கதையாசிரியர் தொகுப்பு: ஹரன்பிரசன்னா

13 கதைகள் கிடைத்துள்ளன.

முகம்

 

 பத்து அடிக்கும் மேலான உயரமுள்ள தகரச் சுவரில் இருக்கும் துளையின் வழியே கண்களை வைத்துப் பார்த்தேன். மிகுந்த பிரயத்தனப்பட்டுப் பார்த்ததில் அப்புறத்தில் மெல்ல நடந்து செல்லும் மனிதர்கள் தெரிந்தார்கள். எனக்கெனத் தனியாகத் திரையிடப்படும் ஒரு திரைப்படம் போன்றகாட்சி அது. நான் எதிர்பாராத ஒரு தருணத்தில் அப்புறத்தில் இருந்து ஒருவர் மிக அருகில் வந்து, நான் பார்த்துக் கொண்டிருந்த துளையின் வழியே தன் கண்ணை வைத்துப் பார்த்தார். நெருங்கி வந்த நிழல் மெல்ல மூடி முழு இருட்டு ஆகிவிடுவது


வயிறு

 

 சதாசிவப் பண்டாரத்தின் சங்கொலி இரவின் எல்லாத் திசைகளிலிலும் பரவி அதிர்ந்தது. சிறிய சலசலப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணியும் எப்போதும் சிரித்து அருள் பாலிக்கும் முருகனும் வேப்ப இலைகளைக் கூட்டி தீமூட்டி கொசு விரட்டும் பாண்டியும் தவிர யாரும் அதைக் கேட்டிருக்கமுடியாது. பண்டாரம் அதிகக் கவலை கொள்ளும்போதோ பழம் நினைவுகள் அவரைத் துரத்தும்போதோ அன்றைய இரவுகளில் முருகனே வந்து நிறுத்தச் சொன்னாலும் சங்கூதுவதை நிறுத்தமாட்டார். அதில் ராகமெல்லாம் கிடையாது. ஒரே மாதிரியான இழுவை மட்டுமே. வேகம் அதிகரிக்கும்போது சங்கொலியின் சத்தம்


சாதேவி

 

 அப்பாவின் மரணம் தந்த தீவிரமான யோசனையில் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது அப்பாவின் வெகுளித்தனமான உள்ளமே. அப்பாவை நிச்சயம் ஒரு குழந்தை என்று சொல்லிவிடலாம். மற்ற ஆண்களுக்கு இருக்கும் வல்லமையும் திறமையும் அப்பாவுக்கு இருந்ததாகச் சொல்லமுடியாது. அப்பாவின் உருவத்தை ஒரு ஏமாளிக்குரிய உருவமாகத்தான் நான் யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அவரது மரணத்திற்கு வந்த கூட்டம் அவர் கோமாளியல்ல என்று எனக்கு உணர்த்தியது. அப்பா உயிரோடு இருந்த காலங்களிலெல்லாம் அவரது வெகுளித்தனத்தை அம்மா எப்போதும் வைவாள். அப்பா சின்ன


சொற்கள்

 

 எப்போதும்போல் அன்றும் தூக்கம் வரவில்லை. தெருவில் எரியும் சோடியம் விளக்கின் மஞ்சள் நிற வெளிச்சம், அலங்கோலமாகக் கிடக்கும் ஜன்னலின் மூடப்படாத இடங்களின் வழியே உள்ளே தெறித்து விழுந்துகொண்டிருந்தது. சுசியின் தொடைவரை ஏறியிருந்த நைட்டியில் பளீரெனத் தெரிந்தது அவளது நிறம். தனியறையில் படுத்திருக்கும்போது அவளுக்கு எப்படி இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருக்கமுடிகிறது. இதுவே வேறு ஏதேனும் ஒரு இடத்தில் படுத்திருந்தால், போர்வையை கழுத்திலிருந்து கணுக்கால் வரை போர்த்தியிருப்பாள். அறையை நோட்டம் விட்டேன். இடது பக்கத்தில் படபடத்துக்கொண்டிருந்தது நேற்று வாசித்துவிட்டு


சனி

 

 கஸிக்குத் தூக்கமே வரவில்லை. கனவுகளில் சனி பூதாகரமாக வந்து அவன்முன் நின்று பல்லை இளித்துக்காட்டியது. அவன் ஓட ஓட துரத்தினான். சனியைப் பிடிக்கவே முடியவில்லை. அவனுக்கே அதைப் பற்றி நினைத்தபோது கேவலமாக இருந்தது. கனவில் கூட அவனால் சனியைப் பிடிக்க முடியவில்லை. அதன் சாயல் நன்றாக நினைவிலிருந்தது அவனுக்கு. ஆயிரம் எலிகள் அவன் முன்னே வந்து கெக்கலித்தாலும் அவனுக்கு பிரச்சினைக்குரிய சனியைக் கண்டுபிடித்துவிடமுடியும். பரம்பரை பரம்பரையாக வரும் பகையை கூட அவன் மன்னிக்கத் தயாராயிருந்தான். ஆனால் சனியை


வசியம்

 

 கடும் மன நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார் பூபதியாப்பிள்ளை. சிவந்த மேனியோடு லேசான தொந்தியுடன் ‘ஹோவ்’ என்ற சத்ததோடு ஏப்பம் விட்டபடியே சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நாற்பது வயதில் நிம்மதியான உறக்கமின்றி அலையும் மனதோடு அவர் பெரும் கொதிப்பிலிருந்தார். உடலெங்கும் சின்ன சின்ன வேர்வைத் துளிகள் பனித்திருந்தன. ‘தானா வேர்த்தா நல்லதுடே’ என்று என்றோ அவரது அம்மா சொன்ன நினைவு வந்தது. உடனே இப்போது தானாக வேர்க்கவில்லை என்பதும் நினைவுக்கு வந்தது. இரவு முழுதும் அரைத்தூக்கத்திலிருந்த கண்கள் சிவந்திருந்தன.


மழை

 

 சுரேஷன் நாயர் ஒரு ரூபாய் நாணயத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுத்துக்கள் கட்டங்களில் எழுதப்பட்டிருந்தன. ஒரு சிறிய டம்பளரில் நீர் இருந்தது. அந்த நீர் அதிர்ந்துகொண்டே இருந்தது. ஒல்லியான ஆசாமி ஒருத்தன் சம்மணமிட்டு, விறைப்பாக உட்கார்ந்திருந்தான். கண்கள் மூடி இருந்தன. அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் வசத்தில் அவன் இல்லை என்பது தெரிகிறது. சுரேஷன் நாயர் அடுத்த கேள்வியைக் கேட்டார். ஒரு ரூபாய் நாணயத்தின் மீது ஒரு விரலை வைத்திருந்த ஒல்லி ஆசாமியின் விரல் நாணயத்தோடு


தொலைதல்

 

 சிவபாஸ்கரன் திடீரென்று வந்து வாசலில் நின்றபோது அந்த வயதான அவ்வாவின் மனம் எப்படிப் பதறியிருக்கும் என்பதிலேயே என் யோசனை இருந்தது. லக்ஷ்மி அக்கா வாங்க வாங்க என்றதையோ, அவ்வா எங்களைப் பார்த்து எப்படி இருக்க என்றதையோ, சிவபாஸ்கரன் என்னைப் பார்த்துப் புன்னகை செய்ததையோ என்னால் முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. லக்ஷ்மி அக்கா எனக்கு தூரத்து சொந்தம். நீண்ட நாள் கழித்து திடீரென்று அவ்வாவையும் லக்ஷ்மி அக்காவையும் பார்க்கலாம் என்று நானும் என் மனைவியும் போயிருந்தோம். லக்ஷ்மி அக்காவின்


பிரதிமைகள்

 

 சிறிய திறப்பொன்றில் விழுவதாகவே தோன்றியது. ஆனால் அத்திறப்பு நீண்டு பெரும்பள்ளமாகி கீழே வெகு கீழே செல்ல நான் அலறத்தொடங்கினேன். கண் விழித்துப்பார்த்தபோது அறையெங்கும் பரவியிருந்த வெளிர் நீலநிறப் படர்வில் என் மகன் எவ்விதக் குழப்பமும் இன்றி இரண்டு கைகளையும் தலைக்குக் கொடுத்து ஒருக்களித்துப் படுத்திருந்தான். மனதை முட்டிக்கொண்டு வரும் பேரழுகை கூட அவனைப் பார்த்துக்கொண்டிருந்தால் வடிந்துவிடும் என்று நினைத்துக்கொண்ட காலங்கள் இப்போது ஏன் திரும்ப வருவதில்லை எனத் தெரியவில்லை. இன்னொரு மூலையில் மனைவி படுத்துக்கொண்டிருந்தாள். தூக்கத்தில் அவளது


மேல்வீடு

 

 மாசாணத்துக்கு போன் செய்து சொன்னாள் சங்கரி, ‘ஏங்க அந்த மேல்வீட்டுப் பையன் தொலைஞ்சிட்டானாங்க.’ பக்கத்தில் கட்டிலில் படுத்திருந்த கெளவி, ‘நாங்கள்லாம் பட்டிக்காடு’ என்றாள். பதில் ஒன்றும் பேசாமல், சங்கரி மேல் வீட்டுக்குச்சென்றாள். அவளுக்கு அந்த வீட்டுக்காரம்மாவிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்ல. ‘ரொம்ப கஷ்டமா இருக்குங்க’ என்றாள். அவள் பதில் ஒன்றும் பேசாமல் அழுதாள். அவள் கணவன் கைலி, பனியனோடு ஒரு நாற்காலியில் உட்கார்ந்து எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். ‘எப்படிங்க தொலைஞ்சான்?’ என்றாள். அதற்கும் அவள் பதில் சொல்லாமல்