புதுசாய் பூத்த மல்லிகைப்பூ போல் இருக்கிறாள். யாருக்குத்தான் அவளை பிடிக்காது…
அவள் சுடிதாரில் வந்தாலே தேவதை போல் இருப்பாள்.. நேற்று சேலையில் அவள் வந்த அழகை வர்ணிக்க அடடா தமிழில் வார்த்தைகளே இல்லையா!
பூக்களால் செய்த சிலையோ?…பட்டாம்பூச்சிகள் இருவிழியோ?
இவள் என்ன பச்சைக்கிளி ஜாதியா? இல்லை புள்ளிமான் இனமா?
ஒரு பார்வையிலே வீழ்த்திவிட்டாளே என்னை? அந்த கருவிழிக்குள் தொலைந்தே போனதே என் சிறு இதயம்?
வாழ்ந்தால் இவளோடு வாழவேண்டும்…இல்லை இவள் விழிக்குள் குதித்து புனிதமாக உயிர்விட வேண்டும்!
சரவணனின் மனதில் ஆயிரமாயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறந்துகொண்டிருந்தது..
இந்த நினைப்பிற்கு காரணம் கல்லூரியில் சரவணனுக்கு ஜூனியராக சேர்ந்திருக்கும் பூஜா.
ஐஸ்கீரிமில் செய்துவைத்த சிற்பம் போலிருப்பாள் பூஜா. யாருக்குத்தான் காதலிக்க தோன்றாது!
பூஜா கல்லூரியில் சேர்ந்து நான்கு நாட்களே ஆகிறது. அவளிடம் சென்று தன் மனதை திறந்தான் சரவணன்.
“பூஜா,ஒரு நிமிசம்”
ஐந்தரைஅடி பூ தலைதிருப்பி பார்த்தது.
“எனக்கு சுத்தி வளச்சு பேச தெரியாது,உன்னை பார்த்த உடனே எனக்கு புடிச்சிடுச்சி…உன் கூட வாழ்ந்தா என் வாழ்க்கை ரொம்ப அழகா,அற்புதமா இருக்கும்னு நினைக்கிறேன்…சீக்கிரம் ஒரு நல்ல பதிலை…அவன் முடிப்பதற்குள் வந்துவிட்டாள் அவள் தோழி ரீனா.
சட்டென்று அங்கிருந்து விலகி, “சே இந்த ஹிந்திக்காரி வந்து கெடுத்துட்டா” என்று அவள் தோழியை மனதிற்குள் திட்டிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான் சரவணன்.
“ரீனா நம்ம சீனியர் சரவணன் என்கிட்ட ஏதோ சொன்னார் ஒண்ணுமே புரியலடி” ஹிந்தியில் சிரித்துக்கொண்டே சொன்னாள் பூஜா ஷெராவத்.
- Thursday, September 27, 2007
தொடர்புடைய சிறுகதைகள்
கிடுகு முனைந்துகொண்டிருந்த சரசுவை புறவாசல் பக்கமிருந்து கத்தும் ஆட்டின் சத்தம் நிமிரச்செய்தது. அவள் வளர்க்கும் ஆடுகளில் ஒன்று சினையாகி இருந்தது. இரண்டு நாட்களாக எப்போது குட்டி போடும் என்று காத்துக்கொண்டிருந்தவள் சத்தம் கேட்டவுடன் ஓடிச் சென்று பார்த்தாள். ஆடு குட்டி ஈனும் ...
மேலும் கதையை படிக்க...
"அரசே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி கொண்டுவந்துள்ளேன்" நந்தவனத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அரசர் வீரவர்மனிடம் பவ்யமாகச் சொன்னான் தளபதி நரசிம்மன்.
"சொல் நரசிம்மா"
"நம் தேசத்தின் வடக்கு பகுதியில் இன்று திடீரென்று ஒரு மாபெரும் சத்தம் கேட்டது, அங்கே காவற்பணியில்
ஈடுபட்டிருந்த நம் சேவகர்கள் ஓடிச்சென்று ...
மேலும் கதையை படிக்க...
சடசடவென்று மழைத்துளிகள் விழ ஆரம்பித்தபோது மணி இரவு பதினொன்றுக்கும் மேலிருக்கும். இன்னும் பத்து கிலோ மீட்டர் தூரம் கடந்தாக வேண்டும். சைக்கிளை முடிந்த அளவிற்கு வேகமா மிதிக்க ஆரம்பித்தேன். சாலையின் இரு பக்கமும் கனத்த இருள் கவிந்திருந்தது. பெயர் தெரியாத பூச்சிகளின் ...
மேலும் கதையை படிக்க...
இருத்தல் தொலைந்த வெம்மையில் தவித்தபோது ஒற்றை மழைத்துளியென என்னில் விழுந்து கடலென விரிந்தவள் நீ. ரயில் நிலையத்தில் பயம் கவ்விய வெட்கத்துடனும் பதபதைப்புடனும் அலைபேசியில் பேசியபடியே என்னை நோக்கி நீ வந்த கணத்தை உறையச்செய்து என் இதயத்தின் நான்கு அறைகளிலும் பத்திரப்படுத்தி ...
மேலும் கதையை படிக்க...
குளிச்சு ரெண்டு வாரமாச்சு...பரட்டை முடியுடன் என்னைப் பார்த்தாலே விரட்டி அடிக்கத்தான் எல்லோருக்கும் தோணும்.
அவங்கள சொல்லி தப்பில்லை. என் விதி. பிச்சை சோறு எடுத்து தின்கறதுக்கு சாகலாம்.
போனவாரம்கூட வாழ்க்கையே வெறுத்துபோய் வேகமா வந்த லாரிக்குள்ள பாஞ்சுட்டேன்...
என் நேரம் அப்பவும் சாவு ...
மேலும் கதையை படிக்க...
1.
அவளது விரல்களின் நீட்சியே மோகமாய் உருப்பெற்று என்னுடலை சில்லிடவைக்கிறது. கற்பனைகளில் வெண்ணிற புரவியேறி கூந்தல் காற்றிலாட அவள் என்னை நோக்கியே எப்போதும் பயணிப்பதாய் எண்ணம் தோன்றுகிறது.அவள் என் வகுப்புத்தோழி நதியா. பத்தாம் வகுப்பில்தான் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். அவளைக் கண்ட ...
மேலும் கதையை படிக்க...
"மச்சான் எழுந்திரிடா இங்க பாரு உன் கதை பிரசுரமாயிருக்கு" சத்தம்போட்டு என்னை
எழுப்பினான் என் விடுதி அறைத்தோழன் பிரபு.
துள்ளி எழுந்து தமிழகத்தின் மிகப் பிரபலமான அந்த வார இதழில் என் சிறுகதையை
கண்டவுடன் கண்ணில் நீர்துளிர்த்துவிட்டது.
எத்தனை வருட தவம் இது! எத்தனை வருட முயற்சி ...
மேலும் கதையை படிக்க...
சென்னை வித்தியாசமான ஊரென்பது வந்து இறங்கிய முதல்நாளே புரிந்துவிட்டது. இறக்கையின்றி பறந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை. நிஜமான புன்னகையை எந்த முகத்திலும் காணமுடியவில்லை. சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்து கிராமத்து நண்பர்களிடம் விடைபெற்று சென்னைக்கு வந்து இறங்கியிருக்கிறேன். அரும்பாக்கத்திலுள்ள நண்பனின் வீட்டை நோக்கி ...
மேலும் கதையை படிக்க...
நகரத்தை விட்டு நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது கிரைம் நாவல் எழுத்தாளர் பத்ரியின் வீடு.
வீடு என்பதை விட அதை பங்களா என்றே சொல்லலாம்.
சத்யா வரவேற்பறையில் காத்திருந்தாள். சத்யா எழுத்தாளர் பத்ரியின் தீவிர ரசிகை.
அந்த வீட்டின் நிசப்தம் சத்யாவிற்கு ...
மேலும் கதையை படிக்க...
நாளைக்கு காலைல 6 மணிக்கு ஒரு கொலை செய்யப் போறேன்.
+2 படிச்சுட்டு வேலை தேடி சென்னைக்கு வந்து நாலு மாசமா அலைஞ்சு திரிஞ்சும் ஒரு வேலையும் கிடைக்கல.
திருவல்லிக்கேணில ஒரு மேன்சன்ல தங்கி இருக்கேன். தங்கி இருக்கேன்னு சொல்றது தப்பு. நாலு பேரு ...
மேலும் கதையை படிக்க...
ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு ‘ஏ’ பிரிவு
முத்துப்பேச்சியும் குரோட்டன்ஸ் செடியும்