சாக வேண்டும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2023
பார்வையிட்டோர்: 2,766 
 
 

சாக வேண்டும் ! நான் சாக வேண்டும் ! எனக்கு சாகணும் ! எப்படியாவது சாகணும் !அறுபத்தி ரெண்டு வயசிலே நான் படாத பாடு படறேன் . நிம்மதி இல்லே . ஒரு சுகம் இல்லே. உருப்படாத இந்த உலகை விட்டு போய் சேர்ந்தா போதும் .

தற்கொலை தான் ஒரே வழி .

தற்கொலைங்கறது கடவுளிடம் மனிதன் முறையிடறா மாதிரி . “கடவுளே ! நீ என்னை இதுக்கு மேலே கொல்ல முடியாது . நானே விலகிக்கறேன்.”

45 – 50 வயசு இளவட்டங்கள், இவங்களுக்கு எல்லாம் மாரடைப்பு வருதாம் . பெரிய ஆட்டக்காரர்கள், ஓட்டக்காரர்கள் இவங்க எல்லாம் , நிறைய பேர் சீக்கிரமாவே 50 – 60 வயசிலே செத்து போயிடறாங்களாம் . எனக்கு மட்டும் சாவு வர மாட்டேங்குதே ! உயிரோட கொல்லுதே!

சீக்கிரம் போயிட்டா என் மனைவிக்கு நிம்மதி . மகனுக்கு நிம்மதி . எனக்கு நிம்மதி. என் மிச்ச காசை வெச்சிகிட்டு அவங்க நிம்மதியா இருக்கலாம் .ஆனா இந்த சனியன் பிடிச்ச சாவு வர மாட்டேங்குதே .

மருந்து குடிச்சு செத்துப் போகலாம்னு பாத்தா, இப்பவெல்லாம் அந்த மருந்துக்கெல்லாம் டாக்டரோட மருந்து சீட்டு கேக்கிறாங்க .சட்டம் போட்டுட்டானுக.

அரசியால்வாதிகளை இழிவா பேசினால், அதுக்கு தூக்கு தண்டனை எல்லாம் கொடுக்க மாட்டாங்களாம் . சிபிஐ, போலீஸ் ரைட் அப்படின்னு தொந்திரவு பண்ணுவாங்களாம்! நண்பர்களை கேட்டேன். எப்படி சாவரதுன்னு ! என்னை லூசுன்னு ஒதுக்கிட்டாங்க.

என்ன வழி ? எப்படி ?

தூக்க மாத்திரை? எலிபாஷாணம் ? வேண்டாம் , வேண்டாம், உயிர் போயும் போகாமல், அது வேறு வகை சித்ரவதை.

பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டால் என்ன ? வேண்டாம் வேண்டாம் ! உடல் எரியும் !

கடலில் விழுந்து தற்கொலை பண்ணிக்க லாமா? வேண்டாம் வேண்டாம். யாராவது காப்பற்றி விடுவார்கள். என் மானம், மட்டும் கப்பலேறிடும் .

கத்தியால், வயிற்றில் குத்திக் கொண்டு? வேண்டாம் வேண்டாம் ! அது வலிக்கும் !

தூக்கு போட்டு கொண்டு தொங்கலாமா? வேண்டாம் வேண்டாம் ! நாக்கு தொங்கி, , பார்க்க கண்றாவியாக இருக்கும் !

ரயில் தண்டவாளம், லாரியின் கீழ் விழுந்து ? வேண்டாம்! வேண்டாம் ! அதுவும் உடல் நசுங்கி , பார்க்க சகிக்காது ! ஒன்று செய்யலாம் !

பேசாமல் மாடியிலிருந்து குதித்து விடலாம் ! நிறைய பேர் இப்போதெல்லாம் , அப்படித்தானே தற்கொலை செய்து கொள்கிறார்கள். ! ஆனால், ஒரு பிரச்னை ! நம்ம வீடு இரண்டு மாடி மட்டும்தானே ! அது போதாதே ! பின் என்ன செய்யலாம்?

இப்படியெல்லாம் முயற்சி பண்ணி உடம்பை புண்ணாக்கிறதை விட கஷ்டமோ, நஷ்டமோ ,வாழ்ந்துட்டு கட்டைய போட்டுடலாம் !

நான் நிஜமாவே சாக நினைக்கிறேனா? நிச்சயமா இல்லே ! பின்னே ஏன் சாக முயற்சிக்கறேன் ? ஏன்னா, என்னோட கஷ்டங்கள் எல்லை மீறி போயிடுச்சி.!

ஒரே வழி . யோசித்து பார்த்தேன் . அது தான் பெஸ்ட்.

கொலை பண்ணிடலாம் . நம்மளை தூக்கிலே போட்டுடுவாங்க. நிம்மதியா செத்து போகலாம் . ஒருவேளை ஆயுள் தண்டனை கொடுத்தா என்ன பண்ணறது ? பேசாம, ஒரு கோவிலுக்கு இல்லே சர்ச்சுக்கு போய் ஒரு அம்பது பேரை கொன்னுடலாம் .

ஆனால், டெர்ரரிஸ்ட் அப்படின்னு சொல்லி, கோர்ட் கேஸ்னு இழுத்தடித்து சாவடிச்சாங்கன்னா? சாக முடியாதே ? இன்னும் யோசனை பண்ணு !

நல்ல ஐடியா. ஒரு பெரிய அரசியல் வாதியை, ஒரு மினிஸ்டரை கொன்னுடலாம் . நம்மளை என்கௌண்டேர்லே போட்டு தள்ளிடுவாங்க .

பெஸ்ட் ! யாரை செலக்ட் பண்ணலாம் ? போலீஸ் மினிஸ்டரை போட்டு தள்ளலாம் . அவர் கறை படிந்த கை. கஞ்சா வழக்கிலே சிக்கி ,கறை படிந்த சொக்கா போட்ட கை . அவரை சாவடிச்சா நாட்டுக்கும் நல்லது . அவர் அடியாட்களே நம்மளை என்கௌண்டேர்லே போட்டு தள்ளிடுவாங்க. நிமிஷத்தில நம்ம கதை ஓவர்.

எப்படி கொல்லலாம்? எத்தனயோ சினிமாலே வரா மாதிரி செய்யலாமா ? ஆனா நாமே அடிபட்டு செத்தா ? நல்லதாச்சு . நமக்கு தோத்தாலும் வெற்றி . ஜெயித்தாலும் வெற்றி !

வேறே ஏதாவது நல்ல ஐடியா இருக்கான்னு யோசிப்போம். பிறகு முடிவெடுக்கலாம். சீக்கிரம் எடுக்கணும் .

தற்கொலைங்கறது ஒரு கொலை தான் . முன்னாலே முடிவு செய்யப் பட்ட கொலை . தனக்கு தானே கொடுத்துக்கற மரண தண்டனை . எனக்கு நானே கொடுத்துக்க முடிவு பண்ணிட்டேன் . யாராலும் மாத்த முடியாது ! சத்தியம் ! சத்தியம் ! புனர் சத்தியம் !


இப்ப , நான் செத்துக்கிட்டு இருக்கேன் .

என் தலைலேருந்து ரத்தம் வழியுது . “யாராவது என்னை காப்பாத்துங்களேன்” . கூடவே எனக்கு சிரிப்பு வந்தது . நான் தானே சாகனும்னு நினைச்சேன். இப்போ என்னை யாராவது காப்பாத்தனும்னு நினைக்கிறேன் . என்ன இது ! அது ஒரு இருட்டறை . வேறே யாரும் இல்லை . நான் மட்டும் தான் இருக்கேன் ? எஸ்பி தப்பிச்சுட்டு போயிட்டாரா? அவர் தான் என்னை சுட்டதா ? பின்னே நான் ஏன் இன்னும் சாகலை ?

மயக்கம் வந்தது. என் நினைவலைகளும் பின்னோக்கி சென்றது .

ரி-வைண்டிங். சினிமாலே வராமாதிரி வட்டம் வட்டமா சுழன்றது .


எனக்கு வேலை இல்லை . வயசாயிடுச்சே . சின்ன வயசிலே வேலை செய்யாம ஏமாத்தினேன் . இப்போ யார் வேலை கொடுப்பா ? ஏமாத்தி கல்யாணம் பண்ணினேன் . இப்போ என் மனைவிக்கும் எனக்கும் சண்டை . டைவர்ஸ் கேட்டு கோர்ட் வாசல் வரை போயாச்சு. வயசுக்கு வந்த மகன் , அவன் ஒரு மடையன். வீட்டு பக்கம் வரேதேயில்லை . யாரோ ஒரு வட நாட்டுக் காரியை இழுத்துக் கொண்டு ஓடி விட்டான் . அவள் உண்மையிலேயே லடாக் பக்கம் ஒரு வடா பாவ், சமூசா, போண்டா கடை வைத்திருப்பவள் .

என்னை தனிமை வாட்டுது. கையில் காசு இல்லை . நோய் நொடி தொல்லை . மருந்து வாங்க நண்பர் கிட்ட பிச்சை எடுக்கும் நிலை . அதனாலே நான் முடிவு பண்ணிட்டேன் . தற்கொலை பண்ணிக்க .

ஒரு பிரபல , ஆள் பலமிக்க , அடியாட்கள் சுத்தியிருக்கும் அரசியல் வாதியை போட்டு தள்ளனும் . அப்போ, கூட இருக்கும் தடியாட்கள் என்னை கொன்னுடுவாங்க. காம் கதம் . நானும் நிம்மதியா போய் சேரலாம் . ஒரு கெட்ட அரசியல்வாதியை ஒழிச்ச புண்ணியம் கிடைக்கும். தியாகி பட்டம் கிடைத்தாலும் கிடைக்கும். தற்கொலைக்கும் தியாகிக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லே . தியாகிக்கு நிறைய பத்திரிகை கவரேஜ் கிடைக்கும்.

சரி , யாரை கொல்லலாம்? அரசியல்வாதி வேண்டாம் . எஸ்பி, டிஎஸ்பி பதவியிலே இருக்கிற ஒரு லஞ்ச லாவண்ய அதிகாரியை முதலில் தேர்வு செய்வோம் . அவருக்கு தெரியாமல், அவரது துப்பாக்கியை அவரது அறையிலிருந்து சுட்டு விடுவோம் . பிறகு, பட்டப் பகலில், அவரது காரிலேயே கடத்திக் கொண்டு வந்து, ஒரு பாழடைந்த பங்களாவில், அவருடைய துப்பாக்கியால் அவரையே சுட்டு விடுவோம் . அவர் பின்னால் வரும் போலிஸ் காரர்கள் நம்மை சுட்டு விடுவார்கள் ரெண்டு பேரின் கதையும் ஒரே நேரத்தில் முடிந்து விடும் .. ரெண்டு பேரின் கேடு கெட்ட வாழ்க்கைக்கும் இரு நல்ல முடிவு.

என் நினைவலைகள் ரி-வைண்டிங். சினிமாலே வராமாதிரி வட்டம் வட்டமா சுழன்றது . அடுத்த காட்சி. ரொம்ப தெளிவாக இல்லை . கொஞ்சம் குழப்பம் .


நான் சாதாரண உடை அணிந்து , ஒரு காக்கி பான்ட், ஒரு அரைக்கை வெள்ளை சட்டை, இன் பண்ணாமல், கையில் ரிஸ்ட் வாட்ச் , இந்த உடையில் எஸ்பி ரூமுக்கு சென்றேன் . வாசலில் இருந்த போலிஸ் காவல் காரன் கேட்டான் . “ யாரை பாக்கணும் ?” நான் “எஸ்பி . அவர் என்னோட பழைய நண்பர்” . அவன் மேலே ஒன்றும் கேட்க வில்லை . ரிடைர் ஆன அதிகாரி என நினைத்து விட்டான் போலும் !

எஸ்பி அறைக்குள் நுழைந்தேன். அதிர்ஷ வசமாக அவரது துப்பாக்கி, உறையுடன், மேசை மேல் இருந்தது . உறையிலிருந்து துப்பாக்கியை உருவிக் கொண்டேன் . சேப்ட்டி கேட்ச் கழட்டினேன் . எத்தனை சினிமா பார்த்திருக்கிறேன் ? மேஜையில் அவர் போட்டோ , ஸ்டாண்டில் இருந்தது “ ஒ! இவர் தான் அந்த எஸ்பியா? எதிரில் கண்ணாடியில் என் முகம் தெரிந்தது . அட, கிட்டதட்ட அவர் மாதிரியே இருக்கிறேனே !

உள்ளறையில் அவர் மது அருந்தி கொண்டிருந்தார். அவருக்கு போதை தலைக்கேறி இருந்தது . எனக்கு கொலை வெறி தலைக்கேறி இருந்தது

மெதுவாக சத்தம் போடாமல் ( சத்தம் போட்டாலும் கண்டு கொள்ளும் நிலையில் அவர் இல்லை ) அவர் பின் நின்று, அவர் தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்தினேன். .

“ உஷ் ! சத்தம் போட்டால் , கொன்னே புடுவேன் . திரும்பாதே பேசாமல் எழுந்து நட “ . போலிசை கண்டாலே பயப்படும் நான், எஸ்பிக்கு ஆணையிட்டேன் அவர் கண்களில் பீதி. அது, எனக்கு , எதிர்பக்கம் இருந்த கண்ணாடியில் தெரிந்தது. பேசாமல் எழுந்தார் . நடந்தார். பின்னாலேயே அறையை விட்டு வெளியே வந்தேன் . அலுவலக போலிஸ்காரர்கள் என்னையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எஸ்பியை யாருக்கும் பிடிக்காது போல இருக்கே ! யாரும் குறுக்கே வரவில்லை.

நான் நேராக எஸ்பி காருக்கு நடந்தேன் . எனக்கு முன்னால் எஸ்பி. தள்ளாடி நடந்தார் . மது , பீதி இரெண்டும் அவரை தள்ளாட வைத்தது போல . நடப்பவை எல்லாம் ஏற்கெனவே நான் பார்த்து வைத்தது தானே . மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஒத்திகை பார்த்தது தானே! பின் என்ன நடந்தது? எனக்கு சரியாக நினைவில்லை .

நேரே பாழடைந்த பங்களாவிற்கு வந்தோம் . ஒரு இருட்டறைக்குள் நுழைந்தோம். நான் அவரது தலை நோக்கி சுட்டேன் . தோட்டா பாய்ந்தது . அவர் கீழே ரத்த வெள்ளத்தில் .


நான் ரத்த வெள்ளத்தில் . மெதுவாக நினைவு குறைந்து கொண்டிருந்தது . என்னை யார் சுட்டார்கள் ? எஸ்பியே சுட்டாரோ?ஏன் போலிஸ் காரர்கள் யாரையும் காணோம் ? ஆம்புலன்ஸ் ஏன் வரவில்லை ? ஆயிரம் கேள்விகள். ஆனால் பதிலில்லை . பதில் சொல்ல அங்கு யாரும் இல்லை . நான் மயக்கமானேன் .


நான் ஆஸ்பத்திரியில் . என் தலையில் பெரிய கட்டு .

ஒரு வேளை, போலீஸ் என்னை சரியாக சுட வில்லையோ ?

டாக்டர் கேட்டார் : “யார் இவரை இங்கே கொண்டு வந்து சேர்த்தது ?”

போலிஸ்காரர்: “ஒரு குடியானவன் டாக்டர் . குடித்து விட்டு அந்த பக்கம் மரத்தடியில் புரண்டு கொண்டிருந்தான் போல . குண்டு சத்தம் கேட்டு ஓடிப் போய் பார்த்திருக்கான் . இவர் தலையில் பலமான அடியோட இருந்தார் . துப்பாக்கி குண்டு. எங்களுக்கு உடனே சேதி சொன்னான் . நாங்க இங்கே சேர்த்தோம்.”

டாக்டர் : “அவருக்கு நினைவு திரும்பிடுச்சு. கொஞ்சம் அபாயமான நிலை . ஏதாவது கேள்வி கேக்கணும்னா கேக்கலாம் . சீக்கிரமா முடிங்க” .

போலிஸ்காரர்: இதோ! இன்ஸ்பெக்டர் வந்திருக்கார் .

இன்ஸ்பெக்டர் அறைக்குள் நுழைந்தார்.

இன்ஸ்பெக்டர் என்னை பார்த்து கேட்டார் .

இன்ஸ்பெக்டர் : இப்போ எப்படி இருக்கு ?

நான் : நான் இன்னும் சாகலியா ?

இன்ஸ்பெக்டர்: இல்லே . என்ன ! தற்கொலை முயற்சியா ?

நான் : இல்லியே ! அங்கே எஸ்பி பாடி இல்லியா ? நான் தானே சுட்டேன்

இன்ஸ்பெக்டர்: குழம்பியபடி , “ எஸ்பி யா ? இல்லியே . நீங்க மட்டும் தானே அங்கே இருந்தீங்க !

நான் : இல்லே ! நான் தான் அவர் மண்டைலே சுட்டேன். அவர் விழுந்தாரே . அவர் உடம்பு அங்கே இருக்கணுமே ! போலிஸ் தான் என்னை என்கௌண்டேர்லே சுட்டாங்க .

இன்ஸ்பெக்டர்: இன்னும் குழம்பிய படி , “ நாங்க யாரும் அங்கே இல்லியே . டாக்டர், டாக்டர் , இங்கே வாங்க ! இவருக்கு தலைலே அடி பட்டதாலே , மூளை கலங்கி போச்சு போல இருக்கு . கண்ட படி உளர்றார் . கொஞ்சம் பாருங்க. நான் அப்புறம் வரேன்: .


பத்து நாள் கழித்து .

நான் இப்போது கீழ்பக்கம் மன நலம் பாதிக்க பட்டோர் மருத்துவ மனையில் .இன்னும் சாகலை .பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருக்கிறேன். .

எனக்கு கிட்டதட்ட ப்ரோசொபக்நோசியாவாம் (Prosopagnosia). அது ஒரு வகை மன சிதைவு நோயாம். முகக் குருடு . அடையாளம் காண முடியாதாம் . இல்லாதவங்களை இருக்கிறதா பாவனை பண்ணிப்பேனாம். இல்லாத எஸ்பியை, இருக்கிற எஸ்பி என கற்பனை செய்து கொண்டிருக்கிறேன் . என் முகத்தையே எஸ்பி முகம் என நினைத்து கொண்டிருக்கிறேன் . ரொம்ப அட்வான்ஸ்

. எஸ்பியை சுட்டதா நினைச்சு என்னையே நான் சுட்டுகிட்டு இருக்கேன் . போலிஸ் ஸ்டேஷன் போனது உண்மை . துப்பாக்கி எடுத்தது நிஜம் . ஆனால், எஸ்பியை கடத்த வில்லை . எந்த போலிசும் என்னை துரத்த வில்லை . நானே , எஸ்பியை கடத்திக் கொண்டுபோய் இருட்டு அறையில் சுட்டதாக கற்பனையாக நினைத்து, என்னையே சுட்டு கொண்டிருக்கிறேன் . எஸ்பி என் கூடவே இருந்ததா நினைச்சுகிட்டிருக்கேன். என் முகம் அவர் முகம் மாதிரி தெரிஞ்சிருக்கு். சுடத்தெரியாததால், அரைகுறையாக சுட்டுக் கொண்டிருக்கிறேன்

சாக நினைத்தேன் . இப்போது பைத்தியக்காரனாக தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறேன் . எனக்கு விடிவே இல்லை .

பேசாம டாக்டரை கொன்னுடலாமா ? இல்லே இந்த அழுக்கு ஆஸ்பத்திரியையே, சுத்தமா காலி பண்ணிடலாமா?

ஒன்னு தற்கொலை பண்ணிக்கணும் ! இல்லே சுத்தி இருக்கவங்களை கொல்லனும். அப்பவாவது , என்னை தூக்கிலே போடுவாங்களா? இல்லே திருப்பி வேறே மென்டல் ஹாஸ்பத்திரியா? கொடுமை ! மீண்டும் மீண்டும் தனிமை ! தனிமை நான் தேர்ந்தெடுப்பது அல்ல ! எனக்கு நானே கொடுத்து கொள்ளும் பரிசு, இல்லை ! இல்லை! இது

தண்டனை ! பரிசா , தண்டனையா ? அட என்ன ஒரு குழப்பம் ! இதிலிருந்து மீள….

நான் சாகணும் . எனக்கு சாகணும் ! இது என் தாரக மந்திரம் !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *