கதையாசிரியர் தொகுப்பு: G.T.சத்யா

3 கதைகள் கிடைத்துள்ளன.

யோர்லாண்ட்

 

 யோர்லாண்ட் கடலும் காடும் கொண்ட தீவு. சுற்றி உள்ள சிறு தீவுகளை காட்டிலும் யோர்லாண்ட்டின் நில பரப்பு சற்று அதிகம் எனவே இது மக்கள் வசிக்கும் பகுதியாக அமைந்து, நாகரிக வளர்ச்சியில் பேச்சுமுறை அமைந்த கட்டத்திற்கு வந்திருந்தது. உணவிற்கு நெருப்பை பயன்படுத்தி கொண்டனர். பெண்களும் ஆண்களும் தனி தனி நிலபரப்பில் மரத்தில் ஆன கூடாரம் அமைத்தும், வேட்டையாடிய விலங்குகளின் பெரும்பான்மை குரங்குகளின் தோலில் ஆடை தைத்தும் வாழ்ந்து வந்த நேரத்தில் இப்போது பவிங்க்ஸ், மீனை உண்ண யோர்லாண்டின்


காதலை வேண்டி கரைகின்றேன்

 

 ‘வர்நிகா’ அழகான பெயர் என்று நீ சொன்னபோது அதை நான் ஏற்றுக்கொண்டு சிறு புன்னகை செய்வேன். எனக்கோ அந்த பெயர் அரவே பிடிக்கவில்லை என்பதுதான் நிஜம். இருந்தும் இதுவரை யாரிடமும் வெளிபடுத்தியது கிடையாது. உன்னிடமும் தான் அகிலன். உன்னுடனான சம்பவங்களும் உன்னிடம் நான் சொல்லாத விசயங்களும் இந்த கதையில் நீ படிக்கலாம். அகிலன் நீ இலக்கியம் வாசிப்பவன் என்பது எனக்கு தெரியும். என் நினைவு தெரிந்த நிலையிலிருந்து வெறுத்துப்போன வாழ்க்கையில் பெயரும் இருப்பது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.


நிகழ்ந்தும் நிகழ்ந்தபடி…ஒரு கதை

 

 சாலைகளில் தொடர்ந்த படி வாகனங்கள் சென்றபடி… வந்தபடியே இருக்கின்றன. ‘நம்மை சுற்றிலும் ஒரு பெரும் இயக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது அந்த இயக்கத்தில்தான் நாமும் பினைக்கப்பட்டு இயங்கி கொண்டிருக்கிறோம்’ என்று பலமுறை நினைத்திருக்கிறேன் நான். இப்போதும் அடியேன் அதையே நினைக்கிறேன் பேருந்துக்காக பத்து நிமிடங்களுக்கு மேலாக காத்து நிற்கும் இந்த நேரத்தில். சற்று முன்பு இங்கே வந்து நின்றுகொண்டிருக்கும் ஒரு பெண் வித்யாவை போலவே இருக்கிறாள். வித்யா என்னுடன் பத்தாம் வகுப்பு வரை படித்தவள். பத்தாம் வகுப்பு வரை