கொள்ளி!

 

“ சித்தப்பா!..வரவர உங்க போக்கே சரியில்லே!…நாங்க சொன்னக் கேட்டிட்டு பேசாம இருக்கனும்!…..உங்க இஷ்டத்திற்கு எதையும் செய்யக் கூடாது!…உங்களுக்கு எங்களை விட்டா யார் கொள்ளி போடுவாங்க?..” என்று அண்ணனின் மூத்த மகன் செல்வ மணி சத்தம் போட்டான்.

“ சித்தப்பா!…இந்த வயசிலே கோயில், குளம், சாமி….என்று ஊர் ஊரா அலைந்தா.. எங்காவது நீங்க விழுந்து கொள்ளி போட ஆள் இல்லாம அனாதைப் பிணமா போய் சேர்ந்திடுவீங்க! ….” என்று பின் பாட்டு பாடினான் இளையவன் தங்க மணி.

பாவம் வீராசாமி!….சப்த நாடியும் ஒடுங்கிப் போய் மூலையில் உட்கார்ந்து கொண்டார்

வீராசாமிக்கு என்பது வயசாகி விட்டது. அவருக்கு குழந்தை குட்டி இல்லை. மனைவியும் போய் பத்து வருஷமாச்சு. சின்ன வயசிலிருந்தே அண்ணன் குழந்தைகள் இருவரையும் தன் குழந்தையாக நினைத்துப் பாசம் வைத்திருந்தார்.

அவர் ஒண்டிக் கட்டையானவுடன், தன் சேமிப்பு, பென்ஷன் எல்லாத்தையும் அண்ணன் வீட்டிலேயே கொடுத்திட்டு அங்கேயே ஐக்கியமாகி விட்டார். அண்ணனும் போன வருஷம் தான் போய் சேர்ந்தார்.

வீராசாமிக்கு கோயில், குளம் என்றால் ரொம்ப இஷ்டம்!. அக்கம் பக்கம் எங்கு தேர், திரு விழா என்றாலும் போய் கலந்து கொள்வார்.அது அண்ணன் பசங்க இருவருக்குமே பிடிக்காது! வேறு வழியில்லாமல் தன் ஆசைகளைக் கட்டுப் படுத்திக் கொண்டார்.

செல்வ மணிக்கு திடீரென்று கடுமையான காய்ச்சல். மருத்துவ மனைக்கு அழைத்துப் போனார்கள். பன்றி காய்ச்சல் என்று சொன்னார்கள். பயத்திலேயே அவனுக்கு பாதி உயிர் போய் விட்டது. அவனை தனிமைப் படுத்தி அவன் பக்கத்தில் வரும் நர்சுகள் கூட ‘முகமூடி’ அணிந்து வந்ததைப் பார்த்தவுடன் அவனுக்கு மீதி உயிரும் போய் விட்டது!

சோகத்தில் மூழ்கிய அந்தக் குடும்பம் சகஜ நிலைக்கு வர ஒரு வருடம் ஆகி விட்டது! இப்பொழுது குடும்ப நிர்வாகம் முழிவதும் தம்பி தங்கமணி கையில்!

அவனுக்கு தண்ணி போடும் பழக்கம் உண்டு. அதை அடிக்கடி வீராசாமி கண்டிப்பார்.

“ சித்தப்பா!..நீங்க பேசாம ஒழுங்கா இருந்தீங்கனாத்தான் உங்களுக்கு நான் கொள்ளி போடுவேன்!.. என் விஷயத்தில் அடிக்கடி இப்படித் தலையிட்டா நீங்க அனாதைப் பிணமாத் தான் போய் சேர வேண்டியிருக்கும்!…” என்று ஒருநாள் தங்கமணி சத்தம் போட அதன் பின் வீராசாமி பேசாமல் போய் உட்கார்ந்து கொண்டார்!

அன்று வழக்கம் போல் ‘டூ வீலரி’ல் மார்க்கெட்டிற்குப் போன தங்க மணி மேல், எதிரே வந்த சரக்கு லாரி நேருக்கு நேர் மோதி விட்டது! ஸ்பாட்டிலேயே உயிர் போய் விட்டது.

உறவு ஜனங்கள் முன்னால் தங்க மணிக்கு வீராசாமி தான் கொள்ளி வைத்தார். இயற்கை மரணத்தை சீனியாரிட்டி அடிப்படையில் பிக்ஸ் செய்வதில்லை!

- குங்குமம் 19-10-2015 இதழ் 

தொடர்புடைய சிறுகதைகள்
கோவை மாநகரில் வீற்றிருக்கும் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத் திருவிழா. கோவில் அருகே வாகனங்கள் வராதபடி போக்குவரத்தை ஒரு நாள் முன்பே காவல் துறையினர் மாற்றி அமைத்து விட்டார்கள். இருந்தாலும் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலை ஐந்து மணிக்கே கோவில் முன்பு ‘ஜே! ஜே!’ என்று ...
மேலும் கதையை படிக்க...
முழு நிலவு பத்திரிகை ஆசிரியர் எழுத்து வேந்தன் தமிழ் எழுத்துலகில் மிகவும் புகழ் பெற்ற கதாசிரியர்களில் ஒருவர். அவர் எழுதிய பல நாவல்கள் திரைப் படங்களாக வந்து, வெள்ளி விழா கொண்டாடியுள்ளன! அதனால் அவர் தன் நாவல் ஒன்றுக்கு பத்து லட்சம் ...
மேலும் கதையை படிக்க...
“ இன்னைக்கு....ஞாயிற்றுக் கிழமை….சரியா ஒன்பது மணிக்கு நீங்களும், உங்க அருமைப் பொண்ணும் டைனிங் டேபிளில் வந்து உட்கார்ந்திடுவீங்க!...நான் அதற்குள் சிக்கன் குழம்பு, வறுவல், இட்லி, தோசை எல்லாம் தயார் செய்ய வேண்டாமா?...சீக்கிரமா போய் ‘லெக் பீஸா’ நீங்களே பார்த்து.... இளங்கறியா வாங்கிட்டு ...
மேலும் கதையை படிக்க...
படிக்காதவங்க கூட இப்ப ஏ.டி.எம். மிஷினைப் பயன் படுத்தறாங்க! உள்ளே போன ஆசாமி வெளியே வர ரொம்ப நேரமாச்சு! வெளியே காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அந்த ஆசாமி தேள் கொட்டியது போல் பரபரப்பாக வெளியே வந்தார். “என்னாச்சு?...எதற்கு இந்தப் பதட்டம்?” என்று கேட்டேன். “சார்!...என் கார்டை ...
மேலும் கதையை படிக்க...
அந்த மாநிலத்தில் செல்வாக்குள்ள அந்தக் கட்சியின்தொண்டர் அணியின் மாநாடு மிகச் சிறப்பாகநடந்தகொண்டிருந்தது. கட்சித்தலைவர் தொண்டர்களின் எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு தொண்டர் தயங்கிக் கொண்டே கேட்டார். “தலைவரே!...தப்பா நினைக்கக் கூடாது....எனக்கு நீண்ட நாளா ... ஒரு சந்தேகம்....இருக்கு..” “தைரியமா..கேளு...எந்த சந்தேகமாக இருந்தாலும் நான் தீர்த்து ...
மேலும் கதையை படிக்க...
தெய்வம் நின்று கொல்லுமோ?
எழுத்துக் கூலி!
சமயம் பார்த்து அடிக்கணும்
நியாயம்!
கலவரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)