில்லை. பின்னர். காலையில் பிட்டும் கறியும், மதியமும் இரவும் சோறும் கறியும், இதுவும் பரவாயில்லை. கொஞ்ச நாளின் பின், மூன்று நேரமுமே சோறும் ...
மேலும் கதையை படிக்க...
சென்னை திருவள்ளுவர் பஸ் நிலையத்தை இந்தக் கோலத்தில் அடிக்கடி பார்க்க முடியாது. வழக்கமான நெரிசல், டிக்கெட்டுகளுக்கு அலையும் கூட்டமில்லை. பெரும்பாலும் காலியாக இருந்தது. மாலை ஆறு மணியுடன் முடிந்த ’பந்த்’ துக்குப் பிறகு மக்கள் நடமாட்டம் மெதுவாக ஆரம்பித்திருந்தாலும், வெளியூர் பயணம் அதிகம் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: அமரர் கல்கி  1      இருவரும் ஏழைக் குடியானவர்கள். ஏழைகளானாலும் சந்தோஷத்திற்குக் குறைவில்லை. எவ்வளவு மகிழ்ச்சியோடு அவர்கள் சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் போகிறார்கள் பாருங்கள்! அதிலும் மறுநாள் பொங்கல் பண்டிகை. ஆதலால் குதூகலம் அதிகம். ஆனால் சந்தோஷம், சிரிப்பு, குதூகலம் எல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
சிகாமணி இறந்தபோது அவன் அருகே அழுவதற்கென யாருமில்லை. தேனி நகராட்சியிலிருந்து கொண்டுவரப்பட்ட சவவண்டியில் எடுத்துப்போய் எரித்துவிட்டார்கள். அன்று வியாழக்கிழமை. தேனியில் வாரச் சந்தை கூடும் நாள். சந்தையைத் தாண்டித்தான் சவவண்டி நகர்ந்துபோனது. சிகாமணி இறப்பதற்கு முன், அவனாகவே யாரிடமோ சொல்வதுபோலத் தான் ...
மேலும் கதையை படிக்க...
ஆஸ்திரியாவின் வியன்னா விமான நிலையத்தை விட்டுக் கொஞ்சம் கவலையோடு வெளியே வந்தோம். குளிர் எங்களை விரோதத்துடன் எதிர்கொண்டது. ஆரம்பமே கோளாறு. மும்பையிலிருந்து ஃப்ராங்ஃபர்ட் வந்த எங்கள் விமானம் தாமதமாய் வர, ஃப்ராங்ஃபர்டிலிருந்து வியன்னா வரும் இணைப்பு விமானத்தைத் தவறவிட்டுவிட்டு அடுத்த விமானத்தில் நாங்கள் ...
மேலும் கதையை படிக்க...
”விடிந்தால் வயல் அறுவடைக்கு மெசினை இழுத்துக்கொண்டு செல்ல வேண்டும்” என்று தன் முன்னால் அடிபட்டு படுக்கையில் கிடந்த எழுத்தாளர் ’வசந்த நிலா’வின் ”எங்கே என் சுவாசங்கள்?” நாவலை தொடக்கத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் போது அவன் வலியின் முனகலில்,திரும்ப்பார்த்து புத்தகதை வைத்து விட்டு ...
மேலும் கதையை படிக்க...
மனவலிகளுக்கு ஒத்தடம் கொடுத்தல்
புதிய வார்ப்புகள்
திருமதி சீதாலட்சுமி ரணசிங்க…!
சுஜீத்தா
ஒரு கோப்பை தேநீர்
பாதிப்புகள்
தண்டனை யாருக்கு?
என் மரணத்திற்குப் பிறகு நீயும் இறந்துவிடுவாய்
டாக்ஸி டிரைவர்
தேவதைகள் தூங்குவதில்லை….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)