வழக்கம் போல தன் மருமகள் மங்களம் அதே பூக்காரியிடம் பூ வாங்குவது கண்டு துணுக்குற்றாள் கோமதி.
ஏம்மா மங்களம்! எவ்வளவு அழகா மங்களம்னு உனக்கு பேர் வைச்சுருக்காங்க! இந்தப் பேருக்காகவே உன்னை என் மருமகளா ஏத்துக்கிட்டேன்! நீ என்னடான்னா இத்தனை பேர் இருக்க, ஒரு விதவைப் பெண் கிட்டயே பூ வாங்குறியே!
அவளுக்கு உதவி பண்ண வேணாம்னு சொல்லல! ஆனா.. அவகிட்ட பூ வாங்குறது அவ கண் பட்ட மாதிரி ஆயிடும்! என்றாள் மென்மையாக!
தலையில் பூவை வைத்தப்படியே சொன்னாள் மங்களம் “கண்டிப்பாக படாது அத்தே! மத்தவங்க கிட்ட பூ வாங்குனா அவங்க கவனம் முழுவதும், முழம் போடுறதுலயும், காசை பேரம் பேசி வாங்குறதுலயும் தான் இருக்கும்.
ஆனா இவங்க தன்னை மாதிரி இல்லாம, நம்ம கையால பூ வாங்குனவங்க நல்ல இருக்கணும்னு மனசுக்குள்ள வேண்டிக்கிட்டு கொடுப்பாங்க! அவங்க வேண்டுதலோட சக்தி எவ்வளவு இருக்கும்னு அவங்களோட இழப்பே சொல்லும்! அதனாலதான் அவங்க கிட்டயே வாங்குறேன்!
ஒரே விஷயத்தை வேறு கோணத்தில் பார்க்கும், தன் மருமகளை நினைத்து ஆச்சர்யம் அடைந்தாள் கோமதி.
– ப.உமாமகேஸ்வரி
தொடர்புடைய சிறுகதைகள்
"கண்ணைக் காமிங்க. மருந்து விடணும்..' என்று சிஸ்டர் சொன்னதும், கார்த்திக், அப்பாவைப் பார்த்தான்.
"அப்பா, கண்ணை நல்லா காமிங்க. சிஸ்டர் மருந்து விடணுமாம்' என்றான். கண்களில் சொட்டு மருந்தை விட்டதும், "ஆ... ஆ... எரியுது, எரியுதுடா!' - துடித்தார் அப்பா. "அப்படித்தான் கொஞ்சம் ...
மேலும் கதையை படிக்க...
ஸ்கைப்பில் முகம் பார்த்துக் கதைக்கிற போது, உயிர் மறந்து போன அந்த வரட்டுக் காட்சி நிழல், மனதில் ஒட்டாமல் தானும் தன் உறவுகளும் இப்படி வேர் கழன்று போன வெவ்வேறு திசைகளிலல்ல, நாடுகளில் ஒரு யுகாந்திர சகாப்த மாறுதல்களுக்குட்பட்டு தலைமறைவாகிப் போனதற்கு ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயகாந்தன்.
காம்பௌண்ட் கேட்டிற்கு நேரே வராந்தா விளக்கு வெளிச்சத்தில் சாய்வு நாற்காலியில் ஆள் காட்டி விரலைப் பக்க அடையாளத்திற்காக நடுவில் நுழைத்துப் பிடித்த ‘பால்ஸாக்’கின் புத்தகம் ஒரு கையிலும், இன்னொரு கையில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டுமாய் நிமிர்ந்து உட்கார்ந்திருந்த டாக்டர் ...
மேலும் கதையை படிக்க...
முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. துரையின் மகள் லாவண்யா, சர்வ மங்கள அலங்காரங்களுடன், மண மேடையில் அமர்ந்திருந்தாள். மணமகன் வந்து கொண்டிருந்தான்.
""துரை... உன் மாமா வர்றாருப்பா...'' யாரோ கூறினார்.
காதில் விழாதது போல் இருந்தான் துரை.
""என்னங்க... பெரியவர் வந்திருக்கார்...'' என்றாள் மனைவி கமலா.
""ம்ம்...'' ...
மேலும் கதையை படிக்க...
வீட்டில் காலடி வைத்ததும் வழக்கமாய் எதிர் கொள்கிறவளைக் காணவில்லை.
சோர்வாய் போய் நாற்காலியில் விழுந்தான்.எதிர் நாற்காலியில் கால் நீட்டி,பின்கழுத்தில் கை செருகி மல்லாந்து கூரையை வெறிக்க...இந்நேரம் காபி வந்திருக்க வேண்டும்.ஆனால் வரவில்லை.
இவனுக்குள் கோபம் எழுந்து புரண்டு படுத்தது.
"யேய்"என்று கூவினான்.பதிலில்லை.எரிச்சலாயிற்று.எழுந்து அடுக்களை வரை வந்து ...
மேலும் கதையை படிக்க...