அம்மா – ஒரு பக்க கதை

 

“ஊரில், அம்மாவுக்கு உடல் நலமில்லை!’ மன சஞ்சலத்தில் இருந்தாள் சரஸ்வதி! அழைத்து வரலாம் என்றால், ஊரில் இவர் அம்மாவுக்கும் உடல் நலமில்லை!

அதிகப்படியாக ஒரு ஆளுக்கு மேல் வீடும் தாங்காது.

வருமானமும் போதாது.

தன் அம்மா மேல் உயிரையே வைத்திருக்கும் அவரிடம் எப்படிச் சொல்வது, நானும் என் அம்மாவின் மேல் உயிரையே வைத்திருக்கிறேன்’ என்று, நினைத்து வருத்தப்பட்டாள்.

காலையில் சங்கர் கிளம்பும் போது, “சரசு! அம்மாவை இங்கே வரச்சொல்லி இருக்கேன்! மதியம் வந்துருவாங்க! பார்த்துக்கோ! நான் சாயிந்திரம் வந்துருவேன்!’ கிளம்பி விட்டான். அவனிடம் கேட்கவும் துணிவில்லை! விதி விட்ட வழி என கண்ணீரை துடைத்துக் கொண்டாள். ஆட்டோ வந்து நின்றது!

உள்ளிருந்து இறங்கி வரும் தன் தாயை பார்த்து அவளுக்குள் இன்ப அதிர்ச்சி! மாலையில் சங்கரிடம், “உங்க அம்மா தான் வர்றாங்கன்னு நினைச்சேன்…!’ என்றாள்.

“எங்கம்மாவுக்குத்தான் அண்ணன் இருக்காரே! உங்கம்மாவுக்கு நம்மளை விட்டால் யார் இருக்கா!’ என்று சொல்லியவனை அன்போடு அனைத்துக் கொண்டாள்.

- மகேஸ்வரி (மார்ச் 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
நிரோசன் மிகத்துடிதுடிப்பான சின்னக் குட்டிப்பயல். இருந்த போதும் அவன் அம்மா அவன் சிறுவனாக இருக்கும் போதே இறந்து போய்விட்டபடியால் அவனது சுறுசுறுப்பு பாதி அடங்கிப் போய்விட்டது. அவன் அம்மா இல்லாத பிள்ளையாக இருந்ததால் அவனது அப்பா அவனை இரட்டிப்புக் கவனமெடுத்து கண்ணும் ...
மேலும் கதையை படிக்க...
“முந்தி நம்ப சாதிக்காரங்களை மத்தவங்க ஒதுக்கி வெச்சிருந்தாங்களாம். எங்கே, ஊரில. அப்போ, காந்திதான், `மனுசங்க யாரும் மட்டமில்ல, எல்லாரும் கடவுளோட குழந்தைங்கதான்’னு சொல்லி, நாம்ப செய்யற வேலையைக்கூட அவரு செஞ்சாராம். அவரு மகாத்மாடா. அதான் அவர் பேரை ஒனக்கு வெச்சேன்!” தொட்டியிலிருந்த தண்ணியை ...
மேலும் கதையை படிக்க...
மறு
கல்லூரி நாள்களில் திருச்சி புனித ஜோசப் கல்லூரிக்குத் தினசரி காலையில் ஸ்ரீரங்கம் ஸ்டேஷனுக்கு நடந்து போய்,ஒன்பது மணி ‘ஆபீஸர்ஸ் ரெயிலை‘ப் பிடித்து டவுன் ஸ்டேஷனில் இறங்கி, அங்கிருந்து ஆண்டார் தெரு அல்லது பட்டர்வொர்த் சாலை வழியாக மண்டபங்களை எல்லாம் தாண்டிப்போய், பத்து ...
மேலும் கதையை படிக்க...
சற்றுமுன் வந்த அலை
''இவ்ளோ தண்ணிய இங்க யாருப்பா கொட்டினாங்க?'' - கடற்கரையை முதல்முறையாகப் பார்த்தபோது கேட்ட தன் நான்கு வயது மகன் அருணை ஆச்சர்யத்தோடு பார்த்தான் மாதவன். என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல், ''சாமிதாம்பா'' என்றவன், மகனின் கையைப் பிடித்துக்கொண்டு வரப்போகும் ...
மேலும் கதையை படிக்க...
கணேசனின் தந்தை இறந்தபின் அவனுக்கு முன்னோர்கள் கடன் செய்வதில் சிரத்தைஅதிகம் ஏற்பட்டது. அம்மாவுக்கும் ரொம்ப திருப்தி. கருப்பு எள்ளு, பலாமூசு, வாழைத்தண்டு, என்று தேடித்தேடி வாங்கிவருவாள். நல்ல வெண்ணெயை வாங்கி காய்ச்சி ஹோமங்களுக்கும் சமையல் சாப்பாட்டுக்கும் பக்ஷணங்களுக்கும் வைப்பான். நுனிவாழைஇலை வாங்கி ...
மேலும் கதையை படிக்க...
வெற்றியை பெற்றுத்தருவது வேறொன்றுமில்லை
காந்தியும் தாத்தாவும்
மறு
சற்றுமுன் வந்த அலை
மஹாளயத்தில் பொன்னம்மா யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)