ரசனை – ஒரு பக்க கதை

 

சங்கீத உலகின் மஹாராணி என்றழைக்கப்படும் காயத்ரி பத்மநாபன் தான் இருக்கும் அபார்ட்மெண்ட்டிற்கே குடிவந்தது ஆனந்துக்கு. பேரானந்தத்தைத் தந்தது.

முறையாக சங்கீதம் கற்கா விடினும், அவ்வப்போது ஆர்கெஸ்ட்ராவில் பாடுவான் ஆனந்த். தன்னைப்பற்றி அவரிடம் அறிமுகப்படுத்தி பேசி
வந்ததை தனது மனைவி வித்யாவிடம் பெருமை பேசிக்கொண்டே இருந்தான்.

“சரிங்க… எனக்கு தூக்கம் வருது! நாளைக்கு பேசிக்கலாம்!’ என்ற வித்யாவிடம்… “ஜடம்…ஜடம்…. ஒரு ரசனை இருக்கா உனக்கு? சங்கீதத்தைப்
பற்றி என்ன தெரியும் உனக்கு…!?’ என கோபமாய் எரிந்து விழுந்தான் ஆனந்த்.

ஒருநாள் காலை! காலிங்பெல் ஒலிக்க… கதவின் லென்ஸ் வழியாகப் பார்த்த ஆனத்துக்கு இன்ப அதிர்ச்சி!

“யேய்… வித்யா, காயத்ரி மேடம் என்னைப் பார்க்க வந்திருக்காங்க! அவங்க முன்னாடி உன் திருவாயைத் திறந்து ஏதாவது உளறி வைக்காதே!’ – என்ற ஆனந்த், பரபரப்பாய் கதவைத் திறந்து வரவேற்றான்.

உள்ளே வந்த காயத்ரி பத்மநாபன்…

“தினமும் அருமையான கோலமா போடரயேம்மா! எல்லோருக்கும் இந்தக் கலை வந்திடாது! கோலத்தைப் பார்த்திட்டே இருக்கலாம் போல இருக்கு! என் வீட்டுக்கு ஒருநாள் வாம்மா!’ என வித்யாவைப் பாராட்டிச் சொல்ல…

ரசனை இழந்த ஆனந்தின் முகம் அவனுக்கே அலங்கோலமாய்த் தெரிந்தது.

- கோவை. நா.கி.பிரசாத் (நவம்பர் 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
'மெடி கிளினிக்'கில் நிறைய நோயாளிகள் காத்திருந்தார்கள். உள்ளே டாக்டர் இராசரத்தினம் ஒவ்வொருவராகப் பார்த்து வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார். தமிழ் மக்களில் ஏராளமானவருக்கு அவர்தான் '•பமிலி டொக்ரர், ஜி.பி (G.P)'. மோகனும் நளினியும் ஒரு மூலையிலே அமர்ந்திருந்தார்கள். அவர்களது ஐந்து வயது மகன் துறுதுறுவென ...
மேலும் கதையை படிக்க...
சார்… என்னை மாதிரி ஒரு முட்டாள நீங்க பார்த்து இருக்கீங்களா… இருக்காதுன்னு தான் நெனக்கறேன்… என்ன நடந்துச்சுன்னு நீங்க கேட்டீங்க.. உங்களுக்கும் அந்த நம்பிக்கை என் மேல உறுதியா வந்தே தீரும்… வாழ்க்கையில எப்பவாவது ஒரு தரம் அதிர்ஷ்டம் வரும்ன்னு சொல்வாங்க.. ...
மேலும் கதையை படிக்க...
'சாக்கலேட் மாமா இறந்து விட்டாராம்' வாழ வேண்டிய பலர் இலங்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.அல்லது இறக்கப் பண்ணப்பட்டிருக்கிறார்கள்.'சொக்கலேட் மாமா' வயது வந்தவர். அவர்இறந்தது ஒன்றும் பெரிய விடயமில்லைதான் ஆனாலும் அவர் எப்படி இறந்தார் என்று என் சினேகிதி பிலோமினா சொன்னபோது,பார்வதி என்ற இளம்பெண் என் ...
மேலும் கதையை படிக்க...
“எடுத்த எடுப்பிலேயா மம்பட்டிய எடுத்து வெட்டுவாங்க? காவு வாங்கிப்புடாதா? ரத்தக் காவோட வுடுமா மண்ணு? மொதல்ல கிழக்கப் பாத்து கும்புடு. போன வருசமே ஆன மயமாரி இல்லெ. கொல்ல நல்லாவும் வௌயல. இந்த வருசமாச்சும் நல்ல மய பேஞ்சி நல்லா வௌயனுமின்னு ...
மேலும் கதையை படிக்க...
என் பெயர் பாஸ்கரன். பெங்களூரில் ப்ரிகேட் டவர்ஸின் பதினெட்டாவது மாடி B 1808ல் மனைவி, மற்றும் ஒரேமகன் திலீப்புடன் குடியிருக்கிறேன். ஒரேமகள் மாலினி திருமணமாகி மல்லேஸ்வரத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருடன் சந்தோஷமாக இருக்கிறாள். திலீப் பெங்களூர் ...
மேலும் கதையை படிக்க...
உள்ளும் புறமும் – குறுங்கதை
நேர்த்திக்கடன்
சாக்கலேட் மாமா
ஆசைகள்
பதினெட்டாவது மாடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)