இன்டர்வியூ – ஒரு பக்க கதை

 

சிபாரிசு இல்லாம இந்த வேலை கிடைக்காதுன்னு சொல்றேன்னு வச்சுக்கோங்க…உங்களுக்கு சிபாரிசு பண்ண ஆள் இருக்கா?

இருக்கு சார்! என் பெரியப்பா கவுன்சிலரா இருக்கார்! நான் அவர்கிட்ட லெட்டர் கேட்டிருகேன்…

எங்க கம்பெனியில் சிபாரிசை ஏத்துக்க மாட்டோம்னு தெரிஞ்சும், இதை எப்படி தைரியமா எங்கிட்டேயே சொல்றீங்க?

உண்மையை சொல்லிடறது நல்லதுதானே சார்!

சாரி மிஸ்டர் பார்த்திபன்! உங்களுக்கு இந்த வேலை இல்லை

நோ பிராப்ளம் சார்! எனி வே , எதுவா இருந்தாலும் முடிவை உடனடியா சொன்னதுக்கு தேங்க் யூ! – தனது உற்சாகம் சிறிதும் குறையாமல் இன்டர்வியூ அறையில் இருந்து வெளியேறினான் பார்த்திபன்.

இரண்டாவது நாள். அதே கம்பெனியிலிருந்து அவன் பெயருக்கு ஒரு கூரியர் வந்தது. பிரித்துப் படித்தான்.

”எங்கள் நிறுவனத்தின் சாதாரண கிளார்க் வேலைக்கான தேர்வில்தான் நீங்கள் நிராகரிக்கப்பட்டீர்கள். ஆனால் நீங்கள் தயக்கமின்றி உண்மையைச் சொல்பவர். அறிந்தவர் தெரிந்தவரின் செல்வாக்கைக் கொண்டு எதையும் சாதித்து விடக் கூடியவர், உங்களைப் போன்றவர்தான், எங்கள் முதலாளிக்கு தனிப்பட்ட பி.ஏ. வாக இருக்க பொருத்தமானவர் என்று நாங்கள் கருதுகிறோம். உடனடியாக தாங்கள் பணியில் சேரலாம்” என்றது அந்தக் கடிதம்

- விகடபாரதி (ஜூலை 2014) 

தொடர்புடைய சிறுகதைகள்
"நாம அப்புடி பேசிருக்ககூடாதோ... போயும் போயும் கல்யாணம் நடக்குற எடத்துல அப்புடி நா பேசினது சரியில்ல.... இல்ல பேசுனது சரிதான் .. அப்புடி பேசுனாத்தான் மத்தவனுகளும் திருந்துவானுக நாட்ட ஆளுறதுல இருந்து நாசமா போக வைக்கிற வரைக்கும் ஏதோ ஒரு வாத்தியாருகிட்ட ...
மேலும் கதையை படிக்க...
திரு. ப்ரோஸ்கா வெட்டப்பட்ட தனது விரல் நகங்களை சேகரித்து வந்தார். தனது எட்டாவது வயதில் முதல் முதலாக தானாகவே விரல் நகத்தை வெட்டியதிலிருந்தே அவற்றை சேகரிக்கத் துவங்கிவிட்டார். அம்மாவின் உதவி இல்லாமலும் விரல்களைக் காயப்படுத்திக் கொள்ளாமலும் தானே நகங்களை வெட்டியதை நினைத்து ...
மேலும் கதையை படிக்க...
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் சக்திவேலின் மேசை மேல் இருந்த அனைத்துத் தொலைபேசிகளும் ஒரே நேரத்தில் ஒலித்தன. அவருடைய நேரடி தொலைபேசியும் அந்தரங்க காரியதரிசி மூலம் வரும் தொலைபேசிகளும் ஒலித்தன. இது காணாது என்று சக்திவேலின் கைப்பேசிகள் வேறு அலறின. கடந்த பதி ...
மேலும் கதையை படிக்க...
ராமநாதபுரத்தில் இருக்கும் அந்த முதியவர், ஆஸ்த்ரேலியாவில் இருக்கும் தன் மகனுக்கு தொலைப்பேசியில் அழைக்கிறார். … நான் தான் அப்பா பேசுறேன்.. ஆங்.. சொல்லுங்கப்பா எப்படி இருக்கீங்க.. அம்மா எப்படி இருக்காங்க.. வேலை பளு அதிகம் பா.. முன்ன மாதிரி அடிக்கடி போன் செய்யமுடியல.. வார்த்தை தடுமாறி ...
மேலும் கதையை படிக்க...
தென்கடல் தீவில் இருநூறு வருசங்களின் முன்பாக இது நடந்தது என்கிறார்கள். அப்போது அதை ஒரு மகாராணி ஆட்சி செய்து கொண்டிருந்தாள். அவளது ஆளுமையின் கீழாக பல நூறு சிறுதீவுகள் இருந்தன. ராணி திருணம் செய்து கொள்ளாதவள். மிகுந்த முன்கோபி என்று பெயர் ...
மேலும் கதையை படிக்க...
மோகன் வாத்தியார்…
நகங்களைச் சேகரிப்பவன்
வெந்து தணிந்த மழலைகள்
உறவுகளை தேடி – ஒரு பக்க கதை
சிற்றறிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)